View in the JustOut app
X

கொல்கத்தாவில் மருத்துவர் மீது தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, தமிழகத்தில் போராட்டம் தொடங்கியது. சென்னை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

08:55:01 on 17 Jun

மேலும் வாசிக்க தினகரன்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை இந்தியா-பாகிஸ்தான் ஆறு முறை மோதி ஆறிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், தொடர்ந்து ஏழாவது முறையாக பாகிஸ்தானை வென்ற இந்தியாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

08:35:02 on 17 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

ஒன்பிளஸ் நிறுவன சாதனங்களில் ஷாட் ஆன் ஒன்பிளஸ் (Shot on OnePlus) எனும் செயலி பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இந்த செயலி மூலம் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் கசிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

07:55:02 on 17 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.64 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.52 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:35:02 on 17 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் உலகளவில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் எனும் சிறப்பை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். 17 ஆண்டுகளாக நீடித்து வந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையானது இதன் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது.

07:15:01 on 17 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பாஜக மாநிலங்களவை முன்னாள் எம்.பி. ஆனந்த் பாஸ்கர், மத்திய அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், அப்துல் கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15ஆம் தேதியை தேசிய மாணவர் தினமாக அனுசரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

06:55:01 on 17 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ள அனுமதி வழங்க லஞ்சம் கேட்டதாக கூறி ஆடியோ வெளியான நிலையில் சம்பந்தப்பட்ட தாசில்தார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

06:25:01 on 17 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

நடிகை சுஜா வருணி கர்ப்பமாக உள்ளார். இந்த செய்தியை சில மாதங்களுக்கு முன் மிகவும் சந்தோஷமாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் இவருக்கு வளைகாப்பு விழா நடந்துள்ளது. அந்த புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ள அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

05:55:01 on 17 Jun

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

கடந்த 250 ஆண்டுகளில் காடுகளில் இருந்த சுமார் 600 தாவர இனங்கள் அழிந்து போயிருக்கின்றன என்று விரிவான ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த எண்ணிக்கை உண்மையிலேயே அழிந்து போன இனங்களின் எண்ணிக்கையே தவிர, உத்தேச மதிப்பீட்டு அடிப்படையிலானது அல்ல.

05:25:01 on 17 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

இடைத்தேர்தல் மூலம் அதிகபட்ச தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக அரசின் சட்டமன்ற பலத்தை வெகுவாக குறைத்து ஆட்சியை இயல்பாகவே கவிழ்க்கலாம் என்பதுதான் தேர்தலுக்கு முன் ஸ்டாலின் போட்ட கணக்கு. ஆனால் ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையை தக்க வைத்துக்கொண்டது எடப்பாடி தலைமையிலான அரசு.

04:55:01 on 17 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மீன்பிடி தடை காலத்துக்கான நிவாரண தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ”மீன்பிடி தடைக்காலம் நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்கப்படும். கடந்த காலத்தை போன்று இந்த ஆண்டும் 1.67 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 5000 வழங்கப்படும்.” என்றார்.

04:25:01 on 17 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால், 4 அல்லது 5 மாதங்களில் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும் என கூறினார். மேலும் அவர், கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை செய்து காட்டியுள்ளோம் எனவும் தேர்தல் நடக்கும் இடத்தை தேர்வு செய்வதற்கும் எனக்கும் தொடர்பு கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

03:55:01 on 17 Jun

மேலும் வாசிக்க தினகரன்

சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், இந்தியாவில் நிறுவனம் நடத்துவதாக கூறி, வங்கி கணக்குகளை தொடங்கி, பணத்தை பதுக்கியிருப்பதாக கூறப்படும், 50 இந்தியர்கள் குறித்த விவரங்களை, மத்திய அரசிடம் அளிக்க சுவிஸ் அரசு முன்வந்திருக்கிறது.

03:26:01 on 17 Jun

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

பணத்தைப் பெற்றுக்கொண்டு சரியான மருத்துவக் கவனிப்பு இல்லை என்று உறவினர்கள் நினைப்பது திடீர் என ஏற்படும் உயிரிழப்பைத் தாங்க முடியாத உறவினர்கள் உயிரிழப்புக்குக் காரணம் மருத்துவரின் சரியான கவனிப்பின்மை என எண்ணுவது போன்ற எண்ணங்களால் மருத்துவர்கள் மீது தாக்குதல் நிகழ்கிறது.

02:56:02 on 17 Jun

மேலும் வாசிக்க விகடன்

சிறுநீர் பை கீழ் வயிற்றில் அமைந்துள்ளது. சிறுநீர் வெளிப் போக்கு, கழிவு வெளிப்போக்கில் கட்டுப்பாடில்லாமல் இருப்பது, கீழ் முதுகு வலி, கால், உள் தொடை, பாதம் இவற்றில் உணர்வில்லாதது போல் இருப்பது எல்லாம் அவசர சிகிச்சை தேவைப்படுபவை ஆகும்.

02:26:02 on 17 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், புகழ்பெற்ற திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதுமட்டுமின்றி, சுற்றுலா பயணிகள் கோதையாற்றில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.

01:56:01 on 17 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கலக்கி வந்தார். இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளிநாட்டில் எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ‘இது உண்மையாகவே கீர்த்தி தானா?’ என கேட்கும் அளவிற்கு மாறிவிட்டார்,

01:26:01 on 17 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

ரயில்களில் நீண்டதூரம் பயணிப்பவர்கள், களைப்படையாமல் இருக்க, ரயில்களிலேயே மசாஜ் சென்டர்களை கொண்டு சேவை செய்ய, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இந்நிலையில், கடும் எதிர்ப்பின் எதிரொலியாக, மசாஜ் சேவை அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது.

12:55:01 on 17 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

மேற்கு சீனாவில் உள்ள பழங்கால கல்லறைகளில் இருந்து கஞ்சா பயன்பாட்டிற்கான ஆரம்பகால ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள மாதிரிகளை ஆய்விற்கு உட்படுத்தியதில், இவை சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் புகைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

12:25:01 on 17 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அக்னி சிறகுகள் படக்குழு மூன்றாம் கட்ட படப்பிடிப்புப் பணிகளுக்காக ஐரோப்பாவில் முகாமிடத் திட்டமிட்டுள்ளது. இந்தச் செய்தியை இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

11:55:01 on 16 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இந்தாண்டுக்கான மிஸ் இந்தியா போட்டியில் ராஜஸ்தானை சேர்ந்த சுமன் ராவ் வெற்றிபெற்றுள்ளார். 2018ம் ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ், சுமன் ராவிற்கு கிரீடத்தினை சூட்டினார்.

11:25:01 on 16 Jun

மேலும் வாசிக்க தின மலர்

மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நண்பர்களுக்கிடையே நடைபெற்ற தகராறு கொலையில் முடிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10:56:01 on 16 Jun

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

சாம்சங் போன்று இக்கட்டான சூழ்நிலையில் சிக்காமல் இருக்க ஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டை சில மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. கேலக்ஸி ஃபோல்டு எதிர்கொண்ட பிரச்சனைகளை பார்த்து மேட் எக்ஸ் வெளியீட்டை ஹூவாய் தள்ளிவைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

10:25:01 on 16 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

'தமிழகத்தில் தலைவர்களுக்கு பஞ்சம் எதுவும் கிடையாது, நிறைய பேர் இருக்கிறார்கள்' என தமிழ்நாடு காங்கிரஸ் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மேலும், '5 ஆண்டுகளாக மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், தனது சொத்துக்களை விற்று முன்னுதாரணமாக காண்பிக்க வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

09:55:02 on 16 Jun

மேலும் வாசிக்க தினகரன்

மேற்கு வங்காளத்தில் 2 பயிற்சி டாக்டர்கள் கொடுரமாக தாக்கப்பட்டு உள்ளதை கண்டித்து தமிழகத்தில் நாளை டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மக்கள் நலன் கருதி, அத்தியாவசிய மருத்துவ சேவைகள் (emergency) மட்டும் இயங்கும் எனவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

09:26:01 on 16 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

தமிழில் தனுஷ்,சிம்பு,விஷால் படங்களில் நடித்தவர் கேரள நடிகர் வினாயகன்.தமிழில் திமிரு, சிலம்பாட்டம், மரியான் மற்றும் சில படங்களில் நடித்துள்ளார்.இவர் மிருதுளாதேவி சசீதரன் என்ற இளம்பெண்ணிடம் செல்போனில் தகாத முறையில் சாதீய ரீதியாகவும் பேசியதாக சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

08:55:01 on 16 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

நேற்றிரவு முதல் மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபடத் தொடங்கினார்கள். மதுரை வில்லாபுரம் பகுதியில் இருக்கும் ஒரு இளைஞரை அழைத்துச் சென்று அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனைக்குப் பின்னர், என்.ஐ.ஏ. டீம் அந்த இளைஞரை அவரது வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

08:35:01 on 16 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

”அணுக்கழிவு பாதுகாப்பு மையம் அமைக்கப்படுவதற்கு முன்பே அதற்கான விளக்கத்தை அறியும் முன்பே அணுக்கழிவு மையம் ஆபத்தானது என்று மக்களை குழப்பி வருகிறார்கள். அணுமின் நிலைய பாதுகாப்பு அம்சங்களில் பலமடங்கு நாம் முன்னேறியுள்ளோம்" என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

08:15:01 on 16 Jun

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

பிக்பாஸ் 2வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர் வைஷ்ணவி தனது காதலரை நேற்று திருமணம் செய்து கொண்டார். இந்த விழாவில் இரு வீட்டாரின் உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.
வைஷ்ணவி தனது முடியை வெட்டி ஆண் போல் சிகை அலங்காரம் செய்திருந்தார். வைஷ்ணவியின் திருமண புகைப்படங்கள் வைரலால பரவி வருகிறது.

07:55:01 on 16 Jun

மேலும் வாசிக்க சினி ரிப்போர்ட்டர்ஸ்

உத்தர பிரதேசத்தில் ஷாஜகான்பூரில் உள்ள புவயா என்ற பகுதியில் 13 வயது இளைஞன் 4 ஆண்களால் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞன் நடந்த சம்பவத்தை குடும்பத்தினரிடம் கூறி காவல்துறைக்கு சென்று வழக்கு பதிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.

07:35:01 on 16 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரனகளை எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 140 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி வீரர் ஆமிர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

07:34:53 on 16 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சேலம் மாவட்டம் நடுவலூர் ஆயக்காரர் பள்ளத்தில் கந்தசாமி( 70) என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில், கந்தசாமிக்கு சொந்தமான நிலத்திற்கு அருகே இருக்கும் 6 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை மணி என்பவர் உரிமை கோரியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கந்தசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

07:15:02 on 16 Jun

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரபால் சிங். குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதி தர வேண்டும் என இவர் பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார். காரணம் இவரது ஊர் பகுதியில் உள்ள தண்ணீர் அதிகப்படியான உப்புடன் இருப்பதால் விவசாயம் செய்ய முடியவில்லை.

06:55:01 on 16 Jun

மேலும் வாசிக்க விகடன்

காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. இந்நிலையில் காஜல் பல விளம்பர பட நடங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ஒரு போன் விளம்பரத்தில் நடித்துள்ளார், அதில் இவர் செம்ம கவர்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

06:35:01 on 16 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி 46.4 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்திருந்தநிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. விராத் கோலி 71 ரன்களுடனும், ஷங்கர் மூன்று ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

06:21:20 on 16 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் வசித்து வரும் கார்த்தி என்பவருக்கும், கஸ்தூரி என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கஸ்தூரியிடம் வரதட்சணை கேட்டு கார்த்தி மற்றும் அவரது பெற்றோர்கள் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கஸ்தூரி திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

06:15:01 on 16 Jun

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

நாகப்பட்டினத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து மதுரை வழியாக கடத்திவரப்பட்ட கஞ்சாவை பேச்சியம்மாள் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்துள்ளனர். இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

05:55:01 on 16 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்திய அணி 39.2 ஓவரின் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ரோஹித் ஷர்மா 140 ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினார். இதில் 14 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். இவரைத் தொடர்ந்து ஹர்திக் மற்றும் விராத் கோலி விளையாடி வருகின்றனர்.

05:40:00 on 16 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

புதுச்சேரியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஊசுட்டேரியை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர். குடிநீர் கேன் ஆலைகளால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துவிட்டது. இதனால் 35 வருடங்களில் இல்லாத அளவிற்கு உசுட்டேரி வறட்சியை சந்தித்துள்ளது.

05:35:01 on 16 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7

இந்திய அணி 35 ஓவரின் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா 119 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதில் 11 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். அதேபோன்று விராத் கோலி 25 ரன்களுடனும் களத்தில் உள்ளார்.

05:21:32 on 16 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஸ்ரீரெட்டி தற்போது நடிகர் விஷால் குறித்து தனது ஃபேஸ்புக்கில், ”நீங்கள் பல பெண்களை ஏமாற்றியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் பணம் கொடுத்து உறவு வைத்துக்கொள்கிறீர்கள் என்பதும் தெரியும். உங்களுக்கு பெண்களை யார் சப்ளை செய்கிறார்கள் என்பதும் தெரியும்” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

05:15:02 on 16 Jun

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

வடகிழக்குப்பருவ மழை பொய்த்துப் போனதால் சென்னையில் இதுவரை இல்லாத அளவு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ‌கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான வறட்சி நிலவுகிறது. இதிலிருந்து விடுபட மழை பெய்யாதா? என்கிற எதிர்பார்ப்பில் சென்னை மக்கள் வாழ்ந்து‌ வருகின்றனர்.

04:55:02 on 16 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இந்திய அணி 25 ஓவரின் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடி வந்த ராகுல் 57 ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினார். ரோஹித் ஷர்மா 83 ரன்களுடனும், விராத் கோலி மூன்று ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

04:45:45 on 16 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழ்ப்படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, மார்க்கோனி மத்தாய் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயராம் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கும் நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

04:40:33 on 16 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வடக்கு மாவட்டங்களான, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவும் என்றும், தீவிர அனல் காற்று வீச வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

04:35:01 on 16 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கோபமும் சண்டையும் நிகழ்ந்தபிறகு ஆக்ரோஷமாக செக்ஸ் வைத்துக்கொள்வது, கடமைக்கு உறவு கொள்வது, எந்தவித விளைவுகளுமற்ற செக்ஸை பேணுவது என்றிருக்கும் தம்பதியரில் சிலர் மனநல மருத்துவர்களை நாடுகின்றனர். அதேநேரத்தில் செக்ஸில் திருப்தியை உணரும் ஜோடிகள் இடையே தகவல் தொடர்பில் வெளிப்படைத்தன்மை உள்ளது.

04:18:01 on 16 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கோபமும் சண்டையும் நிகழ்ந்தபிறகு ஆக்ரோஷமாக செக்ஸ் வைத்துக்கொள்வது, கடமைக்கு உறவு கொள்வது, எந்தவித விளைவுகளுமற்ற செக்ஸை பேணுவது என்றிருக்கும் தம்பதியரில் சிலர் மனநல மருத்துவர்களை நாடுகின்றனர். அதேநேரத்தில் செக்ஸில் திருப்தியை உணரும் ஜோடிகள் இடையே தகவல் தொடர்பில் வெளிப்படைத்தன்மை உள்ளது.

04:15:01 on 16 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

3வது ஓவரை ஆமிர் வீசும் போது ஓடி வந்து பந்தை வீசிவிட்டு வீச்சை முடிக்கும் போது பிட்சிற்குள் ஓடினார். இதனையடுத்து நடுவர் முதல் எச்சரிக்கை விடுத்தார். பிறகு இன்னிங்சின் 5வது ஓவரின் 5வது பந்தை ராகுலுக்கு வீசும்போதும் பந்து வீச்சை முடித்து விட்டு பிட்சிற்குள் ஓடிவந்தார். இப்போது 2வது முறையாக எச்சரிக்கப்பட்டார்.

04:00:09 on 16 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

`கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பில் லட்சக்கணக்கான மரங்கள் விழுந்தன. இதனால் பசுமையான எங்க பகுதி பாலைவனமாக மாறிவிட்டது மீண்டும் பசுமை பூமியாக மாற்ற வேண்டும்' என பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் மரக்கன்றுகளை இலவசமாக கொடுப்பதுடன், வீட்டுக்கு மரக்கன்றுகளை நட்டு கொடுத்தும் வருகின்றனர்.

03:55:01 on 16 Jun

மேலும் வாசிக்க விகடன்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி 10 ஓவரின் முடிவில் 53 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா 37 ரன்களுடனும், ராகுல் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

03:46:04 on 16 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

”பிரதமர் நரேந்திர மோடி துணிவுமிக்கவர். ராமர் கோவில் விவகாரத்தில் மத்திய அரசு துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும். எனவே, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்” என சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

03:35:02 on 16 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார். மேலும் அவர் கடந்த 2019-20ஆம் கல்வியாண்டில் முறைகேடான மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

03:18:02 on 16 Jun

மேலும் வாசிக்க தினமணி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார். மேலும் அவர் கடந்த 2019-20ஆம் கல்வியாண்டில் முறைகேடான மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

03:15:01 on 16 Jun

மேலும் வாசிக்க தினமணி

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் இளைஞர்கள் திடீர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அண்ணப்பாலம் அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பதாகைகளை கையில் ஏந்தியபடி இளைஞர்கள் முழக்கம் எழுப்பினர். பின்னர் அங்கு விரைந்து வந்த போலீசார் இளைஞர்களைக் கைது செய்தனர்.

02:55:02 on 16 Jun

மேலும் வாசிக்க தினகரன்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில், ஷிகர் தவானிற்கு பதில் விஜய் ஷங்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.

02:42:26 on 16 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ”வெற்றிக்கு 60 சதவீத மன வலிமையும், 40 சதவீத திறமையும் தேவை என்ற கவாஸ்கரின் கூற்றை ஏற்று கொள்கிறேன். இன்று கிடைக்கும் வெற்றியில் மன வலிமை 60 சதவீதம் பங்கு வகிக்கும்.” என தெரிவித்துள்ளார்.

02:35:02 on 16 Jun

மேலும் வாசிக்க தினமலர்

இந்திய அணி வெற்றிபெறுவதற்காக, உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில், கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு ஆரத்தி வழிபாடு நடத்தினர். இதே போன்று நாடு முழுவதும் 100 இடங்களுக்கு மேல் இந்திய அணியின் வெற்றிக்காக கூட்டுப் பிரார்த்தனையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

02:16:56 on 16 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடும் தேதி வரும் 20ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். முன்னதாக பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது ஜூன் 20ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

02:15:02 on 16 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னையில் கடந்த 191 நாட்களாக மழை பெய்யவில்லை. இந்நிலையில், தொடர்ந்து ஒரு துளி கூட மழையே பெய்யாத நாட்களின் எண்ணிக்கையில் சென்னை மாநகரம் மோசமான புதிய வரலாறு ஒன்றை படைக்க உள்ளது.

01:57:01 on 16 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஈரோடு தாளவாடி பகுதியில் 4 நாட்களாக முடங்கியுள்ள பி.எஸ்.என்.எல் இணைப்புகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இணையதள சேவை இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வங்கிகள்,அரசு அலுவலகங்களின் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

01:35:04 on 16 Jun

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் இளைஞர்கள் திடீர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அண்ணப்பாலம் அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பதாகைகளை கையில் ஏந்தியபடி இளைஞர்கள் முழக்கம் எழுப்பினர். பின்னர் அங்கு விரைந்து வந்த போலீசார் இளைஞர்களை கைது செய்தனர்.

01:16:04 on 16 Jun

மேலும் வாசிக்க தினகரன்

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சியோமியின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் சாம்சங்கின் 64 எம்.பி. ISOCELL பிரைட் GW1 கேமரா சென்சாருடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் மற்றும் இதன் சிறப்பம்சங்கள் பற்றி எவ்வித விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை.

01:15:01 on 16 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

மகாராஷ்டிர மாநிலம் வாஷி பகுதியில் அப்பா இல்லை என்பதற்காக 2ஆம் வகுப்பு மாணவனுக்கு பள்ளியில் அட்மிஷன் மறுக்கப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதங்களை எழுப்பி வருகின்றது.

01:05:46 on 16 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

உலகக் கோப்பை அட்டவணை வெளியிட்டப்பட்ட அன்று, பலரும் தங்கள் காலண்டரில் குறித்து வைத்த நாள் இதுவாகத்தான் இருக்கும். ஃபைனலின் டிக்கெட்டுகளுக்கு முன்பாக தீர்ந்து போனது இந்தப் போட்டியின் டிக்கெட்டுகள்தான்.

12:58:21 on 16 Jun

மேலும் வாசிக்க விகடன்

துருவைத் தவிர அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரையும் மாற்றி 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் புதிய படம் தயாரிக்கப்பட்டு வந்தது. அந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

12:47:19 on 16 Jun

மேலும் வாசிக்க ie தமிழ்

சரவணா ஸ்டோர் விளம்பரத்தை யாராலும் மறக்க முடியாது. யார் என்ன கலாய்த்தாலும் தனக்கு பிடித்ததை செய்து செம்ம மாஸ் காட்டியவர், இவர் தற்போது சுமார் ரூ 30 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரித்து நடிக்கவுள்ளதாக ஒரு பத்திரிகையாளர் கூறியுள்ளார். இப்படத்தை உல்லாசம் படத்தை இயக்கிய ஜுடி-ஜெர்ரி இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது,

12:40:29 on 16 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகிறதென்றால் அதில் உச்சகட்ட பரபரப்பு இருக்கும். இந்தப் போட்டி, இரு நாடுகளைக் கடந்து உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சமயத்தில், இந்த இரு அணிகளும் உலகக் கோப்பையில் மோதிய போட்டிகளின் சுவாரஸ்யங்கள் பற்றிய கேள்வி-பதில்கள் உங்களுக்காக..

12:32:47 on 16 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

காந்தி ஓர் இந்து தீவிரவாதி எனவும் ; கோட்சே ஓர் இந்து பயங்கரவாதி எனவும் பேசியதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

12:26:31 on 16 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை விலக்கிக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் 28 பொருட்களுக்கு, இன்று முதல் அதிக வரி விதிக்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.

12:22:55 on 16 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பீகாரில் முஷாபர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மூளைக்காய்ச்சல் நோயால் 80 குழந்தைகள் உயிரிழந்த ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

12:09:30 on 16 Jun

மேலும் வாசிக்க தினகரன்

இளவரசர் முகமது பின் சல்மான், "நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் எங்கள் மக்களுக்கு, இறையாண்மைக்கு, நலனுக்கு, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ள எந்த விஷயத்தையும் எதிர்கொள்ள தயங்க மாட்டோம்," என்று அரேபியா முழுவதும் வெளிவரும் நாளிதழான அஷார்க் அல்- அவ்ஸாத்திடம் கூறி உள்ளார்.

11:55:02 on 16 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சென்னையை பொருத்தவரை மேற்கு திசையிலிருந்து காற்று வீசும் போதுதான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். சாதாரணமாக ஜூன் மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி இருந்தால், மேற்கில் இருந்து வீசும் காற்றில் ஓரளவு ஈரப்பதம் இருந்திருக்கும், வெயிலின் தாக்கம் இந்தளவு இருந்திருக்காது என்கிறார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த்.

11:48:01 on 16 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இச்சூழலில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து ரசிகர்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டது.

11:24:18 on 16 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோயில் பகுதியில் குடிபோதையில் தமிழக அரசுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பயணிகளே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

11:19:25 on 16 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஆண்டிபட்டி அருகே தனியார் வங்கி ஊழியர்கள், கடனை திருப்பி செலுத்தக் கோரி அளித்த நெருக்கடியால், மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11:10:01 on 16 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

குடும்பத்தின் நலனுக்காகத் தன் காயங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மனதுக்குள்ளேயே போட்டு புதைத்துக்கொள்ளும் உன்னத தந்தையர்கள் நிறைய பேர் உண்டு. தந்தையர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட ஆய்வில், 'தங்களுடைய குழந்தைகளுக்காக பொருளாதார பலத்தை அடைவதற்காக தங்களது ஆரோக்கியத்தின்மீது கவனம் செலுத்துவதில்லை' என்பது தெரியவந்துள்ளது.

11:03:36 on 16 Jun

மேலும் வாசிக்க விகடன்

நியூசிலாந்து அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

10:52:29 on 16 Jun

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

டாப்ஸி நடிப்பில் கேம் ஓவர் படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்நிலையில் இப்படம் சென்னையில் மட்டும் இரண்டு நாட்களில் ரூ 32 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

10:39:01 on 16 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

டாப்ஸி நடிப்பில் கேம் ஓவர் படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்நிலையில் இப்படம் சென்னையில் மட்டும் இரண்டு நாட்களில் ரூ 32 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

10:36:01 on 16 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

'டெல்லியில் இருந்து ஏர்-இந்தியா விமானம் மூலம் வாஷிங்டன் சென்ற 360 பயணிகளின் பொருட்கள் மாயம்' என தகவல் வெளியாகியுள்ளது. 12ம் தேதி டெல்லியில் இருந்து வாஷிங்டன் நகருக்கு சென்ற விமானத்தில் பொருட்கள் காணாமல் போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:15:02 on 16 Jun

மேலும் வாசிக்க தினகரன்

தமிழ்நாடு அரசுப் பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

09:59:55 on 16 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சான்யோ நிறுவனம் இந்தியாவில் இரண்டு ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. சான்யோவின் நெபுளா சீரிசில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட் டி.வி.க்கள் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் டி.வி. அளவுகளில் கிடைக்கின்றன.

09:55:01 on 16 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னை மாதவரத்தில் போலீஸ்காரர்களை தாக்கிய பிரபல ரவுடியை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாதவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

09:39:02 on 16 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

சென்னை மாதவரத்தில் போலீஸ்காரர்களை தாக்கிய பிரபல ரவுடியை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாதவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

09:36:01 on 16 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

திருநங்கைகளுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்காத இந்த சமூகத்தில், நலிவடைந்த திருநங்கை இருவரை கரம் தூக்கி உயர்த்தும் நோக்கில் இலவச கல்வி வாய்ப்பினை லயோலா கல்லூரி வழங்கியுள்ளது.

09:18:02 on 16 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

திருநங்கைகளுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்காத இந்த சமூகத்தில், நலிவடைந்த திருநங்கை இருவரை கரம் தூக்கி உயர்த்தும் நோக்கில் இலவச கல்வி வாய்ப்பினை லயோலா கல்லூரி வழங்கியுள்ளது.

09:15:02 on 16 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இந்தியா பாகிஸ்தான் போட்டி உலகக் கோப்பையின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படுகிறது. இதனை போட்டியாக பார்ப்பதைவிட உணர்ச்சிப்பூர்வமாக பார்ப்பவர்களே அதிகம். மற்ற போட்டிகளில் எப்படியிருந்தாலும் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது.

08:57:05 on 16 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கோவையை தொடர்ந்து மதுரையிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை வில்லாபுரம் உள்ளிட்ட 3 பகுதிகளில் கொச்சியில் இருந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

08:55:04 on 16 Jun

மேலும் வாசிக்க தினகரன்

உலககோப்பை போட்டி இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகின்ற நிலையில், இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், வெதர்மேன், 'இன்று மழைப் பொழிவின் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாட இருக்கும் மேட்ச்சின் போது மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக' அறிவித்துள்ளார்.

08:49:34 on 16 Jun

மேலும் வாசிக்க ie தமிழ்

2018 ஆசியக் கோப்பை போட்டிக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. மான்செஸ்டரில் உள்ள ஓல்டு ட்ரஃப்போர்டு மைதானம் 23,000 பார்வையாளர்கள் அமரும் வசதி கொண்டது. ஆனால், ஏழு லட்சம் பேர் இந்த டிக்கெட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

08:44:23 on 16 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.64 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.52 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

08:42:34 on 16 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 55 பேர் இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மேலும் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

06:55:01 on 16 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே, மங்களம் எனும் பகுதியைச் சேர்ந்த சிலரது வெள்ளாடுகளை, அப்பகுதியில் உள்ள சில நாய்கள் கடந்த சில நாட்களாக கடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆடுகளின் உரிமையாளர்கள், ஆட்டு இறைச்சியில் விஷத்தைக் கலந்து, கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் அவற்றை வீசிச் சென்றதாக கூறப்படுகிறது.

06:25:01 on 16 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நேத்ரோ தோம் தேவாலயம் பிரான்ஸில் உள்ள பழமைவாய்ந்த தேவாலயம் ஆகும். இந்த தேவாலயத்தில் அண்மையில் தீவிபத்துக்குள்ளானது. இதனையடுத்து இரு மாதங்களுக்குப் பின் இந்த தேவாலயத்தில் ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.

05:55:02 on 16 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

மஞ்சளில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய தன்மை இருக்கிறது. மேலும் சிறந்த வலி நிவாரணியாகவும் மஞ்சள் பயன்படுகிறது. அல்ஸீமர் நோயால் பாதிக்கப்பட்டோர்க்கு மஞ்சள் கொடுத்தால் மூளை செயல்பாட்டு திறன் சிறப்பாக இருக்கும். சரும பராமரிப்பிற்கு உகந்தது மஞ்சள்.

05:25:02 on 16 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ரத்த தானம் வழங்குவதற்காகவே நாம் தமிழர் கட்சியின் சார்பில் `குருதிக் கொடை பாசறை' என்ற பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள ரத்தப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் ரத்தத்தை நாம் தமிழர் கட்சியினர் தானமாக வழங்கியுள்ளனர்.

04:55:01 on 16 Jun

மேலும் வாசிக்க விகடன்

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை தைவான், சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பான மசோதாவை ஹாங்காங் அரசாங்கம் கைவிடுவதாக அதன் நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார்.

04:25:01 on 16 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

”திங்கட்கிழமை முதல் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை தயாரித்தால் முதல் தடவை ரூ.1 லட்சம், மீண்டும் செய்தால் ரூ.2 லட்சம் மூன்றாவது தடவையும் செய்தால் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அந்த நிறுவனம் தயாரித்தால் அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்படும்.” என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

03:55:02 on 16 Jun

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அசுரன். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதாகவும், படத்தின் டீசர் தனுஷின் பிறந்தநாள் அன்று வரும் என கூறப்படுகின்றது. இப்படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிப்பதாக முன்னமே பல செய்திகள் வெளிவந்துள்ளன.

03:26:02 on 16 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

த்ரிஷா நடித்த நாயகி மையப்படங்களான நாயகி மற்றும் மோகினி இரண்டும் பிளாப்பாயின. கர்ஜனை, பரமபதம் விளையாட்டு உள்பட பல நாயகி மையப் படங்கள் அவர் கைவசம் உள்ளன. முதலில் கர்ஜனை வெளியாகிறது. சுந்தர் பாலு கர்ஜனையை இயக்கியுள்ளார். இதன் தமிழக திரையரங்கு விநியோக உரிமை நல்ல விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.

02:56:01 on 16 Jun

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

மேலும் வாசிக்க