View in the JustOut app
X

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு குறித்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி உட்பட 20 பேரை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்துள்ளார் சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ்.

02:25:01 on 23 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

’மேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக செயல்படும் வெடிகுண்டு தயாரிப்பு மையங்களை மூடவேண்டிய அவசியம் உள்ளது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அவை மூடப்படும். அரசு நிர்வாகமும் அரசியலாகியுள்ளது’ என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

02:10:01 on 23 Jan

மேலும் வாசிக்க தினத் தந்தி

‘தி வாய்ஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் நடுவராக பங்கேற்க உள்ளார். அதற்கான விளம்பரப் படப்பிடிப்பின் போது பேசிய ரகுமான், ’நடிகர்கள் தங்கள் நடிப்பில் வெளியாகும் படத்திற்காக பாடும் பாடலைப் பதிவு செய்யும் முன் அவர்களுக்கு முறையான பயிற்சி அவசியம்’ என்று கூறியுள்ளார்.

01:56:01 on 23 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

தேன்கனிக்கோட்டை அருகே கச்சுவாடியில் கல்குவாரி நீரில் மூழ்கி தாய், மகள் உயிரிழந்துள்ளனர். குட்டையில் தவறிவிழுந்த மகள் மீனாட்சியைக் காப்பாற்ற தண்ணீரில் குதித்து தாய் மாதேவியும் உயிரிழந்தார்.

01:40:01 on 23 Jan

மேலும் வாசிக்க தினகரன்

தேசிய பால் மேம்பாட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள நிர்வாக இயக்குநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் அறிவியல் துறையில் பட்டமும், அனுபவமும் பெற்றவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பெற்று பயனடையலாம்.

01:26:01 on 23 Jan

மேலும் வாசிக்க தினமணி

நடிகர் மாதவன் ‘ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராகக் களமிறங்குகிறார். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் உருவாகவுள்ளது. நடிகர் மாதவன் இயக்குநராக புதிய அவதாரம் எடுப்பது அவரது ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

01:10:02 on 23 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

எண்ணெய் பசை சருமமாக இருந்தால் கொஞ்சம் நேரம் கழித்து எண்ணெய் வடிய வாய்ப்புள்ளது. இதற்கு முகத்தை துடைத்தால் உங்கள் எல்லா மேக்கப்பும் பாழாகி விடும். எனவே டிஸ்யூ பேப்பர் அல்லது பிளாட்டி சீட் கொண்டு முகத்தை ஒற்றி எடுத்தால் போதும். உங்கள் மேக்கப்பும் களையாமல் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

12:56:01 on 23 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

உத்தரபிரதேச மாநிலம், குஷிநகர் மாவட்டத்தில், குடும்பத்தைக் காப்பாற்ற ஆண் வேடத்தில் சலூன் கடையை நடத்திய சகோதரிகள் பற்றிய தகவல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சகோதரிகளின் கனவு, சூப்பரான ஒரு பியூட்டி பார்லரை எதிர்காலத்தில் தொடங்க வேண்டும் என்பதாகும்.

12:40:02 on 23 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தனியார் துறையைச் சேர்ந்த கோட்டக் மஹிந்திரா வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.1,291 கோடியாக இருந்ததாக, இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

12:26:01 on 23 Jan

மேலும் வாசிக்க தினமணி

ஐடிபிஐ வங்கியை எல்ஐசி வாங்குவதற்கான முயற்சிகள் 2018 ஜூன் முதல் நடந்துவருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்பதலை அளித்தது. இந்நிலையில் இந்த நிறுவன கைப்பற்றுதல் தற்போது நிறைவடைந்துள்ளது.

12:10:01 on 23 Jan

மேலும் வாசிக்க தி இந்து

சேலம் மாவட்டம் மேட்டூரில் பறவைகளுக்காக ஊடுபயிராக தானியங்களை இயற்கை விவசாயி ராஜமாணிக்கம் வளர்த்து வருகிறார். இவர் பல ஆண்டுகளாக சிறுதானியங்களை சாகுபடி செய்து வருகிறார்.

11:56:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினகரன்

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், ‘லோக்பால் அமைப்பை ஏற்படுத்தியிருந்தால், ரஃபேல் போன்ற முறைகேடுகள் நிகழ்ந்திருக்காது,’ என கூறினார். மேலும், ’ரஃபேல் விவகாரம் தொடர்பான பல ஆவணங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை ஆராயவிருக்கிறேன்.’

11:40:01 on 22 Jan

மேலும் வாசிக்க இப்போது செய்திகள்

’உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் நன்றாக ஸ்கோர் செய்தும் பயனில்லை, அணியில் இடம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும், தேர்வு வாரியத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?’ என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை மாத்யூ வாட் வறுத்தெடுத்துள்ளார்.

11:26:01 on 22 Jan

மேலும் வாசிக்க காமதேனு

போப் ஆண்டவருடன் பிரார்த்தனைச் செய்வதற்காக பிரத்யேகமான புதிய செயலி ஒன்றை போப் ஆண்டவர் அறிமுகம் செய்துவைத்துள்ளார். ‘கிளிக் டூ பிரே’ என்கிற அந்த செயலி மூலம் போப் ஆண்டவர் எதற்காக? எப்போது? பிரார்த்தனை செய்யப்போகிறார் என்பதை மக்கள் அறிந்துக்கொள்ள முடியும்.

11:10:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

திண்டுக்கல் மாவட்டத்தில், கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூக்கள் கருகி விடுவதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 மாதங்களாக பூக்கள் மலராமல் அரும்புகளாகவே செடியிலே கருகி வருகின்றன. இதனால், வரத்துக் குறைந்து திண்டுக்கல் பூ மார்க்கெட்டில், ஒரு கிலோ மல்லிகை பூ 1600 ரூபாய் வரை விற்பனையாகிறது.

10:56:01 on 22 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உத்திரபிரதேச மாநிலத்தின் ஷாஜகான்பூரில் உள்ள ஏரியிலிருந்து குழந்தையின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையின் போது குழந்தைக்கு பேய் பிடித்துள்ளதாக ஒரு மந்திரவாதி கூறியதை நம்பி அக்குழந்தையைப் பெற்றோர் குழந்தையை ஆற்றில் தூக்கி வீசியதாக தெரியவந்துள்ளது.

10:41:02 on 22 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

வேலூர், திருப்பத்தூரில் ஆசிரியரை கேலி செய்த 6 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வு எழுத மட்டும் 6 மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

10:26:02 on 22 Jan

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

'தேர்தல் காலத்தில் விவசாயிகளின் ஆதரவைப் பெற மாநில அரசுகள் மேற்கொள்ளும் வேளாண் ஆதரவு நடவடிக்கைகளால் மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை கடுமையாக உயரும்,’ என்று இந்திய மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

10:11:02 on 22 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

‘1980ஆம் ஆண்டுகளில் இருந்த வெஸ்ட்இண்டீஸ் அணியை போன்று தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி மிகவும் வலுவாக உள்ளது’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் பாராட்டினார்.

09:55:02 on 22 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

யமஹா நிறுவனம், எஃப்இசட் பிரிவில் புதிய மாடல்களில் பிரிமீயம் ரக பைக்குகளை அறிமுகப்படுத்தியது. முற்றிலும் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இவை, ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது.

09:41:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினமணி

ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி, சென்னையில் நாளை தொடங்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

09:26:01 on 22 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

முதல்வர் பழனிசாமியை, இஸ்ரோ தலைவர் சிவன் சந்தித்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.14 லட்சத்தை முதல்வர் பழனிசாமியிடம் சிவன் வழங்கியுள்ளார்.

09:11:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினகரன்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் தொழில் பொருட்காட்சியும் நடைபெறவுள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துக் கொண்டு நிறைவு உரை ஆற்றவுள்ளார்.

08:56:01 on 22 Jan

மேலும் வாசிக்க ie தமிழ்

சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்த தனது அறிக்கையை ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச செலாவணி நிதியம் வாஷிங்டனில் வெளியிட்டுள்ளது. இதில், ’சர்வதேச அளவில் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா நீடிக்கும்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

08:41:01 on 22 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

சீனர்கள் தமிழ் படிப்பதற்கான காரணம் குறித்து, யுன்னான் மின்சு பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளரும், துணைப் பேராசிரியருமான நிறைமதி அளித்தப் பேட்டியில், ’தமிழ் மொழிக்கும் சீனாவிற்கும் பல நூற்றாண்டுகளாக நெருங்கிய தொடர்பு உள்ளது. அதுமட்டுமின்றி, அன்று தொட்டு இன்று வரை வர்த்தகத்தில் சிறந்த நண்பர்களாக திகழ்ந்து வருகிறோம்.’ என்றார்.

08:26:01 on 22 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜிப்ஸி’. இப்படத்தில் நடிகர் ஜீவா நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ’வெரி வெரி பேடு’ (Very Very Bad) என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

08:11:35 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி கொட்டிக் கிடக்கிறது. வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பனிக்கட்டிகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

08:11:01 on 22 Jan

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

சிவகங்கையில் காரைக்குடி அருகே தம்பதி போல் நடித்து வீடு புகுந்து மூதாட்டியைத் தாக்கி பீரோவில் இருந்த பணம், நகைகளைத் திருடிச் சென்றுள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

07:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க EENADU

’மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்குத் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாகத் தடை பெற வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

07:46:21 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற அஜித்-ஷாலினி காதல் திருமணத்தில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர். அதன் பின்னர் பொது நிகழ்ச்சிகளிலும், திரைப்பட கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்வதை அஜித் குறைத்துக்கொண்டார்.

07:40:01 on 22 Jan

மேலும் வாசிக்க என்.டி.டி.வி. தமிழ்

’தயாரிப்பாளர் சங்கத்தின் வரவு செலவு கணக்கைக் காட்ட வேண்டும். கணக்கு வழக்கைக் காட்டாமல் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடத்தக்கூடாது. இளையராஜா பாராட்டு விழா நடத்துவது பற்றி சங்க உறுப்பினர்களிடம் விஷால் தெரியப்படுத்தவில்லை’ என தயாரிப்பாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

07:31:16 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பிரபல இந்தி நடிகை கரீனா கபூர்,‘என்னை எந்தக் கட்சியினரும் போட்டியிடுமாறு கேட்கவில்லை,’ என கூறினார். மேலும், ‘அப்படி கேட்டாலும் அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை,’ என தெரிவித்துள்ளார்.

07:25:02 on 22 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழக மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:10:01 on 22 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கடந்த ஜூலை மாதத்தில் உலகளவில் ஒரே நேரத்தில் 20 பேர்களுக்கு மட்டுமே ஒரு குறிப்பிட்ட செய்தியைப் பகிர முடியும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது. பின்னர் இந்த எண்ணிக்கையை ஐந்தாகக் குறைத்தது. தற்போது இந்தியாவைப் போன்றே பிற நாடுகளிலும் வாட்ஸ்அப் செய்தியைப் பகிரும் வாய்ப்பு ஐந்தாகக் குறைக்கப்பட்டுள்ளது.

06:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

விழுப்புரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கண்காட்சி மற்றும் பொருட்காட்சி ஆகிய இடங்களில், கண்களைக் கவரும் பனையோலையால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை விற்பனைச் செய்து வருகிறார்.

06:35:01 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் விசாரணைக்காக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நாளைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி கோரியுள்ளார். இதனை அடுத்து வரும் 29ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி அவருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

06:15:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினத் தந்தி

18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. தகுதி நீக்கத்திற்கு ஆளானவர்கள் மேல்முறையீடு செய்யவும் கால அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

05:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

’பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இந்த அரசு இருந்தால் தலைமைச் செயலாளரின் அறிக்கையை ஒதுக்கி வைத்துவிட்டு முதலமைச்சர் எங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’ என ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

05:35:02 on 22 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என லண்டனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தவறான தகவலை பரப்பியதாக சையத் சுஜா மீது டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது. லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது.

05:15:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினகரன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ’அரசியலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என நடிகர் அஜித்குமார் வெளிப்படையாகத் தெரிவித்தது பாராட்டுக்குரியது’ என்று கூறியுள்ளார். தொடந்து பேசிய அவர், நடிகர் அஜித் துணிச்சல்மிக்கவர், அஜித் வெளிப்படையாகப் பேசுவது தனக்குப் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

04:56:01 on 22 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மத்திய அரசு திட்டங்களில் 1 ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களுக்கு சென்றடைவதாகவும், எஞ்சிய 85 சதவீதம் வீணாவதைத் தடுக்க முடியவில்லை என்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தெரிவித்த கருத்து காங்கிரஸ் ஆட்சியின் திறன் இன்மைக்குச் சான்றாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

04:35:02 on 22 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

’தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்’ என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்ரவரி 3ஆம் தேதி அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை’ என்றும் கூறியுள்ளார்.

04:31:48 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்கும்’ என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்ற டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைய வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.

04:10:22 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பொறியியல் நுழைவுத் தேர்வில் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு தேசியத் தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

03:55:02 on 22 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

டீசல் கார்களில், புதிய கருவியைப் பொருத்தியதாக ஜெர்மனியைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனம் வோல்ஸ்வேகன் மீதான வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், 'மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களும் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளதா என பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க வேண்டும்' என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

03:35:01 on 22 Jan

மேலும் வாசிக்க தின மலர்

டெல்லி செங்கோட்டையைப் பார்வையிட அனுமதி வழங்குவது இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 31ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

03:15:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினகரன்

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ’ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்,’ என்றார். மேலும், ‘மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும்,’ என கேட்டுக்கொண்டார்.

02:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

ரஷ்யாவின் கிர்ச் ஸ்ரைட் எனும் கடல் பகுதியில் எரிவாயு ஏற்றி சென்ற சரக்கு கப்பல் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா- உக்ரைன் இடையே நெருக்கடி நீடித்து வரும் நிலையில் இத்தகைய தொடர் விபத்துக்களால் மீண்டும் பதற்றமான சூழல் அதிகரித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

02:35:01 on 22 Jan

மேலும் வாசிக்க EENADU

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக ராணுவத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சோபியானில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

02:15:01 on 22 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

’ஜனவரி 27ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டப்படும்,’ என்று மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார். மேலும், ’மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்போது பெரியார் சிலையை அங்கேயே வைக்க வேண்டும்,’ எனவும் கூறினார்.

01:55:02 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’அரசியல் குறித்து தனது நிலையை திறந்த மனதுடன் வெளிப்படுத்திய நடிகர் அஜித்தின் செயல் பாராட்டத்தக்கது,’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும், 'யார் நினைத்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது, கொடநாடு விவகாரத்தில் எந்த விசாரணையையும் எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது,' என கூறினார்.

01:35:02 on 22 Jan

மேலும் வாசிக்க தினகரன்

அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்து விரிவான அறிக்கையை, 4 வாரங்களில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

01:15:02 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் சிலர் கைதுச் செய்யப்பட்டனர். கைதுச் செய்யப்பட்ட வீரர்களிடம் இருந்து திருட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், கிளர்ச்சியாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

12:55:02 on 22 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

தன்னையும் தன் 3 குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு வேறு ஒரு திருமணம் செய்து கொண்ட கணவரை மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தி இளம் பெண் ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். கைக்குழந்தையுடன் அவர் கதறி அழுதது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

12:35:01 on 22 Jan

மேலும் வாசிக்க ஏசியாநெட்

ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு எதிராக மாணவர் கோகுல் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டார். இதையடுத்து மனுவை வாபஸ் பெற அனுமதியளித்து உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

12:15:01 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க, வரும் வியாழக்கிழமை (24/1/19) திமுக சார்பில் ஆளுநர் மாளிகையின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

11:58:15 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஒருநாள் டெஸ்ட் போட்டிக்கான கனவு அணியின் கேப்டனாக விராட் கோலியை அறிவித்தது ஐசிசி. ஐசிசியின் ஒருநாள் அணியில் கோலி, பும்ராவுடன் ரோஹித் ஷர்மா, குல்தீப் யாதவும் இடம்பெற்றுள்ளனர்.

11:55:09 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிருத்வி ஷா. இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், பயிற்சி ஆட்டத்தின் போது காயமடைந்தார். இதுகுறித்து பேசிய அவர், ’ஐபிஎல் தொடருக்கு முன் காயத்தில் இருந்து மீண்டு விடுவேன்,’ என தெரிவித்துள்ளார்.

11:55:02 on 22 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மேகதாது அணை விவகாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு 4 வார காலம் அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். கர்நாடக அரசு, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

11:35:01 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன் என ஓபிஎஸ் விளக்கம் அளித்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ஓபிஎஸ் தனது வீட்டில்தான் சாமி கும்பிடலாமே தவிர கோட்டையில் எப்படி கும்பிட முடியும்?,’ என கேள்வியெழுப்பியுள்ளார்.

11:15:01 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கரூர் மாவட்டம் ஈசனத்தத்தில் ஊராட்சி சபை கூட்டத்தில் பேசிய, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ‘மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்படுகிறது,’ என தெரிவித்தார். மேலும், ‘மக்கள் பிரச்சனை பற்றி அதிமுக அரசு கவலைப்படுவது இல்லை,’ என கூறினார்.

10:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினகரன்

ஜெ.மரணம் குறித்த விசாரணைக்காக நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக எம்பி தம்பிதுரை ஆஜராகியுள்ளார். சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நேற்று விசாரணை நடந்த நிலையில் தம்பிதுரையிடம் இன்று விசாரணை நடைபெறுகிறது.

10:49:49 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், ‘பாராட்டுக்குரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் அஜீத்குமார்,’ என கூறினார். மேலும், ‘நான் மருத்துவராக இருந்த போது ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு அஜீத்குமார் உதவினார்,’ எனவும் தெரிவித்துள்ளார்.

10:35:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினகரன்

நடிகர் சிம்பு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ’ரசிகர்களுக்கு நான் சொல்லும் அன்புக்கட்டளை என்னனா? இதுவரைக்கும் நீங்க வைக்காத அளவுக்கு பிளெக்ஸ், கட் அவுட் வைக்கிறீங்க.. பால் எல்லாம் பாக்கெட்டில் பத்தாது, அண்டாவில் கொண்டு வந்து ஊற்ற வேண்டும். வேற லெவலில் செய்றீங்க.’ என கூறியுள்ளார்.

10:15:01 on 22 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்கள் அனைத்தும் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

09:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

'வங்கக் கடலையொட்டிய, இந்திய பெருங்கடல் பகுதியில், இலங்கைக்கு தென் கிழக்கே, காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளது,' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வளிமண்டலத்தை கடக்கும் மேக கூட்டங்களால், 25ஆம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

09:35:01 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் தடைச் செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டு விற்பனை, திருச்சி அருகே படுஜோராக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. லாட்டரிச் சீட்டு மோகத்தில் தொழிலாளர்கள் தங்கள் கூலி முழுவதையும் இழந்து தவிப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

09:15:02 on 22 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி தன் ட்விட்டர் பக்கத்தில், 'நடிப்பைத்தாண்டி தனது சுயநலத்திற்காகவும், அதிகாரத்திற்கு அனுக்கமாக இருப்பதற்காக மட்டுமே பலவருடங்களாக 'அரசியலை' பயன்படுத்துபவர் மத்தியில் அஜீத்தின் தெளிவு மரியாதைக்குரியது.' தல' எப்போதும் ஒரு தனிரகம்!' என குறிப்பிட்டுள்ளார்.

08:55:02 on 22 Jan

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

21-01-2019 அன்று நிஃப்டி ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது. தற்போதைய டெக்னிக்கல் சூழ்நிலையில் இன்று அனைத்துவிதமான டிரேடர்களுமே வியாபாரம் செய்வதை தவிர்ப்பதே நல்லது எனலாம். ஹைரிஸ்க் டிரேடர்களுமே வியாபாரத்தின் அளவை மிகவும் கணிசமாக அளவில் குறைத்துக்கொள்வதே நல்லது.

08:35:02 on 22 Jan

மேலும் வாசிக்க விகடன்

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. நாகை மாவட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

08:15:01 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்தோனேசியாவின் சும்பா பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6ஆக பதிவானது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இன்று அதிகாலை 5.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

07:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ.73.99 ஆகவும், டீசல் விலை ரூ.69.62 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:40:01 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நயன்தாரா பேசும் பிரபல வசனத்தை தன்னுடைய புதிய படத்தின் தலைப்பாக ஜித்தன் ரமேஷ் வைத்திருக்கிறார். மனோஜ் தயாரிப்பில் 'ஜித்தன்' ரமேஷ், 5 கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் ‘ஒங்கள போடணும் சார்’. இதில் ஜித்தன் ரமேஷ் உடன் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய 5 அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

07:26:01 on 22 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த செனட்சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

07:11:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினத் தந்தி

மாதவன் தற்போது ராக்கெட்ரி – தி நம்பி எபெக்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், இந்தி, ஆங்கிலம் மூன்று மொழிகளில் இப்படம் தயாராகிறது. இதில், நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு மகாதேவனோடு இணைந்து படத்தை இயக்கவும் செய்கிறார். நம்பி நாராயணன் வேடத்துக்காக அவரைப் போலவே நீண்ட வெள்ளைத்தாடி வளர்ந்து ஆளே மாறியுள்ளார் மாதவன்.

06:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பட்டாசு தொழில் தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். விருதுநகரின் முக்கிய தொழிலான பட்டாசு தொழிலை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

06:40:01 on 22 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

வெற்றிமாறன் பல சமூக விஷயங்களில் கலந்துகொண்டு குரல் கொடுக்கிறார். ”என் படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலும், அரசியலும் பேசுவேன். அது எனக்கு மிகவும் எளிதான ஒன்று” என தெரிவித்துள்ளார். இதன் மூலம் அசூரன் படம், விவசாயிகள் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்க உள்ள படமாக இருக்கும் என்று தகவல்கள் சொல்லப்படுகிறது.

06:25:02 on 22 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

ஜியோ ஜிகா ஃபைபருக்கு போட்டியாக பிஎஸ்என்எல் தனது பாரத் ஃபைபர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஃபைபர் சேவையானது ஒரு நாளைக்கு ஒரு ஜிபி ரூ.1.1 என 35 ஜிபி வரை வழங்குகிறது. இந்த பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவைகள் அதிகபட்சம் நொடிக்கு 100எம்பி வேகத்தில் டேட்டா வழங்கப்படுகிறது.

06:10:01 on 22 Jan

மேலும் வாசிக்க NDTV தமிழ்

பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் பரவலாக முன்வைக்கப்படும் கேள்விகளில் ஒன்று, "உங்கள் அனுபவத்தை பற்றி கூறுங்கள்" என்பது.....இந்த கேள்வி எவ்வளவு கொடுமையான வலி கொடுக்கும் என பாதிக்கப்பட்டவர்களால் மட்டுமே உணர முடியும்.

05:55:02 on 22 Jan

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

அழுக்குகள், பாலித்தீன்கள், ஆபத்தான பொருள்கள் நிறைந்த குப்பையை யானைகள் உண்ணும் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட அவலம். ஆனால், இலங்கையின், அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அஷ்ரப் நகர் பகுதியில் இந்த அவலம் நடக்கிறது.

05:40:01 on 22 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கள்ளக்குறிச்சியைக் கொண்டிருக்கும் விழுப்புரம் மாவட்டம் 1993ஆம் ஆண்டில் மறைந்த ஜெ.ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. விழுப்புரத்தின் வளர்ச்சி மற்றும் ஆட்சியமைப்பை கருதி மேற்கு ஆற்காடு பகுதிகளான கடலூர் மற்றும் விழுப்புரத்தை இரண்டாக பிரித்தனர். அதன் பின்னர் விழுப்புரம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

05:26:01 on 22 Jan

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

அமெரிக்காவின் வாஷிங்டன், நியூயார்க், போஸ்டன் உள்ளிட்ட நகரங்களில் பனி புயல் பாதிப்பை உருவாக்கி உள்ளது. பனிப்புயல் காரணமாக 1,458 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன, 989 விமான சேவைகள் தாமதமாகின. இதே போல போஸ்டன்- வாஷிங்டன் , இடையிலான ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

05:10:01 on 22 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

”நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் அவர்களே பாடினால் மிகவும் அற்புதமாக இருக்கும். ஆனால் அதற்குத் தேவையான பயிற்சி எடுத்துக்கொள்ள அவர்கள் நேரம் ஒதுக்க வேண்டும்” என்று ஏ.ஆர்.ரஹ்மான் யோசனை தெரிவித்துள்ளார்.

04:56:01 on 22 Jan

மேலும் வாசிக்க காமதேனு

எம்.ஜி.ஆர் 102வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட அதிமுக சார்பாக இரு சக்கர வாகன அணிவகுப்புப் பேரணி நடைப்பெற்றது. இந்த பேரணிக்கு அதிமுக எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி தலைமை வகித்தார். இந்நிலையில், வாகனப் பேரணியில், 100க்கும் மேற்பட்ட அதிமுக உறுப்பினர்கள் ஹெல்மெட் அணியாமல் பங்கேற்றது, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

04:40:02 on 22 Jan

மேலும் வாசிக்க EENADU

AVM நிறுவனம் இனி படங்களைத் தயாரிக்காது என பல தகவல்கள் வெளியானது. ஆனால், அவை அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் AVM நிறுவனம் தற்போது படம் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. நடிகர் சூர்யாவை வைத்து இந்நிறுவனம் படம் தயாரிக்கப்போவதாக முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்க உள்ளார்.

04:25:01 on 22 Jan

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

கோவை அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இமானுவேல், தனது வீட்டின் அருகே வசித்த பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். மேலும் இருவரும் திருமணம் செய்துகொண்டு தனித் தனியே வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னைக் காதலித்து ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார்.

04:10:01 on 22 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

’இந்தியாவிலோ, வாகனத் துறையின் எதிர்காலமான லித்தியமும், கோபால்ட்டும் மிகக் குறைந்த அளவே உள்ளன. இந்தச் சூழலில், அந்தப் பொருள்களைக் கையகப்படுத்துவதில், இந்தியா போதிய கவனம் செலுத்தவில்லை,’ என்று நிபுணர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

03:56:02 on 22 Jan

மேலும் வாசிக்க தினமணி

உடலில் அளவுக்கதிகமாக தைராய்டு சுரந்தால் ஹைப்பர்தைராய்டிஸம் என்றும், மிகக்குறைவாகச் சுரந்தால் ஹைப்போதைராய்டிஸம் என்றும் கூறப்படுகிறது. தைராய்டு சுரப்பு குறைவாக இருப்பதாலேயே, மாதவிடாய்க்கு முந்தைய காலகட்டத்துக்கான பிரச்னைகளை 70% பெண்கள் அடைகின்றனர் என்கிறது ஆய்வு.

03:40:01 on 22 Jan

மேலும் வாசிக்க விகடன்

நாடு முழுவதும் கடந்த 2016-17ஆம் ஆண்டு கணக்கின்படி குழந்தைகள் நல காப்பகத்தில் மொத்தம் 1.8 லட்ச குழந்தைகள் வசித்து வருகின்றனர் என புதிய அறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது. இவர்களில் 38,765 பேர் அநாதை குழந்தைகள். இந்த எண்ணிக்கையில் தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா இணைந்து 10,745ஆக உள்ளது.

03:25:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

உத்தர பிரதேசத்தில் 60 வயதைத் தாண்டும் இந்து மடாதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

03:10:02 on 22 Jan

மேலும் வாசிக்க தினமணி

சர்வதேச முகவாண்மை நிறுவனமான பி.டபிள்யூ.சி, உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலை வெளியிட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு 7வது இடத்தில் இருந்த இந்தியா, நடப்பு 2019ஆம் ஆண்டில் இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி 5வது இடத்தை பிடித்துள்ளது.

02:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினகரன்

ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே ஃபார்வர்ட் செய்ய முடிகிற வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு மாற்றத்தைக் கொண்டு வந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான இந்த கட்டுப்பாடு மூலம் வதந்திகள் ஓரளவு குறைந்தது. இந்தக் கட்டுப்பாடு தற்போது உலக அளவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

02:40:01 on 22 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

வாக்குப்பதிவு எந்திரங்களை முடக்கி, விருப்பப்பட்டவருக்கு வாக்களிக்க செய்யும் எந்த முயற்சியும் இந்திய எந்திரங்களிடம் பலிக்காது என்று கூறியுள்ள இந்திய தேர்தல் ஆணையம் லண்டன் நிகழ்ச்சி குறித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துள்ளது.

02:25:01 on 22 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சாம்சங் கேலக்ஸி m10 விலையானது ரூ.7,990ஆகும் சாம்சங் கேலக்ஸி m20 விலையானது ரூ.10,990 முதல் தொடங்குகிறது. இந்தியாவில் முதல்முறையாக m சிரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாகிறது. இந்த போன்கள் இன்பினிட்டி வி டிஸ்பிளே, அதிக திறன் கொண்ட பேட்டரிகள் கொண்டுள்ளது.

02:10:01 on 22 Jan

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சென்னையில் ஒரு நாளைக்கு சுமார் 5000 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இப்படி வந்த குப்பையில்தான் இளம்பெண்ணின் உடலின் கை, கால்களை மட்டுமே பார்சல் செய்யப்பட்டு பெருங்குடிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இளம்பெண்ணைக் கொலை செய்து உடலை கச்சிதமாக பார்சல் செய்து குப்பையில் வீசியுள்ளது ஒரு கும்பல்.

01:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால், அது பலவிதமான உடல் நலக் குறைவுகளை ஏற்படுத்தும். ஆனால், வெந்நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். மேலும் நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களும் வெந்நீரில் கரைந்து விடும்.

01:40:01 on 22 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ஹன்னா சம்மர்ஸ் என்ற 4 வயது குழந்தையின் தாய், “என் மகள் என்னிடம் நான் ஆணாக பிறந்திருந்தால் தீயணைப்பு வீரராகியிருப்பேன் என்றாள். அதற்கு நான் பெண்களும் தீயணைப்பு வீரராக முடியும் என்று சொன்னேன். நான் என் மகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் யாராவது எனக்கு உதவி செய்ய முடியுமா?” என்று ட்விட்டரில் அவர் கேள்வி எழுப்பினார்.

01:25:02 on 22 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அரசு பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மாணவ, மாணவியருக்கு தலா 4 சீருடை, பாட புத்தகம், புத்தகப்பை ஒரு ஜோடி காலணிகளையும் முதலமைச்சர் வழங்கினார். எல்கேஜி, யுகேஜியில் சேர 52,993 குழந்தைகள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர்.

01:10:01 on 22 Jan

மேலும் வாசிக்க வெளிச்சம் டிவி

கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு என்பது குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி மனம் திறந்துள்ளார். 'எட்டு ஆண்டுகளுக்குப் பின் அனுஷ்கா மற்றும் எனது குடும்பத்துக்கே முன்னுரிமை அளிப்பேன். கிரிக்கெட் எப்போதும் என் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும்.' என கூறியுள்ளார்.

12:56:01 on 22 Jan

மேலும் வாசிக்க விகடன்

’முன்னதாக ராகுல்காந்தியைப் பிரதமராக ஏற்றுக்கொள்வதாக கூறிய திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது தேர்தலுக்கு பின் பிரதமர் யார் என்பதை பார்த்துக்கொள்ளலாம் என மறைமுகமாக கூறியிருப்பது, அவர் இரட்டை வேடம் போடுவதை காட்டுகிறது,’ என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

12:40:01 on 22 Jan

மேலும் வாசிக்க EENADU

மேலும் வாசிக்க