View in the JustOut app
X

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் அங்கு, 47 ஆயிரத்து 806 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 4,934 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பாதிப்பு ஒரு பக்கம் கழுத்தை நெரிக்க, இங்கிலாந்து, பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

05:27:01 on 06 Apr

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

“ஆரிய இந்துத்துவ பார்ப்பனிய வேதமதம்' என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த நம்பிக்கை குப்பைகள் எவ்வளவு 'மூடத்தனமானது' என்பதை உலகிற்கே 'விளக்கு' போட்டு காண்பித்த பிரதமருக்கு நாம் ஏன் நன்றி சொல்லக்கூடாது? பாசிட்டிவாக யோசிப்போமே!!!” என்று சூசகமான விமர்சனத்தை திருமுருகன் காந்தி முன்வைத்துள்ளார்.

04:57:02 on 06 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சர்தார் வல்லபாய் படேலின் சிலை விற்கப்படும் என்றும் விலை ரூ.30,000 கோடி என்றும் OLX பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. ஒற்றுமையின் சிலை விற்கப்படும் என்று பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலே அந்த பதிவு OLX பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.

04:27:01 on 06 Apr

மேலும் வாசிக்க Asiavillenews

ஜப்பான் படையினர் நடத்திய பியர்ல் ஹார்பர் தாக்குதல், நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்ப்பு ஆகியவற்றின் போது அமெரிக்க மக்கள் சந்தித்த துயர நிலையை மக்கள் இந்த வாரம் சந்திக்கப் போகிறார்கள் என்று அமெரிக்க அரசின் தலைமை அறுவைசிகிச்சை நிபுணர் ஜெரோம் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

03:57:01 on 06 Apr

மேலும் வாசிக்க Behind Woods News

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சுகாதாரத்துறை மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஒருவேளை வைரஸை எதிர்கொள்ளும் அளவிற்கு மோடி அரசிடம் திட்டங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லையா என்ற கேள்வியும், சந்தேகமும் பரவலாக எழத் தொடங்கி உள்ளது.

03:27:01 on 06 Apr

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

மனித சமூகத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டு வந்தன. ஆனால், இந்தக்கூற்றைப் பொய்யாக்கும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் அமைந்துள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வரும் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

02:57:01 on 06 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

பலவிதமான வைரஸ், பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகளால் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்தியர்களின் உடலில் குறிப்பிட்ட T-செல்கள் உருவாகின்றன. அந்நிய வைரஸிடமிருந்து, நம் உடலை பாதுகாப்பதில் போர் வீரரனைப் போன்று, T-செல்கள் செயல்படுகின்றன.

02:27:02 on 06 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

மதுரை மாவட்டம் கருப்பாயூரணியில் கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தவர் அப்துல்ரஹீம் (70). மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கறிக்கடைகளை மூட அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், அதனையும் மீறி அப்துல் ரஹீம் கடையைத் திறந்து வைத்திருந்ததாகவும், இதனால் கடைக்கு வெளியே மக்கள் கூட்டம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

01:57:01 on 06 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

அரியலூர் மாவட்ட நிர்வாகம் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே ஒருவர் வீட்டை விட்டு வெளியே வந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்க, மூன்று நிறத்தில் அனுமதி அட்டையை அறிமுகப்படுத்தியதோடு, பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று அந்த அட்டையை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.

01:27:01 on 06 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காய்கறிகளுக்கு இடையே குட்கா மற்றும் புகையிலை போதைப் பொருள்களை மறைத்துவைத்து கடத்தி, விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்துக்கும் குட்கா கடத்தியது தெரியவந்ததால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

12:57:01 on 06 Apr

மேலும் வாசிக்க விகடன்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது 13 லட்சத்தை நெருங்கி வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,444 ஆக உள்ளது. அதே நேரம் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

12:27:01 on 06 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கொரோனா நிவாரண தொகையை வங்கியில் செலுத்துவதாகக் கூறி வங்கிக் கணக்கு விவரங்கள் உட்பட எந்தத் தகவலையும் போனில் யார் கேட்டாலும் தெரிவிக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்து உள்ளனர்.

11:57:01 on 06 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

செங்கல்பட்டில் ரயில்வே குடியிருப்பில் வசித்து வந்த சிவசங்கர் மற்றும் அவரது நண்பர்களான பிரதீப், சிவராமன் ஆகியோர் ஊரடங்கு காரணமாக மது கிடைக்காததால் போதைக்காக வார்னிஷில் குளிர்பானத்தை கலந்து குடித்துள்ளனர். இதனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 பேரும் உயிரிழந்தனர்.

10:55:01 on 06 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வரும் 14 ஆம் தேதி முடிவடையுள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் 14ஆம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது பற்றி இப்போது எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

10:27:02 on 06 Apr

மேலும் வாசிக்க தந்தி டிவி

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 95 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 58 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. நெல்லையில் 38 பேருக்கும், ஈரோட்டில் 32 பேருக்கும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

09:57:01 on 06 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 675 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூவாயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை கடந்த 4 நாட்களில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

09:27:01 on 06 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகின்றன என ப.சிதம்பரம் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது எனவும், கொரோனாவை கட்டுப்படுத்த எதிர்க்கட்சி தலைவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் கூறினார்.

09:03:48 on 06 Apr

மேலும் வாசிக்க தினகரன்

வட மாநிலங்களில் பல இடங்களிலும் விளக்குகள் எரியவிட்டதோடு பட்டாசுகளும் வெடித்ததால், நகரம் புகை மண்டலம் சூழ காட்சியளித்தது. சில இடங்களில் விளக்குகளோடு கோ கொரோனா என்றபடி பொதுமக்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

09:00:51 on 06 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

வட மாநிலங்களில் பல இடங்களிலும் விளக்குகள் எரியவிட்டதோடு பட்டாசுகளும் வெடித்ததால், நகரம் புகை மண்டலம் சூழ காட்சியளித்தது. சில இடங்களில் விளக்குகளோடு கோ கொரோனா என்றபடி பொதுமக்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

08:56:20 on 06 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வீடுகளில் முடங்கி இருக்கும் பொதுமக்கள் வைரஸ் தொடர்பாக வெளியான ஹாலிவுட் மற்றும் உள்ளூர் படங்களை தேடிப் பார்த்து வருகிறார்கள். கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான "கன்டஜியன்' திரைப்படம் கொரோனா வைரஸை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.

07:57:01 on 06 Apr

மேலும் வாசிக்க தினமணி

முருங்கை கீரையில் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் ஏராளம் இருக்கின்றன. முருங்கை இலையில் இருந்து டீயும் தயாரிக்கப்படுகிறது. இது ‘மோரிங்கா தேநீர்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் சாதாரண கீரையில் இருப்பதை விட மூன்று மடங்கு இரும்பு சத்து நிறைந்திருக்கிறது.

06:55:01 on 06 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.

05:57:01 on 06 Apr

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

கொரோனா தொற்று பரவலையும், இஸ்லாமிய இயக்கங்களையும் இணைத்து சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பரப்பியதற்காகப் பிரபல சமூக வலைத்தள பிரமுகரான மாரிதாஸ் மீது நெல்லை காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

10:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

”தினமும் மூன்று வேளையும் குடும்பத்தினர் அத்தனை பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறோம். இப்போதைய சூழ்நிலையில், பெரும்பாலானவர்களுக்கு கையில் காசு இருக்கும். ஆனால் வைத்தியம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். அதனால், வீட்டிலேயே இருப்போம்...பாதுகாப்பாக இருப்போம்” என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

09:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

நடிகை ஸ்ரேயா சமையலறையில் தன் கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து “ஆண்கள் தங்கள் மனைவிக்கு எவ்வாறு உதவுகிறார்கள் என்ற வீடியோவை வெளியிட வேண்டும் என கூறி நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, நடிகர் ஆர்யா, நடிகர் அல்லு அர்ஜூன் ஆகியோரை சேலஞ்ச் டாஸ்க் மூலம் அழைத்திருக்கிறார்.

08:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

கொரோனா பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்தவர்கள், மாவட்டம் ரீதியாக சிகிச்சை பெறக்கூடிய, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் பட்டியல்களை வெளியிட்டுள்ள சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், இனிவரும் பாசிட்டிவ் ரிப்போர்ட்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

07:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கொரோனா வைரஸ் தொற்றியவர்களுக்குச் சிகிச்சையளிக்க, 112 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதில் கோவையில் கற்பகம், கே.எம்.சி.எச்; கன்னியாகுமரியில் மூகாம்பிகை மருத்துவ கல்லுாரி, மதுரையில் வேலம்மாள் மருத்துவ கல்லுாரி உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

06:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

தமிழகத்தில் 30 லட்சம் பேர் சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர், தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

06:21:09 on 05 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

புதுச்சேரியின் மிக பெரிய ஏரியான ஊசுடு ஏரியில் உள்ளூர் பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. காட்டு பகுதியில் வாழும் முள்ளம்பன்றி, கீரிப்பிள்ளை, உடும்பு, காட்டுபூனை தொடங்கி காட்டு முயல் ஆகியவை இயல்பாக இப்பகுதியில் சுற்றுவதை நீண்ட நாட்களுக்கு பிறகு காண முடிகிறது.

05:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கொரோனா தொற்றுள்ளோரில் பெரும்பாலானோர் தேனி மாவட்டம் போடி நகரைச் சேர்ந்தவர்கள் என செய்தி வெளியானதும், அதிர்ச்சியடைந்த போடி நகர மக்கள், தங்கள் தெருக்களில், வெளி ஆட்கள் நுழையாதவாறு தடுப்பதற்காக, முள்கள், கட்டைகள், கற்களைக் கொண்டு தெரு வாயிலை அடைத்துள்ளனர்.

04:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க விகடன்

நடிகை மீனா வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார். அதில், ”வீட்டிற்கு உள்ளேயே அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் அற்புதமான வாய்ப்பை தவறவிடாதீர்கள். நீங்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் உங்கள் குடும்பம் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.

03:55:01 on 05 Apr

மேலும் வாசிக்க ஜெயா ப்ளஸ்

கொரோனா நோய் தாக்கும் என உயிருக்கு பயந்து ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மங்களூரிலிருந்து படகில் 20 பேர் கடல் வழியாக வந்தபோது முருகன் என்பவர் வலங்காபுரி கடல் பகுதியில் குதித்து கடலில் நீந்தி கரைக்கு செல்ல முயன்ற போது உயிரிழந்துள்ளார்.

02:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க தினமணி

அஜித் ஷங்கர் கூட்டணி இதுவரை இணையவில்லை என்ற வருத்தம் ரசிகர்கள் பலரிடமும் இருந்து வருகிறது. ஆனால், இந்த கூட்டணி ஜீன்ஸ் படத்தின் போதே இணைவதாக இருந்ததாம், அதுவும் ஏ.எம்.எ ரத்னம் தயாரிப்பில். ஆனால், அப்போது அஜித்திற்கும் ரத்னத்திற்கும் ஏற்பட்ட பிரச்சனை ஒன்றால் அஜித் அந்த படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.

01:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

வட கொரியா நாட்டின் பேரிடர் தடுப்பு துறைக்கான இயக்குனர், பக் மியாங் சு, ”கொரோனா, சீனாவில் பரவத் துவங்கியதுமே, நாங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை துவங்கி விட்டோம். எல்லைகளுக்கு, 'சீல்' வைத்து விட்டோம். இதன் காரணமாக, எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை” எனக் கூறியுள்ளார்.

12:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க தினமலர்

கோவில்பட்டி அருகே கயத்தாறு அய்யனார்வூத்தை சேர்ந்த ஒருவர் டெல்லியில் நடைபெற்‌ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்வதற்காக சென்ற போது அப்பகுதி மக்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

11:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கை தட்டுவதால், டார்ச் அடிப்பதால் கொரோனா பிரச்னை தீராது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் அவர், கொரோனா வைரஸை கண்டறிய போதுமான அளவு பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் 10 லட்சம் பேரில் வெறும் 29 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

10:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க தந்தி டிவி

கொரோனா தொற்றால் அமெரிக்காவில் 311,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். நியூயார்க்கில் மட்டும் ஒரே நாளில் 630 பேர் பலியாகி உள்ளதை அடுத்து, அந்த மாகாணத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,565 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு வாரங்களில் வைரஸ் தொற்று அதிகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது.

10:17:19 on 05 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கொரோனா தொற்றால் அமெரிக்காவில் 311,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். நியூயார்க்கில் மட்டும் ஒரே நாளில் 630 பேர் பலியாகி உள்ளதை அடுத்து, அந்த மாகாணத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,565 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு வாரங்களில் வைரஸ் தொற்று அதிகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது.

10:05:42 on 05 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கொரோனா தொற்றால் அமெரிக்காவில் 311,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். நியூயார்க்கில் மட்டும் ஒரே நாளில் 630 பேர் பலியாகி உள்ளதை அடுத்து, அந்த மாகாணத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,565 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு வாரங்களில் வைரஸ் தொற்று அதிகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது.

09:59:57 on 05 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கொரோனா விவகாரத்தில் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் 33% தொற்று டெல்லியில் கடந்த மார்ச் மாதம் நடந்த தப்லீக் ஜமாஅத்தோடு தொடர்புடையவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அகர்வால் தெரிவித்துள்ளார்.

09:22:45 on 05 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தமிழகக்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா அறிகுறியுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72-வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

09:19:51 on 05 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழகக்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா அறிகுறியுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72-வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

09:13:48 on 05 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

பெண்கள் நிறைய பேர் இடுப்பு தசையை குறைக்கும் நோக்கத்துடனும், கட்டுடல் அழகை தக்கவைக்கவும் ‘ஷேப்வேர்’ எனப்படும் உள்ளாடைகளை அணிகிறார்கள். அதனை நீண்ட நேரம் அணிந்தால் ரத்த ஓட்டம் தடைப்படும். அதோடு வாயு, உடல் வீக்கம், அஜீரணம் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

07:55:01 on 05 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

முளைக் கீரை, சிறுகீரை ஆகியவற்றை நன்றாக சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள கீரை, சீரகம் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து அதனை 150 மி.லி அளவாகச் சுண்டச் செய்து இறக்கி வைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.

06:55:02 on 05 Apr

மேலும் வாசிக்க தினமணி

இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளின் உட்சுவர் குறுகலடைவதற்கு முக்கியக் காரணம் உடலில் உள்ள அதிக அளவுக் கொழுப்பு தமனிகளில் படிந்து விடுவதே ஆகும். இதனால் இரத்த ஓட்டத்தின் வேகம் தடைபடுகிறது. இதனைத் தடுக்க இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிக்கிறது.

05:55:02 on 05 Apr

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

“தினமும் காலை என் குடும்பத்தினருடன் யோகா செய்கிறேன். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. இப்போது நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதுதான் ஒரே வழி. சினிமாவுக்காக திரைக்கதை தயார் செய்து வருகிறேன். அதை செய்ய போதுமான நேரம் இருக்கிறது." என நடிகை சோனியா அகர்வால் கூறியுள்ளார்.

10:57:01 on 04 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

சமூக வலைத்தளத்தில் லாஸ்லியா புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி மார்பிங் செய்து வெளியிட்டு வருகின்றனர். இதை பார்த்த எல்லோருக்கும் ஷாக் தான், லாஸ்லியா பெயரை கெடுக்கவே இப்படி ஒரு வேலைப்பார்த்ததாக தெரிகிறது. இதற்கு லாஸ்லியாவும் தன் இன்ஸ்டா பக்கத்தில் செம்ம பதிலடி கொடுத்துள்ளார்.

09:57:01 on 04 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

பிரதமர் மோடியின் அறிவிப்பு வெளியானதுமே நடிகை டாப்ஸி, “புதிய டாஸ்க் வந்துள்ளது, ஹேஹேஹே,” என தன் டிவிட்டர் பதிவில் தெரிவித்தார். அவரது பதிவைக் கிண்டலடிக்கும் வகையில் கங்கனாவின் சகோதரி ரங்கோலி, “பி கிரேடு நடிகைகள் ஏன் இதற்காக சூடாக வேண்டும்.” என டாப்சியின் டிவீட்டை ரீடுவீட் செய்து கமெண்ட் போட்டிருக்கிறார்.

08:57:01 on 04 Apr

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

"அதிக அளவில் மக்கள் வெளியே வரவேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்த ஒரு பதிவு தான் அது. ஆனால், அனைவரும் முஸ்லீம்கள் ஒன்று கூடுவதைப் பற்றி மட்டும் பேசுகிறார்கள். மதவெறி பிடித்தவர்களே! எல்லா நாளும் ரோட்டில் எல்லா மதமும் கும்பலாக சுத்துது. ஏன் ஒரு மதத்தை மட்டும் குற்றம் சொல்லவேண்டும்" என்று சாந்தனு கோபமாக பதிவிட்டிருந்தார்.

08:35:52 on 04 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து முகம்மது அலி மற்றும் அவரது மனைவி இருவரும் சைக்கிளில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.

08:08:32 on 04 Apr

மேலும் வாசிக்க சன் நியூஸ்

உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிக் எண்ணிக்கை இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 10 லட்சத்தை தாண்டியது. இன்று அது 11 லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஒரே நாளில் உலகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

07:25:02 on 04 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில், தடையை மீறி வெளியிடங்களில் வாகனங்களில் சுற்றுபவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி, அவர்களின் வாகனங்களை அடித்து நொறுக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

06:58:24 on 04 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார், இன்று ஒரே நாளில் 2 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்று தேனி வந்தவரின் மனைவியான இவர், கொரோனா பாதிப்பு காரணமாக இன்று பிற்பகல் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்தது.

06:25:01 on 04 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அமெரிக்க ஆய்வு நிறுவனமான பாஸ்டன் நிறுவனம், ‘இந்தியாவில் நாடு தழுவிய அளவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் இறுதி மற்றும் செப்டம்பர் மாத 2வது வாரத்துக்கு இடைப்பட்ட காலத்தில் நீக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஜூன் மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:57:01 on 04 Apr

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்க அரசுடன் சமூக ஆர்வலர்கள் இணைந்து செயல்பட முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

05:27:01 on 04 Apr

மேலும் வாசிக்க தினகரன்

காவலர்களுக்கு ஒரு நாளாவது பிரியாணி விருந்து போட வேண்டும் என்று விரும்பிய புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர், மாவட்டத்தில் உள்ள 200 போலீஸாருக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியிருக்கின்றனர்.

04:57:02 on 04 Apr

மேலும் வாசிக்க விகடன்

'கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களுக்கு அருகில் நின்று இருமினாலோ அல்லது தும்மினாலோ, அவர்களுக்கும் பரவும். எனினும், காற்று மூலமாக, இந்த வைரஸ் பரவாது. காற்று மூலம், இதுவரை யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை,' என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

04:27:01 on 04 Apr

மேலும் வாசிக்க தினமலர்

தேனி மாவட்டத்தில் பணியாற்றும் போலீசாருக்கு முக கவசம், கைகளை சுத்தம் செய்வதற்கு சானிடைசர், கையுறை, பாதுகாப்பு கவசம் உள்ளிட்டவை இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் போலீசார் தங்கள் சொந்த பணத்தில் பாதுகாப்பு கவசங்களை வாங்கி அணிந்து வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

03:57:02 on 04 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

அஜித் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது மக்கள் தொடர்பாளரிடம் கேட்டபோது அவருக்கு சிறியதாக உடல்நல பாதிப்பு இருக்கிறது என்ற தகவலை முன்வைத்திருக்கிறார். உடல் நிலை சீரானதும் ஃபெப்சி நிவாரண நிதி கரோனா நிவாரண நிதி தொடர்பான அறிவிப்பு அஜித் தரப்பில் இருந்து வெளிவர வாய்ப்பு இருக்கிறது.

03:27:01 on 04 Apr

மேலும் வாசிக்க Asiavillenews

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் சமூக இடைவெளியை மிக சரியாக கடைபிடிக்கும் 108 பெண்களுக்கு சேலை வழங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

02:57:01 on 04 Apr

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

“கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும் கோவிட் - 19 வைரஸ் ஒரு அதி ஆபத்து நோய்க்கிருமியாகும். அதிக பரிசோதனை மையங்களில் கையாள்வது; போதிய பயிற்சியில்லாத பணியாளர்களை வைத்து சோதனை செய்து போன்ற நிகழ்ச்சிகளினால் வைரஸ் வெளியில் பரவ வாய்ப்பு அதிகமுள்ளது." என இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்) எச்சரித்துள்ளது.

02:27:01 on 04 Apr

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் வெண்டிலேட்டர்களின் தேவையும் அதிகமாகி தட்டுப்பாடு சூழ்ந்துள்ளது. இதனால் உலக நாடுகள் மேலும் கலக்கமடைந்து திணறி வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் நிலைமை வெண்டிலேட்டர் பற்றாக்குறையால் இன்னும் மோசமாகி உள்ளது.

01:57:01 on 04 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

காமெடி நடிகை ஆர்த்தியிடம் சாட் செய்த ரசிகர்கள் விஜய் பற்றி கேட்க அவர் விஜய் தமிழக தாய்மார்களின் செல்லப்பிள்ளை எனவும் குருவி படத்தின் போது தான் அவரை முதன் முதலில் சந்தித்ததாகவும், சந்தோசம் சந்தோசம் என்ற பாடல் தான் தனக்கு மிகவும் பிடித்தது என்றும் கூறியுள்ளார். இதனால் அவருக்கு லைக்ஸ் அதிகம் குவிந்து வருகிறது.

01:27:01 on 04 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரை சேர்ந்தவர் வின்சென்ட் சவேரியார் பிச்சை (59). இவரது மனைவி ஜான்சி ராணி கணவரின் கஞ்சத்தனத்தின் காரணமாக நகையைத் திருடியதோடு குடும்பத்தாரை ஏமாற்றும் விதமாக கொள்ளைச் சம்பவ நாடகத்தை அரங்கேற்றியது போலீசார் நடத்திய விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

12:57:01 on 04 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இந்தியாவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, விநியோகிக்கப்படும்போது 49.0 Hertzலிருந்து 50.05 Hertz வரையிலான அதிர்வெண்களுக்குள் மின் தொடரமைப்பு (grid) பராமரிக்கப்படுகிறது. மின்சாரத் தேவை பெருமளவில் அதிகரித்தாலோ குறைந்தாலோ இந்த அதிர்வெண்கள் மாற ஆரம்பிக்கும். மின் உற்பத்தியையும் கடுமையாகப் பாதிக்கும்.

12:27:01 on 04 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டணத்தைச் சேர்ந்த ராஜா என்ற அசன் மைதீன் (33), அருண்பாண்டி (29), அன்வர் ராஜா (33) உள்ளிட்ட மூவரும் சேர்ந்து மது கிடைக்காத காரணத்தால் மாற்று போதை ஏற்றிக்கொள்ள கிளாசிக் என்ற சேவிங் செய்த பின்பு பயன்படுத்தப்படும் லோசனில் 7அப் -ஐக் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது, இதில் 2 பேர் உயிரிழந்தனர்.

11:57:01 on 04 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கமல் தனது டுவிட்டர் பக்கத்தில், “பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம் என. ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்” என விமர்சித்துள்ளார்.

11:27:01 on 04 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சேலம் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 14 அத்தியாவசியமான காய்கறிகள் கொண்ட தொகுப்பை 100 ரூபாய் என்ற மலிவு விலையில் விற்க சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதில் தக்காளி, பெரிய வெங்காயம், முள்ளங்கி, கேரட், பீட்ரூட், கத்தரிக்காய், முருங்கைக்காய், கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவை அடங்கும்.

10:57:01 on 04 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

தமிழகத்தில் அதிகபட்சமாக சேலத்தில் 104 பாரன்ஹீட் டிகிரி பதிவானது. கரூா் பரமத்தியில் 102; தருமபுரி, மதுரையில் தலா 101; மதுரை விமானநிலையம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, வேலூரில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது. சனிக்கிழமை (இன்று) வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.

10:27:01 on 04 Apr

மேலும் வாசிக்க தினமணி

கொரோனா வைரஸுக்கு மதச் சாயம் பூச வேண்டாமென்றும், இதுகுறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் பாஜகவினருக்கு அக்கட்சியின் தலைவர் ஜேபி. நட்டா உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, கோவா முதலமைச்சரும் பாஜக தலைவருமான பிரமோத் சாவந்த், "தப்லிகி ஜமாஅத் இந்தியாவை சேதப்படுத்தியுள்ளது" என்று கூறியிருந்தார்.

09:57:01 on 04 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஆய்வில், ஐவர்மெக்டின் என்ற மருந்தின் ஒரு டோஸ் உயிரணு கலாசாரத்தில் வளரும் சார்ஸ்- கோவ் 2 வைரஸை அழிக்க கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐவர்மெக்டின் என்பது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தாகும்.

09:27:01 on 04 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்தது. இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 14,681 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.

08:57:01 on 04 Apr

மேலும் வாசிக்க தினகரன்

திருவாரூர் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு http://www.tvrdrb.in/ என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

07:57:01 on 04 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியின் டெஸ்க்டாப் வெர்ஷனை ஆப்பிள் மேக் மற்றும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதளங்களில் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஃபேஸ்புக் பயனர்கள் எளிதில் வீடியோ சாட் மேற்கொள்ள முடியும்.

06:57:01 on 04 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

தீக்காயத்திற்கு வெந்தயத்தை ஊறவைத்து விழுதாக அரைத்து பற்றுப் போட்டால் சீக்கிரத்தில் குணம் கிடைக்கும். தினசரி 15 கிராம் வெந்தயத்தை தவறாமல் உண்டு வந்தால், ரத்த அழுத்தம் சீராகும், ரத்தம் சுத்தமாகும், ரத்தத்தில் உள்ள கொழுப்பும் குறையும்.

05:57:01 on 04 Apr

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

”பிரதமர் நரேந்திர மோடி அவர்களே நீங்கள் வேறொரு நல்ல யோசனையைத் தந்திருக்கலாம். கரோனா நோய்த்தொற்றை வீழ்த்துவதற்கு ஒரு கண்டுபிடிப்பாக இதனை செய்வதால் (மின் விளக்குகளை அணைப்பதால்) நாம் கரோனா நோய்த்தொற்றை வீழ்த்திவிடுவோமா?” என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

10:57:02 on 03 Apr

மேலும் வாசிக்க தினமணி

ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நயன்தாரா. அப்போது ஒரு இளம் நடிகர் படத்தில் அவரை கமிட் செய்தார்களாம். அந்த ஹீரோயின் சரத்குமார் போன்ற வயதான ஹீரோவுடன் நடித்தவர், நமக்கு செட் ஆகாது என அசிங்கப்படுத்தியுள்ளார்.

09:57:02 on 03 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சாலைக்கு வந்தால் அவர்களை நானே கொன்று புதைப்பேன் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டட்ரட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவரது பேச்சுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

08:57:01 on 03 Apr

மேலும் வாசிக்க தினமலர்

உலகப் புகழ் பெற்ற "மணி ஹெய்ஸ்ட்" தொடரின் சீசன் 4 இன்று Netflix இணைய தளத்தில் வெளியானது. இணையதள ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒரு தொடர் "மணி ஹெய்ஸ்ட்". ஒரு கொள்ளை சம்பவத்தை பின்புலமாக வைத்து மிக சுவாரஸ்யமாக பின்னப்பட்ட திரைக்கதை, நமக்கு திரைவிருந்தாக அமைவது தான் இத்தொடர்.

08:27:02 on 03 Apr

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

தென்காசியில் நடுப்பேட்டை தெருவில் இருக்கும் ஜும்மா பள்ளிவாசலில் மதியம் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுள்ளது. மசூதியைப் பூட்டிக் கொண்டு உள்ளே சுமார் 200க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்தியதாக தகவல்கள் போலீசாருக்குத் தெரியவர, அவர்கள் மசூதிக்கு விரைந்தனர்.

07:58:50 on 03 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கொரோனாவால் கேரள மாநிலம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு கொரோனா நோயாளிக்கு ரூ.20,000 முதல் 25,000 வரை செலவாவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. ஐ.சி.யூ வார்டுகளில் வைத்து நோயாளிக்கு சிகிச்சையளிக்க நேர்ந்தால், அப்போது வென்டிலேட்டர் செலவு கூடுதலாக ஆகும். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ. 50,000 வரை அரசுக்கு செலவாகிறது.

07:57:01 on 03 Apr

மேலும் வாசிக்க விகடன்

தென்காசியில் நடுப்பேட்டை தெருவில் இருக்கும் ஜும்மா பள்ளிவாசலில் மதியம் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுள்ளது. மசூதியைப் பூட்டிக் கொண்டு உள்ளே சுமார் 200க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்தியதாக தகவல்கள் போலீசாருக்குத் தெரியவர, அவர்கள் மசூதிக்கு விரைந்தனர்.

07:40:10 on 03 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கொரோனா வைரஸை மதச் சிறுபான்மையினர்தான் பரப்புகிறார்கள் என்று குற்றம் சாட்டுவது தவறானது என்றும், இந்தக் குற்றம் சாட்டுதலால் உண்மையில் அதற்கு அனுமதிக்கும் அரசு உலகத்தால் பின்னோக்கித் தள்ளளப்படும் என்று அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான தூதர் சாம் பிரவுன்பேக் வேதனை தெரிவித்துள்ளார்.

07:27:01 on 03 Apr

மேலும் வாசிக்க Behind Woods News

சென்னையில் வழக்கம் போல் இறைச்சிக் கடைகள் இயங்கும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. மகாவீர் ஜெயந்தியான வரும் திங்கள் கிழமை மட்டும் இறைச்சிக் கடைகள் மூடப்பட்டு இருக்கும். சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

07:10:39 on 03 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கொரோனா என்பது ஒருவர் மூலம் இன்னொருவருக்கு தொடுதல் மூலம் பரவ கூடியது. அதேபோல் இந்த வைரஸ் அறிகுறி இல்லாமலே பரவ கூடியது. இதுதான் இந்த வைரஸ் தாக்குதல் குறிப்பிட்ட காலத்தில் வேகம் எடுக்க காரணம். எனவே இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இதுதான் என்பதை மற்ற நாடுகள் உணர்த்துகின்றன.

06:57:01 on 03 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும்பாலும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள கிராமம் மற்றும் நகரங்களில் பல காட்டு விலங்குகள் தென்படும் சம்பவங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன.

06:27:01 on 03 Apr

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட அனைத்து வகையான இறைச்சிக் கடைகளையும் மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறி இறைச்சி விற்பனையில் ஈடுபடும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

05:57:01 on 03 Apr

மேலும் வாசிக்க தினமணி

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்னும் 484 பேரின் சோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

05:27:01 on 03 Apr

மேலும் வாசிக்க தினகரன்

கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக அமல் செய்யப்பட்ட ஊரடங்கு முடிவடைந்த பின்னர் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு பின்னர் சர்வதேச விமானங்கள் இந்தியா வர அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

04:57:02 on 03 Apr

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 2996. ஆனால், தற்போது கரோனா வைரஸால் உயிரிழந்திருப்போரின் எண்ணிக்கை 6,000க்கும் அதிகமாக உள்ளது.

04:27:01 on 03 Apr

மேலும் வாசிக்க Asiavillenews

கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வேளையில் இந்தியாவில் பிரதமர் மோடி நாட்டு மக்களை செல்போன் டார்ச் அடியுங்கள் என்று பிரச்சனைய மூடிமறைக்கும் வேலையில் இறங்கியுள்ளார். மோடியின் இந்த அறிவிப்பு நாட்டுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

03:57:01 on 03 Apr

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

“ஏப்ரல் 5ஆம் தேதி விளக்கேற்றுவதையும், டார்ச் லைட் அடிப்பதையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். பதிலுக்கு, தயவுசெய்து நாங்கள் சொல்வதையும், தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனைகளையும் கேளுங்கள்” என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

03:27:02 on 03 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கோவை ரத்தினபுரி பகுதியில் விக்னேஷ் என்பவர் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் மக்களின் பசியாற்ற நினைத்த அவர், செல்ஃப் சர்வீஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி மக்கள் அனைவரும் ரொட்டியை எடுத்துக்கொண்டு, அதற்கான பணத்தை வைத்து விட்டு செல்கின்றனர்.

02:57:01 on 03 Apr

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கிராமத்து பெண்களுக்கே உண்டான அழகு சாயலில் ஹீரோயினாக நம் மனங்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அவருக்கு இன்று பிறந்தநாள். இதனை தன்னுடைய தங்கையுடன் கொண்டாடியுள்ளார். அவரின் தங்கையை புகைப்படத்தில் பார்த்தது பலருக்கும் மகிழ்ச்சி.

02:27:01 on 03 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் வருகிற 9-ந்தேதி திரைக்கு வர இருந்தது. ஆனால் 14-ந்தேதி வரை கொரோனா ஊரடங்கு இருப்பதால் தள்ளிப்போகிறது. இதுபோல் கார்த்தியின் ‘சுல்தான்’, சிம்புவின் ‘மாநாடு’, விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’, தனுசின் ‘கர்ணன்’ போன்ற படங்கள் திட்டமிட்ட தேதியில் ரிலீசாகாமல் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.

01:57:02 on 03 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

நடிகையும் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், “கொரோனா வைரசுக்கு மதம் இல்லை, அது மதங்களைப் பார்ப்பதில்லை, கடவுளைக்கண்டும் அஞ்சுவதில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே வாயை மூடிக்கொண்டு வீட்டில் இருக்கவும்.” காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

01:27:01 on 03 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

”கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நம் சந்தையில் அதிகம் இல்லை. இதனால், இங்குவரும் பொதுமக்கள் வழக்கம்போல் நெருக்கமாகவே உலவுகின்றனர். இதனால், சந்தையின் ஊழியர்களுக்கும் கரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது.” என டெல்லியில் உள்ள ஆசாத்பூர் காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

12:57:02 on 03 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டுவருகிறது. கடந்த மார்ச் 28ஆம் தேதியோடு முடிவடைந்த வாரம் வரையில், 66 லட்சம் அமெரிக்கர்கள் வேலையின்மை சலுகை கோரி விண்ணப்பித்துள்ளதாக அந்தநாட்டின் தொழிலாளர்துறை தெரிவித்துள்ளது.

12:27:01 on 03 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அமெரிக்காவில் மக்கள் துப்பாக்கி வைத்திருப்பது சட்டவிரோதமாகக் கருதப்படாது. அதன்படி கடந்த மார்ச் மாதம் மட்டும் அந்நாட்டு மக்கள் 2 மில்லியன் துப்பாக்கிகள் அதாவது 20 லட்சம் துப்பாக்கிகளை வாங்கியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது.

11:57:02 on 03 Apr

மேலும் வாசிக்க விகடன்

கோவை குனியமுத்தூர் பகுதியில், நிவாரணத் தொகை வழங்கும் பணிகளை தொடங்கி வைத்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மதத்தை குறிப்பிட்டு கொரோனா வதந்தி பரப்பப்படுவது குறித்து கண்டனம் தெரிவித்ததார். மேலும் அவர், வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

11:27:01 on 03 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

மேலும் வாசிக்க