View in the JustOut app
X

'8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் ராமலிங்கபுரத்தில் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

12:16:51 on 21 May

மேலும் வாசிக்க தினகரன்

வியக்கவைக்கும் பல கட்டுமானங்களுக்கு சொந்தக்கார நாடான சீனா, இப்போது, சூரியசக்தி மின்திட்டம் ஒன்றையே பாண்டா கரடியைப் போல வடிவமைத்துள்ளது. 250 ஏக்கர் பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மின்திட்டம் 50 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்கிறார்கள்.

12:06:14 on 21 May

மேலும் வாசிக்க நக்கீரன்

வாடகை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலோ அல்லது ஒப்பந்தம் அடிப்படையிலோ, வாடகை ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னரும், வாடகைதாரர் வீட்டை காலி செய்யாமல் இருந்தால், நஷ்ட ஈடாக இரு மடங்கு வாடகை பெறும் உரிமை வீட்டின் உரிமையாளருக்கு உண்டு.

12:03:58 on 21 May

மேலும் வாசிக்க தினமணி

டி.ஆர்.ஏ என்ற தனியார் அமைப்பு 16 நகரங்களில் ஆய்வு நடத்தி அதிக நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்கள் 2019 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் தென் இந்தியாவில் ரஜினிகாந்த், விஜய் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

11:52:00 on 21 May

மேலும் வாசிக்க மாலை மலர்

மர்ம நபர் ஒருவர் சின்மயிக்கு ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். "உங்கள் நிர்வாண போட்டோ அனுப்புங்கள்" என அவர் கேட்டுள்ளார். அதற்கு சின்மயி ’nude மேக்கப் கிட்’ புகைப்படத்தை அனுப்பி அவருக்கு நோஸ்கட் கொடுத்துள்ளார்.

11:47:46 on 21 May

மேலும் வாசிக்க சினி உலகம்

ஐஸ்வர்யா ராயை மையப்படுத்தி வந்த மீம்ஸை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததற்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார் நடிகர் விவேக் ஓப்ராய். மேலும், தனது ட்விட்டினையும் நீக்கியுள்ளார் விவேக் ஓப்ராய்.

11:44:28 on 21 May

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

சென்னை மெரினா கடற்கரையில் ராட்டினம் சுழன்ற போது சிறுவனின் சட்டை கம்பியில் சிக்கி, சுழன்ற போது அடிபட்டு அவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

11:23:36 on 21 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மோடியின் படத்தை இலச்சினையாகக் கொண்ட நமோ டிவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பை தொடங்கியது. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு வந்ததையடுத்து, பாஜக பிரசாரங்களை ஒளிபரப்பி வந்த நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.

11:16:26 on 21 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

'பான்டிங் வருகை வீரர்களுக்குத் தெம்பை அளித்துள்ளது. அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் பான்டிங்கால் ஈர்க்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். இதைப் பார்க்கும் போது, 8 வயது குழந்தைகள் ஜஸ்டின் பீபரை சுற்றிவருவதுபோல உள்ளது.' என ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் கூறியுள்ளார்.

10:48:51 on 21 May

மேலும் வாசிக்க விகடன்

பிஸ்தாவில் சியாசாந்தின், லூட்டின் ஆகிய இரு கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இவை இதயநோய்கள் வராமல் தடுப்பதிலும், கண்புரை நோயில் இருந்து காப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

10:44:00 on 21 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் 1 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

10:41:54 on 21 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 23ஆம் தேதியும் அதற்கு மறுநாளும் புதுவையில் மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்டத் தேர்தல் அதிகாரி அருண் தெரிவித்துள்ளார். மேலும், தேவைப்பட்டால் 144 தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

10:36:41 on 21 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

இந்திய முந்திரி ஏற்றுமதியாளர்கள் சீனாவுக்கான ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் இறக்குமதி வரி அதிகமாக இருப்பது அவர்களது வர்த்தக வாய்ப்புக்குத் தடையாக இருக்கிறது.

10:33:54 on 21 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நாகப்பட்டினம் செருத்தூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

10:32:07 on 21 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே கிராம மக்கள் குடிநீருக்காக தினமும் 5 கி.மீ. தூரம் அலைந்து வருகின்றனர். மேலும், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

10:16:04 on 21 May

மேலும் வாசிக்க காமதேனு

தேர்தல் ஆணையம், 'வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரங்களை பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் உடனுக்குடன் அறிய, பிரத்யேக இணையதள முகவரி: https://results.eci.gov.in/ அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் 'Voter Helpline' என்ற மொபைல் செயலியை டவுன்லோடு செய்து தெரிந்துக்கொள்ளலாம்' என அறிவித்துள்ளது.

10:01:15 on 21 May

மேலும் வாசிக்க நக்கீரன்

தனது நிறுவனத்தின் பால் விலையை, லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் உயர்த்தவுள்ளதாக அமுல் நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகரித்துவரும் பால் உற்பத்திக்கு ஆகும் செலவை கணக்கில் கொண்டே இந்த விலை உயர்வு முடிவை எடுத்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

09:55:54 on 21 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

09:49:33 on 21 May

மேலும் வாசிக்க மாலை மலர்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உத்தர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 200ம் எண் வாக்குச்சாவடியில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. மேலும் இந்த வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

09:34:58 on 21 May

மேலும் வாசிக்க தினகரன்

ஒமேகா 3 என்பது உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகளில் ஒன்று. இது மீனில் அதிகம் இருக்கிறது. அதனால் தான் கண்கள் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு மீன் சாப்பிடும்படி பரிந்துரைக்கிறார்கள். மேலும் ஒமேகா 3ல் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் கூந்தல் வளர்ச்சியை தூண்டி, வேர் பகுதியை வலுவாக்குகிறது.

09:15:01 on 21 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை நடிகை ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்டு ஓபராய் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பானது ஐஸ்வர்யாவுக்கும் எனக்குமான உறவு போன்றது. இறுதியில் ஐஸ்வர்யா அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இதுதான் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகான இறுதி முடிவு’’ என்று கூறியுள்ளார்.

08:55:01 on 21 May

மேலும் வாசிக்க தினகரன்

தேசிய கூடைப்பந்து போட்டியில், தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. ஆண்களுக்கான முதல் அரை இறுதியில் கேரள அணி 65-62 என்ற புள்ளி கணக்கில் ராஜஸ்தானை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் பெண்கள் பிரிவில் தமிழ்நாடு-கேரளா அணிகள் மோதுகின்றன.

08:35:02 on 21 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டலம் பகுதியில் ஒரு ராக்கெட் வந்து விழுந்தது. அமெரிக்க தூதரகத்தில் இருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில் அது விழுந்தது. இந்த ராக்கெட் வீச்சில் யாரும் பாதிக்கப்படவில்லை.

08:15:04 on 21 May

மேலும் வாசிக்க மாலை மலர்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.87 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.97-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:55:01 on 21 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பிரான்ஸ் தலைநகர் பாரீசிலுள்ள ஈபிள் டவரில், மர்ம நபர் ஏறியதை அடுத்து, பார்வையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு மூடப்பட்டது. பார்வையாளர் போன்று உள்ளே நுழைந்த ஒருவர் திடீரென ஈபிள் டவரின் இரண்டாவது தளத்தில் இருந்து மேல் நோக்கி ஏற தொடங்கியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

07:35:01 on 21 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பாலைவனம் நிறைந்த ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடர் மழை கிடையாது, பெரிய ஆறுகள் கிடையாது ஆனாலும் ஆண்டுதோறும் விவசாயம் வளர்ச்சியடைந்து வருகிறது கடந்த ஆறு மாதங்களில் இயற்கை விவசாய பண்ணைகள் 59 சதவீத அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

07:15:02 on 21 May

மேலும் வாசிக்க தினகரன்

புதிய பாடத்திட்டத்தை புரிந்து கொள்ளும் விதமாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10,12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் முழுவதும் பயிற்சி வழங்க மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை முடிவு செய்துள்ளது. இதில் 1,30,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளனர்.

06:55:01 on 21 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

இஞ்சியில் இருக்கக்கூடிய சாலிசிலேட் அமிலம், ஆண்டி-காகுலேஷன் தன்மை கொண்டது. இஞ்சியை மாதவிடாய் காலத்தில் அதிகமாக உட்கொண்டால் கடுமையான இரத்த போக்கு ஏற்படும். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் திறன் இஞ்சிக்கு உண்டு.

06:25:02 on 21 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இன்ஷூரன்ஸ் நிறுவங்கள் வழங்கும் பங்களிப்பு இல்லாத இன்ஷூரன்ஸ் (Non-Participating Insurance) திட்டங்கள் தற்போது 4.5% முதல் 6% வருமானத்தை அளிப்பதாக உள்ளன. இந்த வருமான சதவீதத்தை அடுத்த 20-30 வருடங்களாக உங்களால் லாக் செய்துகொள்ள முடியும்.

05:55:02 on 21 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சீனாவில் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள வனவிலங்கு பூங்காவில் ‘கோங்சு’ என்ற 21 வயது பெண் பாண்டா கரடி, தனது 14 குட்டிகளுடன் வசித்து வருகிறது. இதைக் காண பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

05:25:01 on 21 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

முகப்பருவை நிரந்தரமாகப் போக்க துளசி இலை பவுடர் ஒரு ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை, முல்தானிமிட்டி ஒரு ஸ்பூன் நன்றாக கலந்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேக்காக போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

04:55:01 on 21 May

மேலும் வாசிக்க மாலை மலர்

கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் நிலை நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் மொத்தம் உள்ள 881 காலி பணியிடங்களுக்கு 20,690 பேர் விண்ணப்பித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

04:25:01 on 21 May

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை காவல் துறையில் பெண் இன்ஸ்பெக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2017ஆம் ஆண்டில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்களாக இரண்டு பெண்கள் மட்டுமே பணிபுரிந்திருக்கிறார்கள். அதுவே தற்போது எட்டாக உயர்ந்திருக்கிறது.

03:55:02 on 21 May

மேலும் வாசிக்க விகடன்

புதுச்சேரியில் உள்ள பாரதி ரூ.8.5 லட்சம் செலவில் வனவிலங்குகள், பறவைகள், பாம்புகள் போன்ற கல்லால் ஆன சிற்பங்கள் செய்து நடப்பட்டு வருகின்றன. இந்த சிற்பங்கள் அங்கு வரும் சிறுவர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

03:25:01 on 21 May

மேலும் வாசிக்க காமதேனு

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனமான டிவிஎஸ் குழுமம். அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் டிவிஎஸ் குழுமத்தின் அங்கமான 'சுந்தரம் கிளேட்டன் நிறுவனம்' ரூபாய் 630 கோடி முதலீட்டில் புதிய ஆலையைத் தொடங்கியுள்ளது.

02:55:02 on 21 May

மேலும் வாசிக்க நக்கீரன்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில், ஸ்பெஷலிஸ்ட் கேடர் அபீசர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

02:25:01 on 21 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங், இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரை போல் உள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

01:56:01 on 21 May

மேலும் வாசிக்க ETV Bharat

ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாவே அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது. இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவேவுக்கு ஒரு பலத்த அடியாக இருக்கும்.

01:26:01 on 21 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பிளஸ்-2 படித்தவர்கள் ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேர்பவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இந்த 42வது நுழைவில் 90 பேர் சேர்க்கப்படுகிறார்கள்.

12:55:01 on 21 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

தேர்தல் ஆணையத்தின் வழிமுறைப்படி 900க்கும் மேற்பட்ட பதிவுகள் சமூக வலைதளங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. பேஸ்புக்கில் 650 பதிவுகள், டிவிட்டரில் 220, ஷேர் சேட் 31, யூ டியூப்பில் 5, வாட்ஸ் ஆப்பில் 3 என மொத்தம் 909 பதிவுகள் நீக்கப்பட்டன.

12:25:02 on 21 May

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

5GB அளவுள்ள ஒரு திரைப்படத்தை டவுன்லோடு செய்ய சராசரியாக இந்தியாவில் 2 மணி நேரம் 11 நிமிடம் 33 விநாடி நேரம் ஆகிறது. ஆனால் சிங்கப்பூரில் 11 நிமிடம் 18 விநாடி மட்டுமே. நம்முடைய `டிஜிட்டல் இந்தியா' இந்தப் பட்டியலில் 88-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் விநாடிக்கு 5.19 mbps வேகத்தில் இணையம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

11:55:01 on 20 May

மேலும் வாசிக்க விகடன்

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் கோடை வெயிலின் தாக்கத்தால் கரும்பு சாறு மற்றும் பனை நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதன்மூலம் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

11:25:01 on 20 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

ரஷ்யாவில் நடைபெற்ற சைக்கிள் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜெர்மனி, ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறுவர்-சிறுமியர், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியோர் என பல்வேறு தரப்பட்ட மக்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

10:55:01 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று சொல்வார்கள். முடியாது என்று எண்ணும் கடினமான காரியங்களைக்கூட திரும்ப திரும்ப விடா முயற்சியுடன் செய்தால் கட்டாயம் வெற்றி அடைய முடியும். எந்த செயலை செய்வதற்கு விடாமுயற்சி எடுக்கிறோமோ அதனை சாதிக்க முடியும்.

10:26:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும்.

09:56:01 on 20 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

கென்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தன்னுடைய பெண் ஆராதியவுடன் கலந்து கொண்டனர். ஐஸ்வர்யா பளபளப்பான பெரிய உடையுடன் ரெட் கார்ப்பெட்டில் நடந்து வந்தார்.

09:26:02 on 20 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தேர்தலுக்கு பின் வெளியான கருத்துக்களிப்பில் கமலுக்கு இந்த தேர்தலில் ஒரு தொகுதி கூட கிடைக்கும் என்று வரவில்லை என்றாலும், அடுத்த வரவிருக்கும் தேர்தலில் ஒரு முக்கிய அரசியல் சக்தியாக இருக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

08:55:02 on 20 May

மேலும் வாசிக்க நக்கீரன்

ஓட்டு எண்ணிக்கைக்குப் பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்க மாயாவதி திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கருத்துக் கணிப்பு முடிவை தாங்கள் நம்பவில்லை என அக்கட்சி வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

08:40:02 on 20 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

தமிழகத்தில் இன்று 12 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கரூரில் அதிகபட்சமாக 109.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருத்தணி 108.5, திருச்சி 106.8, மதுரை 105, பாம்பன் 103.8, சென்னை 102, கோயம்புத்துார் 100 என பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

08:25:01 on 20 May

மேலும் வாசிக்க தின மலர்

வைபவ் கதாநாயகனாக நடிக்கும் சிக்ஸர் படத்தின் டீஸர் இன்று மாலை வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த டீஸரை ‘சின்னத் தம்பி’ கவுண்டமணிக்கு அர்ப்பணித்துள்ளது படக்குழு. என்ன காரணம் தெரியுமா? சின்னத் தம்பி படத்தில் கவுண்டமணிக்கு மாலைக் கண் நோய். இந்தப் படத்தில் வைபவ் மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்திருக்கிறார்.

08:24:03 on 20 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நடிகர் விவேக் ஓபராய் சர்ச்சையான கருத்து ஒன்றை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள மீம் ஐஸ்வர்யா ராயை அவமானப்படுத்தும் விதமாக இருக்கிறது. இந்நிலையில், இதற்கு விளக்கம் கேட்டு விவேக் ஓபராய்க்கு தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

08:17:10 on 20 May

மேலும் வாசிக்க நக்கீரன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ’மத்தியில் பாஜகவுக்கு இடங்கள் கூடுமே தவிர குறையாது. தமிழகத்தில் கருத்துகணிப்பு பாஜகவுக்கு சாதகமாக இல்லை. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சாதகமாகும். கருத்துக்கணிப்பை வைத்து முதலில் அரசியல் செய்வதே திமுக தான்’ என்று கூறியுள்ளார்.

08:14:25 on 20 May

மேலும் வாசிக்க தின மலர்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மக்களிடம் தமிழில் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ‘உங்களுக்கு என்மீது வருத்தம் இருக்கலாம். ஆனால் உங்கள் வாழ்வை மேம்படுத்த ஜனாதிபதியாக நான் செய்த சேவை உங்களுக்கு நன்றாகத் தெரியும்’ என்று கூறியுள்ளார்.

08:10:01 on 20 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஸ்ரீவில்லிப்புத்தூர் குறவன் கோட்டை பகுதியில் வட்டக் கற்களும், முதுமக்கள் தாழியும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிலையில் அதே பகுதியில் புலி குத்தி வீரனின் நடுகல்லும் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் தொல்லியல் துறை சீரமைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

07:55:01 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு சென்னை ராஜாஜிபவன் சிபிஐ அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆதாரங்களுடன் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

07:41:01 on 20 May

மேலும் வாசிக்க தினகரன்

’மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகவர்கள், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே மையங்களில் இருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்காக மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் முறைப்படி அமைந்துள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

07:25:01 on 20 May

மேலும் வாசிக்க நக்கீரன்

ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சேலம், ராமநாதபுரம், சிதம்பரம் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

07:12:32 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஓசூர் அடுத்த அருளாளன் பகுதியில் தேனீக்கள் கொட்டியத்தில் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தேனீக்கள் கொட்டியதில் பாதிக்கப்பட்ட 60க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

07:10:01 on 20 May

மேலும் வாசிக்க தினகரன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா நாளை இரவு டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் கலந்துகொள்ள வருமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்ப்ட்டுள்ளது.

06:58:38 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2019 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

06:54:12 on 20 May

மேலும் வாசிக்க தினகரன்

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் உங்களுக்குப் பிடித்த வீரர் யார் என நடிகர் சூர்யாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சூர்யா, ’ஹாய் மாப்ளே...’ என்று ஆரம்பித்து மகேந்திர சிங் தோனி தான் எனக்குப் பிடிக்கும்’ என்று கூறியுள்ளார்.

06:23:50 on 20 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

’கருத்துக்கணிப்பு முடிவுகள் இதற்கு முன் தவறாகவே அமைந்துள்ளன. 2004-ஐ எடுத்துக் கொள்வோம். அப்போது பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகின. ஆனால், உண்மையில் நடந்து என்ன. எனவேதான் 23ஆம் தேதி வரை பொறுத்திருப்போம்’ என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

06:11:16 on 20 May

மேலும் வாசிக்க விகடன்

நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `கொலையுதிர் காலம்' படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் வருகிற ஜூன் 14ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது.

06:10:01 on 20 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும் என்றும், மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பாதுகாப்பாக பயணிக்குமாறும், பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

06:07:00 on 20 May

மேலும் வாசிக்க தின மலர்

தற்போது இந்திய அணிக்கு கேப்டனாக உள்ள விராட் கோலி அனைத்து சமூக வலைதளங்களிலும் தற்போது 100 மில்லியன் ஃபாலோவர்கள் என்ற கோட்டை எட்டியுள்ளார். இதன்மூலம், சமூக வலைதளங்களில் 100 மில்லியன் ஃபாலோவர்களைப் பெற்ற கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் விராட் கோலி.

05:49:53 on 20 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கள்ளக்குறிச்சியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவித்து வருகின்றனர். அதேபோல் தருமபுரியில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் வாட்டியதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் திருவண்ணாமலையில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

05:42:43 on 20 May

மேலும் வாசிக்க தினகரன்

சேலம் மாவட்டம் வாழப்பாடி வனச்சரகத்திற்குட்பட்ட குறிச்சி பிரிவில் மிதிக்குட்டை காப்புகாட்டில் வாழப்பாடி சரக பணியாளர்கள் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சட்டவிரோதமாக இயங்கிவந்த துப்பாக்கி தொழிற்சாலை இருந்ததைக் கண்டறிந்தனர். இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

05:40:01 on 20 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என, தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ’மோடியின் தியானத்திற்கு சக்தி அளிக்கவும் தான் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

05:25:17 on 20 May

மேலும் வாசிக்க காமதேனு

மைசூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, அரசியல் நையாண்டி என்ற பெயரில் அரசியல் தலைவர்களை இழிவுப்படுத்தவதால், செய்தி ஊடகங்களை ஒழுங்குமுறைப்படுத்த புதிய சட்டம் கொண்டு வரப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

05:18:36 on 20 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்


’கடந்த 20-30 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வரலாற்றைப் பாருங்கள், எப்போதும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்தான். கடந்த 5-7 ஆண்டுகளாகத்தான் விஷயங்கள் மாறத் தொடங்கின, நாங்களும் ஒரு அணியாகத் திரண்டு பந்து வீசுகிறோம்’ என்று மொஹமது ஷமி கூறியுள்ளார்.

05:07:28 on 20 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கோட்ஸே குறித்து சர்ச்சை கருத்து கூறிய பாஜகவின் போபால் வேட்பாளர் பிரக்யா தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’என்னை மன்னித்துவிடுங்கள். தேர்தல் முடிவுகள் வரும் வரை மூன்று நாட்கள் மவுன விரதம் மேற்கொள்ளப் போகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

04:59:11 on 20 May

மேலும் வாசிக்க நக்கீரன்

புதுக்கோட்டையில் திருடிய நகை மூலம் கிடைத்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், வங்கி ஊழியர் மாரிமுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

04:53:54 on 20 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

அகர்பத்தியில் இருந்து வரும் புகையை சுவாசிப்பது உடலில் பலவிதமான நோய்களை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். புகையிலை, சிகரெட் போன்றவற்றை விட ஆபத்தானதா என்பது குறித்து இன்னும் தெளிவாகக் கூறவில்லை.

04:44:55 on 20 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சென்னை தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, அங்கு வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

04:34:26 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தூத்துக்குடியில் அருண்குமார் என்பவர் ஸ்ரீஜா என்ற திருநங்கையைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை அங்கீகரித்து பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஆண்-திருநங்கையின் திருமணத்தை அரசு அங்கீகரித்து திருமணப் பதிவு சான்றிதழ் வழங்குவது இதுவே முதல்முறையாகும்.

04:26:44 on 20 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கோடைக் காலத்தில் நமது உடல் சூடாகவே காணப்படும். இதில் இருந்து எளிதில் விடுபட தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இரவு படுக்கச் செல்லும் போது, உள்ளங்காலில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்துவிட்டு படுப்பது உடல் சூட்டைத் தணிக்கும்.

04:10:01 on 20 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

தேர்தலுக்குப் பிறகு வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, ’கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறுவோம். இவை கருத்துக் கணிப்பு அல்ல. கருத்து திணிப்பு’ என்று கூறியுள்ளார்.

03:55:02 on 20 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மணிரத்னம் இயக்கும் ’பொன்னியின் செல்வன்’ படத்தைத் தயாரிக்க இருந்த லைகா நிறுவனம் இந்தப் படத்திலிருந்து விலகியதாகத் தெரிகிறது. இதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் காரணமாகவே லைகா விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை இப்போது ஒருவேளை கைவிட்டாலும், மீண்டும் அம்முயற்சியைத் தொடர்வதாக முடிவெடுத்துள்ளனர்.

03:40:01 on 20 May

மேலும் வாசிக்க தினமணி

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை அடுத்த மாதம் வெளியிடலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தென்கொரியாவில் இருந்து கிடைத்திருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் புதிய வடிவமைப்பு கொண்ட கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனை சோதனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

03:25:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும் கல்வி ஆண்டில் புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படுகிறது. 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை ஒரு சீருடையும், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை இன்னொரு சீருடையும் அறிமுகமாகிறது.

03:10:02 on 20 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

தான் வரைந்த ஓவியத்தைக் காட்டி இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தோனி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தன்னுடைய முதல் ஓவியக் கண்காட்சியை விரைவில் நடத்த உள்ளதாகவும், அதற்கு சில காலம் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்.

02:55:01 on 20 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நாகையை அடுத்த வாஞ்சூர் சோதனைச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிறிய ரக வேனில் கடத்திவரப்பட்ட சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களைக் கைப்பற்றிய காவல்துறையினர், வாகனத்தையும் பறிமுதல் செய்து, ஓட்டுநரான திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்த அருண்குமாரைக் கைது செய்தனர்.

02:40:02 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், நெல்லை, உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

02:26:01 on 20 May

மேலும் வாசிக்க தினகரன்

டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ளது நஜாஃப்கர் சாலை. இந்த சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்நிலையில், இந்த சாலையில் டிராபிக்கை நிறுத்து, ரவுடிகள் கும்பல் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டது. இதில் இரண்டு ரவுடிகள் உயிரிழந்துள்ளனர்.

02:10:01 on 20 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தஜிகிஸ்தான் நாட்டில் வாக்தாத் நகரில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு பின்னர் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 32 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

01:50:56 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் என்பது இந்த வாரத்தில் சற்று அதிகமாகவே உள்ளது. ரெட்மீ, ஹானர், ஓப்போ போன்ற முன்னனி நிறுவனங்கள் தங்களில் புதிய ஸ்மார்ட்போன்களை போட்டி போட்டுக்கொண்டு அறிமுகப்படுத்தவுள்ளது.

01:23:53 on 20 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தான் வளர்த்த மாட்டுக்கு சீமந்தம் நடத்தி ஊர் மக்களை இளைஞர் ஒருவர் ஆச்சரியப்படுத்தி உள்ளார். இந்த மாடு 50க்கும் மேற்பட்ட மஞ்சு விரட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை குவித்துள்ளது.

01:14:35 on 20 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

பங்குச்சந்தை உயர்வால் ஒரே நிமிடத்தில் முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு ரூ.3.2 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. சாதகமான சூழலால் பங்குச்சந்தைகளில் இன்று சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.

01:06:16 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

முடக்கறுத்தான் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு, காய், ஆகிய அனைத்தும் பச்சை நிறமாக இருக்கும். இன்றைக்கும் நமது கிராமப் பகுதிகளில் முடக்கறுத்தான் கீரை ஒரு சிறந்த உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

01:04:34 on 20 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்வதற்கான ஓட்டு எண்ணிக்கை வருகிற 23ஆம் தேதி நடை பெறுகிறது. தமிழகத்தில் 43 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது.

01:02:14 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசில் ராஜேந்திர பாலாஜி மீது ம.நீ.ம. நிர்வாகி சுதாகர் புகார் தெரிவித்துள்ளார்.

12:54:07 on 20 May

மேலும் வாசிக்க தினகரன்

இந்த வருடம் முதல் கோடை விடுமுறையில் உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் கட்டாய மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்பதையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு ஹீமோகுளோபின் அளவு, வைட்டமின் குறைபாடு போன்றவற்றைக் கண்டறியும் பரிசோதனைகளை செய்வதும் நல்லது.

12:53:14 on 20 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

இந்தியாவில் மார்வெல், DC-க்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்ட ஒரு ஆங்கில தொடர் Game of thrones. HBO வில் வெளியிடப்படும் இத்தொடர் 2011 ஆண்டு தொடங்கி 8 சீசன்களை கொண்டு இன்று முடிவுக்கு வந்தது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

12:46:33 on 20 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

விஜய்யின் மெர்சல், ரஜினியின் காலா உள்ளிட்ட படங்களுக்கு எமோஜிக்கள் வெளியான நிலையில் தற்போது சூர்யாவின் என்ஜிகே படத்துக்கும் #NGK #NGKFire #NGKFromMay31 உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளுக்கு எமோஜிக்கள் வெளியாகியிருப்பதால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

12:41:55 on 20 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

நாட்டின் 17வது மக்களவைக்கான தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்களில் இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலின்போது 5 அரசு அலுவலர்கள் உயிரிழந்தனர்.

12:21:12 on 20 May

மேலும் வாசிக்க தினகரன்

பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது நட்பு வட்டம், குடும்பம், திரையுலக வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது, ‘நான் பாலிவுட்டுக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் சிலர் எனது கடந்த காலத்தை பற்றி பேசி வருகின்றனர். அதைப்பற்றி நான் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை.’ என்றார்.

12:16:05 on 20 May

மேலும் வாசிக்க ETV Bharat

’சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ என கமல்ஹாசன் கூறியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மனுத்தாக்கல் செய்திருந்தார். விசாரணை முடிந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.

12:09:40 on 20 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

12:04:50 on 20 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கடன் தேவைப்படும் நேரத்தில் நீங்களே ஆன்லைன் மூலமாக வெவ்வேறு வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன் வகைகளைத் தெரிந்துகொண்டு, பின்னர் உங்களுக்குப் பொருத்தமானதைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். அதேபோன்று உங்களுக்கான கிரெடிட் ஸ்கோரையும் அதற்கென்றே இருக்கும் ஏஜென்சிகளின் தளம் மூலம் கேட்டுப் பெறலாம்.

11:58:29 on 20 May

மேலும் வாசிக்க விகடன்

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று காலை தனியார் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 161 பயணிகள் பயணித்தனர். விமானம் சென்னையை நெருங்கியபோது விமானத்தில் சரக்குகள் வைக்கும் அறையில் இருந்து புகை வெளியானதை நடுவானில் கண்ட விமானி, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.

11:39:06 on 20 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மேலும் வாசிக்க