View in the JustOut app
X

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டால் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட தயாராக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

07:25:02 on 22 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வந்துள்ளார். வெங்கையா நாயுடுவை சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் ஆகியோர் வரவேற்றனர்.

07:24:07 on 22 Apr

மேலும் வாசிக்க தினகரன்

பிரேக் இல்லாமல் முழு வீச்சில் நடக்கும் ’தர்பார்’ பட ஷூட்டிங்கில் கலந்துக் கொண்ட ரஜினி, மக்களவைத் தேர்தலுக்காக சென்னை திரும்பினார். தற்போது மீண்டும் அவர் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகின்றன.

07:10:01 on 22 Apr

மேலும் வாசிக்க ie தமிழ்

நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில் வெங்கட் பிரபு வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் வைபவ் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார், வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

06:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க விகடன்

சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஐ.பி.எல். இறுதிப் போட்டி ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தின் மூன்று கேலரிகளுக்கு மாநகராட்சி அனுமதி அளிக்காததால் இடவசதி கருதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

06:40:26 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

கடந்த ஒரு மாதமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அருவி, தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இதையடுத்து, நேற்று பெய்த கோடை மழை காரணமாக, அருவியில் மீண்டும் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்ட ஆரம்பித்துள்ளது. அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினரும் அனுமதி அளித்துள்ளதால், அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

06:35:01 on 22 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கம் மருத்துவமனையின் கேன்டீன் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

06:21:12 on 22 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்ட ஆட்சியர் அனுபமா காவல் துறையினருடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்ற சம்பவம் சமூக ஊடகங்களில் வீடியோவாகப் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

06:15:02 on 22 Apr

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

நாமக்கலில் மழையின்மையால் தண்ணீர் இன்றி கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் பயிர்கள் மட்டுமில்லாமல் பாக்கு மரங்கள், தென்னை மரங்கள் உள்ளிட்டவைகள் காய்ந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

05:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க ETV BHARAT

புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் கலுஸான் தீவில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

05:35:02 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜோதிகாவின் அடுத்தடுத்த படங்களை எஸ்.ராஜ் மற்றும் கல்யாண் இயக்கியுள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் முடிந்துள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவும் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினார்.

05:15:01 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

நாடு முழுவதும் நீட் தேர்வுகள் மே மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கு வரும் மாணவ மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய உடைகள் குறித்தும், தேசிய தேர்வு ஏஜன்சியான NTA அண்மையில் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

04:55:02 on 22 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நெய்வேலி அருகே கும்பகோணம் சென்னை சாலையில் கண்ணுத்தோப்பு பாலத்தில் அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதின. இதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இதில் காயமடைந்த 20 பேரில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

04:35:01 on 22 Apr

மேலும் வாசிக்க தினகரன்

இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெடி குண்டுகளைச் செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

04:15:01 on 22 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் 19வது ஓவரில் ஏன் சிங்கிள் எடுக்கவில்லை என்பது குறித்துப் பேசிய தோனி, ’ஆடுகளம் புதிதாகக் களமிறங்கியவர்களுக்கு அதிக சவாலாக அமையும் எனக் கருதியதால், சிங்கிள் வேண்டாம் என நினைத்தேன்’ என விளக்கமளித்துள்ளார்.

03:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஈஸ்டர் நாளன்று இலங்கையில் அடுத்தடுத்து எட்டு இடங்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகனப்படுத்தப்படுவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா அறிவித்துள்ளார்.

03:35:01 on 22 Apr

மேலும் வாசிக்க தினமணி

சிதம்பரம் அருகே சென்று கொண்டிருந்த தனியார் ஏசி பேருந்தில், பழுது ஏற்பட்டு புகை வந்ததால், இறக்கிவிடப்பட்ட பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் போலீசார் பயணிகளை வேறோரு பேருந்தில் அனுப்பி வைத்தனர்.

03:15:02 on 22 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, 50 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

02:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது.

02:35:02 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

டிக் டாக் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஏப்ரல் 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படாவிட்டால் அதன்மீதான தடை நீக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து, நாளை மறுநாள் முடிவெடுக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.

02:15:01 on 22 Apr

மேலும் வாசிக்க தினகரன்

தோனி, 48 பந்தில் 84 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனை அவரது ரசிகர்கள் "தோனி ஃபார் பிரதமர்" என்ற பதிவுகள் மூலம் வைரலாக்கினார். "ராகுல்காந்தி, மோடியை மறப்போம் தோனிதான் அடுத்த பிரதமர்" என்று ட்விட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

01:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

'மோடியின் நல்ல திட்டங்களை ஆதரிக்கிறாரே தவிர அவருக்கு வாக்களிக்க ரஜினிகாந்த் கூறவில்லை,' என, ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்தார். மேலும், ‘ரஜினி - கமல்ஹாசன் நட்பு எப்போதும் நிலைக்கும். அரசியலுக்கு கமல் முன்கூட்டியே வந்துவிட்டார், ரஜினிகாந்த் விரைவில் வருவார்,’ எனவும் தெரிவித்தார்.

01:35:01 on 22 Apr

மேலும் வாசிக்க தி இந்து

அமேதி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டது. ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமை குறித்து சுயேச்சை வேட்பாளர் ஒருவர் கூறிய ஆட்சேபத்தை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.

01:15:01 on 22 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயற்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்த பரிசோதனை செய்வதற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கத்தார் நாட்டின் தோகா நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், ஆசிய தடகளப் போட்டிகளில் இந்திய அணி முதல் நாளில் 5 பதக்கங்களை வென்றுள்ளது. அன்னு ராணி, அவினாஷ் சாபில் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

12:37:01 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

காஞ்சிபுரத்தில் மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய தந்தை, சகோதரன் கைது செய்யப்பட்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

12:35:02 on 22 Apr

மேலும் வாசிக்க தினகரன்

'ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே கூறினேன்,' என உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

12:34:15 on 22 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 6 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மீ கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் இந்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

12:15:05 on 22 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அரசியல் கட்சியாக அங்கீகரிக்கக் கோரி டி.டி.வி.தினகரன் மனு அளித்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனுவை ஒப்படைத்தார்.

12:07:45 on 22 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இலங்கையில் தேவாலயங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பத்தை தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

11:55:08 on 22 Apr

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

தமிழகத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்த 3 மாதம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

11:44:18 on 22 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இன்று சர்வதேச பூமி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பூமியைப் பாதுகாக்க வலியுறுத்தும் கூகுள் டூடுள், பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் பூமியில் வாழும் அரிய உயிரினங்களின் சிறப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

11:35:01 on 22 Apr

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

இலங்கையில் மேலும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுலா பயணிகள் தங்கும் இடம், வாகனங்கள், பொது இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ளது.

11:14:08 on 22 Apr

மேலும் வாசிக்க தினகரன்

இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் என 8 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்து தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்தியர்கள் உள்பட 215 பேர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் மே 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அமமுக கட்சி வெளியிட்டுள்ளது.

10:35:02 on 22 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.டோனி, ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர் 203 சிக்சர்கள் அடித்துள்ளார்.

10:15:03 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த பானத்தை தினமும் அருந்திவர பெண்களுக்கு வயிற்று பகுதியில் மற்றும் இடுப்பு பகுதியில் சேரும் தேவையற்ற சதைகளை குறைக்க இந்த வெந்தய டீ பயன்படுகிறது.

09:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ் பிளேடு மோட்டார்சைக்கிளின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் பண்டிகை காலத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

09:35:01 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் இருந்த அறைக்கு சென்ற விவகாரம் தொடர்பாக மேலும் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கலால்வட்டாட்சியர் சம்பூர்ணத்தை தொடர்ந்து 3 பேரை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் நடராசன் உத்தரவிட்டுள்ளார்.

09:15:02 on 22 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பொன்னமராவதி மற்றும் அதை சுற்றியுள்ள 40 ஊராட்சிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இயல்புநிலை திரும்பியதை அடுத்து 144 தடை உத்தரவை வாபஸ் பெறுவதாக புதுக்கோட்டை ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

08:57:52 on 22 Apr

மேலும் வாசிக்க தினகரன்

இலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இலங்கையில் 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

08:55:02 on 22 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள் இணையத்தில் லீக் ஆக்யுள்ளது. அதன்படி இதில் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இது குவாட் பிக்சல் தொழில்நுட்பத்தில் நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து ஒற்றை பெரிய பிக்சலில் புகைப்படங்களை 12 எம்.பி. தரத்தில் வழங்கும் என கூறப்படுகிறது.

08:35:02 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர் விடுமுறை முடிந்து ஏராளமானோர் சென்னைக்கு திரும்புவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

08:15:01 on 22 Apr

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.10-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:55:02 on 22 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருச்சியில் துறையூர் அருகே உள்ள கருப்பு சாமி கோயில் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், 'இந்த சம்பத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்" என்று பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

07:35:01 on 22 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கடலூரில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மணல் கடத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கள்ளிப்பாடி பகுதியில் ரோந்து செய்தபோது மணல் திருடி வந்த நான்கு பேர் போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியை விட்டு விட்டு தப்பி ஓடினர். போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

07:15:01 on 22 Apr

மேலும் வாசிக்க தின மலர்

கடந்த 17ஆம் தேதி உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ஆயிரத்து 381 கிலோ தங்கம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யபட்டது. இந்த தங்க கட்டிகள் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து தகுந்த ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதை அடுத்து, தங்க கட்டிகள் திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

06:55:02 on 22 Apr

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

ஆக்‌ஷன் த்ரில்லரில் சிம்பு - கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், இந்தப் படம் மெகா பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் 45வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் மதன் கார்க்கி வசனம் மற்றும் பாடல்களை எழுதுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:25:01 on 22 Apr

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

இயக்குநர் ஷங்கர் திரை துறைக்கு வந்து இருபத்து ஐந்து ஆண்டுகள் ஆனதையொட்டி, மணிரத்தினம், லிங்குசாமி, சசி, அட்லீ, வசந்தபாலன், ரஞ்சித், பாலாஜி சக்தி வேல், பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் ’S25' நிகழ்வில் பங்கேற்றனர். தற்போது இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

05:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க விகடன்

லாரன்ஸ் ரசிகரின் செயலால், 'மூடர் கூடம்' இயக்குநர் நவீன் தனது டவிட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர், “இது மிகவும் முட்டாள்தனமானது. லாரன்ஸ் மாஸ்டர்கள் அவர்களே, தயவு செய்து உங்கள் ரசிகர்களுக்கு புரிதலை ஏற்படுத்துங்கள்.” என பதிவிட்டுள்ளார்.

04:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரிலுள்ள அரசின் போக்குவரத்துறையின் அலுவலகத்தில் மூவர் பணியின் போது மது அருந்தியுள்ளனர். அத்துடன் இவர்கள் தகாத வார்த்தைகளையும் பேசியுள்ளனர். இதுதொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனையடுத்து 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

04:25:01 on 22 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தேர்தல் நடைமுறை நிறைவடைய இன்னும் 37 நாட்கள் உள்ளன. அதுவரை ஏழை, எளிய மக்களுக்கும் உழவர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய உதவிகளை நிறுத்தி வைப்பது எந்த வகையிலும் நியாயமல்ல என ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

03:55:02 on 22 Apr

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ளது பொன்பரப்பி கிராமம். இந்த பொன்பரப்பி கிராமத்தில் நடந்த கலவரத்தை கண்டித்து, ஏப்ரல் 24ஆம் திமுக தோழமைக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. பொன்பரப்பியில் மறுதேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

03:26:01 on 22 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

தமிழில் இது நம்ம ஆளு, சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் நடிகை அடா சர்மா. இந்நிலையில் அவர் தற்போது ஒரு ஹிந்தி படத்தில் கமிட் ஆகியுள்ளார். Man to Man என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அடா சர்மா ஆணாக இருந்து பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் ரோலில் நடிக்கிறார்.

02:56:02 on 22 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

கோடையில் கிடைக்கும் லிச்சிப் பழத்தை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இதனால் இதனை உட்கொண்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

02:26:01 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

வியட்நாமில் உள்ள விமானத்தளம் ஒன்றினை பல மில்லியன் டாலர்கள் மதிப்பில் செலவு செய்து சுத்தம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இங்குதான் மோசமான 'ஆரஞ்ச்' எனப்படும் ரசாயணத்தை அந்நாடு சேமித்து வைத்திருந்தது.

01:56:02 on 22 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தற்போது சிம்புவின் அடுத்தப்படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. நர்தன் எனும் புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் கெளதம் கார்த்திக்கும் நடிக்கிறார்.

01:26:01 on 22 Apr

மேலும் வாசிக்க ie தமிழ்

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி ஆகிறது. இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

12:57:01 on 22 Apr

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 8.61 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டு பிப்ரவரி நிலவரத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் எனவும் இபிஎஃப்ஓ அறிக்கையில் கூறியுள்ளது.

12:25:01 on 22 Apr

மேலும் வாசிக்க காமதேனு

வங்கிகளுக்கு வாரம் இரண்டு நாள் விடுமுறை என ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது எனவும், அவ்வாறான அறிவிப்புகள் எதுவும் இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

11:55:02 on 21 Apr

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

சென்னை திருவொற்றியூரில் கேட்பாரற்று நின்ற டெம்போ ஒன்றில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்திருக்கும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் இருக்கும் என தெரியவந்துள்ளது.

11:25:01 on 21 Apr

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் குற்றால அருவிகளில் தண்ணீர் விழ தொடங்கியது.
இதனால் சுற்றுலா பயணிகள் இன்று காலை முதலே குற்றாலத்தில் வந்து குவியத் தொடங்கியுள்ளனர்.

10:55:01 on 21 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

மும்பையில் தானே மாவட்டம் மிராரோடு பகுதியில், பணம் திருடியதாக நினைத்து தங்கையை கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்து உள்ளது.

10:25:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் சில போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ.4,575 வரை கேஷ்பேக் பெற முடியும். கேஷ்பேக் தொகையை பெற வாடிக்கையாளர்கள் ஆண்டு சந்தா சலுகைகளை தேர்வு செய்ய வேண்டும்.

09:56:01 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்கீழ் சிறுபான்மையினர் அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கு நாளை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

09:25:02 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

நான்கு தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது திமுக தலைமை. அதற்காக தொகுதிக்கு 25 கோடி பட்ஜெட் முடிவு செய்திருக்கிறார்கள். திமுகவில் இப்படி என்றால் அதிமுகவில் தொகுதிக்கு 75 சி வரையில் செலவு செய்யலாம், ஓட்டுக்கு இரண்டாயிரம் நோட்டு இரண்டு கொடுக்கலாம் என்ற மாஸ்டர் பிளானில் இருக்கிறார்களாம்.

08:57:01 on 21 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இலங்கை சம்பவத்தை உலகம் முழுவதும் அரசியல் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும், இலங்கையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 13 கோடி பேர் உயிரிழந்து விட்டதாக தவறுதலாக பதிவு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

08:39:02 on 21 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இலங்கை சம்பவத்தை உலகம் முழுவதும் அரசியல் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும், இலங்கையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 13 கோடி பேர் உயிரிழந்து விட்டதாக தவறுதலாக பதிவு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

08:36:02 on 21 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

உதகையில் இந்த ஆண்டிற்கான கோடை சீசன் உதகையில் தற்போது தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும், கர்நாடக, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும், கடந்த இரண்டு நாட்களாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வர தொடங்கி உள்ளனர்.

08:26:19 on 21 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7

உதகையில் இந்த ஆண்டிற்கான கோடை சீசன் உதகையில் தற்போது தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும், கர்நாடக, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும், கடந்த இரண்டு நாட்களாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வர தொடங்கி உள்ளனர்.

08:22:50 on 21 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7

ஒடிசாவில் ஏப்ரல் 11, 18 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்தல் பணியில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி இதுவரை 14 தேர்தல் அலுவலர்களை இடைநீக்கம் செய்துள்ளார் அம்மாநில தேர்தல் அலுவலர் சுரேந்திர குமார். ஒரு தொகுதிக்கு மறுதேர்தல் நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

08:18:01 on 21 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

ஒடிசாவில் ஏப்ரல் 11, 18 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்தல் பணியில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி இதுவரை 14 தேர்தல் அலுவலர்களை இடைநீக்கம் செய்துள்ளார் அம்மாநில தேர்தல் அலுவலர் சுரேந்திர குமார். ஒரு தொகுதிக்கு மறுதேர்தல் நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

08:15:01 on 21 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

சென்னை, முகப்பேர் கிழக்கு பகுதியில் டால்பின் நீச்சல் குளம் அருகே போதை மாத்திரைகள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தலவல் கிடைத்துள்ளது.அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சரத் என்ற சரவணன் என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

07:57:01 on 21 Apr

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

ஐதராபாத்தில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ஆடிய ஐதராபாத் அணி 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

07:39:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

ஐதராபாத்தில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ஆடிய ஐதராபாத் அணி 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

07:36:02 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் பதான் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பால்கோட் சம்பவம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறிய விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார்.

07:15:01 on 21 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

‘தர்பார்’ படத்தின் முதல் பாதியில் சமூக சேவகராகவும், இரண்டாம் பாதியில் அதிரடி போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் ரஜினி. ஏற்கனவே, ‘மூன்று முகம்‘ படத்தில் ரஜினி நடித்திருந்த அலெக்ஸ் பாண்டியன் வேடம் பிரமாதமாகப் பேசப்பட்டது.

06:57:44 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி சாலையில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 4 நாட்கள் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்புவதால், ஆத்தூர் சாலை சுங்கச்சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

06:39:02 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி சாலையில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 4 நாட்கள் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்புவதால், ஆத்தூர் சாலை சுங்கச்சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

06:36:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

பிட்காயின் முதலீட்டாளர் சாட் எல்வர்ட்டோவ்ஸ்கி என்பவர் தன் காதலி சுப்ரானி தெப்தெட் என்பவருடன் சேர்ந்து தாய்லாந்தில் கடலில் கான்கிரீட் வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். அங்கு கடலுக்குள் வீடு கட்டியது சட்டவிரோத செயல் என்றும் அது நாட்டின் இறையாண்மையை மீறிய செயல் என்றும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

06:15:01 on 21 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

பாபர் மசூதியை இடித்ததில் பெருமை கொள்வதாக பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளிக்கக்கோரி தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

05:57:02 on 21 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்புகள் பெருமபாலானவை தற்கொலை படை தாக்குதல் மூலம் நிகழ்த்தப்பட்டவை என இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூபன் தெரிவித்துள்ளார்.

05:54:29 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

கத்தார் நாட்டைச் சேர்ந்த கஸ்ராய் என்பவர் சொந்தமாக யூ-டியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் ஒரு வீடியோவை யூடியூபில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ ஆரம்பிக்கும்போதே “பார்வையாளர்களுக்கு வணக்கம். நான் இன்று உங்கள் மனைவியை எப்படி அடிக்க வேண்டும் என்பதைக் கற்றுத் தரவுள்ளேன்” என்றே தொடங்குகிறார்.

05:35:01 on 21 Apr

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

உத்தரப்பிரதேசம் மாநிலம் பதாவுன் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுபவர் சங்க்மித்ரா மவுரியா. இவர் பேசியா வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஓட்டு போட வராதவர்களின் ஓட்டுகளைத் தொண்டர்கள் போட்டு விடுமாறு சங்க்மித்ரா மவுரியா பேசி இருப்பதாகக் கூறப்படுகிறது.

05:15:02 on 21 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பொன்பரப்பியில் நடந்த சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசியவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். டிக்டாக் செயலியில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக விஜயகுமார் என்பவரை அசோக்நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

04:57:01 on 21 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் குடும்பத்தோடு வசித்து வந்த, ஜெய்ஹிந்த் தேவி என்பவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

04:39:01 on 21 Apr

மேலும் வாசிக்க ஏசியாநெட் செய்திகள்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் குடும்பத்தோடு வசித்து வந்த, ஜெய்ஹிந்த் தேவி எனபவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

04:36:01 on 21 Apr

மேலும் வாசிக்க ஏசியாநெட் செய்திகள்

இலங்கையில் ஈஸ்டர் தினத்தையொட்டி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 190க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், கொழும்பு புறநகரமான தெமட்டகொடையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மூன்று போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.

04:29:56 on 21 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கூடங்குளம் அணு உலையில் நிறைய பிரச்சினைகள் இருப்பது உண்மைதான் என்று இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவரும், இந்திய அணுசக்தி துறையின் செயலாளருமான கமலேஷ் நிகந்த் வியாஸ் ஒப்புக் கொண்டுள்ளார். இதையொட்டி அணு உலையை இனி விரிவாக்கம் செய்யக் கூடாது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

04:18:01 on 21 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கூடங்குளம் அணு உலையில் நிறைய பிரச்சினைகள் இருப்பது உண்மைதான் என்று இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவரும், இந்திய அணுசக்தி துறையின் செயலாளருமான கமலேஷ் நிகந்த் வியாஸ் ஒப்புக் கொண்டுள்ளார். இதையொட்டி அணு உலையை இனி விரிவாக்கம் செய்யக் கூடாது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

04:15:02 on 21 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

"அடக் கடவுளே. இலங்கையில் குண்டுவெடிப்புகள். எல்லோருக்கும் கடவுள் துணை நிற்கட்டும். இப்போதுதான் கொலம்போவில் சினாமன் கிராண்ட் ஹோட்டலிலிருந்து வெளியேறினேன். அங்கு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. என்னால் இதை நம்ப முடியவில்லை. அதிர்ச்சியாக உள்ளது" என்று நடிகை ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

03:57:01 on 21 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

"நாங்கள் தேவாலயத்தின் வெளியில் சென்றுகொண்டிருக்கும்போது பலத்த சத்தத்துடன் மிகப்பெரும் குண்டு வெடித்தது. இதனால் அருகில் இருந்த கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் ஏற்பட்டதை போல் உணர்ந்தோம்." என குண்டு வெடிப்பை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.

03:39:01 on 21 Apr

மேலும் வாசிக்க விகடன்

"நாங்கள் தேவாலயத்தின் வெளியில் சென்றுகொண்டிருக்கும்போது பலத்த சத்தத்துடன் மிகப்பெரும் குண்டு வெடித்தது. இதனால் அருகில் இருந்த கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் ஏற்பட்டதை போல் உணர்ந்தோம்." என குண்டு வெடிப்பை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.

03:36:01 on 21 Apr

மேலும் வாசிக்க விகடன்

தேர்தலில், வேட்பாளர் தேர்வில் இருந்து, வாக்காளர்கள் வரை, ஜாதி வேரூன்றி உள்ளது.ஹரியானாவில், ஜாட் சமுதாயத்தினர் அதிகம் உள்ள பகுதிகளில், அதே சமுதாயத்தை சேர்ந்த, முன்னாள் முதல்வர், புபேந்தர் சிங் ஹூடாவுக்கு, 'செக்' வைக்கும் வகையில், பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களை, பாஜக வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.

03:18:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினமலர்

தேர்தலில், வேட்பாளர் தேர்வில் இருந்து, வாக்காளர்கள் வரை, ஜாதி வேரூன்றி உள்ளது.ஹரியானாவில், ஜாட் சமுதாயத்தினர் அதிகம் உள்ள பகுதிகளில், அதே சமுதாயத்தை சேர்ந்த, முன்னாள் முதல்வர், புபேந்தர் சிங் ஹூடாவுக்கு, 'செக்' வைக்கும் வகையில், பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களை, பாஜக வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.

03:15:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினமலர்

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 10-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த நிலையில் டோனி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

02:57:01 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

இலங்கையில் மீண்டும் குண்டு வெடித்ததால் பதற்றம் நிலவிவருகிறது. மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, மாலை 4 மணி முதல் சமூக வலைதளங்களை முடக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

02:48:11 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்படலாம் என 4 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. அந்நாட்டில் 4 நாட்களுக்கு முன், லேசான குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோதே இந்திய உளவுப்பிரிவு இலங்கையை எச்சரித்தது.

02:39:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்படலாம் என 4 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. அந்நாட்டில் 4 நாட்களுக்கு முன், லேசான குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோதே இந்திய உளவுப்பிரிவு இலங்கையை எச்சரித்தது.

02:36:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி இலங்கையில் தேவாலயங்களில் இன்று சிறப்புப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அப்போது, அந்தோணியர் தேவாலயம், நீர் கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்தச் சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 156ஆக உயர்ந்துள்ளது.

02:15:02 on 21 Apr

மேலும் வாசிக்க தினமணி

மேலும் வாசிக்க