View in the JustOut app
X

புதுக்கோட்டை விவசாயி ஒருவர், தன் வீட்டில் தூர்ந்து போய்க்கிடந்த கிணற்றைச் சீரமைத்து, வீட்டின் மேற்கூரையில் விழும் ஒரு துளி மழைநீரையும் வீணாக்காமல் சேகரித்து, அதைக் குடிநீராகவும், மரங்கள் வளர்க்கவும் பயன்படுத்தி அசத்தி வருகிறார்.

03:55:01 on 18 Jul

மேலும் வாசிக்க விகடன்

மோடி 2.0இன் அடுத்த பெரிய இலக்கு, அடுத்த 100 நாட்களுக்குள் எட்டு கோடி இல்லத்தரசிகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு (பிபிஎல்) குடும்பத்திற்குக் கீழே வாழும் பெண்கள் உறுப்பினர்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.

03:25:01 on 18 Jul

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நிலத்தடி நீரைப் பயன்படுத்தி, சொட்டுநீர்ப் பாசன முறை மூலம் பந்தல் காய்கறி வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர் விவசாயிகள். மடத்துக்குளம் வட்டாரத்துக்கு உட்பட்ட விவசாயிகள், திருமூர்த்தி, அமராவதி அணைகளின் நீரை நம்பி உணவு தானியங்களை உற்பத்தி செய்கின்றனர்.

02:55:02 on 18 Jul

மேலும் வாசிக்க காமதேனு

தனியார் வங்கியான பெடரல் வங்கி நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.384 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய லாபத்தை விட 46 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டு (2018-19) ஜூன் காலாண்டில் வங்கி ஈட்டிய லாபம் ரூ.262 கோடியாக இருந்தது.

02:25:02 on 18 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

குஜராத்தைச் சேர்ந்த தாக்கூர் சமூக மக்கள், தாங்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களில், தங்கள் சமூகத்தில் திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளனர்.

01:56:01 on 18 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

நாடு முழுவதும் 85% ரேஷன் அட்டைகள் ஆதாரோடு இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் பேசிய நுகர்வோர் துறை இணையமைச்சர் இதனை தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கம், ஆதார் இணைப்பு உள்ளிட்ட காரணங்களால் 2013 முதல் 2018 வரை மொத்தம் சுமார் 3 கோடி போலி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

01:26:01 on 18 Jul

மேலும் வாசிக்க தந்தி டிவி

அறிவியல் மேதை ஜி.டி நாயுடு விருதாளரைத் தேர்வு செய்வதற்காக 5 அறிவியல் அறிஞர்களின் தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்விருது பாராட்டு கேடயத்துடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையையும் உள்ளடக்கியதாகும்.

12:55:01 on 18 Jul

மேலும் வாசிக்க தினமணி

நாடு முழுவதும் உள்ள மாசு உண்டாக்கும் தொழிற்சாலைகளை 3 மாதத்திற்குள் மூடவேண்டும் என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிரப்பித்துள்ளது.

12:25:02 on 18 Jul

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 20,000க்கும் மேற்பட்ட பெண்கள் குழுவாக இணைந்து 15 ஆண்டுகளுக்கு முன் வற்றிப்போன, நாகநதி ஆற்றின் பாதையில் கிணறுகள் தோண்டி, மழைநீரை தேக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியுள்ளனர்.

11:55:02 on 17 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மத்திய நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், 2018-19 நிதியாண்டில் மொத்தம் ரூ.37,946 கோடி மதிப்பிலான வரி மோசடிகள் நடந்துள்ளதை வரித் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:25:02 on 17 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஆஸ்திரேலியாவில் கடலடி ஆராய்ச்சியாளர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் பெண்ணிடம் கடலுக்குள் காதலை வெளிப்படுத்தினார். இதனை ஏற்றுக் கொள்ளும் வகையில் டிம்மை கட்டியணைத்து தனது சம்மதத்தை தெரிவித்தார் ஹெய்லே.

10:55:01 on 17 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நெயில் பாலிஷை அகற்ற அசிட்டோன் கலந்த ரிமூவர்களை உபயோகிப்பதாலும் நகங்கள் மஞ்சளாகலாம். அசிட்டோன் இல்லாத ரிமூவரை உபயோகியுங்கள். வைட்டமின் ஈ ஆயிலில் டீ ட்ரீ ஆயில் கலந்து நகங்களுக்கு மென்மையாக மசாஜ் செய்தால் இன்ஃபெக்‌ஷனும் குறையும்.

10:25:01 on 17 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் கடந்த ஓர் ஆண்டில் 3,948 பேர் மட்டும் பொதுத்துறையில் பணி பெற்றுள்ளனர். ஆனால் 24 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

09:55:01 on 17 Jul

மேலும் வாசிக்க தினகரன்

பாகற்காயின் கசப்பு தன்மைக்காகவே இதனை பயன்படுத்த தயங்குவோர் ஏராளம். பல்வேறு நோய்களை போக்கும் நோய் நீக்கியாக விளங்குகிறது. குறிப்பாக பென் மலட்டுத் தனமைக்கு கைகண்ட மருந்தாகிறது.

09:25:01 on 17 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

பிரிட்டனின் வேல்ஸ் மாகாணத்தின் பெருமை வாய்ந்த ஹார்லெச் நகரத்தில் உள்ள ஒரு சாலை உலகிலேயே மிக செங்குத்தான சாலை என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்த நகரத்தின் போர்ட் பென் லெச் என்ற சாலை 37.5 சதவிகிதம் செங்குத்தாக இருப்பதை கடந்த 6ஆம் தேதி கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தினர் உறுதி செய்தனர்.

08:59:57 on 17 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கொடைக்கானலில் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணை மற்றும் பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கோடை ஆப்பிள் விளைச்சல் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த ஆப்பிள் பழங்கள், சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறம் கலந்து காணப்படுகிறது. தற்போது இவ்வகை ஆப்பிளுக்கு நல்லவிலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

08:40:01 on 17 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

நடிகர்கள் கமல் மற்றும் ரஜினி ஆகியோரது உலக சாதனைகளைப் பாராட்டும் விதமாக பிரமாண்ட விழா ஒன்றை நடத்த இயக்குநர் பாரதிராஜா திட்டமிட்டுள்ளார். இந்த விழா, அடுத்த இரு மாதங்களுக்குள் மதுரையில் பிரமாண்டமாக நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

08:29:41 on 17 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

அண்மையில் சோனியா காந்தியை மீண்டும் சந்தித்த மூத்த தலைவர்கள், ’கட்சியைக் காப்பாற்ற உங்களால் மட்டுமே முடியும். அதனால் மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல், தகுதியான ஒருவரை அடையாளப் படுத்துங்கள்’ என கெஞ்சியுள்ளனர். சோனியாவும் யோசிக்கத் துவங்கியிருப்பதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.

08:14:42 on 17 Jul

மேலும் வாசிக்க நக்கீரன்

உலக அளவில் சராசரியாக 10 பேருக்கு ஒருவர் உணவின்றி பசியோடு இருப்பதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகம் முழுவதும் 82 கோடி மக்கள் உணவின்றி இருப்பதாகவும் இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 10.7 சதவீதம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:57:01 on 17 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பேசிய நடிகர் சூர்யாவுக்கு கமல்ஹாசன் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சூர்யா, கல்விக் கொள்கை தொடர்பான தன் கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும், தனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய கமல்ஹாசனுக்கும், மக்கள் நீதி மையத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

07:47:13 on 17 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’புதிய கல்வி கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா கருத்து தெரிவித்துள்ளதால் அவரை மிரட்டுவதற்காக அவர் வீட்டில் ரெய்டு நடத்தப்படலாம். ஏற்கனவே நடிகர்கள் அரசியல் பேசியதற்காக அவர்கள் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதையும் நாம் பார்த்துள்ளோம்’ என சிபிஎம் கட்சியை சேர்ந்த கனகராஜ் தெரிவித்துள்ளார்.

07:41:01 on 17 Jul

மேலும் வாசிக்க நக்கீரன்

சினிமாவுக்குள் நுழைவதற்கான அடையாளமாக குறும்படங்கள் பார்க்கப்படுகின்றன. குறும்படங்களை வெளியுலகத்துக்கு கொண்டுவர ஷார்ட்பிலிக்ஸ் என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறும்பட குழுவினர் இந்த செயலியில் தங்கள் படங்களை பதிவேற்றலாம். தகுதி பெறும் படங்கள் செயலியில் வெளியாகும்.

07:34:28 on 17 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிட ஏற்பாடுகள் நடந்தன. இதன்படி இந்தி, தெலுங்கு, கன்னடம், ஒடியா, மராத்தி மொழிகளில் தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. இன்னும் இந்தப் பட்டியலில் தமிழ் மட்டும் இடம்பெறவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் வெளியிடுவதில் என்ன பிரச்சனை என தெரிவிக்கப்படவில்லை.

07:17:19 on 17 Jul

மேலும் வாசிக்க தின மலர்

உளவு பார்த்ததாக பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவைத் தூக்கில் போட தி ஹேக் சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

06:55:08 on 17 Jul

மேலும் வாசிக்க தினகரன்

’சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் மற்றும் ஊடுருவியர்கள் அனைவரையும் அடையாளம் கண்டுபிடித்து, சர்வதேச குடியுரிமை சட்டத்தின்படி நாடு கடத்துவோம். பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் இதுவும் குறிப்பிடப்பட்டுள்ளது’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

06:42:02 on 17 Jul

மேலும் வாசிக்க தின மலர்

2017-18ஆம் ஆண்டில் ஆயிரத்து 127 லட்சம் மெட்ரிக் டன்னாக அரிசி உற்பத்தி உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதேபோல கோதுமை உற்பத்தியும் கடந்த பயிர் ஆண்டில் அதிகரித்ததாகவும், அதேநேரம் கோளம் உள்ளிட்ட தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் உற்பத்தி சற்றே குறைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

06:27:02 on 17 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு 10 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்டு 4ஆம் தேதி வரை காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை மலை ஏற மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.

06:12:02 on 17 Jul

மேலும் வாசிக்க தினகரன்

சர்வதேச கால்பந்து அரங்கில் இளம் வயதில் கோல் அடித்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையை இந்திய வீரர் நரேந்தர் கெலாட் பெற்றுள்ளார். முன்னதாக, இந்த சாதனையை மற்றொரு இந்திய வீரரான ஜெரி தனது 16ஆவது வயதில் படைத்திருந்தார்.

06:03:16 on 17 Jul

மேலும் வாசிக்க ETV BHARAT

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தானா நடிப்பில் உருவாகி வரும் படம் டியர் காம்ரேட். இப்படத்தில் ராஷ்மிகா கிரிக்கெட் விளையாடுவது போன்று 10 நிமிடங்களே காட்சிகள் வருகிறதாம். இதில் உண்மையான பெண் கிரிக்கெட் வீராங்கனையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட் பயிற்சி எடுத்துக் கொண்டாராம்.

05:53:46 on 17 Jul

மேலும் வாசிக்க நக்கீரன்

அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகரும், டிரம்பின் மருமகனுமான ஜேரட் குஷ்னர், கனடாவில் 53 சதவீதமும், நியூசிலாந்தில் 59 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 63 சதவீதமும், ஜப்பானில் 52 சதவீதமும் மெரிட் அடிப்படையிலான திறமைசாலிகளுக்கு குடியேற்றத்தில் முன்னுரிமை அளிப்பதாகக் கூறியுள்ளார்.

05:42:48 on 17 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

ஸ்ரெர்லைட் ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை பின்பற்றியபோதும் எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல் ஆலையை மூட உத்தரவிடப்பட்டது என வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டை முன்வைத்தது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.

05:36:38 on 17 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜப்பானைச் சேர்ந்த எண்டிடி டொகொமோ என்ற நிறுவனத்தில் பணியாற்றிய ஷிகேடிகா குரிடா என்பவர் 1998ஆம் ஆண்டில் செய்திகளை சித்திரங்களாகச் சொல்ல விரும்பினார். தொழில் நுட்பத்தில் அவரால் நினைத்ததை முழுமையாக சாதிக்க முடியவில்லை. இதனால் குறிப்பிட்ட உணர்ச்சிகளை மட்டும் வெளிப்படுத்தும் சித்திரங்களை அவர் உருவாக்கினார். அவைதான் எமோஜிகள்.

05:30:07 on 17 Jul

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, தினைக்குளம், தாமரைகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக வாரந்தோறும் சனிக்கிழமை இரவு மட்டும் செல்போன், கேமரா லேப்டாப் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்கள் உள்ளிட்டவைகளைக் கொள்ளையடித்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

05:25:57 on 17 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை, மண்ணடி, செளகார்பேட்டை போன்ற இடங்களில் உள்ள சின்ன சின்னக் கடைகளின் உரிமையாளர்கள் தங்களது கடையில் மிகப்பெரிய தண்ணீர் டேங்க் ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு தண்ணீர் டேங்கர் லாரிகளில் தண்ணீரை வாங்கி நிரப்பி, அந்த நீரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து லாபம் பார்க்கிறார்கள்.

05:25:28 on 17 Jul

மேலும் வாசிக்க தினமணி

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சுவாரஸியங்களை தெரிந்துக்கொள்ள மக்கள் எப்போதும் ஒரு ஆர்வம் காட்டி வருவார்கள். இதனிடையே வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட வனிதா, யு-டியுப் சேனல்களுக்கு பேட்டிக்கொடுத்து வருகின்றார். அதில் ‘பிக்பாஸ் வீட்டில் இரவு லைட் ஆப் செய்வது போல் தொலைக்காட்சியில்தான் காட்டுவார்கள் எனக் கூறியுள்ளார்.

05:20:07 on 17 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

சிம்பு தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் இளம் நடிகர். இவர் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கும் தர்ஷனின் காதலியுடன் சிம்பு எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

05:13:28 on 17 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

அரசுப் பள்ளிகளை மூடும் முடிவு தற்போது இல்லை என்றும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தமிழக அரசிடம் எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பது முறையல்ல என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

05:07:44 on 17 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

இங்கிலாந்தின் பக்கிங்காம் அரண்மனைக்கு எதிரே இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஒரு கப் டீ நம் இந்திய மதிப்பில் சுமார் 13 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்கப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக இந்த டீ வெள்ளிக் கிண்ணத்தில் வைத்து வழங்கப்படுகிறது.

04:57:29 on 17 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

கும்பகோணம் கொரநாட்டு கருப்பூர் பகுதியைச் சேர்ந்த எழிலன், தனது முகநூல் பக்கத்தில் ‘மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா’ நடைபெறும் என்று பதிவிட்டிருந்தார். இதனையடுத்து 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து எழிலனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இதனையடுத்து அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

04:56:48 on 17 Jul

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் பெயர் 'எஃப்ஐஆர்', இதனுடைய விளக்கமே முதல் தகவல் அறிக்கை. ஆனால் போஸ்டரில் ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ் என்று குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாதம் தொடர்பாக இப்படம் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

04:51:21 on 17 Jul

மேலும் வாசிக்க ETV Bharat

மாணவர்கள் பயிலும் கல்லூரிகளுக்கே சென்று விபத்துகள், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, வாகன உரிமங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களையும் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பைத் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார்.

04:50:14 on 17 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரூ.1000 கோடி மதிப்பில் சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. இந்த சந்திரயான் 2, ஜூலை 21ஆம் தேதி பிற்பகல் அல்லது ஜூலை 22ஆம் தேதி அன்று அதிகாலை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

04:46:19 on 17 Jul

மேலும் வாசிக்க தின மலர்

’தோனி வேண்டுமென்றுதான் நியூசிலாந்து அணியின் டார்கெட்டை கடக்க அணிக்கு உதவவில்லை’ என யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், ’மிஸ்டர் தோனி, நீங்கள் நிறைய ஆட்டங்களை ஆடியிருக்கிறீர்கள். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்ற குறைந்தபட்ச சென்ஸ் கூட இல்லையா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

04:39:45 on 17 Jul

மேலும் வாசிக்க விகடன்

சந்தானம் நடித்துள்ள ’A1’ திரைப்படத்தின் இரண்டாவது டீஸர் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்து சாதி சிறுபான்மையினராக இருக்கும் பிராமண சமுதாய வாழ்க்கை முறையைக் கேலி செய்யும் விதத்தில் டீசர் வெளியாகியிருப்பதாக படத்தின் நாயகன் சந்தானம் மீதும் இந்து தமிழர் கட்சி புகார் அளித்துள்ளது.

04:29:49 on 17 Jul

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

மும்பையில் ஷாப்பிங் செய்ய மால் ஒன்றுக்கு சென்ற ரகுல் பிரீத் சிங், ஷாப்பிங்கை முடித்துவிட்டு காரில் ஏற வந்தார். அப்போது அங்கு நின்ற சில பிச்சைக்காரர்கள் கூட்டமாக ரகுலை முற்றுகையிட்டு பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத ரகுல் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

04:27:10 on 17 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளின் கல்விக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, புதிய கல்விக் கட்டணத்திற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பி.இ. படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

04:23:57 on 17 Jul

மேலும் வாசிக்க ie தமிழ்

எரிபொருள் ஆவியாகி சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதைத் தடுக்கும் தொழில்நுட்பத்தை, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். இந்தப் புதிய தொழில்நுட்பம், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.

04:14:39 on 17 Jul

மேலும் வாசிக்க காமதேனு

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் (48). இவரை, கடந்த 2016ஆம் ஆண்டு, பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக அந்நாட்டு அரசு கைது செய்தது. இதனையடுத்து பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

04:09:33 on 17 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், ’புதிய கல்விக் கொள்கை பற்றி சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன். சிறுபான்மையினர், பெண்கள், மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்தும், பேசியும் செயல்பட்டு வரும் சூர்யாவுக்கு நாம் துணை நிற்போம்’ என பதிவிட்டுள்ளார்.

04:07:19 on 17 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தோனி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தொடர்களில் தோனி இந்திய அணியில் இடம்பிடிப்பார். ஆனால் விக்கெட் கீப்பராக இருக்க மாட்டார். அந்த விக்கெட் கீப்பர் பொறுப்பு ரிஷப் பண்ட்டுக்கு வழங்கப்படும் என்றும் தகவல்கள் வந்துள்ளன.

04:04:54 on 17 Jul

மேலும் வாசிக்க ETV BHARAT

ஆடி மாத தொடக்க நாளான இன்று, தள்ளுபடி விலையில் பட்டுப் புடவைகளை வாங்க சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது. தேடித் தேடி புடவைகளை அள்ளிய அவர்கள், விலைக்கு ஏற்றவாறு பிடித்தவற்றை தரம்பிரித்து வாங்கிச் செல்கின்றனர்.

03:57:02 on 17 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க பிரியா பவாணி சங்கர் ஒப்பந்தமாகி இருப்பதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

03:42:01 on 17 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

என்.ஜி.கே படத்தை தொடர்ந்து சூர்யா நடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள படம் காப்பான். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி அன்று மிக பெரியளவில் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த இருப்பதாகவும், அதில் ரஜினிகாந்த மற்றும் கமல்ஹாசன் இருவரும் கலந்துகொள்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

03:27:02 on 17 Jul

மேலும் வாசிக்க நக்கீரன்

டுவிட்டரில் கடந்த சில தினங்களாக “சாரி டுவிட்டர்” என்ற ஹேஸ்டேக் பிரபலம் ஆகி வருகிறது. சினிமா நடிகைகள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல தரப்பு பெண்கள் சேலை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் சேலை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

03:12:01 on 17 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

கரூரில் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்த அனிதா என்பவரின் கணவர் ஜீவானந்தம் மற்றும் மாமியார் லட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜீவானந்தம் கல்லூரி விரிவுரையாளராகவும், மாமியார் லட்சுமி அரசுபள்ளி தலைமை ஆசிரியராகவும் உள்ளனர்.

02:57:02 on 17 Jul

மேலும் வாசிக்க தினகரன்

செங்கோட்டையிலிருந்து நெல்லை நோக்கி நேற்று மதியம் 12.30 மணியளவில் பாசஞ்சர் ரயில் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து சேரன்மகாதேவி ரயில்வே கேட்டில், பணியில் இருந்த பெண் ஊழியர் கேட்டை அடைக்க முயன்றார். அப்போது அவ்வழியாக மதுபானம் ஏற்றி வந்த லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக கேட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

02:44:50 on 17 Jul

மேலும் வாசிக்க தினகரன்

மக்களின் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகாண சென்னை குடிநீர் வாரியம் ட்விட்டர் பக்கத்தில் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளது. அதில், குடிநீர் லாரிகள் வராதது, சாலையில் மழைநீர் தேங்கி நிற்பது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டால் உடனுக்குடன் தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02:42:01 on 17 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

உ.பி.,யின் ஜகன்கிராபாத்தைச் சேர்ந்தவர் ஷஹி ஆலமுக்கும், ருக்ஷானா என்ற பெண்ணிற்கும் ஜூலை 13ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. பெண் வீட்டார் வரதட்சனை தருவதாக கூறி இருந்த மோட்டார்பைக்கை தறவில்லை. இதனால் கோபமடைந்த ஆலம், அடுத்த நாளே முத்தலாக் கூறி தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

02:38:23 on 17 Jul

மேலும் வாசிக்க தின மலர்

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. வழக்கு விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக லாகூரில் இருந்து குர்ஜன்வாலாவுக்கு புறப்பட்டுச் சென்றபோது சயீத்தை கைது செய்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

02:32:08 on 17 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

ரெட்மீ இந்தியா ட்விட்டர் பக்கத்தில், K20 ப்ரோ ஸ்பெஷல் எடிஷன் போனின் விலை, 4,80,000 ரூபாய் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமான பட்ஜெட் போன்களுக்கு பெயர் போன சியோமி இதன் மூலம், சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களுடனும் போட்டியிடுகிறது.

02:14:33 on 17 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

பார்வையே போதும் வாய்மொழி வேண்டாம் என்ற காலம் போய், எமோஜியே போதும் என்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். காதலை சொல்ல, வேண்டாம் என மறுக்க, சாப்பிட்டாச்சா என கேட்க, ‘மிஸ் யூ’வில் ஆரம்பித்து ‘கிஸ் யூ’ வரை, எல்லாமே தற்போது எமோஜி மயம்தான். எமோஷன்களுக்கும், வார்த்தைகளுக்கும் எமோஜி மட்டும்தான் பதில்.

02:01:45 on 17 Jul

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள்(86) சென்னையில் மாரடைப்பால் காலமானார். சங்கரன் கோவில் அருகே உள்ள சொந்த ஊரான பெருங்கோட்டூர் கிராமத்தில் நாளை அவர் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01:56:36 on 17 Jul

மேலும் வாசிக்க தினகரன்

சீரான மூச்சில் இருந்து உடற்பயிற்சிக்கான மூச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ள 6 முதல் 8 வாரங்கள் தேவை. அப்போது மெதுவாக வாக்கிங், வேகநடை, மெது ஓட்டம், மித ஓட்டம், வேக ஓட்டம் என உங்கள் வயதுக்கேற்ப தொடங்க வேண்டும்.

01:39:01 on 17 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

சீரான மூச்சில் இருந்து உடற்பயிற்சிக்கான மூச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ள 6 முதல் 8 வாரங்கள் தேவை. அப்போது மெதுவாக வாக்கிங், வேகநடை, மெது ஓட்டம், மித ஓட்டம், வேக ஓட்டம் என உங்கள் வயதுக்கேற்ப தொடங்க வேண்டும்.

01:36:01 on 17 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

நம்பிக்கை வாக்கெடுபில் பங்கேற்க மாட்டோம் என 12 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் பேட்டியளித்துள்ளனர். 'எங்களது முடிவில் நாங்கள் தெளிவாக உள்ளோம், சட்டப்பேரவைக்கு செல்லும் பேச்சுக்கே இடமில்லை' எனவும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ளனர்.

01:18:02 on 17 Jul

மேலும் வாசிக்க தினகரன்

நம்பிக்கை வாக்கெடுபில் பங்கேற்க மாட்டோம் என 12 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் பேட்டியளித்துள்ளனர். 'எங்களது முடிவில் நாங்கள் தெளிவாக உள்ளோம், சட்டப்பேரவைக்கு செல்லும் பேச்சுக்கே இடமில்லை' எனவும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ளனர்.

01:15:01 on 17 Jul

மேலும் வாசிக்க தினகரன்

தென்னிந்திய சினிமாவில் விஜய்யின் மெர்சல் படத்திற்கு ஒரு சிறப்பு உள்ளது, அதாவது டுவிட்டரில் எமோஜி பெற்ற முதல் தமிழ் படம் மெர்சல் என்ற பெருமை இருக்கிறது. இன்று எமோஜி டே என்பதால் இந்த தகவலை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

12:57:02 on 17 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகருக்கே முடிவெடுக்கும் உரிமை உள்ளது. இந்த விவகாரத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

12:39:01 on 17 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகருக்கே முடிவெடுக்கும் உரிமை உள்ளது. இந்த விவகாரத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

12:36:02 on 17 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

அக்டோபர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்ற மாநில தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கினை முடித்துவைத்துள்ளது.

12:18:02 on 17 Jul

மேலும் வாசிக்க தின மலர்

அக்டோபர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்ற மாநில தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கினை முடித்துவைத்துள்ளது.

12:15:02 on 17 Jul

மேலும் வாசிக்க தின மலர்

அல்பினிசம் என்பது இயல்பில் மரபணு குறைபாட்டால் ஏற்படும் நோய். அவற்றை புரிந்து அவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய உறவுகள், அவர்களின் உடல் உறுப்புகளை வெட்டி விற்பனை செய்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை.

12:00:36 on 17 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

புதிய கல்வி கொள்கை வரைவு தொடர்பான நடிகர் சூர்யாவின் பேச்சுக்கு மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், 'கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவிற்கு உண்டு என்றும் புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் தனக்கும் உடன்பாடு உண்டு' என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

11:55:55 on 17 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:52:36 on 17 Jul

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் உள்ள தெரு விளக்குகள் எண்ணிக்கை மற்றும் அதற்காக செலுத்தப்படும் மின்கட்டணம் ரூ.104.55 கோடி என்று மாநகராட்சி அதிகாரிகள் தவறான தொகையை அளித்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

11:39:23 on 17 Jul

மேலும் வாசிக்க தினமணி

கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி கபினி அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி தண்ணீர், கிருஷ்ணா ராஜ சாகர் அணையிலிருந்து 355 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:34:35 on 17 Jul

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

ஃபேஸ்புக் கிரிப்டோகரன்சி திட்டம் மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. அமெரிக்க அரசியல்வாதிகள் ஃபேஸ்புக் நிறுவனத்தை உண்மை தன்மையற்ற, நம்பகத்தன்மையற்ற நிறுவனம் என விமர்சித்து உள்ளார்கள்.

11:28:12 on 17 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

11:24:38 on 17 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

குல்புஷன் ஜாதவ் தனது மனைவியைச் சந்திக்க இஸ்லாமாபாத்தில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதியன்று பாகிஸ்தான் அரசு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், குல்புஷன் ஜாதவ் வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என சர்வதேச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:20:19 on 17 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

149 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் அபூர்வ சந்திர கிரகணம், நிகழ்ந்தது. இதை, இந்தியாவில், வெறும் கண்களால் பார்க்க முடிந்தது. சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, கிரகணம் உண்டாகிறது.

11:11:10 on 17 Jul

மேலும் வாசிக்க ie தமிழ்

கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்ற அறிவிப்பால் மஞ்சள் நிற அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 5 நாட்களுக்கு குடகு மாவட்டத்தில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11:00:18 on 17 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வடமாநிலங்களில் கனமழை நீடிக்கும் நிலையில், அசாம் மற்றும் பீகாரில் மழை தொடர்பான விபத்துக்களில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். உ.பி.யில் 14 பேரும், மிசோரம் மாநிலத்தில் 5 பேரும் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளை வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10:35:35 on 17 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் மற்றும் ராணுவத்தினர் இடையிலான மோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள அதிபர் அஷ்ரப் கனி, உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

10:15:01 on 17 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

விழுப்புரம் அருகே திருநங்கை அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நள்ளிரவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அபிராமி (35) அடித்து கொலை செய்யப்பட்டு சாலையோரம் வீசப்பட்டு கிடந்தார். இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

09:55:02 on 17 Jul

மேலும் வாசிக்க தினகரன்

நீலகிரி மாவட்டம் பார்சன் பள்ளத்தாக்கில் இறந்து கிடந்த ஆண் புலியினை உடற் கூராய்வு செய்த பொழுது அதன் வயிற்றில் ஒரு துண்டு பிளேடு இருந்தது தெரியவந்துள்ளது. பார்சன் பள்ளத்தாக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்குருத்தி தேசிய பூங்காவின் ஒரு பகுதி ஆகும்.

09:35:01 on 17 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

புதிய தலைமுறை தண்டர்பேர்டு மாடலில் ஃபியூயல் இன்ஜெக்டெட் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு ஏற்ற என்ஜின் வழங்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 2002 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 350சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. பின் 2012 ஆம் ஆண்டு 350 மற்றும் 500 வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

09:15:02 on 17 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக நிகழ்ந்த விபத்தில், வீடு ஒன்று தரைமட்டமானது. தீயை அணைத்து மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

08:55:01 on 17 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னையின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மீனம்பாக்கம், நங்கநல்லூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

08:35:02 on 17 Jul

மேலும் வாசிக்க தினகரன்

மும்பை டோங்கிரி பகுதியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

08:25:23 on 17 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டம் கனக்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அகிலேஷ் யாதவ் (வயது 30). இவர் சமாஜ்வாடி கட்சி இளைஞரணி பகுதி தலைவராக இருந்தார். இவரை துப்பாக்கியால் சுட்டனர். படுகாயமடைந்த இவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். இவரை பரிசோதித்த டாக்டர்கள் இவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

08:15:03 on 17 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.09 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.96-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:58:08 on 17 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பிரான்சில் ராணுவ வீரரான பிரான்கி ஜபாதா என்பவர் தானே தயாரித்த ‘பிளைபோர்ட்’ என்ற ஜெட் பவர் எந்திரத்தில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டார். அதிபர் மெக்ரான் இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டு, நவீனம் மற்றும் புதுமையான தங்களது ராணுவத்தால் பெருமை அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

07:35:02 on 17 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சூறை காற்றுடன் பெய்த மழைக்கு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மேற்கூரை மீது மரக்கிளை முறிந்து விழுந்தது. இதில் பள்ளியின் ஓடுகள் நொறுங்கி வகுப்பறைக்குள் விழுந்தன. பள்ளி நேரம் முடிந்து மாணவ, மாணவிகள் வீட்டிற்கு சென்றதால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

07:15:02 on 17 Jul

மேலும் வாசிக்க தினகரன்

தேங்காய் பாலில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. சிறுநீரக கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட பாலை அருந்தலாம். தேங்காய் பாலில் கசகசா, பால் தேன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும்.

06:55:01 on 17 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

பாரத ஸ்டேட் பாங்க் (எஸ்பிஐ), அதன் துணை நிறுவனமான எஸ்பிஐ லைஃப் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து கிராமப்புற மக்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமீன் சக்தி என்ற காப்பீட்டுத் திட்டம் நலிவடைந்த பிரிவினருக்கான காப்பீட்டுத் திட்டமாகும்.

06:25:01 on 17 Jul

மேலும் வாசிக்க ie தமிழ்

முடியின் வறட்சித் தன்மை நீங்க, அவகடோ பழத்தின் (Butter fruit) சதைப்பகுதியினை தலையில் தடவினால் அது முடிக்கு நல்ல ஈரப்பதத்தைத் தரும். தயிரை தலையில் தடவினாலும் நல்லது. அதேபோல் பியரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு முடியில் அடித்து பிறகு தலைக்கு குளித்தால் அதுவும் முடிக்கால்களுக்கு ஈரத்தன்மையை அளிக்கும்.

05:55:02 on 17 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

மதுரையில் உலகத்தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் அமைக்க 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட காதாரத்துறை சார்பில் 108 அறிவிப்புகள் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில், மருத்துவமனை தினமாக கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

05:25:02 on 17 Jul

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

2013ஆம் ஆண்டு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான படம் வணக்கம் சென்னை. சிவா-பிரியா ஆனந்த் நடித்த அப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஹோசிமின் இயக்கத்தில் உருவாகும் சுமோ படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது இந்த ஜோடி.

04:55:01 on 17 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மின்சார பேருந்துகளின் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருவதாகவும், ஓரிரு வாரத்தில் சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

04:25:01 on 17 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஹவாய் நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் என இரண்டு அமைப்புகளுடனும் இணைத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் 15,990 ரூபாய் என்ற விலையில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

03:55:01 on 17 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மேலும் வாசிக்க