View in the JustOut app
X

ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் மூலமாக ராஜஸ்தான் மாநிலத்துக்குள் பாகிஸ்தானை சேர்ந்த 5 ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனால், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

07:15:01 on 21 Aug

மேலும் வாசிக்க தினகரன்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை நீக்கிய மத்திய அரசு, தனது முடிவை காஷ்மீர் மக்களும், உலக நாடுகளும் வரவேற்பதாக கூறியது. ஆனால், சீனாவோ இந்தப் பிரச்சனையை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்கே கொண்டுபோய்விட்டது. அதாவது இந்தப் பிரச்சனை இப்போது சர்வதேச பிரச்சனையாகி இருக்கிறது என்பதே உண்மை.

06:55:02 on 21 Aug

மேலும் வாசிக்க நக்கீரன்

ஷில்பா ஷெட்டி கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். இந்நிலையில், விளம்பர நிறுவனம் ஒன்று உடல் எடையை குறைக்கும் மருந்து விளம்பர படத்தில் நடிக்க ஷில்பாவை ஒப்பந்தம் செய்ய முயற்சித்துள்ளனர். இதற்காக அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் தருவதாகவும் பேசினர். ஆனால் அதில் நடிக்க ஷில்பா ஷெட்டி மறுத்து விட்டார்.

06:25:01 on 21 Aug

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

நயன்தாரா நிவின் பாலியுடன் இணைந்து ‘லவ் ஆக்‌‌ஷன் டிராமா’ படத்தில் நடித்து வந்தார். கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்த இந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை கேரளாவின் முக்கியமான பண்டிகை தினமாகக் கொண்டாடப்படும் ஓணம் அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

05:55:01 on 21 Aug

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

“எதையுமே திட்டம் போட்டு செய்யக் கூடிய கட்சி திமுக என்பது அண்ணா, கலைஞர் காலத்தில் இருந்தே திமுகவுக்கு இருக்கும் பெயர். ஆனால் இப்போதைய திமுகவிலும் திட்டம் போடுகிறார்கள். ஆனால் திட்டம் போடுகிறவர்கள் யார், எதற்காகத் திட்டம் போடுகிறார்கள் என்பதுதான் திமுக சீனியர்கள் வட்டாரத்தில் இப்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

05:25:02 on 21 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தின் ஜாக்ஸன்வில் பகுதியில் செயல்பட்டு வரும் கடற்படை பயிற்சி மையத்தில், இரும்பு வேலி போடப்பட்டுள்ளது. இந்த வேலியை அங்கு வந்த முதலை ஒன்று, ஏறி மறுபக்கம் குதித்துச் சென்றது. இக்காட்சியை கிறிஸ்டினா ஸ்டீவார்ட் என்பவர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

04:55:02 on 21 Aug

மேலும் வாசிக்க NDTV தமிழ்

150 ஆண்டுகள் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து, 1997இல் சீனாவோடு இணைந்தது முதலே ஹாங்காங்கில் சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வந்தன. எனவே சமீப நாட்களாக ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டங்கள் ஹாங்காங்குக்கும் ஏன் சீனாவுக்கும் கூட புதிதல்ல.

04:25:02 on 21 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

டெபிட் கார்டு பயன்பாட்டை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு எஸ்பிஐ வங்கி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் கூறுகையில், எஸ்பிஐயின் யோனோ செயலி போன்ற டிஜிட்டல் தீர்வுகள் மூலம் டெபிட் கார்டுகளை முடிவுக்கு கொண்டு வரும் இலக்கை எட்ட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.

03:55:01 on 21 Aug

மேலும் வாசிக்க ஏசியா நெட் செய்திகள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் மழையின்றி விலங்குகளுக்கு உணவு தட்டுபாடு ஏற்பட்டதுடன், தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மேட்டுப்பாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழைபெய்து வருவதால் வனப்பகுதிகள் பசுமைக்குத் திரும்பியுள்ளன.

03:25:01 on 21 Aug

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

''இந்தியாவின் பொருளாதார மந்த நிலை கவலை அளிக்கிறது. 2018-19ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வெறும் 6.8 சதவீதமாக இருக்கிறது. 2014-15 நிதியாண்டிற்கு பின் மிகவும் மோசமான சரிவை இந்தியா சந்தித்துள்ளது.” என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

02:55:01 on 21 Aug

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

ரியல்மி பட்ஸ் 2 ஹெட்போனுடன் ரியல்மி ஐகானிக் கேஸ் மற்றும் ரியல்மி டோட் பேக் உள்ளிட்டவற்றை ரியல்மி அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி ஐகானிக் கேஸ் விலை ரூ.399 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 21ஆம் தேதி துவங்குகிறது. ரியல்மி பட்ஸ் 2 விலை ரூ.599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

02:25:01 on 21 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

உடலுக்கு ஆரோக்கியமான ஜூஸ் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிறந்த ஒன்றாக விளங்குகிறது கற்றாழை ஜூஸ். இந்த கற்றாழை ஜூஸில் கொஞ்சம் பூண்டு சாறு கலந்து குடித்தால் நம் உடலுக்கு அதிக அளவு ஆரோக்கியத்தை தருகிறது. நம் உடலில் உள்ள நச்சுகிருமிகளின் தாக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

01:55:01 on 21 Aug

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

ஹாங்காங் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு 10 ஆயிரம் பேர் அடங்கிய துணை ராணுவப் படையை ஹாங்காங் எல்லைப் பகுதியான ஷென்ஷன் (Shenzhen) என்ற இடத்தில் நிறுத்தியுள்ளது. இந்நிலையில் கலவரத் தடுப்பு ஒத்திகையில் துணை ராணுவப் படையினர் ஈடுபடும் வீடியோவையும் சீனா வெளியிட்டுள்ளது.

01:25:02 on 21 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்


இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டர் இந்தியாவின் (Hyundai Motors India) பங்கு உயர்ந்துள்ளது. ஜூலை மாதம் இந்தியா கார் மார்கெட்டில் ஹூண்டாயின் பங்கு 19.4 சதவிகிதமாக இருந்தது. இந்தியா கார் மார்கெட்டில் ஹூண்டாயின் அதிகபட்ச பங்கு இதுவாகும்.

12:55:01 on 21 Aug

மேலும் வாசிக்க NDTV தமிழ்

உலகில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களும் ஏங்கும் ஒரே ஒற்று போன விஷயம் காதல்தான். இந்த உறவானது யார் மீது வேண்டுமானாலும் தோன்றலாம். ஆனால் நீங்கள் நேசித்த காதல் உறவானது எந்த கட்டத்தில் அவர்களை வெறுக்கும் அளவிற்கு செல்கிறது என்றாவது யோதித்து இருக்கிறீர்களா?

12:25:01 on 21 Aug

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

மத்திய அரசு நிறுவனமான பிஇசிஐஎல் எனப்படும் பிராட் காஸ்ட் இன்ஜினீயரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஸ்டாஃப் நர்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

11:55:01 on 20 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் இரண்டாவது நாளாக நடந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘உடலுக்கு உயிர் முக்கியமானது போல், விவசாயிகளுக்கு நீர் மிகவும் முக்கியம் ஆகும். கண்ணை இமை காப்பது போல் விவசாயிகள் நீர்நிலைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

11:25:01 on 20 Aug

மேலும் வாசிக்க தினத் தந்தி

‘உணவு சந்தையைப் பொருத்தவரை நுகர்வோரின் நம் பிக்கையைப் பெறுவதுதான் சவால். அந்த நம்பிக்கையை நெஸ்லே பெற்றிருக்கிறது. இல்லையென்றால் மேகி பிரச்சனையிலிருந்து மீண்டு வந்திருக்க முடியாது’ என நெஸ்லே நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

10:55:01 on 20 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

நடிகர் விவேக் கமலுடன் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட கால கனவு என பல்வேறு நிகழ்ச்சிகளில் தெரிவித்திருந்தார். தற்போது அது நிறைவேற உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

10:25:02 on 20 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

OPTIMA மற்றும் NYXER என்ற இரண்டு மாடல்களில் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர்களை ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு மாடல் ஸ்கூட்டர்களிலும் தலா இரண்டு பேட்டரிகள் உள்ளதாகவும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 கி.மீ. வரை பயணிக்க முடியும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

09:55:01 on 20 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சென்னையின் ஆவடி, திருவான்மியூர், பொன்னேரி, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 21ஆம் தேதி காலை முதல் மாலை வரை மின்சார விநியோகம் தடைபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

09:25:01 on 20 Aug

மேலும் வாசிக்க ie தமிழ்

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றநிலையில், அமைச்சர் பதவி கிடைக்காத பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அது எடியூரப்பாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.எல்.ஏ. திப்பா ரெட்டி ஆதரவு எம்.எல்.ஏக்கள், வாகனத்தின் டயர்களுக்கு தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

08:57:01 on 20 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஆளே அமராமல் இயக்கக் கூடிய சைக்கிளை தயாரித்து சாதனை புரிந்துள்ளனர். மெஷின் லேர்னிங்கின் உதவியுடன் மனித மூளை போன்ற ஒரு நியூரல் நெட்வொர்க் மூலம் இயங்கும் இந்த தானியங்கி சைக்கிளுக்கான சிப், ஒரு அரியவகை கண்டுபிடிப்பாகப் பார்க்கப்படுகிறது.

08:35:02 on 20 Aug

மேலும் வாசிக்க Behind Woods

பெங்களூரு ராஜாஜி நகரில் வசித்து வந்த ஜெயக்குமார் என்பவரை, அவரது 15 வயது மகளே காதலுடன் சேர்ந்து கத்தியால் குத்தி, பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டு காதலன் பிரவீனை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

08:15:02 on 20 Aug

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

மாறிவரும் வானிலை மாற்றங்களால் இந்தியாவில் இனி அடிக்கடி மழை வெள்ள நிகழ்வுகள் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை கண்டறிந்துள்ளனர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள். இதற்கு காரணம் புவி வெப்பமடைதல்தான் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். பூமி வெப்பமடைதல் அதிகரிப்பதால், அதிக மழை பொழிவு ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

07:39:02 on 20 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

மாறிவரும் வானிலை மாற்றங்களால் இந்தியாவில் இனி அடிக்கடி மழை வெள்ள நிகழ்வுகள் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை கண்டறிந்துள்ளனர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள். இதற்கு காரணம் புவி வெப்பமடைதல்தான் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். பூமி வெப்பமடைதல் அதிகரிப்பதால், அதிக மழை பொழிவு ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

07:36:01 on 20 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள படம் சைரா நரசிம்மா ரெட்டி. இப்படத்தில், சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, நிஹாரிகா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

07:31:03 on 20 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சேலம் அரிசிபாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றதாகக் கூறப்படும் இளைஞரை, துரத்திச் சென்று பிடித்து கீழே தள்ளிய முதியவர் ஒருவர், அவருடன் சண்டையிட்டு அக்கம்பத்தினர் உதவியுடன் போலீசில் ஒப்படைத்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

07:15:01 on 20 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் தனசேகர் மற்றும் வடபாலை பகுதியை சேர்ந்த முருகேசன் ஆகிய இருவரும் இணைந்து கிழங்கு வியாபாரம் செய்துவந்துள்ளனர். தனசேகருக்கு முருகேசன் 100 ரூபாய் கடன் வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் போதையிலிருந்த தனசேகர் 100 ரூபாய் கேட்டு, முருகேசனை கல்லால் தாக்கினார்.

07:02:17 on 20 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நெல்லை மாவட்டம், கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்த சண்முகவேல் - செந்தாமரை தம்பதியினரின் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவம் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சண்முகவேலின் வீட்டில் நாய் இருந்தபோதும், கொள்ளையர்கள் வந்த போது அது குரைக்காதது ஏன்? என்ற கேள்வி இங்கே பிரதானமாக முன்வைக்கப்படுகிறது.

07:00:39 on 20 Aug

மேலும் வாசிக்க தந்தி டிவி

நாளை மறுநாள் தொடங்கவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் பங்கேற்கமாட்டார் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாஞ்செர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் ஸ்மித் தலையில் அடித்த பந்தால், அவரது மூளையில் அதிர்வு ஏற்பட்டுள்ளது என்றும், அதையும் மீறி அவர் விளையாடினால் விபரீதமாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

06:57:01 on 20 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல காஷ்மீரிகள் வீதிகள் இறங்கி போராடிவருகின்றனர். பாதுகாப்பு படையினரும் போராட்டக்காரர்களும் மோதிக்கொண்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த சம்பவங்களில் எத்தனை பேர் காயமடைந்தார்கள் என்பது தெரியவில்லை.

06:49:38 on 20 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

”பால் விலையை ஏற்றாமல், டாஸ்மாக்கில் விற்கப்படும் போதை மது வகைகளுக்கு விலை ஏற்றலாம். அத்தொகை கூடுதல் வருமானம். அதிக விலை என்பதால், டாஸ்மாக் குடிகாரர்களின் கொள்முதல் குறைந்து, குடிப்பவர்கள் அளவும் குறைந்தால், அவர்களுக்கும் அரசுக்கும் ஆரோக்கியமானது.” என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

06:35:02 on 20 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மகேந்திரா நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ஆனந்த் மகேந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் 'சோலி கே பீசே க்யா ஹை', 'தூம்' டைடில் பாடல் உள்ளிட்ட மிகவும் பிரபலமான பாலிவுட் பாடல்களுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் நடனமாடும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

06:27:22 on 20 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஜியோ நிறுவனத்தில், கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 82.6 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இதனால் வோடோபோன் ஐடியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், 41.45 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 2.66 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.

06:20:45 on 20 Aug

மேலும் வாசிக்க விகடன்

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் கோமாளி. இந்தப் படம் சென்னையில் வெளியான முதல் வார இறுதியில் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வார இறுதியில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

06:18:01 on 20 Aug

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் கோமாளி. இந்தப் படம் சென்னையில் வெளியான முதல் வார இறுதியில் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வார இறுதியில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

06:15:02 on 20 Aug

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவை ஒட்டி தமிழகத்தில் முக்கிய நகரங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, புதுவை, மயிலாடுதுறை, நாகூர், நாகப்பட்டினத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

06:09:02 on 20 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஜுன் 8ஆம் தேதி நடைபெற்ற டெட் முதல் தாள் தேர்வை 1.62 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகளை http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

06:06:13 on 20 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பிக்பாஸ் வீட்டிலிருந்து, வெளியேற்றுவது போல் வெளியேற்றி மீண்டும் கஸ்தூரி போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு விளையாடுவார். ஏற்கனவே, நடிகை மீரா மிதுன் வெளியேறிய போது அவர் ரகசிய அறையில் தங்க வைக்கப்படுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஆனால் கஸ்தூரி பிக்பாஸ் ரகசிய அறையில் தங்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

05:57:02 on 20 Aug

மேலும் வாசிக்க ஏசியா நெட் செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் இவர் சென்றால் கண்டிப்பாக பிரச்சனைகள் வரும் என்று பார்த்தது கஸ்தூரியை தான். ஆனால் அவரோ வாய் பேசாத பூச்சி போல வீட்டில் இருந்து வருகிறார். இப்போது வந்துள்ள புதிய புரோமோவில் வனிதா நீங்கள் நிறுத்துங்கள், கேலி கேலி செய்தது தான் என கஸ்தூரியிடம் கடும் சண்டையில் ஈடுபடுகிறார்.

05:35:01 on 20 Aug

மேலும் வாசிக்க சினி உலகம்

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இன்று வெளியாகியுள்ள 2வது புரோமோ வீடியோவில், டீச்சராக இருக்கும் கஸ்தூரி, வாத்து பாடலை வனிதா பாடுவார் என்று கூற, தன்னை வாத்து என்று அழைத்ததற்காக கஸ்துரி மன்னிப்பு கோர வேண்டும் என்று சேரனிடம் கூறுகிறார் வனிதா. இதனால் வனிதா - கஸ்தூரி இடையே புதிய பிரச்னை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

05:15:01 on 20 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள மெய், கனா படத்தின் தெலுங்கு ரீமேக்கான கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி கிரிக்கெட்டர் ஆகிய இரண்டு படங்களும் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாகவுள்ளன. இதில் மெய் படம், மெடிக்கல் திரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர், பாடல் காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

04:55:01 on 20 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபிஸ் சயீதின், பயங்கரவாத அமைப்பிற்கு நிதியுதவி செய்தது தொடர்பான வழக்கில், பெயர் இடம்பெறாமல் இருக்க, தொழிலதிபரிடம் ரூ.2 கோடி லஞ்சம் கேட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் ஒருவர் 2007இல் நடந்த சம்ஜவுதா வெடிகுண்டு தாக்குதல் வழக்கை விசாரித்தவர்.

04:39:02 on 20 Aug

மேலும் வாசிக்க தினமலர்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபிஸ் சயீதின், பயங்கரவாத அமைப்பிற்கு நிதியுதவி செய்தது தொடர்பான வழக்கில், பெயர் இடம்பெறாமல் இருக்க, தொழிலதிபரிடம் ரூ.2 கோடி லஞ்சம் கேட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் ஒருவர் 2007இல் நடந்த சம்ஜவுதா வெடிகுண்டு தாக்குதல் வழக்கை விசாரித்தவர்.

04:36:01 on 20 Aug

மேலும் வாசிக்க தினமலர்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், அவருக்கு மேல் முறையீட்டு நடவடிக்கைகளுக்காக 3 நாள் இறுதி அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

04:33:56 on 20 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 28,832 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலையில் கிராமுக்கு 20 ரூபாய் உயந்து ரூ.3,604க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு 50 காசு உயர்ந்து ரூ.48.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

04:29:25 on 20 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ஜெயமங்கலம், மேல்மங்கலம், சில்வார்பட்டி, வடுகபட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

04:26:56 on 20 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பியர் கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “உலகிலேயே மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்வாக பிரதமர் மோடி பங்கேற்ற மேன் vs வைல்ட் நிகழ்ச்சி புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிகழ்ச்சி டுவிட்டரில் 3.6 பில்லியன் பதிவுகளைக் கொண்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதற்கு காரணமாக ஒவ்வொருவருக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

04:15:01 on 20 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

துண்டுச்சீட்டு இல்லாமல் உங்களால் பேச முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியது குறித்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ‘தமிழிசை, பொன்.ராதா கிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோரை போன்று பொத்தாம் பொதுவாக பேசாமல் ஆதாரங்களோடு பேச வேண்டும் என்பதால் துண்டுச்சீட்டு வைத்து பேசுவதாக தெரிவித்துள்ளார்.

03:57:01 on 20 Aug

மேலும் வாசிக்க தினத்தந்தி

மதுராந்தகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மதுராந்தகம் தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி, ஒரு பெண்ணைப் பொறுத்தவரை ஆயிரம் இரவுகளை சந்தித்தாலும், வாழ்வின் கடைசிக் காலத்தை நெருங்குகிற நேரத்தில் அவர் நினைத்து நினைத்து மலைத்துப் போவது முதல் இரவு என்று சொல்வார்கள்” எனப் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.

03:39:02 on 20 Aug

மேலும் வாசிக்க விகடன்

மதுராந்தகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மதுராந்தகம் தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி, ஒரு பெண்ணைப் பொறுத்தவரை ஆயிரம் இரவுகளை சந்தித்தாலும், வாழ்வின் கடைசிக் காலத்தை நெருங்குகிற நேரத்தில் அவர் நினைத்து நினைத்து மலைத்துப் போவது முதல் இரவு என்று சொல்வார்கள்” எனப் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.

03:36:01 on 20 Aug

மேலும் வாசிக்க விகடன்

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று நாம் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். எனக்கு எப்போதும் அன்பான தந்தையாக இருந்தவர், யார் மீதும் வெறுப்புணர்வை காட்டாமல், மன்னிப்பு வழங்கவும், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவும் கற்றுக்கொடுத்தவர் அவர்தான்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

03:15:02 on 20 Aug

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, சமூகத்தையோ வருத்தமடையச் செய்வது தமது நோக்கம் அல்ல என்றும், அப்படிப்பட்ட செயல்பாடு இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார். மேலும், தமது பேச்சுக்கள் யார் மனதையேனும் புண்படுத்தி இருப்பின் அதற்காக வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

02:57:01 on 20 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நாட்டிலேயே தமிழகத்தில்தான் 40% கார் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது தமிழகத்தில் செயல்படும் கார் நிறுவனங்கள் உற்பத்தியை குறைப்பது தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கொள்கைகள்தான் இந்த நெருக்கடிக்குக் காரணம்.

02:39:01 on 20 Aug

மேலும் வாசிக்க தினமணி

நாட்டிலேயே தமிழகத்தில்தான் 40% கார் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது தமிழகத்தில் செயல்படும் கார் நிறுவனங்கள் உற்பத்தியை குறைப்பது தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கொள்கைகள்தான் இந்த நெருக்கடிக்குக் காரணம்.

02:36:01 on 20 Aug

மேலும் வாசிக்க தினமணி

சென்னை போரூர் ராமசந்திர மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயராளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் பரிசோதனைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டார்.

02:15:01 on 20 Aug

மேலும் வாசிக்க தினகரன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் இருக்கும் எழுவரில் ஒருவரான நளினி தனது மகளின் திருமணத்திற்காக ஒரு மாத பரோலில் வெளியே வந்தார். இந்நிலையில், மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க உத்தரவிடக்கோரி நளினி தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

01:57:01 on 20 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் பகுதியில், கஞ்சா விற்பனையை தடுத்ததாகக் கூறி, புருஷோத்தமன் என்ற கஞ்சா வியாபாரி தலைமையிலான கும்பல் பொது மக்கள் மீது அரிவாளால் தாக்கியது. இதில் தனஞ்செயன் என்பவர் உயிரிழந்தார். 6 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

01:42:01 on 20 Aug

மேலும் வாசிக்க தின மலர்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

01:27:01 on 20 Aug

மேலும் வாசிக்க தினகரன்

கீழடியில் பண்டைய தமிழர் நாகரீகத்தை அறியும் வகையில் 4 கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்து 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அகழ்வாராய்ச்சிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் நீர் நிரம்பியது.

01:12:01 on 20 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மாறிவரும் வானிலை மாற்றங்களால் இந்தியாவில் இனி அடிக்கடி மழை வெள்ள நிகழ்வுகள் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை கண்டறிந்துள்ளனர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள். இதற்கு காரணம் புவி வெப்பமடைதல்தான் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு 2.6 டிகிரி செல்சியஸ் முதல் 8.5 டிகிரி செல்சியஸ் வரை பூமி வெப்பமடையும் என்று கணிக்கப்படுகிறது.

12:57:01 on 20 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

‘சந்திரயான்-2 இன்று ஒரு முக்கிய மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. துல்லியமான சந்திர சுற்றுப்பாதையில் செருகும் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு தொடங்கி சுமார் 30 நிமிடங்கள் மேற்கொள்ளப்பட்டது’ என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

12:42:01 on 20 Aug

மேலும் வாசிக்க தினத் தந்தி

‘மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது பற்றி நான் இதுவரை ஒருமுறை யோசித்து பார்த்தது கூட இல்லை என ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத் குமார். இவரின் இந்த பேச்சு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காததால் அளிக்கும் மழுப்பல் பதில் போல உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

12:27:01 on 20 Aug

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

வாடிக்கையாளர்கள் இனிமேல் யோனோ மொபைல் ஆப்பை பயன்படுத்தி நாடு முழுவதும் இனி ஏ.டி.எம் மையங்களில் கார்ட் இல்லாமல் பணமெடுக்கும் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜினிஷ் குமார் கூறியுள்ளார்.

12:10:02 on 20 Aug

மேலும் வாசிக்க நக்கீரன்

டிஜிட்டல் கேமிராவில் எடுக்கும் புகைப்படங்களை ஒரு மிகப் பழைய எளிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கருவிகள் ஏதுமில்லாமல் வெறும் கையால் அஞ்சலட்டை உள்ளிட்டவற்றில் பிரிண்ட் போடும் முறையை பரவலாக்கி வருகிறார் வினோத் பாலுச்சாமி என்ற புகைப்படக் கலைஞர்.

11:57:01 on 20 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பெங்களூருவில் தமிழர்கள் நடத்திய நிகழ்ச்சியில், தமிழ் பாடல்கள் பாடப்பட்டதால் ஆத்திரமடைந்த கன்னட ரட்சண வேதிக அமைப்பினர் இசைக் கருவிகளையும், ஒலி பெருக்கிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதுதொடர்பாக கன்னட ரட்சின வேதிக அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

11:42:01 on 20 Aug

மேலும் வாசிக்க தின மலர்

தமிழகத்தில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் ரூ.3,608க்கும், 8 கிராம் ரூ.28,864க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் 1 கிராம் தங்கம் ரூ.3,937க்கும், 8 கிராம் ரூ.31,496க்கும் விறபனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.47.85க்கும், 1 கிலோ ரூ.47,850க்கும் விறபனை செய்யப்படுகிறது.

11:30:25 on 20 Aug

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

கோவை அருகே இரண்டே நாட்களில் 2 பேரை மிதித்து கொன்ற காட்டு யானையின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நேற்று இரவு இந்தக் காட்டு யானை தாக்கியதில் பிரேம் கார்த்தி என்பவரும், நேற்று முன்தினம் கணேசன் என்பவரும் உயிரிழந்துள்ளனர்.

11:19:05 on 20 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பாலிவுட் இசை அமைப்பாளர் கயாம் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக மும்பையில் காலமானார். கயாமின் இறப்பு செய்தி வெளிவந்த உடனேயே பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்த தொடங்கினர். இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பல கலைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக கயாமை நினைவு கூர்ந்தனர்.

11:15:09 on 20 Aug

மேலும் வாசிக்க ie தமிழ்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், இதில் சுமூக தீர்வை ஏற்படுத்துமாறு பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளார்.

11:09:14 on 20 Aug

மேலும் வாசிக்க ETV BHARAT

புவி வட்டப் பாதையை விட்டு வெளியேறியுள்ள சந்திரயான் 2 விண்கலம், இன்று காலை நிலவின் முதல் வட்டப் பாதையை அடைந்தது. இதன்மூலம் நிலவின் பரப்பில் இருந்து குறைந்தபட்சம் 118 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 18,078 கி.மீ. தொலைவையும் கொண்ட நீள் வட்டப் பாதையில் விண்கலம் சுற்றி வருகிறது.

11:04:16 on 20 Aug

மேலும் வாசிக்க NDTV தமிழ்

’காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதாக மட்டும் கூறிக்கொண்டு இந்திய அரசு இருக்கக் கூடாது. மக்களின் உரிமைகள் காக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

10:58:48 on 20 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

உலக கொசுக்கள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. மலேரியா என்ற நோய் காற்று மாசுபாட்டால் பரவுகிறது என உலகம் நினைத்து கொண்டிருந்தபோது ‘மனிதர்களுக்கு இடையில் கொசுக்கள்தான் மலேரியாவைப் பரப்புகிறது’ என்பதைக் கண்டுபிடித்த பிரிட்டிஷ் மருத்துவர் சர் ரொனால்ட் ராசின் நினைவாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

10:57:02 on 20 Aug

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

அஜித் நடித்த விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த வருடத்தில் மட்டுமே ரூ.200 கோடி தமிழ்நாட்டில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளாராம் அஜித். ஒரே வருடத்தில் இவ்வளவு வசூல் என்பது இந்த நடிகர் மட்டுமே செய்துள்ள சாதனையாம்.

10:53:46 on 20 Aug

மேலும் வாசிக்க சினி உலகம்

‘மதுரை மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து கோரிக்கைகள் ஏதும் இல்லாத நிலையில், இதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை’ என வருவாய்த்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

10:42:01 on 20 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

10:29:58 on 20 Aug

மேலும் வாசிக்க தினமணி

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பாமகவின் வாக்கு வங்கியை அதிகப்படுத்தும் வகையில் அன்புமணியிடமிருந்து பாமகவினருக்கு புதிய உத்தரவு சென்றுள்ளது. அதற்கு அன்புமணியின் முப்படைகள் செயல்திட்டம் என பெயரிட்டிருக்கிறார்கள். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் வரும் சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதுதான்.

09:57:01 on 20 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஈரோடு மாவட்டம் ரகுபதிநாயக்கன்பாளையத்தில் வியாபாரி வீட்டில் 62 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கெமிக்கல் நிறுவன உரிமையாளர் ராஜா என்பவர் வீட்டில் பீரோ உடைத்து 62 சவரன் நகை, ரூபாய் 10,000 ரொக்க பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

09:39:02 on 20 Aug

மேலும் வாசிக்க தினகரன்

ஈரோடு மாவட்டம் ரகுபதிநாயக்கன்பாளையத்தில் வியாபாரி வீட்டில் 62 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கெமிக்கல் நிறுவன உரிமையாளர் ராஜா என்பவர் வீட்டில் பீரோ உடைத்து 62 சவரன் நகை, ரூபாய் 10,000 ரொக்க பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

09:36:01 on 20 Aug

மேலும் வாசிக்க தினகரன்

அமெரிக்காவில் வசிக்கும் தெற்காசியாவைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியருக்கு ஆண்டு தோறும் 'ஸ்பெல் பீ' எனப்படும் வார்த்தைகளை பிழையின்றி சொல்லும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான நவநீத் முரளி வெற்றி பெற்றுள்ளார்.

09:18:01 on 20 Aug

மேலும் வாசிக்க தின மலர்

அமெரிக்காவில் வசிக்கும் தெற்காசியாவைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியருக்கு ஆண்டு தோறும் 'ஸ்பெல் பீ' எனப்படும் வார்த்தைகளை பிழையின்றி சொல்லும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான நவநீத் முரளி வெற்றி பெற்றுள்ளார்.

09:15:01 on 20 Aug

மேலும் வாசிக்க தின மலர்

ஸ்பெயின் நாட்டின் ஹாலிடே தீவுப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கிராமப்புறங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், யுனெஸ்கோவால் சூழியல் மண்டலமாக அறிவிக்கப்பட்ட இடங்கள் சாம்பலாகி உள்ளன.

08:57:01 on 20 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கர்நாடகா மாநிலத்தில் இன்று காலை கவர்னர் மாளிகையில் மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடக்கிறது. மந்திரிகளாக பதவி ஏற்பவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இதில் முதல்-மந்திரி எடியூரப்பா, தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் போன்ற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

08:39:02 on 20 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

கர்நாடகா மாநிலத்தில் இன்று காலை கவர்னர் மாளிகையில் மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடக்கிறது. மந்திரிகளாக பதவி ஏற்பவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இதில் முதல்-மந்திரி எடியூரப்பா, தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் போன்ற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

08:36:01 on 20 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வட மாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37ஆக் அதிகரித்துள்ளது.

08:18:01 on 20 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வட மாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37ஆக் அதிகரித்துள்ளது.

08:15:01 on 20 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

லாவோஸ் நாட்டின் வியன்டியானே நகருக்கும், லுவாங் பிரபாங் நகருக்கும் இடையே 43 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20 பேர் காயமடைந்து உள்ளனர். 8 பேரைக் காணவில்லை.

07:57:01 on 20 Aug

மேலும் வாசிக்க தினத் தந்தி

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

07:36:44 on 20 Aug

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.62 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.79 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:32:42 on 20 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களில் 20 சதவீதத்தினர், தமது படிப்பை நடுவில் கைவிடுவதாகவும், அவர்களில் 10லிருந்து 12 சதவீதத்தினர் ராகிங்கைச் சகிக்க முடியாமல் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.

06:55:01 on 20 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பாம்புக்கடி, தேள் கடி முதலிய விஷக்கடிகளுக்கு சிறியா நங்கை இலையை அரைத்து விழுங்கச் சொல்வார்கள். இதனால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மை நீங்கும். தோல்நோய்களுக்கு சிறியா நங்கை மிகவும் நல்லது. ஆனால் பத்தியத்திற்கு கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது. நீரிழிவு நோய்க்கும், அலர்ஜிக்கும் சிறியா நங்கையைப் பயன்படுத்துகிறார்கள்.

06:25:01 on 20 Aug

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

2019ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஜிம்னி மினி இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் அதிக வரவேற்பைப் பெற்ற ஜிம்னி மினி இந்தியாவில் சில மாற்றங்களுடன் வெளியாகலாம். ஜிம்னி, நெக்ஸா விற்பனைத் தளம் மூலமாக விற்பனைக்கு வர வாய்ப்பு உள்ளது.

05:55:01 on 20 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

திருவாரூர் மாவட்டம் புழுதிக்குடி ஊராட்சியில் உள்ள சோழிங்கநல்லூர் கிராமத்தில் கிணறு மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். எனவே முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அவர்களில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

05:25:01 on 20 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

மதுபானத்தை மளிகைக்கடையிலும் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு. இதனை நடைமுறைப்படுத்தினால், ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வரை அரசுக்கு வருமானம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. ரூ.30 லட்சம் வருவாய் உள்ள மளிகைக் கடைகள் மது விற்பனை செய்துகொள்ள உரிமம் அளிக்கப்படவுள்ளது.

04:55:01 on 20 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள தடுமாற்றம் தற்காலிகமானதுதான் எனவும் அத்துறை விரைவில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி பெறவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

04:25:01 on 20 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

'ரெட்மி 8A' ஸ்மார்ட்போனின் முன்புற மற்றும் பின்புற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் 2 பின்புற கேமராக்கள், பின்புற பிங்கர் பிரின்ட் சென்சார் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது என்பதை இந்த புகைப்படங்கள் காண்பிக்கிறது. இந்த புகைப்படங்களின் மூலம், வாட்டர்-ட்ராப் நாட்ச் திரை கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

03:55:01 on 20 Aug

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சென்னையில் மின்சார ரயில்களுக்காக புதிதாக விடப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு முன்னதாக விடப்பட்டிருந்த ரயில்பெட்டிகளில் தமிழ், ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

03:25:01 on 20 Aug

மேலும் வாசிக்க நக்கீரன்

சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பேசிய இசையமைப்பாளர் அனிரூத், ‘தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறும்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் தர்பார் படப்பிடிப்புக்கு பிறகு இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் அனிரூத் தெரிவித்துள்ளார்.

02:55:01 on 20 Aug

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் உலகநாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இது குறித்து டுவிட்டரில், “பாசிச, இந்து இனவெறி ஆதிக்கமான மோடி ஆட்சியின் கீழ் இருக்கும் இந்தியாவின் அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலகம் பொறுப்புடன் கவனிக்க வேண்டும்” என அவர் பதிவிட்டுள்ளார்.

02:25:02 on 20 Aug

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

மேலும் வாசிக்க