View in the JustOut app
X

2 நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற பின்டெக் விழாவில் உரையாற்றினார். அப்போது, ’இந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி நடைபெற்று வருகிறது. இதனால் 130 கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றி உள்ளது,’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

10:11:02 on 14 Nov

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை அதிமுக தலைமையகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புதிய சிலை திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 7 அடி உயரமுள்ள சிலை நிறுவப்பட்டது. பல்வேறு தரப்புகளில் இருந்து அந்த சிலை தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அது உடனடியாக அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

09:45:13 on 14 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை அருகே 570 கி.மீ. தொலைவிலும், நாகை அருகே 670 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்த கஜா புயல் துவக்கத்தில் மணிக்கு 12 கி.மீ. வேக்திலும் பின்னர் 10 கி.மீ. வேகத்திலும் பின்னர் 8 கி.மீ. வேகத்திலும் படிப்படியாக குறைந்து தற்போது மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

09:41:02 on 14 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்தாண்டில் 3ஆவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.02 அடியாகவும் நீர் இருப்பு- 64.86 டிஎம்சியாகவும் உள்ளது.

09:25:01 on 14 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அறந்தாங்கி அருகே நூர்தீன் என்பவர் வீட்டில் 124 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோட்டைப்பட்டினத்தில் நூர்தீன் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை அடித்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்காக நூர்தீன் திருச்சி சென்றபோது மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளார்.

09:10:02 on 14 Nov

மேலும் வாசிக்க தினகரன்

இந்திய சினிமா வரலாற்றில் அதிக பட்ஜெட் செலவில் தயாராகியிருக்கும் படம் '2.O'. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்தப் படம் தற்போது சென்சார் செய்யப்பட்டுள்ள நிலையில், யு/ஏ சான்று வழங்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து படம் ஏற்கனவே திட்டமிட்டபடி இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.

08:55:01 on 14 Nov

மேலும் வாசிக்க EENADU

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைகோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.

08:40:01 on 14 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

பவுலிங் செய்யும் போது நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்படாது என்று மருத்துவர்கள் உத்தரவாதம் அளிக்காததால் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் அனைத்துக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

08:25:01 on 14 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூட்டப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார். பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று கூட உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

08:10:01 on 14 Nov

மேலும் வாசிக்க தினத் தந்தி

சென்னை நெற்குன்றத்தில் பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் அடைந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். 9 வயது சிறுவன் கீழ்ப்பாக்கம் மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவரின் சகோதரருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

07:55:01 on 14 Nov

மேலும் வாசிக்க தினகரன்

2018-19ஆம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ளார். இந்த அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

07:40:02 on 14 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.42 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.ரூ.76.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:25:01 on 14 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்தியா உள்பட உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப்பில் பரவும் பொய் செய்திகளை களையெடுக்க, 20 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம், பொய் செய்திகள் எவ்வாறு பரவுகின்றன, அதை தடுக்க அடுத்தடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இந்த குழு ஆய்வு நடத்தும் என்று தெரிவித்துள்ளது.

07:11:01 on 14 Nov

மேலும் வாசிக்க தினகரன்

இடைத்தேர்தலுக்கு பொறுப்பாளர்கள் அறிவிப்பு, மண்டல ஊழியர் கூட்டம் என்று அ.தி.மு.க. தில்லாக களமிறங்கிட்டாலும்கூட உள்ளுக்குள்ளே ஒரு உதறல் இருக்கத்தான் செய்கிறது. அது ’ஒருவேளை ஆர்.கே.நகர் போல் தோற்றுவிட்டோமென்றால் திமுகவோ அல்லது தினகரனோ ஆட்சியை கவிழ்த்து விடுவார்களோ! என்று நடுங்குகிறார்கள் அதிமுகவின் சில முக்கிய புள்ளிகள்.

06:55:01 on 14 Nov

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

வட கொரியா அதன் திறமையான ஏவுகணைத் திட்டத்தை 16 மறைக்கப்பட்ட தளங்களில் செயல்படுத்தி வருகிறது, அவை புதிய வர்த்தக செயற்கைக்கோள் படங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. வட கொரியா ஒரு பெரிய ஏமாற்று திட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்று செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

06:40:02 on 14 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஃப்ளிப்கார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பின்னி பென்சால் திடீரென பணியில் இருந்து விலகி உள்ளார். ஒழுங்கீனமாக நடந்து கொண்டார் என்று புகாரை அடுத்து பின்னி பென்சால் பதவி விலகினார்.

06:25:01 on 14 Nov

மேலும் வாசிக்க தினகரன்

ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது எனத் தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண ஆதார் தரவுகளைப் பயன்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அமித் சகுனி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

06:10:02 on 14 Nov

மேலும் வாசிக்க வெளிச்சம் டிவி

”அமெரிக்க அதிபரோட கூட்டணி வைத்தால்கூட எங்க மோடியை வீழ்த்த முடியாது என்கிற தொணியில் ரஜினியின் பதில் இருக்கிறது. மோடி கூட காங்கிரசுக்கு வரலாம், ரஜினி காங்கிரஸை ஆதரிக்க மாட்டார்.” என்கிறார் மதிமாறன்.

05:55:01 on 14 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

சீனாவில் பெண் ஒருவர் நடைபாதை திடீரென்று பிளந்ததால் உள்ளே விழுந்துள்ளார். இந்த அதிரவைக்கும் இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பதிவின்படி திடீரென்று நடைபாதை பிளந்து பெண் ஒருவரை உள்வாங்கியது. இந்த வீடியோ காட்சிகள் சீன சமூக வளைதளங்களில் அதிகம் பகிற‌ப்படுகிறது.

05:40:01 on 14 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

காலா, பாகுபலி 2 படங்களின் ஓபனிங்கை சர்கார் அனாயாசமாக தாண்டியுள்ளது. செவ்வயாக்கிழமை வெளியான சர்கார் வெள்ளி, சனி, ஞாயிறு வார இறுதியில் சுமார் 720 திரையிடல்களில் 4.14 கோடிகளை வசூலித்துள்ளது. செவ்வாய், புதன், வியாழனையும் சேர்த்தால் 10.72 கோடிகள்.

05:26:01 on 14 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

"நானும் ரஜினியும் (அவரது மனவைி) கடந்த ஆண்டுகளாக பிரிந்து தான் வாழ்ந்து வருகிறோம். தற்போது நாங்கள் முறையாக விவாகரத்து பெற்றுக் கொண்டோம். எங்களுக்கு மகன் இருக்கிறான். அவனை சேர்ந்து வளர்ப்பதில் தான் நாங்கள் முழு கவனமும் செலுத்தி வருகிறோம்.” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

05:10:01 on 14 Nov

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

அமெரிக்காவின் சிகாகோ மாநகரில், புறநகர்ப் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் பணிபுரிந்து வந்த கருப்பினத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய தனியார் பாதுகாப்பு பணியாளர் போலீஸாரால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். வன்முறையில் ஈடுபட்ட துப்பாக்கிதாரியை அவர் துரத்திப் பிடித்து மக்கள் உயிரைப் பாதுகாத்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

04:56:01 on 14 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் ”கள்ளர், மறவர், அகமுடையரை ‘தேவரினம்’ என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1994-ல் அரசாணை வெளியிட்டார். அதை இந்த அரசு இன்னும் செயல்படுத்தவில்லை. ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி சுயலாபம் அடைகின்றனர். இந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும்.” என்றார்.

04:40:01 on 14 Nov

மேலும் வாசிக்க காமதேனு

"20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கலாம்" என, கிரிக்கெட் வீராங்கனை மித்தாலிராஜ் தெரிவித்துள்ளார். இவரது திடீர் அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

04:26:01 on 14 Nov

மேலும் வாசிக்க EENADU

ஒன்பிளஸ் 6டி தன்டர் பர்ப்பிள் எடிஷன் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. சமீபத்தில் அறிமுகமான புது ஸ்மார்ட்போன் அமேசான், ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ விற்பனை தளங்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா மற்றும் அதிகாரப்பூர்வ ஒன்பிளஸ் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

04:10:02 on 14 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வாகனநெரிசல் மற்றும் சாலை விபத்துக்களும் அடிக்கடி நிகழ்வதால் இதனை நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணி கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கி முடிக்க வேண்டிய காலம் முடிவடைந்து பல ஆண்டுகள் தாமதாகமாக பணியை அறைகுறையாக முடித்ததாக புகார் எழுந்துள்ளது.

03:56:01 on 14 Nov

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

அறம் படத்தின் முதல் பாகத்தில் ஆட்சியராக தனது வேலையை ராஜினாமா செய்யும் நயன்தாரா அரசியலுக்கு வருவது போல் முடித்திருப்பார்கள். படத்தின் இரண்டாம் பாகத்தில் நிறைய அரசியல் கட்சிகள் இருந்தாலும் ஜனநாயகம் என்பதே இல்லை என்பதை கூறும் விதத்திலும் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி அறம் 2 இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

03:40:02 on 14 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

சலபாசனம் வயிற்றுக்கும் வயிற்றுக்கு உள்ளிருக்கும் குடல், இரைப்பை, பித்தப்பை முதலிய முக்கிய அங்கங்களுக்கும் உயிர் வீர்யத்தை தரும் அதியற்புதமானது. மானிட விரோதியாகிய மலச்சிக்கலை அடியோடு அகற்றும். வயிறு பெரிதாக இருக்கும் பெண்கள், ஆண்கள் இந்த ஆசனப் பயிற்சியை மேற்கொண்டால் அவர்கள் வயிறு சாதாரண நிலைக்கு வர ஆரம்பிக்கும்.

03:26:02 on 14 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

சீனாவில் நாய் ஒன்று தனது இறந்துபோன உரிமையாளர் திரும்பி வருவார் என எண்ணி கண்ணீர் மல்க 80 நாட்களாக காத்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சீனாவின் பியர் வீடியோ இணையதளம், அந்த காட்சிப்பதிவுகளை வெளியிட்டிருக்கிறது.

03:10:01 on 14 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழகத்தில் பலம் வாய்ந்தவர்கள் பாஜக கூட்டணியில் இணைவார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாஜக மீது யாரும் எதிர்க்கருத்துகள் கூற வாய்ப்பில்லை என்றும் பாஜக நேர்மறையான அரசியலை நடத்தி வருகிறது என்றும், ரஜினிகாந்த் தெளிவான பதிலை தெரிவித்துள்ளார் என்றும் கூறினார்.

02:56:02 on 14 Nov

மேலும் வாசிக்க தினகரன்

நாகை மீனவ கிராமங்களில் ஒலிப்பெருக்கி மூலம் புயல் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. கடற்கரையோரம் வசிக்கும் மீனவ மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

02:40:01 on 14 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள கவச்சம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் டீசர் வெளியீட்டின் போது, மேடையிலேயே அவரது கன்னத்தில் ஒளிப்பதிவாளர் முத்தமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

02:25:01 on 14 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கொய்யாப்பழத்தில் மிக குறைந்த அளவே GI இருப்பதால் இரத்த சர்க்கரையை அதிகரிப்பதில்லை. மேலும் உடல் எடை குறைப்பதிலும் கொய்யாவிற்கு பெரும் பங்கு உண்டு. உடலில் ஹார்மோன் ஒழுங்கற்று இருந்தால் அதற்கு கொய்யா சிறந்த தீர்வாக இருக்கும்.

02:10:02 on 14 Nov

மேலும் வாசிக்க என்.டி.டி.வி. தமிழ்

சென்னையில் வீட்டில் பச்சைக்கிளிகளை வளர்த்த வியாபாரிக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ``வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி தடை செய்யப்பட்ட பட்டியல் நான்கில் வன உயிரினம் பச்சைக்கிளி வருகிறது. அதை வீட்டில் வளர்த்ததற்காக ரூ. 10,000 அபராதம் விதித்துள்ளோம்.” என்றனர்.

01:55:01 on 14 Nov

மேலும் வாசிக்க விகடன்

விண்டோஸ் போன்களுக்குப் பிறகு நோக்கியா நிறுவனம் ஆண்ட்ராய்டு போன்களையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் புதிய மாடலான 8.1 ஸ்மார்ட்போனை வரும் நவம்பர் 28ஆம் தேதி இந்தியாவில் வெளியிடுகிறது. இதன் விலை ரூ.23,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 6.18 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

01:40:01 on 14 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

அமெரிக்க எப்-22 மற்றும் எப்-35 யை விட சீனாவின் அப் கிரேடு செய்யப்பட்ட செங்டு ஜெ-20 சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையில் சேர்க்கப்பட்டு உள்ளது. ஜெ-20 ஒற்றை இருக்கையுடன் கூடிய மற்றும் இரட்டை இயந்திரங்களைக் கொண்டது.

01:26:02 on 14 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

முஸ்லீம்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கக்கூடாது என்பது பாஜகவின் கொள்கையாக இருக்கலாம் என அக்கட்சியில் இருந்து விலகியவரும், ராஜஸ்தான் எம்.எல்.ஏ.வுமான ரஹமான் கூறியுள்ளார்.

01:10:01 on 14 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், மத்திய மோட்டார் வாகனச்சட்டம், 1989இல் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்சி வாங்கினால் போதும் என்றும், அடர்ந்த பிரவுன் நிறம் பயன்படுத்த தேவையில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

12:56:01 on 14 Nov

மேலும் வாசிக்க தினகரன்

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் ஹாலிவுட் பிரபலங்கள் சிலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ ஜெரார்டு பட்லர், பாடகியும் நடிகையுமான மிலே சைரஸ், விக்டர் பர்க் உள்ளிட்ட பலர் வீடுகள் நாசமாகியுள்ளன.

12:40:01 on 14 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

திருக்கோவிலூர் அருகே பெருங்கற்கால கண்ணாடி உருக்கு உலைக்கலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது, இந்தப் பகுதியில் பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளத்தைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

12:26:01 on 14 Nov

மேலும் வாசிக்க தினமணி

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12:10:01 on 14 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தீபாவளி பண்டிகையின்போது 36 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 100 சதவீத இருக்கைகளும் நிரம்பி மொத்தம் 27 ஆயிரத்து 80 பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ.2 கோடியே 72 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது,’ என தெரிவித்துள்ளது.

11:56:01 on 13 Nov

மேலும் வாசிக்க தி இந்து

இடதுசாரி கட்சியின் பிரதான கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்தார். ஸ்டாலினை அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்த அவரை ஸ்டாலின் பொன்னாடைப் போர்த்தி வரவேற்றார்.

11:40:01 on 13 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தங்கள் மீதான வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று பேராசிரியை நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி போலீஸார் இன்று மனுத்தாக்கல் செய்தனர்.

11:25:01 on 13 Nov

மேலும் வாசிக்க விகடன்

காவிரி பாசன மாவட்டங்களில் தமிழக அரசு கூடுதல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என்றும், ஈரப்பதத்தின் அளவு சற்று அதிகமாக இருந்தாலும் நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு அரசு ஆணையிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

11:10:01 on 13 Nov

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

மயிலாப்பூரில் ஷீலா என்பவர் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 10 கிலோ வெள்ளியையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டில் பணியாற்றும் பெண்களே கொள்ளையடித்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

10:56:01 on 13 Nov

மேலும் வாசிக்க தினகரன்

அமெரிக்காவின் சிகாகோ மாநகரில், புறநகர்ப் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் பணிபுரிந்துவந்த கருப்பினத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய தனியார் பாதுகாப்பு பணியாளர் போலீஸாரால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

10:41:01 on 13 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் முன்னணி வீரர்கள் இடையிலான ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்காவின் ஜான் இஸ்னரை நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச் எளிதாக வீழ்த்தினார்.

10:25:01 on 13 Nov

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

கோலிவுட்டில் இழந்த ஃபார்மை மீட்டெடுக்கும் விதமாகத் தனக்கு சுந்தரபாண்டியன் எனும் வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனுடன் மீண்டும் இணைந்து கொம்பு வச்ச சிங்கமடா எனும் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் சசிகுமார்.

10:11:01 on 13 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஒடிசாவில் நடந்துவரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. ஆதித்யா பிர்லா குழுமம் ரூ. 14,500 கோடி முதலீடு செய்வதாகக் கூறியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ. 3,000 கோடி முதலீடு செய்கிறது. ஒடிசாவை முன்னணி தொழில்துறை மாநிலமாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் முதல்வர் நவீன் பட்நாயக்.

09:56:01 on 13 Nov

மேலும் வாசிக்க தி இந்து

ராஜ் பாபு இயக்கத்தில் நடிகர் நகுல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘செய்’. இப்படம் வருகிற நவம்பர் 16ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்ட நிலையில், இப்படத்தின் ரிலீஸை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

09:41:01 on 13 Nov

மேலும் வாசிக்க என்.டி.டி.வி. தமிழ்

ட்விட்டரில் எடிட் வசதியை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் எடிட் வசதியை தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

09:25:01 on 13 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

திருச்சி விமான நிலையத்தில் 17 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கைதானவரிடம் விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

09:11:01 on 13 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு, தொழிலபதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடி உடன் மறுமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்துவிட்டதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

08:56:01 on 13 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

பார்லிமென்ட் வளாகத்தில் குரங்கு தொல்லை அதிகரித்து விட்டது. இதை சமாளிப்பது எப்படி என்பது குறித்து எம்.பி.,க்களுக்கு லோக்சபா செயலகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

08:41:01 on 13 Nov

மேலும் வாசிக்க தின மலர்

இலங்கை சிறையில், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். 3 மாதங்களுக்கு மேலாகியும் அவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதனையடுத்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அவர்களது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

08:25:01 on 13 Nov

மேலும் வாசிக்க காமதேனு

செய்தி வாசிப்பாளராக அறிமுகமான பிரியா பவானி சங்கர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பரவலான கவனம் பெற்றார். இதையடுத்து படங்களிலும் நடித்த அவர், புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் பரத் இணைந்து நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், ரோபோ சங்கர் நடிக்கின்றனர்.

08:11:01 on 13 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மனிதமூளை ஒரு வினாடிக்கு 2 ஆயிரம் கோடி செயல்பாடுகளை இயக்கும் ஆற்றல் கொண்டது. அதற்கு இணையான 'ஸ்பின்னேக்கர்' என்ற சூப்பர் கம்ப்யூட்டரை பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகம் உருவாக்கி இருக்கிறது.

07:56:27 on 13 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போனுடன் மார்ச் 2019ஆம் ஆண்டு சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், சீனாவில் ஹூவாய் டெக்னாலஜிஸ் கோ லிமிட்டெட் நிறுவனமும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

07:56:01 on 13 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

ஸ்பைடர்மேன், அயன்மேன் உட்பட பல சூப்பர் ஹீரோஸ் கதாப்பாத்திரங்களை மார்வல் காமிக்ஸ் மூலம் உருவாக்கிய ஸ்டான் லீ காலமானார். இவர் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் உட்பட பலரும் தங்கள் இரங்களைத் தெரிவித்துள்ளனர்.

07:53:58 on 13 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருப்பூரில், பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பதின்மூன்று வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

07:41:01 on 13 Nov

மேலும் வாசிக்க EENADU

ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹிமாச்சல பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் பந்து பேட்டில் படாமலே அவுட் என அம்பயர் தெரிவித்ததால், கவுதம் கம்பீர் ஆத்திரம் அடைந்தார். இதனால், அவர், அம்பயரை முறைத்துக்கொண்டே பெவிலியன் திரும்பினார்.

07:25:01 on 13 Nov

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

நியூஸிலாந்து கடல் பகுதியில் 26 அடி நீளமுள்ள பிரமாண்டமான கடல் புழு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எரிமலையால் உருவான வெள்ளைத் தீவுப்பகுதியில் ஸ்டீவ் ஹாத்வே என்பவர் தலைமையில் கடலுக்குள் சென்று ஆய்வு நடத்தியபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

07:11:01 on 13 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நாடாளுமன்றம் அதிபர் சிரிசேனா கலைத்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

06:55:02 on 13 Nov

மேலும் வாசிக்க தினகரன்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் பசுமை குடில் அமைத்து இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மழைநீர் தடுப்பான் பசுமை குடிலில் நெதர்லாந்தில் இருந்து வரவழைக்கபட்ட ஹாட் பெப்பர் மிளகாயை விவசாயிகள் நட்டு வளர்க்கின்றனர்.

06:35:01 on 13 Nov

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த டெய்லர் ரவி, பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் மீது 8 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் ரவியை கைது செய்ய சென்னை காவல்துறை உத்தரவிட்டது.

06:15:01 on 13 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் பேசும் மொழிகள் பற்றிய விவரமும் கேட்டுப் பெறப்பட்டுள்ளது. அதன்படி இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட 52கோடிப் பேரில் 12விழுக்காட்டினர் மட்டுமே இருமொழி அறிந்தவர்கள் என்றும், ஒரு விழுக்காட்டினர் மட்டுமே மும்மொழி அறிந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

05:55:01 on 13 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நாக்கில் எச்சில் ஊறச்செய்யும் ருசி மிக்க பீட்ஸா மீதான ஆசையால், அதனை டெலிவரி செய்ய வருபவரிடம் பீட்ஸாவை மட்டுமல்லாமல் பணம், பைக் ஆகியவற்றை கொள்ளையடித்து வந்த திருடர்கள் போலீசில் சிக்கியுள்ளனர்.

05:35:01 on 13 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

பேட்ட திரைப்படம் விஸ்வாசத்துடன் போட்டியிட்டால் கணிசமான ஓபனிங்கை இழக்க நேரிடும். மேலும், நவ.29 அன்று 2.0 வெளியாகிறது. இதனைத்தொடர்ந்து பொங்கலுக்கு பேட்டயை வெளியிட்டால் 2.0 ஓடி முடிப்பதற்குள் பேட்டயை வெளியிட்டதுபோல் இருக்கும். இதுவும் பேட்டயின் வசூலை பாதிக்கும் என்பதால் பேட்ட பொங்கலை தவிர்க்கும் என்கிறார்கள்.

05:15:01 on 13 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

உலக மக்களால் ஜனநாயக போராளியாக அறியப்படுபவர் மியான்மரின் அரசுத் தலைவர் ஆங் சான் சூச்சி. இவருக்கு தாங்கள் வழங்கிய ‘நம்பிக்கைக்கான அடையாளம்’ என்ற விருதினை திரும்ப பெறுவதாக அம்னிஸ்டி இண்டர்நேஷனல் எனும் பன்னாட்டுப் பொது மன்னிப்பு அமைப்புத் தெரிவித்துள்ளது.

04:55:01 on 13 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு எடுத்துள்ளது. முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது.

04:35:02 on 13 Nov

மேலும் வாசிக்க தினகரன்

பாலிவுட் பிரபலமான தீபிகா படுகோனுக்கு, பிரியங்காவின் திருமணத்திற்கு முன்பே வரும் நவம்பர் 14ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ஆனால், அவரை விட பிரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸ் பற்றிதான் அதிக அளவில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

04:15:02 on 13 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

”சபரிமலைக்கு எந்த ஆணும் செல்லக்கூடாது, எந்தப் பெண்ணும் செல்லக்கூடாது. அது புலிகளுக்கான இடம். அங்குப் புலிகளை வாழவிடுங்கள்” என்று சூழியல் ஆர்வலர் ஏ.அச்சுதன் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர், சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், மறுகட்டமைப்பு குறித்து சிந்திக்காமல் கொண்டுவரப்படும் திட்டங்கள் வீணாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

03:56:02 on 13 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

நெய்யாற்றின்கரையில் கார் நிறுத்தியதில் ஏற்பட்ட தகராறில் எலக்ட்ரீசியனை கார் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட டி.எஸ்.பி. ஹரிகுமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

03:35:01 on 13 Nov

மேலும் வாசிக்க விகடன்

”கடலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 19 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மூலம் வெள்ளம் சூழக்கூடிய பகுதியை கண்டறிந்து அந்த மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு தங்குமிடம், உணவுகள் உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என அம்மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறியுள்ளார்.

03:15:02 on 13 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் கடந்த 9ஆம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திப்பின்போது, நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ள வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.

02:55:01 on 13 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஒருவேளை விஜய் வராவிட்டால் அஜித் அரசியலுக்கு வருவார் என்று நடிகர் விஜய்யின் முன்னாள் பி.ஆர்.ஓ.வும் தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் தெரிவித்துள்ளார். மேலும் விஜய்க்கு முதல்வர் நாற்காலியில் அமரும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

02:35:01 on 13 Nov

மேலும் வாசிக்க தினமணி

சென்னை மற்றும் நாகை அருகே உள்ள கஜா புயல் மணிக்கு 4 கி.மீ வேகத்தில் மெதுவாக நகருகிறது. 7 கி.மீ., 5 கி.மீ. வேகத்தில் இருந்து கஜா புயல் 4 கி.மீ. வேகத்துக்கு குறைந்தது. நவம்பர் 14ஆம் தேதி 100 முதல் 125 கிமீ வேகத்தில் புயல் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

02:15:02 on 13 Nov

மேலும் வாசிக்க தினகரன்

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அமைச்சர்கள், அதிகாரிகளுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

01:55:01 on 13 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், கஜா புயல் 15அம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

01:41:01 on 13 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கஜா புயல் காரணமாக ஆந்திர மாநிலத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. புயலின் வேகம் குறைந்ததால் ஆந்திராவுக்கு விடப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது.

01:26:01 on 13 Nov

மேலும் வாசிக்க தினகரன்

ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் கூட்டு நிறுவனமாக சேர்க்கப்பட்ட விவகாரத்தில் தான் பொய் சொல்லவில்லை என டசால்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பதில் அளித்துள்ளார்.

01:10:01 on 13 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் நடந்த செமஸ்டர் தேர்வில், அக்கல்லூரியை சேர்ந்த தாளாளரின் மகன், தனக்கு பதிலாக மற்றொரு மாணவரை வைத்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அக்கல்லூரியின் அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

12:56:02 on 13 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

நடிகர்களுக்கு குளிர்விட்டு போனதாக கூறியது தரக்குறைவான கருத்து அல்ல என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், ‘விமர்சனங்கள் ஆரோக்கியமானதாக இருக்கலாம்,ஆனால் அது ஒரு தலைவியின் தொண்டர்களை புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது,’ என்று கூறினார்.

12:40:01 on 13 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சேலம்-சென்னை ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்த சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ள 5 பேரிடம் அடையாள அனுமதி நடத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

12:25:02 on 13 Nov

மேலும் வாசிக்க தினகரன்

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் ‘சிம்டாங்காரன்’ பாடலை, அப்படக்குழுவினர் வெளியிட்டனர். ‘இசை புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

12:11:01 on 13 Nov

மேலும் வாசிக்க என்.டி.டி.வி. தமிழ்

'பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றி எனக்கு தெரியாது என்ற மாயையை சிலர் உருவாக்கி வருகின்றனர், நான் முட்டாள் அல்ல, கேள்வியை தெளிவாக கேட்டிருந்தால் பதிலளித்திருப்பேன்,’ என கூறிய நடிகர் ரஜினிகாந்த், ‘பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

11:57:15 on 13 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 8ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

11:55:01 on 13 Nov

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

’கஜா புயல் 3 முறை திசை மாறியிருக்கிறது, அதன் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,’ என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மேலும், புயல் காலங்களில் வாகனங்களில் வெளியே செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

11:40:02 on 13 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை அண்ணா சாலையில் மின்வாரிய அலுவலகம் முன் போராட்டம் நடத்திய ஒப்பந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னதாக மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த ஊழியரை கொண்ட நிரப்பக்கோரி மறியல் போராட்டம் நடத்தினர்.

11:26:15 on 13 Nov

மேலும் வாசிக்க தினகரன்

தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த வழக்கில் கைதானவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க தருமபுரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11:25:01 on 13 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அறிவிப்பையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

11:10:01 on 13 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சபரிமலை கோயில் தொடர்பான சீராய்வு மனுக்களை நீதிமன்றத்தில் விசாரிக்க கோரியதை நிராகரித்து, நீதிபதி அறையில்தான் சீராய்வு மனுக்கள் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

10:57:58 on 13 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பட்டாசு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். மேலும், பட்டாசு உற்பத்தியாளர்கள் பிரதமரை சந்தித்து பேச நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

10:55:01 on 13 Nov

மேலும் வாசிக்க தினகரன்

உக்ரைனின் கிழக்குப் பகுதியை தங்களது ஒரு பகுதி என ரஷ்யா கூறி வருகிறது. இதற்கு ஒருபிரிவினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் குழந்தைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

10:40:02 on 13 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பாம்பன் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கஜா புயல் எச்சரிக்கையை அடுத்து 3ஆம் நாளாக விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

10:26:01 on 13 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கஜா புயல் திசைமாறினால் நாளை ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும், புயல் திசைமாறாவிட்டால் திட்டமிட்டபடி நாளை ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

10:11:02 on 13 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து சோனியா, ராகுல் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

09:55:01 on 13 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் 5 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், சென்னைக்கு கிழக்கே 750கி.மீ. தூரத்திலும், நாகைக்கு வடகிழக்கே 840கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09:40:03 on 13 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அரக்கோணத்தில் இருந்து 2 பேரிடர் மீட்பு குழுக்கள் புதுச்சேரி சென்றடைந்தன. 2 பேரிடர் மீட்பு குழுக்களில் ஒரு குழு காரைக்காலுக்கு அனுப்பப்பட்ட உள்ளது. கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் பேரிடர் குழுக்கள் உள்ளன.

09:25:01 on 13 Nov

மேலும் வாசிக்க தினகரன்

மேலும் வாசிக்க