07:25:01 on 13 Dec 2019,Fri
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் யு-டியூப் அந்த ஆண்டு மக்கள் அதிகம் பார்த்த வீடியோ மற்றும் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட யூடியூப் சேனல் பட்டியலை வெளியிடும். இதில் இரண்டாம் இடத்தில் தமிழ் சேனலான மைக் செட் 3.96 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
07:25:01 on 13 Dec
06:55:02 on 13 Dec 2019,Fri
’காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கியிருக்கும் படம் கடைசி விவசாயி. இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நல்லாண்டி என்பவர் விவசாயி கதாபாத்திரத்திலும், யோகி பாபு யானை பாகனாகவும் நடித்துள்ளார்.இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
06:55:02 on 13 Dec
06:25:01 on 13 Dec 2019,Fri
சிவகார்த்திகேயன் நடித்து விரைவில் ரிலீஸாக இருக்கும் ஹீரோ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. சிறு வயதிலிருந்தே சக்திமான் நாடகத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்படும் சக்தி என்னும் கதாபாத்திரமாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
06:25:01 on 13 Dec
05:57:02 on 13 Dec 2019,Fri
ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், வடமாநிலங்களில் பற்றி எரியும் போராட்டம், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்தது, டெல்லி பாலியல் வன்கொடுமைகளின் தலைநகராக இருப்பது ஆகியவற்றை குறிப்பிட்டு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 2014ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி பேசிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
05:57:02 on 13 Dec
05:27:02 on 13 Dec 2019,Fri
2019ஆம் ஆண்டில் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய சொற்கள் என்னென்ன என்பதை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியர்கள் இந்தாண்டில் கிரிக்கெட் உலகக்கோப்பை குறித்து தான் அதிகம் தேடியுள்ளனர். அதேபோன்று, மக்களவைத் தேர்தலின் போது எவ்வாறு வாக்களிப்பது, எவ்வாறு பெயர்த்திருத்தம் மேற்கொள்வது குறித்தும் அதிகம் தேடியுள்ளனர்.
05:27:02 on 13 Dec
05:26:59 on 13 Dec 2019,Fri
பிரிட்டன் பொது தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 எம்.பி.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில், கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சி சார்பில் 7 பேரும், லிபரெல் ஜனநாயக கட்சி சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றனர். இந்த முறை, இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் அதிகம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
05:26:59 on 13 Dec
05:26:11 on 13 Dec 2019,Fri
”சபரிமலையில் இப்போது பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையை சீர்குலைக்க விரும்பவில்லை. சபரிமலை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வழக்கு தொடர்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு தொடரும். அதேசமயம் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு தர இந்த கோர்ட்டு உத்தரவிட முடியாது.” என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
05:26:11 on 13 Dec
05:23:28 on 13 Dec 2019,Fri
சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்கு பதில் எம்-சாண்ட் (M-sand) பயன்படுத்தியதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், ஊழல் தடுப்புத்துறை தாமதமின்றி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
05:23:28 on 13 Dec
05:22:35 on 13 Dec 2019,Fri
ஐபிஎல் 2020 ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி போட்டியில் தமிழக வீரர்கள் அசத்தினார்கள். இதனால் இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர்கள் சிலருக்கு ஐபிஎல் ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
05:22:35 on 13 Dec
04:57:02 on 13 Dec 2019,Fri
திருச்சியில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவிறக்கம் செய்தது தொடர்பாக கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது முகநூல் குழுவில் உள்ள 100 பேரிடமும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர்கள் அனைவரும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
04:57:02 on 13 Dec
04:27:01 on 13 Dec 2019,Fri
இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள், குடியுரிமை பறிக்கப்பட்ட சம்பவங்களினால் இந்தியாவிற்கு மீண்டும் தமிழர்கள் சென்று வாழ்ந்து வருகின்ற நிலையில் இந்திய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட குடியுரிமை மசோதா அறிவிப்பு கவலைக்குரிய விடயம் என இலங்கை தமிழர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
04:27:01 on 13 Dec
03:55:01 on 13 Dec 2019,Fri
உணவுப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதை தொடர்ந்து சில்லரை பணவீக்கம் 5.54 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச உயர்வாகும். இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமான அளவுக்கு உயர்ந்திருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
03:55:01 on 13 Dec
03:47:37 on 13 Dec 2019,Fri
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 16 ரூபாய் குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 3,600 ரூபாய்க்கும், ஒரு சவரன் 28,800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 47.30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
03:47:37 on 13 Dec
03:36:59 on 13 Dec 2019,Fri
பாலியல் குற்றவாளிகளை 21 நாளில் விசாரித்து தூக்கு தண்டனை அளிக்க ஆந்திராவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர, பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான புதிய சட்டத்தை இயற்றியுள்ளது.
03:36:59 on 13 Dec
03:27:01 on 13 Dec 2019,Fri
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் வலிமை படம் குறித்த முக்கிய தகவலை தயாரிப்பாளர் போனி கபூர், வெளியிட்டுள்ளார். அதாவது இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது எனக் கூறியுள்ளார். அதேபோன்று தீபாவளிக்கு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 படமும் ரிலீஸாக உள்ளது.
03:27:01 on 13 Dec
02:57:02 on 13 Dec 2019,Fri
சென்னை சைதாப்பேட்டையில் குடியுரிமை சட்ட நகல்களை கிழித்து, திமுகவினர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
02:57:02 on 13 Dec
02:25:01 on 13 Dec 2019,Fri
தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டலசுழற்சி காரணமாக தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகையில் கனமழை பெய்ய வாயப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
02:25:01 on 13 Dec
01:57:01 on 13 Dec 2019,Fri
”சமீபமா பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரா நடந்துகிட்டு வர்ற பாலியல் வன்முறைகள் அதிகமாகிக்கிட்டே வருது. சமீபத்துல நடந்த என்கவுன்டரைக்கூட எடுத்துக்கங்க; இதே தவற்றை, அரசியல்வாதிகளின் பசங்க பண்ணியிருந்தா இந்த என்கவுன்டர் நடந்திருக்குமா!" என நடிகை அதுல்யா ரவி கூறியுள்ளார்.
01:57:01 on 13 Dec
01:47:21 on 13 Dec 2019,Fri
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து திமுக தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. திமுக கோரிக்கை குறித்து விளக்கமளித்த நீதிபதிகள் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு தெளிவாக உள்ளதாக பதில் தெரிவித்துள்ளனர்.
01:47:21 on 13 Dec
01:44:41 on 13 Dec 2019,Fri
கடந்தாண்டில் ஈரோடு அருகே சித்தோட்டில் கார்த்திகா என்ற பெண்ணை மணிகண்டன் என்பவர் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
01:44:41 on 13 Dec
01:27:02 on 13 Dec 2019,Fri
பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்னை இடங்களை கன்சர்வேடிங் கட்சி கைப்பற்றியுள்ளதை அடுத்து மீண்டும் போரிஸ் ஜான்சன் பிரதமராகிறார். தோல்வி காரணமாக எதிர்கட்சி தலைவர் பதவியை ஜெர்மி கோர்பைன் ராஜினாமா செய்துள்ளார்.
01:27:02 on 13 Dec
12:55:01 on 13 Dec 2019,Fri
"பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தற்போதைய நிலைமை ஒட்டுமொத்த அவைக்கும் தெரியும். இந்த நிறுவனத்தின் நிதி நிலைமை சீரடைந்ததும், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.” என்று மத்திய தொலைத்தொடர்பு இணை மந்திரி சஞ்சய் சம்ராவ் தோட்ரே தெரிவித்துள்ளார்.
12:55:01 on 13 Dec
12:27:01 on 13 Dec 2019,Fri
சென்னையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவா் வேல்முருகன், எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் மீது நான்கு பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
12:27:01 on 13 Dec
11:57:01 on 13 Dec 2019,Fri
பிக் பாஸ் லாஸ்லியாவிற்கு தனியார் தொலைக்காட்சி ஒன்று, மிகவும் பிரபலமான நபர் என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. இந்த விருதிற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”முதலில் நீங்கள் எனக்கு கொடுத்த அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி.” என தெரிவித்துள்ளார்.
11:57:01 on 13 Dec
11:25:01 on 13 Dec 2019,Fri
30 வயது இளைஞருக்கு 40 வயது பெண்ணுடன் ஏற்பட்ட காதல் முறிந்ததால், ஏற்பட்ட ஆத்திரத்தில், அந்த பெண்ணை கழுத்து உள்ளிட்ட 31 இடங்களில் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் கேரள மாநிலம் கொல்லம் அருகே நடந்துள்ளது.
11:25:01 on 13 Dec
10:57:01 on 13 Dec 2019,Fri
தினமும் சமஸ்கிருதத்தில் பேசினால் நரம்பு மண்டலம் பலப்படும் எனவும், சர்க்கரை நோய், கொழுப்புசத்து அதிகரிப்பு ஆகியவற்றை தடுக்க முடியும் எனவும் அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.பி. கணேஷ் சிங் பேசி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
10:57:01 on 13 Dec
09:57:01 on 13 Dec 2019,Fri
குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக கவுகாத்தியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். இதனால் அசாம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
09:57:01 on 13 Dec
09:27:01 on 13 Dec 2019,Fri
”போலி பாஸ்போர்ட்டுகளை அடையாளம் காண்பதற்கான பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியாக தாமரை சின்னம் பொறிக்கப்பட்டது. அது நமது தேசிய மலர். அதுபோல், தேசிய விலங்கு, தேசிய பறவை என ஒவ்வொரு தேசிய சின்னமும் சுழற்சி முறையில் பாஸ்போர்ட்டில் இடம்பெறும்.” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
09:27:01 on 13 Dec
08:55:02 on 13 Dec 2019,Fri
பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம், கால்சியம் பாஸ்பரஸ் போன்ற மூல பொருட்கள் அதிகம் இருக்கின்றன. இது மனிதர்களின் உடல் எலும்புகளின் தேய்மானத்தை குறைக்கிறது. தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
08:55:02 on 13 Dec
08:43:48 on 13 Dec 2019,Fri
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். திருச்சி உறையூரை சேர்ந்த உத்திராபதி, சங்கீதா, அபிநயஸ்ரீ, ஆகாஷ் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
08:43:48 on 13 Dec
08:34:46 on 13 Dec 2019,Fri
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.81ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
08:34:46 on 13 Dec
08:23:59 on 13 Dec 2019,Fri
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அண்டை நாடுகளில் உள்ள இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள், பார்சி, ஜெயின்ஸ், கிறித்தவர்கள் ஆகியோர் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிவர்கள் என்று கருதப்பட மாட்டார்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
08:23:59 on 13 Dec
07:57:01 on 13 Dec 2019,Fri
வாட்ஸ்அப் ஒரு எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து சில ஆண்ட்ராய்ட் மொபைல்களில் வாட்ஸ்அப் செயலியை இயக்க முடியாது என தெரிவித்துள்ளது. 2.3.7 android version இல் இயங்கும் மொபைல்கள் மற்றும் ios 8ல் இயங்கும் iPhone களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
07:57:01 on 13 Dec
06:55:02 on 13 Dec 2019,Fri
இந்தியன் பிரீமியர் லீக் (IPL), எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் மற்றொரு பம்பர் ஏலத்திற்கு தயாராகி வருகிறது. 215 சர்வதேச வீரர்களுடன் சேர்த்து சுமார் 971 பேர் இந்த ஏலத்திற்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், 332 வீரர்களின் பெயர் கொண்ட பட்டியலாக அது வடிகட்டப்பட்டுள்ளது.
06:55:02 on 13 Dec
05:55:01 on 13 Dec 2019,Fri
அடுத்த ஆண்டு 43வது சென்னை புத்தகக் கண்காட்சி பச்சையப்பன் கல்லூரியின் எதிரே உள்ள ஆங்கிலோ இண்டியன் பள்ளியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
05:55:01 on 13 Dec
10:57:02 on 12 Dec 2019,Thu
இயர்டிரான் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இயர்டிரான்ஸ் ப்ரோ ஏ.என்.சி. என அழைக்கப்படும் புதிய ஹெட்போன் அழகிய தோற்றம் மற்றும் மென்மையான இயர் குஷன் கொண்டிருக்கிறது. இது காதுகளில் அணிந்திருக்கும் போது சவுகரிய அனுபவத்தை வழங்கும். இதன் விலை ரூ.3999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
10:57:02 on 12 Dec
09:57:01 on 12 Dec 2019,Thu
மணிரத்னம் இயக்கத்தில் ரூ.800 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கார்த்தி, ஜெயம் ரவி நடித்த காட்சிகளை மணிரத்னம் படமாக்கினார். மற்ற நடிகர்-நடிகைகள் நடிக்கும் காட்சிகள் அடுத்தடுத்த நாட்களில் படமாக்கப்பட உள்ளன.
09:57:01 on 12 Dec
08:55:01 on 12 Dec 2019,Thu
மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
08:55:01 on 12 Dec
08:25:01 on 12 Dec 2019,Thu
குழந்தைகளில் ஆபாச வீடியோக்களை பரப்பிய விவகாரத்தில் முதல் கட்டக் கைது திருச்சியில் நடந்திருக்கிறது. திருச்சியைச் சேர்ந்தவர் சிக்கியுள்ள நிலையில் மிதமுள்ள 59 பேர் சிக்குவது எப்போது?.
08:25:01 on 12 Dec
07:55:02 on 12 Dec 2019,Thu
தேனி மாவட்டம் ஓடைப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி. கடந்த 5 வருடங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து வந்த இவர், கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை பகுதியில் விவசாய வேலை செய்து வந்துள்ளார். அப்போது கூம்பூர் வயலை சேர்ந்த தாஸ் மனைவி ஜான்சிராணி என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
07:55:02 on 12 Dec
07:25:01 on 12 Dec 2019,Thu
சாமியார் நித்தியானந்தா எங்கு உள்ளார் என்பதை இன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இன்று அறிக்கை தாக்கல் செய்யாததால், வரும் டிச.,18ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய கர்நாடக அரசு மற்றும் மாநில போலீசாருக்கு நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.
07:25:01 on 12 Dec
06:55:01 on 12 Dec 2019,Thu
ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிஸ் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் நான்கு பேரும் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
06:55:01 on 12 Dec
06:54:35 on 12 Dec 2019,Thu
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கேரள அரசு அமல்படுத்தாது என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் இலங்கை தமிழர்களின் நிலை குறித்து முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
06:54:35 on 12 Dec
06:27:01 on 12 Dec 2019,Thu
ஈரோடு மாவட்டம் அந்தியூர் கோவிலில், நடை சாத்தப்பட்ட பின்பு ஊஞ்சல் ஆடுவது போன்று பதிவான சிசிடிவி காட்சிகளால் பரவசம் அடைந்ததாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 2 மணி நேரம் இந்த காட்சி தெரிவதாகவும், இது அம்மன் ஊஞ்சல் உற்சவ காட்சி போல் இருப்பதாகவும் பக்தர்கள் பரவசத்துடன் தெரிவித்தனர்.
06:27:01 on 12 Dec
05:57:01 on 12 Dec 2019,Thu
இலங்கையில் இந்திய தமிழர் என்று அடிக்கிறர்கள், இங்கே வந்தால் இலங்கை தமிழர்கள் என்று ஒதுக்குகிறார்கள், எங்கே தான் செல்வது நாங்கள். குடியுரிமை இல்லையென்றால் எங்களை கடலில் தள்ளிவிடுங்கள் என கடலூர் அகதிகள் முகாமில் இலங்கை தமிழர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
05:57:01 on 12 Dec
05:34:40 on 12 Dec 2019,Thu
”எகிப்து வெங்காயத்தை வியாபாரிகள் நேரடியாக இறக்குமதி செய்து விற்கிறார்கள். அந்த வெங்காயத்தை பற்றி பொதுமக்கள் இடையே பீதி ஏற்படுத்த வேண்டாம். எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது.காரத்தன்மை அதிகம். இருதய நோய்க்கு மிகவும் நல்லது. உடனே கெட்டுப்போகாது.” என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
05:34:40 on 12 Dec
05:27:01 on 12 Dec 2019,Thu
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் தொடராக இணையத்தில் வெளியிடப்படும் 'குயின்', மற்றும் 'தலைவி ' படத்துக்குத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 'குயின்' இணையதளத் தொடரும், 'தலைவி' படமும் சிக்கலின்றி வெளியாக உள்ளன.
05:27:01 on 12 Dec
05:16:57 on 12 Dec 2019,Thu
சென்னை திருவான்மியூர் மருதீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனை பயன்படுத்தி கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர், மற்றொரு பெண்ணின் கை பையை திறக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீஸார், பையை திறந்து செல்போனை திருடும்போது கையும் களவுமாக பிடித்தனர்.
05:16:57 on 12 Dec
05:13:41 on 12 Dec 2019,Thu
நாளை இரவு மற்றும் நாளை மறுநாள் காலையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எண்ணியிருந்த நிலையில் தற்போது காணப்படும் விஷயங்கள் கனமழை பெய்யும் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாகவே கருதப்படுவதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
05:13:41 on 12 Dec
05:10:00 on 12 Dec 2019,Thu
ஈரோடு உழவா் சந்தையில் கிலோ ரூ.160-க்கு விற்பனையான பெரியவெங்காயம், இன்று கிலோ ரூ.120-க்கு விற்பனையானது. கிலோ ஒன்றுக்கு ரூ.40 வரை விலை சரிந்துள்ளது. இதே போல தினசரி சந்தையிலும் கிலோ ஒன்றுக்கு சராசரியாக ரூ.50 வரை சரிந்து அதிகபட்சம் கிலோ ரூ.110-க்கு விற்பனையாகி வருகிறது.
05:10:00 on 12 Dec
05:07:40 on 12 Dec 2019,Thu
காங்கிரஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் மோடியின் டுவிட்டைக் கிண்டல் அடித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ், ”அசாமில் உள்ள சகோதர, சகோதரிகள் உங்கள் 'உறுதியளிக்கும்' செய்தியைப் படிக்க முடியாது. மோடி அவர்களே, அவர்களின் இணையம் துண்டிக்கப்பட்டதை நீங்கள் மறந்திருக்கலாம்” என கிண்டல் செய்து பதிவிட்டுள்ளது.
05:07:40 on 12 Dec
05:06:47 on 12 Dec 2019,Thu
ஆப்பிரிக்கா கண்டத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நாடு நைஜர். இந்நிலையில் மாலி நாட்டின் எல்லைக்கு அருகே உள்ள இனேட்ஸ் நகரில், நைஜர் ராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர். இந்த முகாமிற்குள் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 73 நைஜர் ராணுவ வீரர்கள் பலியாகினர்.
05:06:47 on 12 Dec
04:59:06 on 12 Dec 2019,Thu
சென்னை ஐ.ஐ.டி. முன் போராட்டம் நடத்த முயன்ற கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மரணத்துக்கு காரணமான பேராசிரியரை உடனே கைது செய்ய வலியுறுத்தி அந்த அமைப்பினர் போராட்டம் நடத்த முயன்றனர்.
04:59:06 on 12 Dec
04:57:01 on 12 Dec 2019,Thu
அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஜியோ தனது 6 பைசா கட்டணத்தை திரும்பி பெறாமல் செயல்பாட்டில் வைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து அதன் துவக்க சலுகையை ரூ.49-ல் இருந்து ரூ.75 ஆக உயர்த்தியுள்ளது. மேலும் புதிய சலுகைகளையும் அறிமுகம் செய்துள்ளது.
04:57:01 on 12 Dec
04:50:59 on 12 Dec 2019,Thu
அயோத்தி தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு 18 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
04:50:59 on 12 Dec
04:27:01 on 12 Dec 2019,Thu
திமுகவிலிருந்து விலகுவதாக பழ.கருப்பையா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர், கழகத்தின் நிகழ்கால நடவடிக்கைகள், ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல கட்சியை நடத்துகிற விதம், அறிவும், நேர்மையும் பின்னுக்கு தள்ளப்பட்டு பணமே எல்லாம் என கருதுகிற தன்மை, இவையெல்லாம் என்னிடம் மிகப்பெரிய சலிப்பை உண்டாக்கின.” என தெரிவித்துள்ளார்.
04:27:01 on 12 Dec
03:57:01 on 12 Dec 2019,Thu
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்க மோடி அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. பங்கு மதிப்பின் படி, தனியாருக்கு ரூ.74 ஆயிரம் கோடிக்கு மட்டுமே மத்திய அரசால் விற்பனை செய்ய முடியும். அதன் வெளிச்சந்தை மதிப்பை கணக்கிட்டால் அரசுக்கு 4 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
03:57:01 on 12 Dec
03:25:02 on 12 Dec 2019,Thu
நித்தியானந்தாவின் கைலாசா என்ற தனி நாடு, கானல் நீர் ஆன நிலையில், கைலாசா நாட்டிற்கு டிக்கெட் அனுப்பி வைத்தால் குடும்பத்துடன் சென்று வருவேன் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்து மதத்தின் பெயரை கெடுக்கும் வகையில் பிதற்றுவதை நித்தியானந்தா, நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணிக்கானந்தா எச்சரித்துள்ளார்.
03:25:02 on 12 Dec
02:57:02 on 12 Dec 2019,Thu
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த நெங்குலுன் ஹேங்கால், மாநில அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார். அவர் தனது 7 மாத கைக்குழந்தையுடன் போட்டிக்கு வந்திருந்தார். போட்டியின் சிறிது இடைவேளையின் போது பசியால் துடித்த தனது 7 மாத கைக்குழந்தைக்கு அவர் தாய்ப்பால் வழங்கியம் படம் வைரலானது.
02:57:02 on 12 Dec
02:27:01 on 12 Dec 2019,Thu
2015 முதல் 2017ஆம் ஆண்டுகள் வரை குற்றச்சம்பவங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே மத்திய பிரதேச மாநிலத்தில் தான் அதிக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறைவாக நிகழ்ந்துள்ளது.
02:27:01 on 12 Dec
01:57:01 on 12 Dec 2019,Thu
அமெரிக்காவில் தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறி 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இவர்களில் 831 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாடு கூறியுள்ளது.
01:57:01 on 12 Dec
01:27:01 on 12 Dec 2019,Thu
பிரதமர் மோடி இன்று காலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ”குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து அசாமில் உள்ள சகோதர, சகோதரிகள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என உறுதி அளிக்கிறேன். உங்களின் உரிமைகள், தனிப்பட்ட அடையாளம், அழகிய கலாச்சாரம் ஆகியவற்றை யாரும் பறிக்க முடியாது.” என குறிப்பிட்டுள்ளார்.
01:27:01 on 12 Dec
12:57:01 on 12 Dec 2019,Thu
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி டிவிட்டரில் ரஜினி ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. ரஜினி பிறந்த நாளுக்காக அதற்காக உருவாக்கப்பட்ட #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.
12:57:01 on 12 Dec
12:27:01 on 12 Dec 2019,Thu
திருச்சியில் சிறுமிகளின் ஆபாச வீடியோகளை சமூக ஊடகங்களில் வெளியிட்ட கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை பாலக்கரை போலீஸார் கைது செய்துள்ளனர். சிறுமிகளின் ஆபாச வீடியோ தொடர்பாக கிறிஸ்டோபர் அல்போன்ஸ் தமிழகத்தில் முதல் கைது என்பது குறிப்பிடத்தக்கது.
12:27:01 on 12 Dec
12:11:32 on 12 Dec 2019,Thu
அசாம் மற்றும் திரிபுராவில் நடைபெறவிருந்த ராஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குடியுரிமை மசோதாவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
12:11:32 on 12 Dec
11:55:01 on 12 Dec 2019,Thu
பதவி நீக்க விசாரணையை நடத்தி வரும் ஜனநாயக கட்சியினரை அச்சுறுத்தும் தோனியில் அமெரிக்க அதிபர் டிரம்பை, ஹாலிவுட் திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்’ படத்தின் வில்லன் தானோஸ் போல் சித்தரித்து, டிரம்பின் பிரசார குழு வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளது.
11:55:01 on 12 Dec
11:35:52 on 12 Dec 2019,Thu
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பிஞ்சனுர் ஊராட்சி தலைவர் பதவி ரூ.16 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக தகவல் அளித்தனர். சேகர் என்பவரை பிஞ்சனுர் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுத்து ஊர்க்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
11:35:52 on 12 Dec
11:27:01 on 12 Dec 2019,Thu
நடிகர் ரஜினிகாந்த்திற்கு இன்று 70வது பிறந்தநாள். 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தொடங்கிய இவரது திரையுலகப் பயணம் இன்று வரை வெற்றிக்கொடி கட்டிப் பறக்கிறது. தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 167 படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.
11:27:01 on 12 Dec
10:57:02 on 12 Dec 2019,Thu
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அறிவிக்கப்பட்ட உடனேயே அசாம் மாநிலத்தில் தொடங்கிய மக்களின் போராட்டம் வன்முறையாக மாறி வருகிறது. வரும் ஞாயிறு அன்று இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷீன்ஷோ அபி ஆகியோர் சந்திப்பதற்கான அமைக்கப்பட்ட மேடை மற்றும் விளம்பர பதாகைகளை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.
10:57:02 on 12 Dec
10:27:01 on 12 Dec 2019,Thu
விருதுநகர் மாவட்டம் கோட்டைப்பட்டியில் ஊராட்சித் தலைவர் பதவியை ஏல ஆலோசனையை தட்டிக் கேட்ட சதீஷ்குமாரை கூட்டம் நடத்தியவர்கள் அடித்துக்கொன்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இளைஞர் கொலை தொடர்பாக ராமசுப்பு, முத்துராஜ், செல்வராஜ் உட்பட ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
10:27:01 on 12 Dec
09:57:01 on 12 Dec 2019,Thu
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை அமர்க்களமாக கைப்பற்றியுள்ளது இந்திய அணி. இது குறித்து விராத் கோலி, ”முதலில் பேட்டிங் செய்து நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் அது கூடுதல் மகிழ்ச்சி தருகிறது. எங்கள் இரண்டாவது திருமண நாளில் மிகச் சிறப்பாக செயல்பட முடிந்தது கூடுதல் மகிழ்ச்சி.” என்றார்.
09:57:01 on 12 Dec
09:38:51 on 12 Dec 2019,Thu
அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். லக்கிநகர் பகுதியில் உள்ள அசாம் முதல்வர் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்கினர். அதேபோல், பாஜக எம்.எல்.ஏ பிரசந்தா புகான் மற்றும் கட்சி தலைவர் சுபாஷ் தத்தா ஆகியோரின் இல்லத்தையும் சேதப்படுத்தினர்.
09:38:51 on 12 Dec
09:33:24 on 12 Dec 2019,Thu
அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். லக்கிநகர் பகுதியில் உள்ள அசாம் முதல்வர் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்கினர். அதேபோல், பாஜக எம்.எல்.ஏ பிரசந்தா புகான் மற்றும் கட்சி தலைவர் சுபாஷ் தத்தா ஆகியோரின் இல்லத்தையும் சேதப்படுத்தினர்.
09:33:24 on 12 Dec
09:17:20 on 12 Dec 2019,Thu
அரியலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள மகிமைபுரம் பகுதியில் 50 கிலோ எடை கொண்ட பெரிய வெங்காயம் 10 மூட்டைகளில் அழுகிய நிலையில் வீசப்பட்டுள்ளது. வெங்காய தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும் நிலையில் அதிக அளவு வெங்காயம் அழுகிய நிலையில் கொட்டப்பட்டுள்ளது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
09:17:20 on 12 Dec
09:14:39 on 12 Dec 2019,Thu
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு திருமங்கலக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.35 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.35 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
09:14:39 on 12 Dec
09:12:22 on 12 Dec 2019,Thu
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.92 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.81 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
09:12:22 on 12 Dec
09:09:29 on 12 Dec 2019,Thu
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 17 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை டிச.23ஆம் தேதி நடைபெறுகிறது.
09:09:29 on 12 Dec
09:04:42 on 12 Dec 2019,Thu
அயோத்தி தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது. மொத்தம் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் சீராய்வு மனுக்களில் ஒன்பது சீராய்வு மனுக்கள் மட்டும், வழக்கில் தொடர்புடையவர்களால் தாக்கல் செய்யப்பட்டவை ஆகும். இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
09:04:42 on 12 Dec
08:55:01 on 12 Dec 2019,Thu
கிரீன் டீயினால் கிடைக்கும் பிரபலமான நன்மைகளுள் ஒன்றுதான் எடை குறைய உதவும் என்பது. இதில் உள்ள பாலீபீனால் என்னும் சத்து தான் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் மற்ற டீக்களை விட கிரின் டீயில் தான் ஏராளமான கேட்டசின்கள் உள்ளன. உடல் எடையைகுறைக்க முயல்பவர்களுக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது.
08:55:01 on 12 Dec
07:55:01 on 12 Dec 2019,Thu
Vivo X30 Pro கேமரா விவரக்குறிப்புகள் சீனாவில் ஒரு டிப்ஸ்டரால் கசிந்துள்ளன. Vivo X30 Pro-வின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு சில நாட்களுக்கு முன்னரே சில விவரங்கள் கசிந்தன. இது Vivo X30 உடன் அறிமுகமாகும், ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு - 64-megapixel முதன்மை சென்சார் கொண்டதாகக் கூறப்படுகிறது.
07:55:01 on 12 Dec
06:55:01 on 12 Dec 2019,Thu
மிச்சிகனில் உள்ள கார்சன் நகரத்தை சேர்ந்த ஐடன் அட்கின்ஸ் தனது காதலிக்கு அழகான ஒரு பரிசளிக்க விரும்பினார். அதனால் தனது கையினாலேயே மரப்பொம்மை ஒன்றை செய்து பரிசளிக்க திட்டமிட்டார். பொம்மையை முழுவதுமாக செதுக்கி முடிக்கும் போது தான் அந்த விபரீதம் நடந்தது.
06:55:01 on 12 Dec
05:55:01 on 12 Dec 2019,Thu
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து பகுதிகளில் கடந்த மாதம் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டுத்தீ விபத்துகள் ஏற்பட்டன. அந்தத் தீ விபத்துகளில் பல இன்னும் கூட கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. இதனால் ஆஸ்திரேலியாவின் அழகான கோலாக் கரடிகள் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளன.
05:55:01 on 12 Dec
10:55:01 on 11 Dec 2019,Wed
நாட்டின் முதன்மை கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் வாராக்கடன் அளவு கடந்த மார்ச் 2019ஆம் ஆண்டுடன் முடிவடைந்த காலாண்டில், ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட 11,932 கோடி ரூபாய் குறைந்துள்ளது என அவ்வங்கி பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
10:55:01 on 11 Dec
09:55:01 on 11 Dec 2019,Wed
சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சவுதி அரம்கோ, சமீபத்தில் தனது நிறுவனத்தின் பங்குகளை முதல் முறையாக விற்பனை செய்தது. இதன் பங்குகள் இன்று (புதன்கிழமை) அந்நாட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு வணிகத்துக்கு வந்தபோது, 25.6 பில்லியன் டாலர்களை திரட்டி பெரும் சாதனை படைத்துள்ளது.
09:55:01 on 11 Dec
08:55:02 on 11 Dec 2019,Wed
தமிழகத்தில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய டிசம்பர் 16ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
08:55:02 on 11 Dec
08:25:02 on 11 Dec 2019,Wed
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் சங்கானாச்சேரியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி வித்யா. இவர்கள் இருவரும் திருப்பணித்துறா பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி மனைவி வித்யாவை காணவில்லை என்று பிரேம் குமார் உதயம்பேரூர் போலீசில் புகார் செய்தார்.
08:25:02 on 11 Dec
07:55:02 on 11 Dec 2019,Wed
சிறுமிகள் மற்றும் ஆண்களைக் கூட நித்தியானந்தா தனது சல்லாபத்துக்கு பயன்படுத்துவார் என்று நித்தியானந்தா ஆசிரமத்தில் நடக்கும் லீலைகளை போட்டு உடைக்கிறார் நித்தியின் செயலாளர் ஜனார்த்தன சர்மா.
07:55:02 on 11 Dec
07:25:01 on 11 Dec 2019,Wed
பெண்களின் மேக்-அப் லிஸ்ட்டில் தவறாமல் இடம்பெறுவது `லிப்ஸ்டிக்'. எந்தவித மேக்-அப்பும் இல்லாமல், பொருத்தமான நிறத்தில் லிப்ஸ்டிக்கை போட்டுக்கொண்டாலே போதும்... பளிச் தோற்றம் நிச்சயம். இன்னொரு பக்கம், லிப்ஸ்டிக் போடும் வழக்கம் உள்ள பெண்களுக்கு சில பிரச்னைகளும் உண்டு.
07:25:01 on 11 Dec
06:55:02 on 11 Dec 2019,Wed
நித்தியானந்தா இருக்கும் இடம் குறித்த தகவலை வரும் 12ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று போலீசாருக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் கையை பிசைந்து வரும் நிலையில், நித்தியானந்தா மட்டும் யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
06:55:02 on 11 Dec
06:35:21 on 11 Dec 2019,Wed
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து திரிபுராவில் மட்டும் 5 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். கஞ்சான்பூர் மற்றும் மனு ஆகிய பகுதிகளில் 2 கம்பெனிப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அசாமின் பொங்கைகானிலும் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
06:35:21 on 11 Dec
06:25:02 on 11 Dec 2019,Wed
தமிழ்ப்படம் 2 படத்துக்கு அடுத்ததாக சுமோ என்கிற படத்தில் நடித்துள்ளார் சிவா. சிவா கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாசிரியராகவும் இப்படத்தில் பணிபுரிந்துள்ளார். எஸ்.பி. ஹோசிமின் இயக்கியுள்ளார். ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோஷினோரி தஷிரோவும் பங்குபெற்றுள்ளார்.
06:25:02 on 11 Dec
05:57:01 on 11 Dec 2019,Wed
கடலூர் முதுநகர் பகுதியில் பக்தவச்சலம் மார்க்கெட்டு முன்பு கடலூர்- சிதம்பரம் சாலையில் வேலு என்பவர் 25 வெங்காய மூட்டைகளை இறக்கி 1 கிலோ வெங்காயம் ரூ.10-க்கு கிடைக்கும் என்று பதாகையில் எழுதி வைத்திருந்தார். இதனை அறிந்ததும் பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கினர். ஒருகட்டத்தில் பொதுமக்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
05:57:01 on 11 Dec
05:27:01 on 11 Dec 2019,Wed
வெங்காயத்தின் விலை இறக்கை கட்டி பறக்கும் நிலையில், அரிசி, கோதுமை, தானியங்கள், பருப்பு, எண்ணெய்,தேயிலை, சர்க்கரை பால், உருளைக்கிழங்கு, தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையும் படிப்படியாக உயர்ந்துள்ளதாக. மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
05:27:01 on 11 Dec
04:57:01 on 11 Dec 2019,Wed
குஜராத் சட்டப்பேரவையில் நானாவதி கமிஷன் இறுதி அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை தொடர்ந்து நடந்த கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல என்றும், கலவரத்தில் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடிக்கு பங்கு ஏதுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
04:57:01 on 11 Dec
04:25:01 on 11 Dec 2019,Wed
திருச்சியில் பன்றி இருக்கும் இடத்தைக் காட்டியதால் 12 வயது சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக அரியமங்கலம் வீராச்சாமி, லோகேஷ், சரவணன், கணேசன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
04:25:01 on 11 Dec
03:57:01 on 11 Dec 2019,Wed
அ.தி.மு.க திட்டப்படி உள்ளாட்சித் தேர்தல் நடந்தால், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பாடு திண்டாட்டம்தான். தேர்தலைப் பிரித்துப் பிரித்து நடத்துவதால், வைட்டமின் 'ப'வைக் களமிறக்குவது அ.தி.மு.க-வுக்கு எளிது. கிட்டத்தட்ட இடைத்தேர்தல் பாணிதான் இது. இதனால், ஆளுங்கட்சியே பெரும்பான்மையான உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்றிவிடும்.
03:57:01 on 11 Dec
03:52:21 on 11 Dec 2019,Wed
ரிசாட்-2 பிஆர் 1 மற்றும் 9 வணிக ரீதியான செயற்கைகோளை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாயந்துள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். இது, புவிகண்காணிப்பு, விவசாய மேம்பாடு, காடுகள் கண்காணிப்பு மற்றும் வளம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படும்.
03:52:21 on 11 Dec
03:27:01 on 11 Dec 2019,Wed
நெல்லையை சேர்ந்த ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான திருமாறன் என்பவர், ரஜினி கன்னடர் இல்லை, தமிழர் தான் என்று அடித்து கூறுகிறார். மேலும் இதை நிரூபிக்கும் ஆதாரங்களை திரட்டும் பணியில் இறங்கியுள்ளார். மேலும் அவர் 3 நாள் பயணமாக ரஜினியின் உறவுகளையும் சந்தித்துள்ளாராம்.
03:27:01 on 11 Dec
02:57:01 on 11 Dec 2019,Wed
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது குறித்து நடிகர் சித்தார்த், ”எடப்பாடி பழனிசாமி என் மாநிலத்துக்கும் நம்மக்களுக்கும் பிரதிநிதியாக இருக்கிறார் என்பது மிகவும் வெட்கமாக இருக்கிறது. என்ன நடந்தாலும் தன்னுடைய பதவியே முக்கியம் என்ற அதிகார பசியும் வெளிப்பட்டுள்ளது.” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
02:57:01 on 11 Dec
02:27:02 on 11 Dec 2019,Wed
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக, மதிமுக உட்பட 5 கட்சிகள் மற்றும் வாக்காளர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்குகள் அனைத்தையும் இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது.
02:27:02 on 11 Dec