10:57:02 on 05 Dec 2019,Thu
சமீபத்தில் கைதி படத்தை பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை போனில் அழைத்து ரஜினி பாராட்டினார். அப்போதே ரஜினி - லோகேஷ் கனகராஜ் இணைவதாக செய்திகள் வெளியாகின. தற்போது அந்த படத்தை அந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டெர்னேஷனல் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
10:57:02 on 05 Dec
09:57:01 on 05 Dec 2019,Thu
அமெரிக்காவைச் சேர்ந்த 8 மாத குழந்தை லூனாவுக்கு முகத்தில் நெற்றி மற்றும் கண்களைச் சுற்றி கறுப்பு நிறத்தில் மச்சம் போன்று காணப்படுகிறது. இதற்கு காரணம் மெலனின் எனப்படும் நிறமி இந்த இடங்களில் அடர்ந்து காணப்படுவதால் லூனாவுக்கு இப்படி உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
09:57:01 on 05 Dec
08:57:01 on 05 Dec 2019,Thu
இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான யூரோமானிட்டர் இன்டர்நேஷனல், சுற்றுலா பயணிகள் விரும்பும் பிரபலமான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், பல மாதங்களாக போராட்டம் நடந்துவந்தாலும் ஹாங்காங் நகரம் முதலிடத்தை பிடித்தது. சென்னை 36வது இடத்திலும், மும்பை 14வது இடத்திலும் உள்ளது.
08:57:01 on 05 Dec
08:27:02 on 05 Dec 2019,Thu
சாருகேஷ் சேகர் என்ற இயக்குநரின் திரைப்படத்தில் அடுத்ததாக நடிக்கும் அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வாணி போஜன், சுவாரசியமான தகவல் என்னவென்றால், வாணி போஜன் குறிப்பிட்டிருக்கும் சாருகேஷ் சேகர், கார்த்திக் சுப்பராஜின் பெஞ்ச் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட குறும்படங்களில் ‘புழு’ என்ற குறும்படத்தை இயக்கியவர்.
08:27:02 on 05 Dec
07:55:01 on 05 Dec 2019,Thu
சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்க இருட்டு என்ற பெயரில் புதிய பேய் படம் தயாராகி உள்ளது. இப்படத்தினை வி.இசட் துரை இயக்கி உள்ளார். சாக்ஷி சவுத்ரி, வி.டிவி. கணேஷ், விமலா ராமன், யோகிபாபு, சாய் தன்சிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.
07:55:01 on 05 Dec
07:25:02 on 05 Dec 2019,Thu
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரியம்மன் தொழில் நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த இளம் ஆராய்ச்சி மாணவ மாணவிகள் 6 பேர் கூட்டாக சேர்ந்து தங்களது ஆய்வகத்தில், 5 கிலோ எடையில் சிறிய வடிவிலான, ஆறு, குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் தத்தளிப்பவர்களை மீட்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர்.
07:25:02 on 05 Dec
06:55:01 on 05 Dec 2019,Thu
அரசுக்கே ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறார் நித்தியானந்தா. இவரை கைதுசெய்ய நீதிமன்றமே உத்தரவிட்டும் அதைப் பற்றி கவலையின்றி ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு பொழுதுக்கு ஒரு கெட்டப்பும், நாளுக்கு ஒரு வீடியோவுமாக உல்லாச மோடில் இருக்கிறார்.
06:55:01 on 05 Dec
06:25:02 on 05 Dec 2019,Thu
சமையலுக்கு தினந்தோறும் பயன்படும் வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். பொதுமக்கள் வழக்கத்தை விட குறைந்த அளவே வெங்காயம் வாங்கி செல்கின்றனர். இந்த விலை உயர்வு மேலும் ஒரு மாதம் வரை நீடிக்கும்.
06:25:02 on 05 Dec
05:57:03 on 05 Dec 2019,Thu
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துக் கூறியது. தொடர்ந்து. இது தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
05:57:03 on 05 Dec
05:27:01 on 05 Dec 2019,Thu
உத்திரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் 23 வயது இளம் பெண்ணை கடந்த மார்ச் மாதம் 2 பேர் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக நீதிமனறத்தில் வழக்கு தொடரப்பட்டு, இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக சென்ற போது, நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் அந்த பெண் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளார்.
05:27:01 on 05 Dec
04:57:01 on 05 Dec 2019,Thu
இரும்பு கடையில் லாரி ட்ரைவராக வேலைப்பார்க்கும் தினேஷ், டீச்சராக இருக்கு ஆனந்தியை காதலிக்கின்றார். ஆனால், ஆனந்தி வீட்டில் சாதி ரீதியாக பிரச்சனை இருக்க எதிர்ப்பு இருக்கிறது. ஆனால், இதைவிட பெரிய பிரச்சனை அந்த இரும்பு கடைக்கு இரண்டாம் உலகப்போரில் இருந்து மிஞ்சிய குண்டுகளில் ஒன்று கரை ஒதுங்கி இவர்கள் கடைக்கு வருகிறது.
04:57:01 on 05 Dec
04:27:01 on 05 Dec 2019,Thu
பாலியல் வழக்கு, குஜராத் ஆசிரமத்தில் சிறுமிகள் கடத்தல் உள்ளிட்ட புகார்களில் நித்யானாந்தாவை போலீசார் தேடி வருகின்றனர். அதேபோன்று இச்சாதரி சந்த் சுவாமி பீமானந்த், பாலியல் வழக்கில் 2 முறை கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை போரிவலி பகுதியில் உள்ள ஸ்ரீ ராதே மா, ஆபாசமாக பேசியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
04:27:01 on 05 Dec
03:57:02 on 05 Dec 2019,Thu
உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவர் நிகேல் சார்ட், ”சென்னையில் செஸ் விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் தரப்படுவதுபோல், செஸ் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் தரவேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கிரிக்கெட்டை போல் செஸ் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த திட்டமிட்டோம்” என்றார்.
03:57:02 on 05 Dec
03:27:01 on 05 Dec 2019,Thu
புதிய வீடியோவை நித்தியானந்தா யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கிறார். அதில், நான் ஒரு புறம்போக்கு, பரதேசி எனக் கூறும் நித்தியானந்தா என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என கூறியுள்ளார். நான் ஜாலியா இருப்பதை பார்த்து ஏன் வயிறு எரிய வேண்டும், முடிந்தால் நீங்களும் ஜாலியாக இருங்கள் என்றும் நித்தியானந்தா பேசியுள்ளார்.
03:27:01 on 05 Dec
02:57:01 on 05 Dec 2019,Thu
எம்.பி. சுப்ரியா சூலே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நான் அதிகமாக வெங்காயமோ அல்லது பூண்டோ சாப்பிடுவதில்லை. வெங்காயம் மற்றும் பூண்டு பற்றி அதிகம் அக்கறை கொள்ளாத ஒரு குடும்ப பழக்கத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன்”என்று கூறினார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
02:57:01 on 05 Dec
02:27:01 on 05 Dec 2019,Thu
”பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகிய மோசமான முடிவுகளால் நாட்டின் பொருளாதாரம் பாதித்துள்ளது. பொருளாதாரம் குறித்து வழக்கத்திற்கு மாறாக பிரதமர் மவுனம் காத்து வருகிறார். பொருளாதார நிபுணர் கூறியது போல், அரசாங்கம் பொருளாதாரத்தின் ‘திறமையற்ற மேலாளராக’ மாறிவிட்டது.” என ப.சிதம்பரம் குற்றச்சாட்டியுள்ளார்.
02:27:01 on 05 Dec
02:03:02 on 05 Dec 2019,Thu
சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு அவரது கணவர் ஈஸ்வர் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈஸ்வர், ”ஜெயஸ்ரீ கூறுவது முற்றிலும் பொய். பணம் பறிக்கும் நோக்கத்தில் அவர் என் மீது வீண்பழி சுமத்துகிறார்.” என குற்றம் சாட்டினார்.
02:03:02 on 05 Dec
02:00:01 on 05 Dec 2019,Thu
சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு அவரது கணவர் ஈஸ்வர் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈஸ்வர், ”ஜெயஸ்ரீ கூறுவது முற்றிலும் பொய். பணம் பறிக்கும் நோக்கத்தில் அவர் என் மீது வீண்பழி சுமத்துகிறார்.” என குற்றம் சாட்டினார்.
02:00:01 on 05 Dec
01:49:29 on 05 Dec 2019,Thu
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துகொண்டார் பா.ஜ.க மாநில துணைத் தலைவராக இருந்த பி.டி.அரசகுமார். இது குறித்து அவர் ``ஸ்டாலின் குறித்து பேசியதற்காக, என் வாழ்நாளில் கேட்கக்கூடாத வார்த்தைகளை எதிர்கொண்டேன்." என்றார்.
01:49:29 on 05 Dec
01:41:56 on 05 Dec 2019,Thu
தென்மேற்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு பவன் புயல் என பெயரிடப்பட்டுள்ளது. பவன் புயலால் இந்திய துணை கண்டத்திற்கு மழையோ, தாக்கமோ இருக்காது. பவன் புயல் மேற்கில் நகர்ந்து ஓமன் கடற்கரையை அடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
01:41:56 on 05 Dec
01:27:01 on 05 Dec 2019,Thu
புனே கோரேகான் தலித் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்கள், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைதானவர்கள் ஆகியோர் மீதான 700 வழக்குகளை திரும்பப்பெறுவதாக உத்தவ் தாக்கரே கொள்கையளவில் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
01:27:01 on 05 Dec
12:57:01 on 05 Dec 2019,Thu
சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒருவர், ``மிகவும் திறமையானவர் தோனி. இந்த வீடியோவை இங்கு பதிவு செய்ததற்காக என்னை எதுவும் செய்து விடாதீர்கள். காரணம் இது கட்டாயம் பகிரப்பட வேண்டும்.. சாக்ஷி.. உங்களது வீடியோ மிக விரைவில்..” என ஒரு வீடியோ பதிவானது.
12:57:01 on 05 Dec
12:27:01 on 05 Dec 2019,Thu
திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கடந்த 23ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாணவி மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு வீட்டில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
12:27:01 on 05 Dec
11:55:01 on 05 Dec 2019,Thu
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் ஷாகான்ஜ் பகுதியை சேர்ந்த அர்காஷ் என்ற சிறுவனின் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தன. இதனையடுத்து பிரேம் மோகன் மிஸ்ரா என்ற டாக்டர் சிறுவனுக்கு சிகிச்சை அளித்தார். ஒரு மாதமாக தீவிர சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.
11:55:01 on 05 Dec
11:25:01 on 05 Dec 2019,Thu
தஞ்சை மானம்புச்சாவடி எஸ்.பி.ஜி. மிஷன் உயர்நிலைப்பள்ளி ரோட்டில் 10,500 சதுர அடி பரப்பளவில் சசிகலாவுக்கு சொந்தமான இடத்தில் வீடு உள்ளது. அந்த வீட்டில் மனோகர் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த வீடு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
11:25:01 on 05 Dec
10:57:01 on 05 Dec 2019,Thu
அமெரிக்காவின் ஹவாய் துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 3 பேர் காயமடைந்தனர். அதில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த சம்பவம் நடந்த போது, அங்கிருந்த இந்திய விமானப்படை தளபதி மற்றும் இந்திய விமானப்படையினர் பத்திரமாக மீட்கப்பட்டது தெரியவந்துள்ளது.
10:57:01 on 05 Dec
10:27:01 on 05 Dec 2019,Thu
சேலத்தில் ஒரு மிகப்பெரிய ஆபரேஷனை சத்தமில்லாமல் நடத்தி வருகிறது மத்திய உளவுத் துறை. தோழமையோடு இருப்பவர்கள் எத்தனை குற்றம் செய்தாலும் அதை அறிந்தும் கண்டுகொள்ளாமல் காப்பாற்றி வருவதும், அவர்களே தனக்கு அரசியல் ரீதியாக எதிராகச் சென்றால் அந்த விவரங்களை வைத்தே அவர்களை அடித்து உடைப்பதும்தான் தற்போதைய அமித் ஷா பாஜகவின் பாணி.
10:27:01 on 05 Dec
09:57:01 on 05 Dec 2019,Thu
தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக உலா வந்தார் ஜெயலலிதா. உடல் நலக்குறைவால் கடந்த 2016ஆம் ஆண்டு இதே நாளில் உயிரிழந்தார். இவரின், மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
09:57:01 on 05 Dec
09:25:01 on 05 Dec 2019,Thu
30 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 26ஆம் தேதி வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. காலை 8.36 மணிக்கு தொடங்கும் இந்த கிரகணம் 10.30க்கு முழுமை பெற்று 1.33 மணிக்கு விலகும் என கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார். வெற்றுக் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
09:25:01 on 05 Dec
09:13:10 on 05 Dec 2019,Thu
நைஜீரியா அருகே ஹாங்காய் சரக்கு கப்பலில் இருந்த எம்டி.நேவ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்தியர்கள் 18 பேர் கடத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க தூதரகம் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய அரசு சார்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
09:13:10 on 05 Dec
09:10:44 on 05 Dec 2019,Thu
சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சில்லறை கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.180ஆக தொடர்கிறது.
09:10:44 on 05 Dec
09:06:14 on 05 Dec 2019,Thu
தமிழகத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் விற்க வேண்டாம் என பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்லப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
09:06:14 on 05 Dec
08:55:01 on 05 Dec 2019,Thu
”நடிகை ரம்யா பாண்டியனின் பெயரில் சமூகவலைதளங்களில் கணக்குகள் தொடங்கி அதில் நான் தான் ரம்யா பாண்டியன் என்று கூறுவது தவறானது. அவ்வாறு அவரது பெயரில் தவறான பதிவுகளை பதிவிட்டால் சட்டபடியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ரம்யா பாண்டியன் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
08:55:01 on 05 Dec
07:55:02 on 05 Dec 2019,Thu
சியோமியை தொடர்ந்து நோக்கியா மொபைல் நிறுவனமும் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. நோக்கியாவின் 5ஜி ஸ்மார்டபோன் பியூர்டிஸ்ப்ளே, செய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் 4K UHD அல்ட்ரா வைடு வீடியோ வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.
07:55:02 on 05 Dec
06:55:01 on 05 Dec 2019,Thu
ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.idbibank.in/pdf/careers/Recruitment-of-Specialist-Officers.pdf லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
06:55:01 on 05 Dec
05:55:01 on 05 Dec 2019,Thu
தமிழ்ச் சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கருவேப்பிலை. நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் மருத்துவக் குணத்தினை கருத்தில் கொண்டே உணவில் சேர்த்து வந்துள்ளனர். கருவேப்பிலை கண் பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது. நீரிழிவு நோய்க்குத் தீர்வும் கிடைக்கிறது.
05:55:01 on 05 Dec
10:55:02 on 04 Dec 2019,Wed
உலகப்புகழ் பெற்ற மல்யுத்த வீர ஆந்த்ரே தி ஜெயண்ட் எட்டாவது அதிசயமாக புகழப்பட்டார். காரணம், அவரின் எடை 236 கிலோ, உயரம் 7 அடி 4 அங்குலம் என கூறப்படுகிறது. இந்த எட்டாவது அதிசயம் என்பது அதிகார பூர்வமற்ற பட்டம் என கூறப்படுகிறது. கிங்காங்’ கதாபாத்திரமான ராட்சத சிம்பன்ஸியும் எட்டாவது அதிசயமாகவும் கருதப்படுகிறது.
10:55:02 on 04 Dec
09:55:02 on 04 Dec 2019,Wed
அங்கீகரிக்கப்பட்ட சில வங்கிகளில் ஆதார், வாகன சான்றிதழ், புகைப்படம் உள்ளிட்டவற்றை கொடுத்து ஃபாஸ்டேக் அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. போதிய ஃபாஸ்டேக் அட்டைகள் கையிருப்பு இல்லாத காரணத்தால் வாகன ஓட்டிகளை வங்கிகள் அலைக்கழித்து வருகின்றன.
09:55:02 on 04 Dec
08:57:02 on 04 Dec 2019,Wed
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் கடந்த செப்., மாதம் 17 வயதுள்ள சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிவக்குமார், 19, என்பவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான். இந்நிலையில், 10 நாட்களுக்கு முன் ஜாமில் வெளிவந்த அவன், புகார் கொடுத்த சிறுமியை கத்தியால் ஆவேசமாக குத்தியுள்ளான். இதில் அந்த சிறுமி உயிரிழந்தார்.
08:57:02 on 04 Dec
08:25:02 on 04 Dec 2019,Wed
திருச்சி லலிதா ஜுவல்லரி கடையில் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையன் சுரேஷ், 5.7 கிலோ தங்கத்தை கொண்டு செல்லும்போது போலீசாரிடம் சிக்கியதால், நகை பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதில் 4.7 கிலோ தங்கத்தை மட்டுமே கணக்கில் காட்டிவிட்டு ஒரு கிலோ தங்கத்தை போலீசாரே கொள்ளையடித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
08:25:02 on 04 Dec
07:55:02 on 04 Dec 2019,Wed
கோவையில் கடன் கிடைக்காத ஆத்திரத்தில் புரோக்கரை துப்பாக்கியால் மிரட்டி, வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
07:55:02 on 04 Dec
07:25:01 on 04 Dec 2019,Wed
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளியின் தந்தை, தனது மகனுக்கு மரண தண்டனை கொடுங்கள் என்றார்.
07:25:01 on 04 Dec
06:55:01 on 04 Dec 2019,Wed
சென்னையில் கடன் வாங்கித் தருவதாக ஆவணங்களை பெற்று மோசடி செய்த ஒரு பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பவுசியாபேகம், பிரவீன்குமார், சந்துருவிடம் ஆவணங்களை பெற்று மோசடி செய்த மீனா, சங்கர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
06:55:01 on 04 Dec
06:25:02 on 04 Dec 2019,Wed
சிலசமயம், தொழிலதிபர்களிடம் பாலியல்ரீதியாக இச்சையைத் தூண்டி பணம் வசூலிப்பதும் நடந்துள்ளது. அழகிய இளம் பெண்களுடன் நித்தி அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவதே பாலியல் சபலங்களை பொதுவெளியில் விதைக்கச் செய்யும் ஓர் உத்திதான்.
06:25:02 on 04 Dec
05:58:46 on 04 Dec 2019,Wed
சூடானில் ஓடுகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். சூடான் தலைநகர் கார்தும் நகரில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 150 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
05:58:46 on 04 Dec
05:57:02 on 04 Dec 2019,Wed
சீரியல் நடிகர் ஈஸ்வர் மீது அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஈஸ்வருடன் தொடர்பிலிருந்த நடிகை மஹாலக்ஷ்மி பற்றி பல தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திருமணமான மஹாலக்ஷ்மி கணவரை பிரிந்து, புதுமுக நடிகருடன் நெருக்கத்துடன் இருந்துள்ளார்.
05:57:02 on 04 Dec
05:50:10 on 04 Dec 2019,Wed
சூடானில் ஓடுகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். சூடான் தலைநகர் கார்தும் நகரில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 150 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
05:50:10 on 04 Dec
05:27:01 on 04 Dec 2019,Wed
வங்கிகள் திவாலானால், அந்த வங்கிகளில் எவ்வளவு டெபாசிட் செய்திருந்தாலும் வைப்புத்தொகையாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே காப்பீடு தொகை கிடைக்கும் என ரிசர்வ் வங்கியின் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC) தெரிவித்துள்ளது.
05:27:01 on 04 Dec
04:57:01 on 04 Dec 2019,Wed
அருண் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான தடம் படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது அருண்விஜய் குற்றம்-23 படத்தினை இயக்கிய இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடிக்கவுள்ளார்.
04:57:01 on 04 Dec
04:27:01 on 04 Dec 2019,Wed
எங்களுடன் கூட்டணி வைத்தால் தனது மகள் சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி கொடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ”அரசியலில் நம் இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவது எனக்கு சரிப்பட்டு வராது எனத் தெரிவித்தேன்.” என்றார்.
04:27:01 on 04 Dec
04:26:36 on 04 Dec 2019,Wed
சென்னையின் எஃப்.சி அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 53 வயது ஓவன் கொய்லே இந்த சீஸன் முடியும் வரை பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் எஃப்.சி அணி, டிசம்பர் 9 அன்று ஜாம்ஷெட்பூா் எஃப்.சி அணியை எதிர்கொள்கிறது.
04:26:36 on 04 Dec
04:23:03 on 04 Dec 2019,Wed
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. நாளைமறுதினம் (டிசம்பர் 6-ந்தேதி) டி20 தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவைச் சேர்ந்த மோன்டி தேசாய்-ஐ பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது. இவரது பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.
04:23:03 on 04 Dec
04:04:27 on 04 Dec 2019,Wed
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி, ஐ.சி.சி. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 2வது இடத்திலும், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 3வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் புஜாரா 4வது இடத்திலும், ரஹானே 6வது இடத்திலும் உள்ளனர்.
04:04:27 on 04 Dec
03:57:01 on 04 Dec 2019,Wed
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவிற்கு, இலங்கையின் சுற்றுச்சூழலை காப்பதற்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி லண்டனைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கடிதம் எழுதியுள்ளான். கடிதம் அனுப்பிய சிறுவன் அப்துல்லா அபுபைத்திற்கு நன்றி தெரிவித்திருக்கும் ராஜபக்ச, அக்கடிதத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
03:57:01 on 04 Dec
03:27:01 on 04 Dec 2019,Wed
நடிகை யாஷிகா ஆனந்த், கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது கருப்பு நிற உடையில் கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி போட்டோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கும் ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.
03:27:01 on 04 Dec
02:57:01 on 04 Dec 2019,Wed
மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியான வழக்கில், கைதான சிவசுப்பிரமணியன் மீதான வழக்குப்பிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர் மீது 304 (எ) அஜாக்கிரதையாக மரணம் விளைவித்தல் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் அதனை மாற்றி 304(ii) தெரிந்தே மரணத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவில் வழக்கு போடப்பட்டுள்ளது.
02:57:01 on 04 Dec
02:27:01 on 04 Dec 2019,Wed
டெல்லியில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் டெல்லி மக்களுக்கு மாதந்தோறும் 15 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதற்காக டெல்லி முழுவதும் 11 ஆயிரம் ஹாட்ஸ்பாட் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
02:27:01 on 04 Dec
01:50:32 on 04 Dec 2019,Wed
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் தென் தமிழக கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
01:50:32 on 04 Dec
01:44:48 on 04 Dec 2019,Wed
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.29,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.37 உயர்ந்து ரூ.3665-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு அதிகரித்து ரூ.48.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
01:44:48 on 04 Dec
01:41:01 on 04 Dec 2019,Wed
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், நெல்லை மாவட்ட பாபநாசத்தில் அதிகபட்சமாக 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
01:41:01 on 04 Dec
01:36:13 on 04 Dec 2019,Wed
சத்தீஸ்கார் மாநிலம் நாராயண்பூரில் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் 6 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
01:36:13 on 04 Dec
01:27:01 on 04 Dec 2019,Wed
கோவைக்காயின் உவர்ப்பான சுவை வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளைச் சரி செய்கிறது. சிலருக்குச் சாப்பிட்டவுடன் வயிற்றில் வலி, எரிச்சல் இருக்கும். சில நேரங்களில் வாயுத்தொல்லை உடலுக்குள் உருண்டோடும். கோவைக்காய் சாப்பிடுவதன் மூலமாக இவற்றை உடனடியாக சரிசெய்யலாம்.
01:27:01 on 04 Dec
12:57:01 on 04 Dec 2019,Wed
அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட பிரித்வி 2 ஏவுகணை ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவு கடற்கரை பகுதியில் நடத்தப்பட்டது. இரவில் நடத்தப்பட்ட சோதனையில் பிரித்வி ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12:57:01 on 04 Dec
12:27:01 on 04 Dec 2019,Wed
இந்தியாவிலேயே செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் தமிழ்நாட்டில் இதுவரை 18 லட்சத்து 72 ஆயிரத்து 873 கணக்குகள் தொடங்கப்பட்டு 3 ஆயிரத்து 666 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.
12:27:01 on 04 Dec
12:25:02 on 04 Dec 2019,Wed
பாஜகவிற்கு எதிராக தன்னால் பேச முடியவில்லை என்று மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். 16ஆவது மக்களவையின் சபாநாயகராக இருந்தவர் சுமித்ரா மகாஜன். இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
12:25:02 on 04 Dec
12:09:20 on 04 Dec 2019,Wed
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி 106 நாட்கள் சிறையில் இருந்த ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ப.சிதம்பரம் பேட்டி தரவோ, அறிக்கை விடவோ கூடாது என்றும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12:09:20 on 04 Dec
11:57:02 on 04 Dec 2019,Wed
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜூலை இறுதி வாரத்திலிருந்து அங்கு கூடுதல் பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். இந்நிலையில், அந்தப் படையினரை மத்திய அரசு தற்போது வாபஸ் பெறத் தொடங்கிவிட்டது.
11:57:02 on 04 Dec
11:27:01 on 04 Dec 2019,Wed
தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை கொட்டி வருவதால் டெல்டா மாற்றும் தென் மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் நெல், வாழை பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன. பல கோடி ரூபாய் சேதத்துக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
11:27:01 on 04 Dec
10:57:01 on 04 Dec 2019,Wed
நேட்டோ 31வது உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்று வருகிறது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ”வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான தொடர்பு நல்ல நிலையில் நீடித்து வருகிறது. நான் மட்டும் அமெரிக்க அதிபராக இல்லை என்றால் நிச்சயம் நாம் அனைவரும் மூன்றாம் உலகப் போரின் மத்தியில்தான் இருந்திருப்போம்" என்றார்.
10:57:01 on 04 Dec
10:27:01 on 04 Dec 2019,Wed
இந்தியக் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்த சீனக் கப்பல் விரட்டியடிக்கப்பட்டதாக கப்பற்படைத் தளபதி கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார். அந்தமான் கடல் பகுதியில் இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலம் செயல்படுவதால் அப்பகுதியில் வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதியில்லை.
10:27:01 on 04 Dec
09:57:01 on 04 Dec 2019,Wed
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பொறுப்புடன் அதன் துணை நிறுவனமான 'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக கூடுதலாக சுந்தர் பிச்சை கவனிப்பார் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
09:57:01 on 04 Dec
09:27:01 on 04 Dec 2019,Wed
செங்கல்பட்டு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் வரலட்சுமி மதுசூதனன். இவரது இல்லம் மறைமலை நகரில் அமைந்துள்ளது. இந்த நிலையில் வரலட்சுமியின் வீடு மற்றும் அலுவலகத்தில் சரக்கு மற்றும் சேவைப் பிரிவு அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
09:27:01 on 04 Dec
08:54:36 on 04 Dec 2019,Wed
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட மானியமற்ற காஸ் சிலிண்டர் விலையில் 17.50 ரூபாய் அதிகரித்துள்ளது. இதைடுத்து, நடப்பு டிசம்பர் மாதத்தில் அவ்வகை காஸ் சிலிண்டர் விலை சேலத்தில் 732 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் இவ்வகை சிலிண்டர் 714.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
08:54:36 on 04 Dec
08:45:45 on 04 Dec 2019,Wed
சென்னை தாம்பரம் - கடற்கரை மார்கமாக செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் புதன்கிழமை காலை திடீரென நிறுத்தப்பட்டன. நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே இயந்திரக் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நின்ற மின்சார ரயிலால், தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் புதன்கிழமை காலை நிறுத்தப்பட்டது.
08:45:45 on 04 Dec
08:29:29 on 04 Dec 2019,Wed
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.91 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.53 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
08:29:29 on 04 Dec
08:25:06 on 04 Dec 2019,Wed
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.100லிருந்து ரூ.130ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.140லிருந்து ரூ.180ஆக உயர்ந்துள்ளது.
08:25:06 on 04 Dec
07:55:02 on 04 Dec 2019,Wed
பேசெஞ்சர் ரக கார்களில் இதுவரையில் சுமார் 2 கோடி கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது மாருதி சுசூகி நிறுவனம். இந்தியாவில் இத்தகையை சாதனையைச் செய்துள்ள முதல் நிறுவனம் என்ற அங்கீகாரத்தையும் மாருதி சுசூகி நிறுவனம் பெற்றுள்ளது.
07:55:02 on 04 Dec
06:55:02 on 04 Dec 2019,Wed
உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தைகள் ஆபாசப்படம் பார்க்கப்படுவதாகவும், அதில் இந்தியாவில் தமிழகம் முதலிடமும், தமிழகத்தில் சென்னை முதலிடமும் வகிப்பதாகவும் தகவல் ஒன்று ஊடகங்களில் பரவி வருகிறது.
06:55:02 on 04 Dec
05:55:02 on 04 Dec 2019,Wed
வால்நட் பருப்பில் இருக்கும் இயற்கையான ரசாயனங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, உடலை பல்வேறு வகையான நோய் தொற்றுகளிலிருந்து காக்கிறது. உடலில் இருக்கும் தீங்கான நுண்ணுயிரிகளையும் அழிக்கின்றது. புரோட்டின் நிறைந்த இந்த எண்ணெய்யை நமது சருமத்திற்கு பயன்படுத்தினால் அற்புத பலன்களை பெறமுடியும்.
05:55:02 on 04 Dec
10:57:02 on 03 Dec 2019,Tue
மருத்துவப் பணியாளர்களாக தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முதல்வர் பழனிசாமி, பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதில், அன்பு ரூபி என்ற திருநங்கையும் செவிலியராக பணி நியமன ஆணையைப் பெற்றார்.
10:57:02 on 03 Dec
09:57:02 on 03 Dec 2019,Tue
திருவனந்தபுரத்தில் உள்ள ரயில்வே புறம்போக்கு நிலத்தில் ஸ்ரீதேவி என்பவர் வசித்து வந்தார். இவரது கணவர். மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். கணவர் வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்காத காரணத்தினால், ஸ்ரீதேவியால் உணவு தயாரிக்க முடியவில்லை. பசியின் கொடுமையை தாங்க முடியாத குழந்தைகள், வீடு அருகில் இருந்த மண்ணை அள்ளித்தின்றன.
09:57:02 on 03 Dec
08:57:01 on 03 Dec 2019,Tue
வட மாநிலங்களில் வீசி வரும் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிரால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். சில இடங்களில் வெப்பநிலை மைனசுக்கு சென்றுள்ளது. தலைநகர் டெல்லியில் வெப்பநிலை 8 டிகிரியாக பதிவாகியிருக்கிறது. மிகக்குறைந்த பட்சமாக 'லே (leh)' பகுதியில் வெப்பநிலை மைனஸ் 14.4 ஆக பதிவாகி இருக்கிறது.
08:57:01 on 03 Dec
08:30:00 on 03 Dec 2019,Tue
நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கன்னியாகுமாரியில் ஆரம்பித்த வியாபாரக் கூட்டணி தூத்துக்குடியில் பிளந்து, புதுக்கோட்டையில் முறிந்து சென்னையில் வேரோடு விழுந்தது” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
08:30:00 on 03 Dec
08:27:01 on 03 Dec 2019,Tue
நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கன்னியாகுமாரியில் ஆரம்பித்த வியாபாரக் கூட்டணி தூத்துக்குடியில் பிளந்து, புதுக்கோட்டையில் முறிந்து சென்னையில் வேரோடு விழுந்தது” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
08:27:01 on 03 Dec
07:57:02 on 03 Dec 2019,Tue
நடிகை டாப்ஸி இன்று தனது புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான மிதாலி ராஜ் குறித்த வாழ்க்கை வரலாறு படத்தில் டாப்ஸி நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
07:57:02 on 03 Dec
07:25:02 on 03 Dec 2019,Tue
இந்திய மக்களுக்கு கண்ணீரை வரவைத்துக் கொண்டிருக்கிறது வெங்காய விலை இந்நிலையில் அரசியல் கட்சியின் முக்கியப் பேசுபொருளாக வெங்காய விலை உயர்வு மாறியிருக்கிறது.
07:25:02 on 03 Dec
06:55:01 on 03 Dec 2019,Tue
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட சென்னையைச் சேர்ந்த 33 வயது சண்முக சுப்ரமணியம் நாசா விண்கலன் எடுத்த புகைப்படங்களின் உதவியோடு நிலவின் பரப்பில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை அடையாளம் கண்டுள்ளார்.
06:55:01 on 03 Dec
06:31:17 on 03 Dec 2019,Tue
மேட்டுப்பாளையத்தில் மழையின் காரணமாக வீடுகளின் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்ட இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் உடனிருந்தனர்.
06:31:17 on 03 Dec
06:25:02 on 03 Dec 2019,Tue
திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற புகார்களின் அடிப்படையில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார் சாமியார் நித்யானந்தா.
06:25:02 on 03 Dec
06:15:03 on 03 Dec 2019,Tue
தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டை உருவாக்கி உள்ளார் சர்ச்சை சாமியார் நித்யானந்தா. நித்யானந்தா கட்டமைக்கும் அந்த நாட்டிற்கு நித்யானந்தா கைலாசா என்று பெயர் வைத்துள்ளார். தனிநாடு இணைய தளத்தில் இந்து மதத்தைப் பின்பற்றும் எவரும் தனது கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
06:15:03 on 03 Dec
05:57:02 on 03 Dec 2019,Tue
முரசொலி அலுவலகத்தை வைத்து பாமகவும், பாஜகவும் அரசியல் செய்வதாக கூறிய திமுக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை கூறியது. இந்நிலையில் பாமக மற்றும் பாஜக தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
05:57:02 on 03 Dec
05:27:01 on 03 Dec 2019,Tue
2020ஆம் ஆண்டு பட்ஜெட்டுக்கு முன்பாக மேலும் பல சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ”கார்ப்பரேட் வரி ஏற்கெனவே குறைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல சீர்த்திருத்தங்களை எதிர்பார்க்கலாம்.’’ எனக் கூறினார்.
05:27:01 on 03 Dec
04:58:41 on 03 Dec 2019,Tue
சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து தற்போது சிலைகடத்தல் தடுப்பு பிரிவின் புதிய ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ் அதிகாரி டி.எஸ்.அன்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
04:58:41 on 03 Dec
04:57:02 on 03 Dec 2019,Tue
இயக்குனர் கெளதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது ஜெயலலிதாவின் தோற்றத்தில் இருக்கும் ரம்யா கிருஷ்ணனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
04:57:02 on 03 Dec
04:27:01 on 03 Dec 2019,Tue
ஏமன் நாட்டிலிருந்து கடல் வழியே வெறும் விசைப்படகு மூலம் 3000 கி.மீ பயணித்து 9 இந்திய மீனவர்கள் தப்பி வந்துள்ளனர். இவர்களில் ஏழு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், இருவர் கேரளா மாநிலத்தினர். ஏன் ஏமன் சென்றார்கள், என்ன நடந்தது, எப்படி தப்பி வந்தார்கள்? இந்த கேள்விகளுக்கான பதில் சினிமாவை மிஞ்சும் சுவாரஸ்யத்துடன் இருக்கிறது.
04:27:01 on 03 Dec
03:57:01 on 03 Dec 2019,Tue
மம்முட்டி, இனியா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாமாங்கம். இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மம்முட்டி, ‘தமிழ்நாட்டில் மேடையில் பேசுவதற்கே பயமாக உள்ளது. படங்களில் டப்பிங் பேசுவது எளிதாக இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு கேரளா, தமிழ்நாடு என்று எந்த பிரிவும் கிடையாது.” என்றார்.
03:57:01 on 03 Dec
03:53:27 on 03 Dec 2019,Tue
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் விஷவாயு கசிவு சம்பவத்தின் 35ஆம் ஆண்டு நினைவு தின பேரணி நடைபெற்றது. சம்பவம் நடந்து இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையிலும், தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தவர்கள், விஷவாயு கசிவில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
03:53:27 on 03 Dec
03:27:02 on 03 Dec 2019,Tue
விவோ நிறுவனத்தின் இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. விவோ எஸ்1 விலை ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.2000 குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று விவோ வி15 ப்ரோ விலையில் ரூ.4000 குறைக்கப்பட்டுள்ளது.
03:27:02 on 03 Dec
03:20:53 on 03 Dec 2019,Tue
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், “மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஏதும் சம்பந்தம் இல்லை, தனிப்பட்ட வரி குறைக்கப்படும், இறக்குமதி வரி அதிகரிக்கப்படும். இவை பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றிய பாஜகவின் கருத்துக்கள். இந்தியாவின் பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என கூறியுள்ளார்.
03:20:53 on 03 Dec
02:57:01 on 03 Dec 2019,Tue
தஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர், துணை மேலாளர் தனியார் செயலர் டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், பணி அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
02:57:01 on 03 Dec