08:55:02 on 10 Dec 2019,Tue
சிறுநீரை அதிக நேரம் வெளியேற்றாமல் இருப்பதால் முதலில் உடலில் சிறுநீரக கல் பிரச்சினை ஏற்படுகிறது. சிறுநீரகப்பை அதிக நேரம் நிறுத்துவது சிறுநீரக பையில் அழுத்தத்தை அதிகரித்து கடுமையான வலியை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து சிறுநீரகத்தை வெளியேற்றாமல் இருப்பதால் சிறுநீரகப்பை விரிவடைவது மட்டுமன்றி, அதன் சதையும் விரிவடைகிறது.
08:55:02 on 10 Dec
07:55:01 on 10 Dec 2019,Tue
விஜயவாடாவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியில் விதர்பா - ஆந்திரா அணிகள் மோதின. இதில் பேட்டிங் செய்ய ஆந்திரா அணி வீரர்களும், ஃபீல்டிங் செய்ய விதர்பா அணி வீரர்களும் உற்சாகமாக மைதானத்துக்குள் நுழைந்தனர். ஆனால் இரு அணி வீரர்களுக்கும் மைதானத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு அவர்களுக்கு முன்பாகவே பாம்பு ஒன்று நுழைந்தது.
07:55:01 on 10 Dec
06:55:02 on 10 Dec 2019,Tue
கடந்த 5 ஆண்டுகளில் ஐஐடிகளில் படித்து வந்த 7248 மாணவர்கள் பி.டெக்(தகவல் தொழில்நுட்பம்) படிப்பிலிருந்து விலகியுள்ளனர். மனிதவள மேம்பாட்டுத் துறை, அண்மையில் மக்களவையில் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
06:55:02 on 10 Dec
05:55:01 on 10 Dec 2019,Tue
தற்போதைய பொருளாதார வளர்ச்சிக் குறைவின் முக்கியக் காரணம் நுகர்வோர் சந்தை வீழ்ச்சிதான் என்பதால், தனிநபர் வருமான வரி விகிதங்களையும் வெகுவாகக் குறைக்க வேண்டும். சரிந்துவரும் ரூபாயின் தற்போதைய உண்மையான மதிப்பைக் கருத்தில்கொண்டு, வரி வரம்புகளை வெகுவாக உயர்த்த வேண்டும்.
05:55:01 on 10 Dec
10:57:02 on 09 Dec 2019,Mon
டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. டிசம்பர் 14ஆம் தேதி 2வது சனிக்கிழமையும், 28ஆம் தேதி 4வது சனிக்கிழமையும் வருகின்றன. இதனிடையே 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது.
10:57:02 on 09 Dec
09:57:01 on 09 Dec 2019,Mon
நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில், வெங்காயம் வாங்க வரிசையில் நின்றவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.
09:57:01 on 09 Dec
08:55:02 on 09 Dec 2019,Mon
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் நந்தியால என்கிற இடத்தில் மோகன் கிருஷ்ணா என்பவருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல் தமது மகளுடன் நிச்சயார்த்தம் செய்துவிட்டு இன்னொரு பெண்ணுக்கு தாலி கட்டுவதுதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
08:55:02 on 09 Dec
08:25:02 on 09 Dec 2019,Mon
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள நெல்லிக்குப்பத்தில் விமல் சந்த் ஜெயின் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு இவரது கடையில் நுழைந்த முகமூடி அணிந்த 3 இளைஞர்கள் துப்பாக்கியைக் காட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றனர்.
08:25:02 on 09 Dec
07:55:01 on 09 Dec 2019,Mon
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராம பஞ்சாயத்து அமைந்துள்ளது. இந்த பஞ்சாயத்தில் 1,900 ஓட்டுகள் உள்ளன. மொத்தம் 8 வார்டுகள் உள்ள இந்த கிராம பஞ்சாயத்தில், உள்ளாட்சி தேர்தல் அறிவித்த உடனேயே ஊராட்சி மன்றத் தலைவர் பதவி மற்றும் துணை தலைவர் பதவி ஏலம் போனதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
07:55:01 on 09 Dec
07:25:01 on 09 Dec 2019,Mon
ஆந்திராவில் 16 வயது சிறுமிக்கு லிப்ட் தருவதாக கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
07:25:01 on 09 Dec
07:05:48 on 09 Dec 2019,Mon
நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிந்து டிசம்பர் 12க்குள் தெரிவிக்க காவல்துறைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் நித்தியானந்தா 44 முறை வாய்தா வாங்கியுள்ளார்.
07:05:48 on 09 Dec
07:01:44 on 09 Dec 2019,Mon
நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிந்து டிசம்பர் 12க்குள் தெரிவிக்க காவல்துறைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் நித்தியானந்தா 44 முறை வாய்தா வாங்கியுள்ளார்.
07:01:44 on 09 Dec
06:55:01 on 09 Dec 2019,Mon
புதிய 5ஜி நெட்வொர்க் அதிவேகமானதாக இருக்கப் போகிறது. ஆனால், 5ஜி ஆன்டனாக்கள் முந்தைய செல்போன் நெட்வொர்க்குகளைவிட அதிக ரேடியோ கதிர்வீச்சுகளைக் கொண்டதாக இருக்கும். இதனால் உடல்நலனுக்கு ஆபத்து ஏற்படும் என்று பிரிட்டனைச் சேர்ந்த சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
06:55:01 on 09 Dec
06:52:59 on 09 Dec 2019,Mon
நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிந்து டிசம்பர் 12க்குள் தெரிவிக்க காவல்துறைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் நித்தியானந்தா 44 முறை வாய்தா வாங்கியுள்ளார்.
06:52:59 on 09 Dec
06:25:01 on 09 Dec 2019,Mon
நீட், ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு சட்டம், உதய் மின் திட்டம் இது போன்ற மத்திய அரசு கொண்டு வந்த மசோதாக்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதாக கடுமையாக எதிர்த்திருந்தார். ஆனால் இரண்டு தலைமைகளைக் கொண்ட தற்போதைய அதிமுக அரசு, பாஜகவின் கைப்பாவையாகச் செயல்பட்டு, மாநில உரிமைகளை இழந்து வருகிறது.
06:25:01 on 09 Dec
05:57:01 on 09 Dec 2019,Mon
”ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்டமான கோயிலை நாங்கள் கட்டிய பிறகு, அயோத்தி முழுவதுமாக புதிய பொலிவு பெறும். புதிய அயோத்தியை நீங்கள் காண்பீர்கள். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பெருமளவு மேம்படுத்தப்படும்” என்று இரு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி கூறினார்.
05:57:01 on 09 Dec
05:27:01 on 09 Dec 2019,Mon
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தைவிட குறைவாகவே இருக்கும் என சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஐஎச்எஸ் மார்க்கிட்’ தெரிவித்துள்ளது. 8 முக்கிய ஆதார தொழில்துறைகளின் உற்பத்தி 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. ஆட்டோ மொபைல் துறை கடும் சரிவை சந்தித்து உள்ளது.
05:27:01 on 09 Dec
04:57:01 on 09 Dec 2019,Mon
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் 30 வயது இளம் பெண் மீது 4 பேர் ஆசிட் வீசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 30 சதவீதம் தீக்காயங்களுடன் மீரட் மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார். பாலியல் பலாத்கார புகாரை வாபஸ் பெற மறுத்ததால், அவரது வீட்டுக்குள் நுழைந்த 4 ஆண்கள் அப்பெண் மீது ஆசிட் ஊற்றியதாக கூறப்படுகிறது.
04:57:01 on 09 Dec
04:29:50 on 09 Dec 2019,Mon
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராம பஞ்சாயத்து அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சமும், துணைத்தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சமும் தருவதாக அதிமுகவை சக்திவேல், மற்றும் தேமுதிகவை சேர்ந்த முருகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
04:29:50 on 09 Dec
04:27:01 on 09 Dec 2019,Mon
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தொடர்ந்து கவர்ச்சியான மாடர்ன் உடைகளை அணிந்து வருவதுடன் அதனை சமூக வலைத்தளத்திலும் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால், சற்று வழக்கத்திற்கு மாறாக புடவை அணிந்து ஓவர் கவர்ச்சியில் ஒய்யாரமாக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
04:27:01 on 09 Dec
04:25:51 on 09 Dec 2019,Mon
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராம பஞ்சாயத்து அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சமும், துணைத்தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சமும் தருவதாக அதிமுகவை சக்திவேல், மற்றும் தேமுதிகவை சேர்ந்த முருகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
04:25:51 on 09 Dec
03:57:01 on 09 Dec 2019,Mon
தயாரிப்பாளர் போனி கபூர், ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கும் என்றும், 2020ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வலிமை படம் ரிலீஸாகும் எனத் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து #ValimaiStartsOnDec13 #ValimaiDiwali2020 என்ற ஹேஷ்டேக்கையும் அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
03:57:01 on 09 Dec
03:27:01 on 09 Dec 2019,Mon
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் மணிகண்டன் என்பவரை ராஜேஸ்வரியின் தம்பி பாண்டீஸ்வரனும் அவரது மனைவி நிரஞ்சனாவும் அரிவாளால் வெட்டியதில் மணிகண்டன் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், நிரஞ்சனாவுக்கு மணிகண்டன் தொலைபேசியில் தொல்லை கொடுத்ததாக தெரியவந்தது.
03:27:01 on 09 Dec
02:57:02 on 09 Dec 2019,Mon
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, 2688 அடி உயரமுள்ள மலை உச்சியில் கார்த்திகை மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2600 சிறப்பு பஸ்களும், 22 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
02:57:02 on 09 Dec
02:27:02 on 09 Dec 2019,Mon
தென்னாப்பிரிக்காவின் சோசிபினி துன்சி 2019ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அட்லாண்டாவில் நடந்த இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்சி 2019 மிஸ் யுனிவர்ஸாக முடிசூட்டப்பட்டுள்ளார்.
02:27:02 on 09 Dec
01:57:01 on 09 Dec 2019,Mon
செய்தி தொலைக்காட்சியில் பணிபுரிந்து பின் நடிகராக களமிறங்கியுள்ளார் ரங்கராஜ் பாண்டே. அவர் முதன்முதலாக நடித்த படம் நேர்கொண்ட பார்வை. இந்நிலையில், திருட்டுப் பயலே 2 படத்தை இந்தியில் இயக்கவுள்ளார் இயக்குனர் சுசி கணேசன். இதில் தமிழில் சுசி கணேசன் நடித்த வேடத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறாராம்.
01:57:01 on 09 Dec
01:27:02 on 09 Dec 2019,Mon
டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரின் உருவத்தை வெள்ளி நாணயத்தில் பதித்து சுவிட்சர்லாந்து அரசு கவுரவித்துள்ளது. வாழும் காலத்திலேயே இத்தகைய சிறப்பு பெற்ற வீரர் இவர் ஒருவர்தான். 20 ஸ்விஸ் பிராங்க் நாணயங்களில் பெடரரின் உருவம் அச்சிடப்பட்டு அடுத்த மாதம் புழக்கத்துக்கு விடப்படுகிறது.
01:27:02 on 09 Dec
01:16:19 on 09 Dec 2019,Mon
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.
01:16:19 on 09 Dec
01:02:08 on 09 Dec 2019,Mon
”தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஏதோ இஸ்லாமியருக்கு மட்டும்தான் பிரச்னை என்று தமிழகத்தில் இருப்போர் நினைக்கக் கூடாது. இலங்கையில் நடந்த போரால் பாதிக்கப்பட்டு இங்கு வந்த தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியர்கள் கூட இந்த சட்ட திருத்தத்தால் பாதிக்கப்படுவார்கள்.” என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
01:02:08 on 09 Dec
12:57:01 on 09 Dec 2019,Mon
காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தும் தீா்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளி எம்.பி. பிரமீளா ஜெயபால் அறிமுகப்படுத்தினார். சாதாரண வகையைச் சோந்த அந்தத் தீா்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டாலும், மேலவையான செனட் சபையில் அதனை வாக்கெடுப்புக்கு விட முடியாது.
12:57:01 on 09 Dec
12:27:07 on 09 Dec 2019,Mon
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று நேற்றிரவு முதல் நின்று கொண்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அதனை பார்த்து, எந்த நாட்டு கப்பல் என்பது தெரியாததால் குளச்சல் கடலோர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
12:27:07 on 09 Dec
12:27:01 on 09 Dec 2019,Mon
தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி கடையம் காவல் நிலையத்தில் இருந்து இடமாறுதல் பெற்று வீரவநல்லூரில் காவலராக பணிபுரிந்து வருகிறார். அவர் கடையத்தில் பணிபுரிந்தபோது, காவல் நிலையம் எதிரே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த முப்புடாதி சக்தி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
12:27:01 on 09 Dec
12:25:40 on 09 Dec 2019,Mon
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு தென்கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி காரணமாக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
12:25:40 on 09 Dec
12:24:01 on 09 Dec 2019,Mon
நியூஸிலாந்தின் வைட் தீவில் அமைந்துள்ள எரிமலை வெடித்துச் சிதறியது. அந்த சமயம் வைட் தீவில் மட்டும் சுமார் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அங்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா உத்தரவிட்டுள்ளார்.
12:24:01 on 09 Dec
12:19:42 on 09 Dec 2019,Mon
நியூஸிலாந்தின் வைட் தீவில் அமைந்துள்ள எரிமலை வெடித்துச் சிதறியது. அந்த சமயம் வைட் தீவில் மட்டும் சுமார் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அங்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா உத்தரவிட்டுள்ளார்.
12:19:42 on 09 Dec
12:09:21 on 09 Dec 2019,Mon
கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு, ஆட்சியைத் தக்க வைக்க 6 இடங்களில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்றநிலையில், பாஜக 8 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
12:09:21 on 09 Dec
11:57:01 on 09 Dec 2019,Mon
சவுதியில் உணவகங்களுக்குள் செல்ல ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனி நுழைவாயில் இருந்தது. தற்போது அவையும் முடிவுக்கு வரும் என இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்து உள்ளார். அதே நேரத்தில் உணவகத்திற்குள் பிரிக்கப்பட்டுள்ள இருக்கை பகுதிகளும் அகற்றப்படுமா என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.
11:57:01 on 09 Dec
11:27:01 on 09 Dec 2019,Mon
சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் நேற்று திடீரென டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தி்ல் ஈடுபட்டனர். மற்றொரு புறம் மதுபானம் வாங்க வந்த குடிமகன்கள், கடையை திறந்து உடனே பாட்டில் கொடுங்கள் என கோஷமிட்டனர்.
11:27:01 on 09 Dec
10:57:02 on 09 Dec 2019,Mon
ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளன. இதன்படி, வேறு நெட்வொர்க்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த அழைப்பு வரம்பு நீக்கப்படுகிறது என தெரிவித்துள்ளன. இதனால் வேறு நெட்வொர்க்குகளுக்கு வாடிக்கையாளர்கள் இனி அளவில்லாமல் பேச முடியும்.
10:57:02 on 09 Dec
10:27:02 on 09 Dec 2019,Mon
இந்தியாவில் உள்ள 10 ஐ.ஐ.டி.களில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 27 மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. (7 பேர்) முதலிடத்தில் உள்ளது.
10:27:02 on 09 Dec
09:57:01 on 09 Dec 2019,Mon
நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் 13-ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளில் தற்போது வரை 129 தங்கம், 74 வெள்ளி, 40 வெண்கலத்துடன் மொத்தம் 243 பதக்கங்களைப் வென்று இந்தியா முதலிடத்தில் உள்ளது.
09:57:01 on 09 Dec
09:51:28 on 09 Dec 2019,Mon
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20-யில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்தது. இது குறித்து கோலி, “இந்த பிட்ச் ஸ்பின்னுக்கு உதவும் என்பது தெரிந்த ஒன்று. இதனால் சுழற்பந்து வீச்சை அடித்து ஆட வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அதற்கு ஷிவம் துபே சரியாக இருப்பார் என்று அனுப்பிவைத்தோம்” என்றார்.
09:51:28 on 09 Dec
09:27:01 on 09 Dec 2019,Mon
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனுக்கள் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பெறப்படுகிறது. மனு தாக்கலுக்கு 16ஆம் கடைசி நாளாகும். 17ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 19-ந் தேதி வரை மனுக்களை திரும்பப் பெறலாம்.
09:27:01 on 09 Dec
09:09:07 on 09 Dec 2019,Mon
சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
09:09:07 on 09 Dec
09:07:26 on 09 Dec 2019,Mon
சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.97ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 22 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.69.81 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
09:07:26 on 09 Dec
09:06:31 on 09 Dec 2019,Mon
டெல்லியில் ராணி ஜானசி சாலையில் நேற்று தீ விபத்து நடந்த அனாஜ் மண்டியில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
09:06:31 on 09 Dec
09:01:18 on 09 Dec 2019,Mon
கர்நாடகாவில் 15 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இதில் 10 தொகுதியில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டதை அடுத்து, காலியான இடங்களில் 15 தொகுதிகளுக்கு கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
09:01:18 on 09 Dec
08:55:01 on 09 Dec 2019,Mon
பிரபல 'கார்மின் இந்தியா' வாட்ச் நிறுவனம், அமோல்டு டிஸ்பிளேயுடன் கூடிய புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. சுவாசம், தூக்கம், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி, இதயத்துடிப்பு உள்ளிட்டவைகளை கண்காணிக்கும் வசதி இதில் உள்ளது.
08:55:01 on 09 Dec
07:55:02 on 09 Dec 2019,Mon
'கனா' படத்தின் தெலுங்கு ரீ-மேக்கான 'கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி' மூலம் டோலிவுட்டில் கால்பதித்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது நானி நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். 'நின்னுகோரி' படத்தை இயக்கிய சிவா நிர்வானா இயக்கும் இந்த படத்தில் ரித்துவர்மாவும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.
07:55:02 on 09 Dec
06:55:01 on 09 Dec 2019,Mon
நீங்கள் போதுமான உடற்பயிற்சி செய்யாவிட்டால், உங்கள் தசைகள் பாதிக்கப்படலாம். உங்கள் தசைகள் போதுமான அளவு நகராததால் அவை வலிமையை இழக்கக்கூடும். உடற்பயிற்சி உங்கள் தசைகளுக்கு மிகவும் முக்கியமானது மற்றும் தசைகளை உருவாக்க உதவுகிறது.
06:55:01 on 09 Dec
05:55:02 on 09 Dec 2019,Mon
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
05:55:02 on 09 Dec
10:55:02 on 08 Dec 2019,Sun
காதலித்துவிட்டு, சாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் புனேவில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அப்பெண்ணை ஏமாற்றிய அந்த நபரை கண்டுபிடித்து அழைத்து வந்து ஐசியு வார்டிலேயே திருமணம் செய்து வைத்துள்ளனர்.
10:55:02 on 08 Dec
09:55:02 on 08 Dec 2019,Sun
சூழ்நிலையும் எடை கூடுதலுக்கு காரணமாக அமைகின்றது. நமது உணவு, நீர், காற்று, கட்டிடப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என பலவற்றில் ரசாயன கலவைகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது. இவை அனைத்தும் மனித உடலின் செயல்திறனை மாற்றி நாளமில்லா சுரப்பிகளை தாக்குவதன் மூலம் உடல் எடை கூடுதல் ஏற்படுகின்றது.
09:55:02 on 08 Dec
08:57:01 on 08 Dec 2019,Sun
அண்மையில் எடுக்கப்பட்ட தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர்களின் கணிப்பின்படி 5 வயதிற்கு உள்ள 32% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் குழந்தைகளில் 40% பெண் குழந்தைகளுக்கும், 18% ஆண் குழந்தைகளுக்கும் அனிமியா தாக்கப்பட்டிருந்தது என்றும் தெரிய வந்தது.
08:57:01 on 08 Dec
08:25:01 on 08 Dec 2019,Sun
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் இரண்டு நிமிடங்களில் அதிகளவு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு எனும் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிட்டனர்
08:25:01 on 08 Dec
07:55:01 on 08 Dec 2019,Sun
பசு மாடுகளை வளர்ப்பதால், கைதிகளின், குற்ற மனநிலை, நன்றாக குறைவதாக, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருக்கிறார். புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
07:55:01 on 08 Dec
07:25:02 on 08 Dec 2019,Sun
டெல்லியில், ராணி ஜான்சி சாலையில் அமைந்திருக்கும் அனஜ் மண்டி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 20 வயதுடையவர்கள்.
07:25:02 on 08 Dec
06:55:01 on 08 Dec 2019,Sun
நடிகை திரிஷா தற்போது ராங்கி படத்தில் ஆக்ஷன் சூப்பர்ஸ்டாராக மாறியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ராங்கி படத்தை ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநர் சரவணன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர். முருகதாஸ் திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கிறார்.
06:55:01 on 08 Dec
06:27:01 on 08 Dec 2019,Sun
மக்கள் நீதி மய்யம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மேலும் அவர், உள்ளாட்சி தேர்தல் மக்கள் நலனுக்காக இருக்கப்போவதில்லை என்றும், ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட வியாபாரப் பங்கீடு மட்டுமே தேர்தலில் அரங்கேறும் என்றும் விமர்சித்துள்ளார்.
06:27:01 on 08 Dec
05:57:01 on 08 Dec 2019,Sun
டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் வழங்கும் என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
05:57:01 on 08 Dec
05:27:01 on 08 Dec 2019,Sun
அவ்வப்போது தன்னுடைய கருத்துகளை வெள்ளைத்தாளில் எழுதி ட்விட்டரில் பதிவிட்டு வந்த இயக்குநர் சுசீந்திரன் தற்போது சமூகவலைத்தளங்களை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவான சாம்பியன் திரைப்படம் டிசம்பர் 13ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
05:27:01 on 08 Dec
04:57:01 on 08 Dec 2019,Sun
பெயர் வெளியிடாத தம்பதியினர் டெக்சாஸில் உள்ள ஹோட்டல் பணியாளர் ஒருவருக்கு புதுக் காரை பரிசளித்துள்ளனர். தினமும் வேலைக்குச் செல்வதற்காக 14 மைல் நடந்து வரும் அவரது நிலையைப் பார்த்து, காரை அன்புப் பரிசாக அனுப்பி வைத்த நிகழ்ச்சி அண்மையில் நடந்துள்ளது.
04:57:01 on 08 Dec
04:27:01 on 08 Dec 2019,Sun
ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி கவுன்சிலர், தலைவர் பதவிக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கப் போவதில்லை. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மட்டும், கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கும். எனவே, அதில் கவனம் செலுத்தி, அதிக இடங்களைப் பெற அதிமுக முடிவு செய்துள்ளது.
04:27:01 on 08 Dec
03:57:02 on 08 Dec 2019,Sun
உன்னாவ் சம்பவம் குறித்து கிராம மக்கள் பல கேள்விகளை எழுப்புகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது காவல் துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட வழக்கில் சிவம் திரிவேதி அல்லது சுபம் திரிவேதிக்கு எதிராகக் காவல் துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
03:57:02 on 08 Dec
03:27:01 on 08 Dec 2019,Sun
மன ஒப்புதலுடன் நிகழும் உடலுறவின் போது அறைதல், கழுத்தை நெரித்தல், வாயை அடைத்துக் கொள்வது அல்லது துப்புவது போன்ற தேவையற்ற செயல்களுக்கு ஆளாவதாக 40 வயதுக்கு உள்பட்ட பிரிட்டன் பெண்களில் மூன்றில் ஒரு பகுதி பேர் கூறியுள்ளதை அடுத்து இந்த விஷயம் வெளியில் தெரிய வந்துள்ளது என்று பிபிசி ரேடியோ 5 லைவ் கூறியுள்ளது.
03:27:01 on 08 Dec
02:57:01 on 08 Dec 2019,Sun
நித்யானந்தா வெளியிடும வீடியோக்கள் எந்த இணையதளம் வழியாக வெளியாகிறது என்பதை கண்டுபிடித்து அதன்மூலமாகவே நித்யானந்தா இருக்கும் இடத்தை அறிவதற்கு குஜராத் மாநில சைபர் கிரைம் போலீசார் தனிப்படை ஒன்றை அமைத்துள்ளதால் அவர்களும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.
02:57:01 on 08 Dec
02:27:01 on 08 Dec 2019,Sun
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், ”உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ரஜினியின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது.
02:27:01 on 08 Dec
01:55:02 on 08 Dec 2019,Sun
இந்திய-மேற்கிந்திய தீவுகள் அணிக்குக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் வரும் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை சென்னையில் இன்று தொடங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் இந்திய அணி விளையாடவுள்ளதால், போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
01:55:02 on 08 Dec
01:27:01 on 08 Dec 2019,Sun
”ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை, உட்கட்டமைப்பு நிறுவனங்கள் தீவிர நெருக்கடியில் இருக்கின்றன. எப்போது வேண்டுமானலும் அவை பூதாகரமாக வெடிக்கக் கூடும்” என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். பிரச்சினையை சுட்டிக்காட்டுபவர்களை எதிரிகளாக சித்தரிக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.
01:27:01 on 08 Dec
01:19:54 on 08 Dec 2019,Sun
டெல்லி ராணி ஜான்ஸி சாலை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
01:19:54 on 08 Dec
01:15:27 on 08 Dec 2019,Sun
டெல்லி ராணி ஜான்ஸி சாலை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
01:15:27 on 08 Dec
01:11:42 on 08 Dec 2019,Sun
இலங்கை அருகே நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
01:11:42 on 08 Dec
12:57:02 on 08 Dec 2019,Sun
உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக அம்மாநில அமைச்சர்கள் சுவாமி பிரசாத் மவுரியாவும், கமல் ராணி வருணும் சென்றனர். அப்போது அங்கிருந்த உள்ளூர் மக்களும், காங்கிரஸ் தொண்டர்களும், அவர்களை கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
12:57:02 on 08 Dec
12:27:01 on 08 Dec 2019,Sun
பெண் பக்தரை தாக்கிய சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் மீது சிதம்பரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், தீட்சிதர் தர்ஷனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சனிக்கிழமை சிதம்பரம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான தீட்சிதர் தர்ஷனுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
12:27:01 on 08 Dec
11:57:02 on 08 Dec 2019,Sun
செயற்கைக்கோள் ஏவுதளம் ஒன்றில் இருந்து வடகொரியா மிக முக்கியமான அணு ஆயுதச் சோதனை ஒன்றை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா உடனான சமரசப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக கடந்த 2 நாள்களுக்கு முன்பு வடகொரியா கூறியிருந்த நிலையில், இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது.
11:57:02 on 08 Dec
11:27:01 on 08 Dec 2019,Sun
தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், ரஜினி பற்றி யார் தவறாக பேசினாலும் நான் பதிலடி கொடுப்பேன் என கோபமாக கூறியுள்ளார். சின்ன வயதில் கமல் போஸ்டரில் சாணி அடிப்பேன் எனவும் கூறி தான் எவ்வளவு வெறித்தனமான ரஜினி ரசிகர் என குறிப்பிட்டுள்ளார் லாரன்ஸ்.
11:27:01 on 08 Dec
11:00:39 on 08 Dec 2019,Sun
டெல்லி ராணி ஜான்ஸி சாலை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்து வருவது பலரையும் கவலை கொள்ள செய்துள்ளது. முதலில் 32 பேர் பலி என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
11:00:39 on 08 Dec
10:57:01 on 08 Dec 2019,Sun
தர்பார் விழாவில் பேசிய ரஜினிகாந்த், “எனக்கு 69 வயது முடிந்து 70 வயது தொடங்குகிறது. என் வாழ்வில் நடந்த, யாருக்கும் தெரியாத இரண்டு சம்பவங்களை இங்கு நான் பகிர்ந்துகொள்கிறேன்” என்று கூறி பேச்சை மீண்டும் தொடங்கினார் ரஜினி. இதில் அவர் சென்னைக்கு தான் வந்தது எப்படி என்று தனது அனுபவங்களை பகிந்து கொண்டார்.
10:57:01 on 08 Dec
10:27:01 on 08 Dec 2019,Sun
ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை பதம் பார்த்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் இன்று மாலை நடக்கிறது.
10:27:01 on 08 Dec
09:57:01 on 08 Dec 2019,Sun
13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி நேபாளத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பளுதூக்குதலில் 81 கிலோ பிரிவில் ஸ்ரீஸ்தி சிங், 87 கிலோ பிரிவில் தமிழக வீராங்கனை அனுராதா ஆகியோர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர். புதுக்கோட்டையைச் சேர்ந்த அனுராதா, தஞ்சை தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
09:57:01 on 08 Dec
09:26:02 on 08 Dec 2019,Sun
ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் சீப்புருபள்ளி நகரில் தனது பெற்றோருடன் பவானி என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் தனது 4வது வயதில் பெற்றோரிடம் இருந்து பிரிந்து காணாமல் போய்விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
09:26:02 on 08 Dec
09:15:23 on 08 Dec 2019,Sun
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,800 கனஅடியில் இருந்து 5,900 கனஅடியாக குறைந்தது. டெல்டா மாவட்ட பாசனத்திற்காக நீர்திறப்பு 7,000 கனஅடியில் இருந்து 5,000 கனஅடியாக குறைந்துள்ளது.
09:15:23 on 08 Dec
09:14:42 on 08 Dec 2019,Sun
இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.83 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.59 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் பெட்ரோல் விலை தொடர்கின்றது.
09:14:42 on 08 Dec
09:10:11 on 08 Dec 2019,Sun
‘தர்பார்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ”நான் 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், சஸ்பெண்ஸ், திரில்லர், ஆக்ஷன் படமாக தர்பார் படம் வந்துள்ளது. ரஜினியை வைத்து படம் தயாரித்தால் நஷ்டம் ஏற்படாது என்று நம்பினார்கள். எனவே, நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கை என்றைக்கும் வீண் போகாது” என்றார்.
09:10:11 on 08 Dec
08:57:02 on 08 Dec 2019,Sun
புதிய ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளம் கொண்டு இயங்கும் ஐபோன் 11 சாதனங்களில் லொகேஷன் சேவைகள் ஆஃப் செய்யப்பட்டாலும், அவை வாடிக்கையாளர்களின் லொகேஷன் விவரங்களை சேகரிப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்தார். இதற்கு ஆப்பிள் நிறுவனம், இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என தெரிவித்துள்ளது.
08:57:02 on 08 Dec
07:55:01 on 08 Dec 2019,Sun
மியாமி கடற்கரையில் உள்ள ஆர்ட் பாசலில் ஒரு வாழைப்பழத்தை சுவரில் டேப்பை வைத்து ஒட்டி கலைப்பொருளாக 1,20,000 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வாய்ப்பே இல்ல -அதையெல்லாம் யார் வாங்குவா…? என்று நீங்கள் நினைக்கலாம்.
07:55:01 on 08 Dec
06:55:01 on 08 Dec 2019,Sun
பாஜகவிலிருந்து சுமார் 15 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆளும் கூட்டணியான மகா விகாஸ் அகாதிக்கு ஆதரவளிக்க இருப்பதாக தகவல்கள் மும்பையில் இருந்து வருகின்றன.
06:55:01 on 08 Dec
05:55:01 on 08 Dec 2019,Sun
முருங்கையின் எல்லா பாகங்களும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் நமக்கு பயன் தருகிறது. முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி இதனுடன் 5 பல் பூண்டு, 5 மிளகு இதனுடன் சீரகம் பொடித்துப்போட்டு தினமும் மதிய உணவு வேலையிலே சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட பலவிதமான நன்மைகளை உடலுக்கு கொடுக்கிறது.
05:55:01 on 08 Dec
10:55:01 on 07 Dec 2019,Sat
ரெட் ஒயினுக்காக பயன்படுத்தப்படும் திராட்சைகளில் ரெஸ்வரேட்ரால், கேட்டசின்கள், எபிகேட்டசின்கள் மற்றும் ப்ரோ அந்தோசைனிடின்கள் போன்ற பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
10:55:01 on 07 Dec
09:55:01 on 07 Dec 2019,Sat
”நாட்டின் பல பகுதிகளில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள். இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவே முடியாது.” என ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
09:55:01 on 07 Dec
08:55:02 on 07 Dec 2019,Sat
ரஞ்சிக் கோப்பை டெஸ்ட் போட்டி டிச.9ஆம் தேதி தொடங்குகிறது. திண்டுக்கல்லில் நடைபெற உள்ள முதல் போட்டியில் விஜய்சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணி கர்நாடகா அணியை எதிர்த்து விளையாடுகிறது.
08:55:02 on 07 Dec
08:25:01 on 07 Dec 2019,Sat
ஹைதராபாத் என்கவுண்டர் குறித்து நடிகை நயன்தாரா, ”தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள். இதுவே நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என அழுத்தி சொல்வேன். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக மனதில் பதிய வைக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
08:25:01 on 07 Dec
07:55:01 on 07 Dec 2019,Sat
உத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் பெண் நடனக்கலைஞர் சுடப்பட்டது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
07:55:01 on 07 Dec
07:25:02 on 07 Dec 2019,Sat
கேளளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஒருவர் ஜாமினில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில் அவரை பொதுமக்கள் சிலர் கடுமையாக தாக்கியதில் அவர் மயக்கமடைந்தார்.
07:25:02 on 07 Dec
06:55:01 on 07 Dec 2019,Sat
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவ மழை பரவலாகப் பெய்யத் தொடங்கியதை அடுத்து, ராமநாதபுரம் பகுதியில் உள்ள கண்மாய்கள் உடையும் நிலையில் உள்ளன.
06:55:01 on 07 Dec
06:25:01 on 07 Dec 2019,Sat
பரபரப்புகளுக்கு பெயர் போன நித்யானந்தாவின் குஜராத் ஆசிரமத்தில் தனது மகள்கள் மாயமாகி விட்டதாக பெற்றோர் புகாரளிக்க, மீண்டும் அவர் சர்ச்சையில் அடிபட்டார். இதனைத்தொடர்ந்து தற்போது வரை நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.
06:25:01 on 07 Dec
05:57:48 on 07 Dec 2019,Sat
தமிழகத்தில் டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும். ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
05:57:48 on 07 Dec
05:57:01 on 07 Dec 2019,Sat
கோவாவில் கூலித்தொழில் செய்யும் துக்காராம், அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். நீண்டநாட்களாக துக்காராமின் மனைவி உடல் நிலையில் சரி இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவ செலவுகளை செய்ய முடியாமல் கணவன் சிரமப்பட்டு வந்துள்ளார்.
05:57:01 on 07 Dec
05:53:54 on 07 Dec 2019,Sat
தமிழகத்தில் டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும். ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
05:53:54 on 07 Dec
05:51:12 on 07 Dec 2019,Sat
தமிழகத்தில் டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும். ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
05:51:12 on 07 Dec