View in the JustOut app
X

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலிலும் பல்வேறு துறைகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல உள்ளனர். இத்தகைய புதுமுகங்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் ஏராளமான மூத்த தலைவர்களை இந்த நாடாளுமன்றம் இழந்து இருக்கிறது.

08:35:01 on 27 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

சுவிட்சர்லாந்தில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களில் 11 பேருக்கு ஒரே நாளில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கையை இந்திய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.

08:15:02 on 27 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.50 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.45-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:55:01 on 27 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளது. அதன்படி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில், "பல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்”, என வைகோ கூறினார்.

07:35:05 on 27 May

மேலும் வாசிக்க மாலை மலர்

பிளாஸ்டிக் கழிவுகளை அழிப்பதற்கான செயல் திட்டத்தை சமர்ப்பிக்க தவறிய தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்கள், மாதம் தலா ₹1 கோடி இழப்பீட்டு தொகையை செலுத்த வேண்டிய நிலையில் உள்ளன. சுற்றுச்சூழல் கேடுக்கு பிளாஸ்டிக் முக்கிய காரணியாக உள்ளது.

07:15:02 on 27 May

மேலும் வாசிக்க தினகரன்

அமெரிக்காவைச் சேர்ந்த பென்சிலவெனியா பகுதியில் அஸ்லீ அன் ஸ்மித் என்ற பெண் ஒரு மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணிபுரியும் இடத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளை முழு நிர்வாணமாகவும், ஆபாசமாகவும் படம் எடுத்து தனது ஆண் நண்பருக்கு அனுப்பி வந்துள்ளார்.

06:55:01 on 27 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் வெஜிடபிள் ஆயில் இரண்டிலும் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. இது கர்ப்பிணிகளின் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அத்துடன் இருதய ஆரோக்கியத்தையும் பாதிக்கும் தன்மை கொண்டது. இந்த ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட்டில் குறிப்பாக, லினோலிக் அமிலம் இருப்பதால் கல்லீரலின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது.

06:25:02 on 27 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

திருப்பூரில், சாலையில் செல்லும் போதெல்லாம் பார்த்து குரைத்ததால் 15க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்று விட்டதாக மீன் வியாபாரி ஒருவர் மீது அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

05:55:02 on 27 May

மேலும் வாசிக்க நக்கீரன்

தமிழகத்தில் தற்போது மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதியோடு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் மைத்ரேயன், ரத்தினவேல், அர்ஜுனன், லக்ஷ்மணன், திமுக எம்.பி கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.

05:25:02 on 27 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கடந்த மே 23-ம் தேதி இரவு தேர்தல் முடிவு வெளியானதிலிருந்து தஞ்சாவூரில் தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இது அ.தி.மு.க அரசின் பழிவாங்கும் செயலாக இருக்குமோ என தஞ்சை மக்கள் சந்தேகம் கிளப்புகிறார்கள்.

04:55:02 on 27 May

மேலும் வாசிக்க விகடன்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒருத்தி கிராமத்தைச் சேர்ந்த வினோத், ஏழுமலை ஆகியோர் கட்டட வேலையும், விவசாய தொழிலையும் மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் அங்கு விற்கப்படும் எரிசாராயத்தை வாங்கி குடித்தவுடன், மயக்கம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதில் வினோத், வீட்டிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

04:25:01 on 27 May

மேலும் வாசிக்க நியூஸ் 7

மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல மருத்துவம் படித்து வந்தார். ஆனால், அந்தக் கனவுகள் எல்லாம் நிறைவேறாமலேயே போனது. கடந்த 22ஆம் தேதி தூக்கு மாட்டிக் கொண்ட பாயல், தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

03:55:01 on 27 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பாகிஸ்தானில் இளைஞர் ஒருவர் தான் வளர்த்துவரும் பசுவை தன்னுடைய பைக்கில் முன்னால் அமர்த்தி ஒட்டிச் செல்கிறார். பசு பைக்கில் செல்வதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

03:26:01 on 27 May

மேலும் வாசிக்க தினமலர்

தென்னகத்து காஷ்மீர் என்று கூறப்படும் மூணாறில் விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்த வண்ணம் உள்ளனர். கோடை வெப்பத்தில் இருந்து காத்து கொள்ளவும், மூணாறில் நிலவும் கால நிலையை அனுபவிக்கவும், தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

02:56:01 on 27 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட நடிகை குஷ்பு மற்றும் பிக் பாஸ் காயத்ரி ஆகியோர், ட்விட்டரில் சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இருவரும், அவர்களுடைய கட்சிக்காக தான் இந்த சண்டையை போட்டுள்ளனர்.

02:26:01 on 27 May

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

01:56:01 on 27 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

'பாட்டாளிகளே... உங்களால் வீறு கொண்டு வெற்றிகளை குவிக்க முடியும்,' என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், 'மக்களவைத் தேர்தலில் நாம் தோல்வியடைந்தாலும், கிட்டத்தட்ட கடந்த தேர்தலில் பெற்ற அளவுக்கு இப்போதும் வாக்குகளை வென்றுள்ளோம்.' என தெரிவித்துள்ளார்.

01:26:01 on 27 May

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

வந்தவாசி அருகே கீழ் கொடுங்காலூரில் கவனிக்க ஆள் இல்லாததால் முதிய தம்பதி தற்கொலை செய்துகொண்டனர். அரசுக்குச் சொந்தமான காரிய மண்டபத்தில் தங்கியிருந்த அப்பாவு(96), அலமேலு (85) தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர்.

12:55:02 on 27 May

மேலும் வாசிக்க தினகரன்

பெரம்பலுார் மாவட்டம், மேலமாத்துார் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள், நீர்நிலைகளை துார் வாரும் பணியில், ஈடுபட்டு உள்ளனர். வாலிபர்களின் பணியை, இக்கிராமத்தினர் மட்டுமின்றி, பக்கத்து கிராம மக்களும் பாராட்டி வருகின்றனர்.

12:25:01 on 27 May

மேலும் வாசிக்க தின மலர்

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் நகராட்சிக்கு உட்பட்ட செல்வராஜ் நகர் விவேகானந்தர் தெரு பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில், மின்கம்பங்களில் மின் விளக்கு இல்லாமல் அப்பகுதி இருட்டாக இருக்கும் காரணத்தால், மின் கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி இரவு 9 மணி வரை அந்த வெளிச்சத்தில் நடமாடி வருகின்றனர்.

11:55:02 on 26 May

மேலும் வாசிக்க நக்கீரன்

உத்தரபிரதேச மாநில முஸ்லீம் பெண்ணொருவர் தனக்கு பிறந்த குழந்தைக்கு நரேந்திர தாமோதர் தாஸ் மோடி என பெயரிட்டுள்ளார். அவர் மோடி அரசு வழங்கிய திட்டங்களை வெகுவாக பாராட்டினார்.

11:25:01 on 26 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி தொடங்கியது. ஒன்றரை டன் பழங்களைக் கொண்டு 7 அடுக்குகளில் அமைக்கப்பட்ட பழ அலங்காரத்தை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

10:55:01 on 26 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசவுள்ளார். இந்நிலையில், 'வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை,' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

10:26:01 on 26 May

மேலும் வாசிக்க மாலை மலர்

மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டத்துக்கு ராணுவ நிதியை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடைவிதித்து கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மத்திய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

09:55:01 on 26 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

ஆண்ட்ராய்ட் செல்போன், வாகனத் திருட்டை கண்டறிய உதவும் 'டிஜிகாப் செயலி'யை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக காவல்துறை. நெட்வொர்க் பிரச்சினையால் கோவை புறநகர் பகுதிகளில் இச்செயலியை பயன்படுத்துவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

09:26:01 on 26 May

மேலும் வாசிக்க காமதேனு

மத்திய அமைச்சர் பதவி தராவிட்டால் கட்சியை உடைப்பேன் என்று அதிமுக ராஜ்யசபா எம்.பி.,வைத்திலிங்கம் மிரட்டல் விடுத்து இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

09:20:19 on 26 May

மேலும் வாசிக்க தினகரன்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் குறைக்க அவர் முயற்சிப்பதாக கூறியும், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியு, எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

09:05:37 on 26 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள கிராமம் டி.வல்லக்குளம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராதிகா. அதே ஊரைச் சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் ராதிகாவிற்கு தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ராதிகாவை அவரது உறவினர்களே எரித்துக் கொன்றுள்ளனர்.

08:57:01 on 26 May

மேலும் வாசிக்க விகடன்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் பல்கலைகழத்தில், பென்னேரியைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற மாணவி 3ஆம் ஆண்டு பயோமெடிக்கல் படித்து வந்துள்ளார். கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவி, திடீரென விடுதிக் கட்டிடத்தின் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

08:39:01 on 26 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் பல்கலைகழத்தில், பென்னேரியைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற மாணவி 3ஆம் ஆண்டு பயோமெடிக்கல் படித்து வந்துள்ளார். கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவி, திடீரென விடுதிக் கட்டிடத்தின் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

08:36:01 on 26 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

குருக்ராமில் முஸ்லிம் இளைஞர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் ஜெய்ஸ்ரீராம் சொல்லச் சொல்லி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

08:18:01 on 26 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

குருக்ராமில் முஸ்லிம் இளைஞர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் ஜெய்ஸ்ரீராம் சொல்லச் சொல்லி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

08:15:01 on 26 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சமூக செயற்பாட்டாளரும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முகிலன் காணாமல் போய் இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது. இவர் ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் விவகாரம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என பல போராட்டங்களில் மிகவும் முக்கியப் பங்காற்றியவர்.

08:00:01 on 26 May

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த ஒரு வாரமாக தேசிய அளவிலான ஜூனியர் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து 400 பேர் பங்கேற்றனர். இந்த தொடரில் தமிழக வீரர், வீராங்கனைகள் 5 வெண்கல பதக்கங்களை வென்றனர்.

07:39:01 on 26 May

மேலும் வாசிக்க நியூஸ் 7

சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த ஒரு வாரமாக தேசிய அளவிலான ஜூனியர் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து 400 பேர் பங்கேற்றனர். இந்த தொடரில் தமிழக வீரர், வீராங்கனைகள் 5 வெண்கல பதக்கங்களை வென்றனர்.

07:36:01 on 26 May

மேலும் வாசிக்க நியூஸ் 7

நடிகர் விஜய் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு மதிய உணவு மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளார். ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் தனது சொந்த செலவில் இந்நிகழ்ச்சியை நடத்துவதை நடிகர் விஜய் வழக்கமாகக் கொண்டுள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இந்நிகழ்ச்சி தாமதாக நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

07:18:01 on 26 May

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

நடிகர் விஜய் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு மதிய உணவு மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளார். ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் தனது சொந்த செலவில் இந்நிகழ்ச்சியை நடத்துவதை நடிகர் விஜய் வழக்கமாகக் கொண்டுள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இந்நிகழ்ச்சி தாமதாக நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

07:15:01 on 26 May

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைய முயன்ற குற்றச்சாட்டில் 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து ஈராக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 பேருக்கு ஈராக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

06:57:02 on 26 May

மேலும் வாசிக்க தினகரன்

சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சரித்திர பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தமன்னா நடிப்பதாகவும் கூறப்பட்டது. இப்போது படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சிக்காக தமன்னா நடனம் ஆட இருக்கிறாராம்.

06:39:01 on 26 May

மேலும் வாசிக்க மாலை மலர்

சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சரித்திர பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தமன்னா நடிப்பதாகவும் கூறப்பட்டது. இப்போது படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சிக்காக தமன்னா நடனம் ஆட இருக்கிறாராம்.

06:36:01 on 26 May

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் வரும் 28ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்கவுள்ளனர்.

06:22:08 on 26 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளை வென்று நாட்டின் பிரதமராக மே 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு நரேந்திர மோடி பதவியேற்கிறார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் புதிய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். நாட்டின் பிரதமராக 2வது முறை மோடி பதவியேற்கிறார்.

06:15:50 on 26 May

மேலும் வாசிக்க தினமணி

உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்ட சுரேந்திரா சிங் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில், சுரேந்திரா சிங்கின் இறுதி சடங்கு அவரது ஊரில் நடந்தது. இதில் கலந்து கொண்ட இரானி சிங்கின் உடலை தனது தோளில் சுமந்தபடி சென்றார்.

06:15:02 on 26 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் ஒரு சின்ன கிராமம். இங்கு நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த கிராமத்து பெண்கள், மூதாட்டிகள் என பலரும், ''ஆத்தாடி இந்த வெள்ளை கார பொண்ணுக்கு நம்ப ஊரு மாப்பிள்ளைய பிடிச்சி போன அதிசயத்த பார்த்தியா'' என்று கன்னத்தில் கை வைத்து கொண்டு வியப்பாக பார்த்து பேசி கொண்டனர்.

05:57:02 on 26 May

மேலும் வாசிக்க நக்கீரன்

லண்டனில், 'இலங்கைத் தமிழர்களின் காலவரையறையற்றதொரு பாரம்பரியம்' என்ற பெயரில் நடத்தப்பட்ட 2 நாள் கண்காட்சியில், இலங்கை உருவானது முதல் தமிழ் கலாசாரத்தின் தொன்மை வரையும், உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதல் இறுதி வரையும் பல்வேறு அம்சங்களை விளக்கும் ஓவியங்கள், ஆவணப்படங்கள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

05:39:01 on 26 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

லண்டனில், 'இலங்கைத் தமிழர்களின் காலவரையறையற்றதொரு பாரம்பரியம்' என்ற பெயரில் நடத்தப்பட்ட 2 நாள் கண்காட்சியில், இலங்கை உருவானது முதல் தமிழ் கலாசாரத்தின் தொன்மை வரையும், உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதல் இறுதி வரையும் பல்வேறு அம்சங்களை விளக்கும் ஓவியங்கள், ஆவணப்படங்கள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

05:36:02 on 26 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

வயது வித்தியாசமுள்ள தம்பதிகள் இடையே கண்டிப்பாக செக்ஸ் பிரச்சினை ஏற்படுமென்ற நிலை உலகம் முழுக்க நிலவுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட ஜோடி அதனை எப்படிப் பேசித் தீர்க்கிறது, செக்ஸ் தெரபிஸ்ட் மூலமாக அப்பிரச்சினைகளைச் சரி செய்கிறது என்பது மிக முக்கியம். அதனைப் பொறுத்தே அவர்களது எதிர்கால தாம்பத்திய வாழ்க்கை அமையும்.

05:18:01 on 26 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

வயது வித்தியாசமுள்ள தம்பதிகள் இடையே கண்டிப்பாக செக்ஸ் பிரச்சினை ஏற்படுமென்ற நிலை உலகம் முழுக்க நிலவுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட ஜோடி அதனை எப்படிப் பேசித் தீர்க்கிறது, செக்ஸ் தெரபிஸ்ட் மூலமாக அப்பிரச்சினைகளைச் சரி செய்கிறது என்பது மிக முக்கியம். அதனைப் பொறுத்தே அவர்களது எதிர்கால தாம்பத்திய வாழ்க்கை அமையும்.

05:15:01 on 26 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சில வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் படம் இயக்குகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்தப் படத்தில், ஹீரோவாக ஜெய் நடிக்கிறார். ஜெய் ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா, அதுல்யா ரவி என 2 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ‘நீயா 2’. படத்திலும் ஜெய் ஜோடியாக கேத்ரின் தெரேசா, ராய் லட்சுமி என 2 நடிகைகள் நடித்திருந்தனர்.

04:57:01 on 26 May

மேலும் வாசிக்க காமதேனு

வங்கிகளில் விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடியாக இருப்பதால் மக்கள் அனைவரும் தங்கள் அருகாமையில் உள்ள வசந்த் அண்ட் கோ நிறுவனத்தில் வருகிற 30ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்குப் புத்தகத்தை நேரில் எடுத்துச் சென்று படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

04:39:01 on 26 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

வங்கிகளில் விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடியாக இருப்பதால் மக்கள் அனைவரும் தங்கள் அருகாமையில் உள்ள வசந்த் அண்ட் கோ நிறுவனத்தில் வருகிற 30ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்குப் புத்தகத்தை நேரில் எடுத்துச் சென்று படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

04:36:01 on 26 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் யாஷிகா ஆனந்த். அவர் அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிகம் பிரபலமடைந்தார்.
இந்நிலையில் அவர் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

04:15:01 on 26 May

மேலும் வாசிக்க சினி உலகம்

மதுரை பழங்காநத்தம் அடுத்த முத்துப்பட்டி பகுதியில் பிரபல ரவுடி சௌந்தர் என்பவர் நேற்று மாலை உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கி கழுத்தை வெட்டி கொலை செய்தனர். மேலும் அவரது தலையை துண்டித்து சாக்கு பையில் எடுத்துக்கொண்டு கிளம்பினர்.

03:57:02 on 26 May

மேலும் வாசிக்க விகடன்

திண்டிவனத்தில் கடந்த 24ஆம் தேதி மேம்பாலத்தின் கீழே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்ட 3 பேர் பணம் கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளனர். அவர்களை உரிமையாளர் தடுத்த போது கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்த 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில், அவர்கள்தான் டிரவுசர் கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது.

03:39:02 on 26 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

திண்டிவனத்தில் கடந்த 24ஆம் தேதி மேம்பாலத்தின் கீழே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்ட 3 பேர் பணம் கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளனர். அவர்களை உரிமையாளர் தடுத்த போது கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்த 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில், அவர்கள்தான் டிரவுசர் கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது.

03:36:01 on 26 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இலங்கையிலிருந்து 15 ஐஎஸ் பயங்கரவாதிகள் கேரளா, லட்சத்தீவு வழியாக ஊடுருவ இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கேரள கடலோர பகுதிகளில், கடற்படை வீரர்கள் அதிநவீன படகுகள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

03:18:06 on 26 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலையை அடுத்துள்ள நவமலை பகுதியில் முதியவரை யானை மிதித்து கொன்றது. 2 தினங்கள் முன்பு சிறுமி ஒன்று யானை தாக்கி இறந்த நிலையில் தற்போது முதியவரும் பலியாகி இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

03:18:02 on 26 May

மேலும் வாசிக்க தினமலர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலையை அடுத்துள்ள நவமலை பகுதியில் முதியவரை யானை மிதித்து கொன்றது. 2 தினங்கள் முன்பு சிறுமி ஒன்று யானை தாக்கி இறந்த நிலையில் தற்போது முதியவரும் பலியாகி இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

03:15:01 on 26 May

மேலும் வாசிக்க தினமலர்

தென் அமெரிக்க நாடான பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அல்ட்டோ அமேசானஸ் மாகாணத்தின் லகுனாஸ் மாவட்டத்தின் தென்கிழக்கே சுமார் 83 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் சுமார் 105 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8ஆக பதிவாகியுள்ளது.

03:02:34 on 26 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சிம்புவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. அது காட்டுத்தீ போல் வேகமாக பரவியது. இது குறித்து நடிகர் சிம்பு, “என் திருமணத்தைப் பற்றி வெளியான தகவல்களில் உண்மையில்லை. எந்த பெண்ணுடனும் இதுவரை எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கவில்லை.” என தெரிவித்துள்ளார்.

02:57:01 on 26 May

மேலும் வாசிக்க தினமணி

மகாராஷ்டிராவின் புனே நகரில் சோம்வார் பேட்டை பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். இதில், தினமும் காலையில் எனது வீட்டின் முன் சேவல் ஒன்று வந்து நின்று கூவி எனது தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறது என தெரிவித்து உள்ளார்.

02:39:02 on 26 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

மகாராஷ்டிராவின் புனே நகரில் சோம்வார் பேட்டை பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். இதில், தினமும் காலையில் எனது வீட்டின் முன் சேவல் ஒன்று வந்து நின்று கூவி எனது தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறது என தெரிவித்து உள்ளார்.

02:36:01 on 26 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மன்னார்குடி அருகே சந்தன நல்லூரில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். சந்தன நல்லூர் ஓ.என்.ஜி.சி. எண்ணெய்க் கிணறு எதிரே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

02:15:02 on 26 May

மேலும் வாசிக்க தினகரன்

உலக அளவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட கேமிங் ஆப்ஸ்களில் முதலிடத்தில் இருப்பது கேண்டி கிரஷ் சாகா (Candy Crush Saga). கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்த கேமின் மூலம் 374.08 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருப்பது போக்கிமான்-கோ (Pokemon Go) இந்த ஆப் மூலம் 254.12 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

01:55:01 on 26 May

மேலும் வாசிக்க விகடன்

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை. நேற்றை விட இன்று, 2 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பம் நிலவக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகும்.

01:42:01 on 26 May

மேலும் வாசிக்க ie தமிழ்

தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்தார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த ஜெகன்மோகன் ரெட்டி, மே 30ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பங்கேற்கவும் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

01:26:01 on 26 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

குஜராத்தில் சோட்டா உதேபூர் நகரில் சுர்கேடா, சனடா மற்றும் ஆம்பல் என்ற 3 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் மணமகளை, மணமகனின் சகோதரி திருமணம் செய்யும் வினோத நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

01:14:33 on 26 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

ராகுல் தோல்வியுற்ற அமேதி தொகுதியில் எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இராணியின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இவர் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

12:56:38 on 26 May

மேலும் வாசிக்க தின மலர்

மலையாளத்தில் லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தில் நிவின் பாலியுடன் நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்திற்காககொடுத்த தேதிகளில் மாற்றம் செய்துவிட்டு ரஜினி, விஜய் படங்களுக்காக கால்ஷீட் கொடுத்துவிட்டாராம். இதற்காக நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரிடம் நயன்தாரா மன்னிப்பு கேட்டதோடு சில நாட்களில் வந்து கலந்துகொள்கிறேன் என கூறியுள்ளாராம்.

12:46:11 on 26 May

மேலும் வாசிக்க சினி உலகம்

கொல்கத்தா மாநகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை தேடப்படும் நபராக அறிவித்து சி.பி.ஐ.நோட்டீஸ் அனுப்பியது. லுக் அவுட் நோட்டீசை அனைத்து விமான நிலையங்களுக்கும் சி.பி.ஐ. அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

12:33:35 on 26 May

மேலும் வாசிக்க தினகரன்

அதானியின் அனல் மின் நிலையத் திட்டம் தொடர்பாகத் தங்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயத்திற்காக ஜார்கண்ட் மாநில மக்கள் நீதிமன்றங்களை நாடியுள்ளனர். இனி அவைதான் அவர்களுக்கான நீதியைக் கொடுக்கவேண்டும். அதானியா மக்களின் நில உரிமையா எது முதன்மையானது என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும்.

12:21:19 on 26 May

மேலும் வாசிக்க விகடன்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபயிற்சி சென்ற அமமுக பிரமுகர் சரவணன் வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொல்லப்பட்ட சரவணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

12:07:29 on 26 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில்போது இடதுகாலில் ஏற்பட்ட காயத்தால் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் போட்டியின் பாதியிலிருந்து வெளியேறினார். இது குறித்து இங்கிலாந்து நிர்வாகம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்க் வுட் மருத்துவக் குழுவினருடன் நேரம் செலவிடவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:56:53 on 26 May

மேலும் வாசிக்க ETV Bharat

'அமமுகவுக்கு சில பூத்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை; வாக்குச்சாவடி முகவர்களின் வாக்குகள் எங்கே?' என அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

11:18:58 on 26 May

மேலும் வாசிக்க தினமணி

இந்தியாவின் தென்கிழக்கே அமைந்த நிக்கோபார் தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 35 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

10:54:21 on 26 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் நரேஷ் கோயல், அவருடைய மனைவியுடன் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார். இருவர் மீதும் போலீசில் புகார் இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

10:35:52 on 26 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கோவைக்காயின் முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. கோவைக்காய் இலை இருமல், ஆறாத புண்கள், சிரங்கு, உடல் சூடு, நீர்ச் சுருக்கு ஆகியவற்றைப் போக்கும். கோவைக்காய், ஜலதோஷம், நீரழிவு போன்ற நோய்களுக்கு மருந்தாகும்.

10:15:01 on 26 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை. அதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

09:55:01 on 26 May

மேலும் வாசிக்க மாலை மலர்

மாயமான குழந்தைகளின் சர்வதேச தினத்தையொட்டி, ரயில் பயணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்பட்டது. சிறுவர், சிறுமியர்களை ரயில் பயணிகள் எவ்வாறு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அறிவுரைகளை வழங்கினர்.

09:35:01 on 26 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை, கோடியங்கரை, புஷ்பவனம் கிராம மீனவர்கள் 5,000 பேர் கடலுக்கு செல்லவில்லை.

09:15:02 on 26 May

மேலும் வாசிக்க தினகரன்

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, கைதி படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து படக்குழு டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

08:55:01 on 26 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கெளரவமிக்க கேன்ஸ் பால்மி டோர் விருதை தென் கொரிய இயக்குநர் பாங் ஜோன் ஓ பெற்றார். அவர் இயக்கிய பேரசைட் என்னும் அவல நகைச்சுவைத் திரைப்படத்திற்காக அந்த விருது வழங்கப்பட்டது. பதினொரு நாட்கள் நடைபெற்ற விழா முடிவுக்கு வந்தது. இதில் புதிய திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.

08:35:02 on 26 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

முல்லை பெரியாற்றில் குளிக்கச்சென்ற நண்பரகள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய இருவரையும் சடலமாக மீட்டனர்.

08:15:02 on 26 May

மேலும் வாசிக்க ETV Bharat

சேலம், கிருஷ்ணகிரி, கோவை மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், சில மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

07:55:02 on 26 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஃபேஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் உலகின் 12 நாடுகளில் சொந்தமாக க்ரிப்டோகரென்சிக்களை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி குளோபல் காயின் என்ற பெயரில் அழைக்கப்படும் என தெரிகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த க்ரிப்டோகரென்சிக்கான சோதனை துவங்கும் என கூறப்படுகிறது.

07:35:02 on 26 May

மேலும் வாசிக்க மாலை மலர்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.39 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.45-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:15:02 on 26 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகும் முன்பு, அப்படத்தில் நடிப்பதற்கு ஆவலாகவும், மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் காத்திருப்பதாக ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

06:55:01 on 26 May

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

புதுச்சேரியில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வரும் 4 சதவீத துணை கட்டணத்ததுடன் தற்போது உயர்த்தப்பட்டுள்ள 4.59 சதவீதம் உயர்வும் சேர்த்து 8.59 சதவீதமாக கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

06:25:02 on 26 May

மேலும் வாசிக்க தினமலர்

நீயா 2 படத்தை ஆன் லைனில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ். படம் வெளியான நாளிலேயே முழுப் படத்தையும் திருட்டுத்தனமாக வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். படத்தின் வசூலையும் இது பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

05:55:01 on 26 May

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

தென்னாப்பிரிக்காவில் கடந்த 2 வாரங்களுக்கு முன் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதன்பின் அதிபருக்கான தேர்வில் சிரில் ராமபோசாவின் பெயரே முன்மொழியப்பட்டது. அவர் போட்டியின்றி மீண்டும் தென்னாப்பிரிக்க குடியரசின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

05:25:02 on 26 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

சாலையோரங்களிலும் தெருக்களிலும் கைவிடப்பட்ட அல்லது இடையூறாக இருக்கும் வாகனங்கள் போக்குவரத்து காவல் துறையால் கைப்பற்றப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. பின்னர் அவை விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் அடுத்த சில வாரங்களுக்குள் 2,400 கைவிடப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யவுள்ளன.

04:55:02 on 26 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தேனி மாவட்டத்தின் குன்னூர், திருமலாபுரம், மரிக்குண்டு, சுப்புலாபுரம் உள்ளிட்ட இடங்களில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. இறவை பாசனம் நடைபெறும் இப்பகுதி விவசாயத்துக்கு முக்கிய நீராதாரமாக விளங்குவது வைகை ஆறு. பருவமழை பொய்த்து, கோடைக்கு முன்னரே நீர்நிலைகள் வறண்டதால் விவசாயிகள் செய்வதறியாது விழி பிதுங்கி நிற்கின்றனர்.

04:25:01 on 26 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியாவில் கார்தியால்யா பாபா ஆசிரமத்திற்கு சொந்தமான பசுக்கள் பாதுகாப்பு மையம் இருக்கிறது. அங்கு ராஜ்குமார் என்பவர் காவலராக இருந்து வந்துள்ளார். சில நாட்களாக மையத்தில் ஏதோ தவறு நடப்பதாக சந்தேகித்த ஆசிரம நிர்வாகிகள் சிலர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ச்சி செய்தனர்.

03:55:01 on 26 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், தடகள வீரர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு கீடோ டயட்டை பின்பற்றுவது சிறந்ததாக இருக்கிறதாம். ஆனால் கீடோ டயட் உடனடியாக உடலில் வேலை செய்வதில்லை. எந்த ஒரு டயட்டும் உடலில் தன் வேலையை செய்வதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் எடுத்து கொள்ளும்.

03:26:02 on 26 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் செய்தி பகிர்ந்த அனுராக் “டியர் மோடி சார். உங்களுடைய வெற்றிக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள். என் மகளை பாலியல் ரீதியாக மிரட்டி உங்கள் வெற்றியை கொண்டாடும் உங்கள் தொண்டர்களை நான் எப்படி கையாள்வது என்பதை நீங்கள் சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.

02:56:01 on 26 May

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

`கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துகுமரன் அடுத்ததாக யோகி பாபுவை வைத்து `தர்மபிரபு' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும், ரமேஷ் திலக் சித்திரகுப்தனாகவும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் 28ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

02:26:02 on 26 May

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜெயம் ரவியின் 25வது படத்தை லட்சுமணன் இயக்கிவிருக்கிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படக்குழு டாப்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இருவரும் நடிக்கிறார்களா என்பது உறுதியாகவில்லை.

01:56:02 on 26 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

காத்மண்டு விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்தவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 4 பேர், நேபாளத்தைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

01:26:01 on 26 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உலர்த்தி சிறு துண்டுகளாக வெட்டிய ஒன்றிரண்டு சித்தரத்தையை, மூன்று தம்ளர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டிவரும் வேளையில், நீரை எடுத்து வைத்துக் கொண்டு தினமும் இருவேளை, சில நாட்கள் தொடர்ந்து பருகிவர வறட்டு இருமல் குணமாகும்.

12:55:02 on 26 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

அஸ்வின் சரவணன் இயக்கத்திக் நடிகை டாப்ஸி நடித்துள்ள படம் ‘கேம் ஓவர்’. இப்படம் ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ல நிலையில், இந்தப் படத்தின் புரமோஷனுக்கு நடிகை டாப்ஸியை அழைத்தால் பிடிகொடுக்காமல் நழுவுகிறாராம்.

12:25:02 on 26 May

மேலும் வாசிக்க தின மலர்

மேலும் வாசிக்க