View in the JustOut app
X

டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் பங்குபெற்று இந்தியாவின் பல மாநிலங்களில் திரும்பியோரில் கணிசமானோருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டு வரும் நிலையில், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இருக்கும் தப்லீக் தலைமையகமான மர்கஸ்ஸிலிருந்து அனைவரையும் வெளியேற்றியிருக்கிறது டெல்லி போலீஸ்.

08:57:27 on 02 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

"ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழல்லவா" என்று பாடி நடித்த ரஜினியும், "இந்த மக்களுக்கு நான் எதாவது நல்லது செய்யவேண்டும்" என்று துடியாய்த் துடித்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மனுத்தாக்கல் செய்த விஷாலும் ஏன் கொரோனா நிவாரண விஷயத்தில் மௌனம் சாதிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

07:57:01 on 02 Apr

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

சாப்பிடும் முன்பும் பின்பும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். வாயைச் சுத்தப்படுத்தும் ஒவ்வொரு முறையும் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். முக்கியமாக, நாக்கின் பின்புறத்தை நன்றாகச் சுத்தப்படுத்த வேண்டும். அங்குதான் 80 சதவீதம் பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. பெரும்பாலோருக்கு வாய் நாற்றம் அங்குதான் ஆரம்பிக்கும்.

06:57:01 on 02 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியும் குணமாக்கும். மூல நோய் உள்ளவர்கள் வாழைப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் பாதிப்பு குறையும்.

05:57:02 on 02 Apr

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

நடிகை ஸ்ரீ ரெட்டி புதிதாக யூடுயுப் சேனலை ஆரம்பித்துள்ளாராம். இதற்காக அவர் ஆண்குறி என பொருள் படும் ஆங்கில வார்த்தையை பதிவிட்டு தன்னுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து ஆபாசமான பதிவுகளை இரட்டை அர்த்தத்துடன் பதிவிட்டு வருகிறார்.

10:57:02 on 01 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூருக்கு 5-வது தடவையாக பரிசோதனை செய்தனர். இப்போதும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதையே முடிவுகள் வெளிப்படுத்தின. ஆனாலும், அவரது உடல்நிலை கவலைப்படும்படி இல்லாமல் சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

09:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா வைரஸை வைத்துக் கலாய்க்கும் மீம்ஸ் வீடியோக்கள் வாட்ஸ் ஆப்பில் உலா வருகின்றன.

08:55:01 on 01 Apr

மேலும் வாசிக்க சன் நியூஸ்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு நாடுகள் பிரம்மாண்ட மருத்துவமனைகளை அமைத்து வருகின்றன

08:25:01 on 01 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 1,103 பேர் தாமாக முன்வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

07:55:02 on 01 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன, அர்ஜுன் தாஸ் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் இருந்து பொளக்கட்டும் பற பற என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடல், வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதிக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேகப் பாடலாகும்.

07:25:01 on 01 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று திரும்பிய வந்த போடியைச் சேர்ந்த 16 பேர், பெரியகுளம் மற்றும் உத்தமபாளையத்தைச் சேர்ந்த தலா 3 பேர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

06:57:02 on 01 Apr

மேலும் வாசிக்க தினமணி

தெற்கு சூடான், காமோராஸ், மாலாவி, போஸ்ட்வானா, புருண்டி, சியாரா லியோ, சவுவ் டோமே அன்ட் பிரின்சிபி ஆகிய ஆப்பிரிக்க நாடுகளும், ஆசியாவில் வடகொரியா, மியான்மர், தஜ்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான், ஏமன் ஆகிய நாடுகளும் கொரோனா பிடியிலிருந்து தப்பியுள்ளன. அதேநேரத்தில் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

06:27:01 on 01 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்த மானியமில்லாத சிலிண்டர் விலை கடந்த மார்ச் மாதம் குறையத் தொடங்கியது. அதன்படி சென்னையில் இன்று முதல் மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை 64.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மார்ச் மாதம் ரூ.826 ஆக விற்கப்பட்டு வந்த சிலிண்டர் விலை, ரூ.761.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

05:57:02 on 01 Apr

மேலும் வாசிக்க தினமலர்

சாம்பிராணி பொடியின் ஆவி பிடிப்பதின் மூலம் கொரோனா நோய் தாக்காது என்று சிலர் சொல்ல, மாலை 6 மணியில் இருந்து மூக்கு, வாய் வழியாக சாம்பிராணி ஆவி பிடிப்பதின் மூலம் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம்....என்கிற புதிய நம்பிக்கை கோவை மக்களிடையே பரவ ஆரம்பித்து இருக்கிறது.

05:27:01 on 01 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

கொரோனா பரவுவதற்கு காரணமே முஸ்லிம்கள்தான் என்று அபாண்டமாக பழி சொல்ல கூடாது என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா காட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனாவையும் தப்லீக் ஜமாத்தையும் இணைத்து டிவிட்டரில் ஹேஷ்டேக் போட்டு டிவீட் செய்பவர்கள் எந்த வைரஸையும் விட ஆபத்தானவர்கள் என ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

04:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

‘கோழி, முட்டை, இறைச்சி குறித்து சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடம் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. தவறாக வழிநடத்தும் வதந்திகள் மூலம் நமது புரத தேவையில் இழப்பு ஏற்படுகிறது. எனவே, தயக்கமில்லாமல் அனைவரும் கோழி, முட்டை மற்றும் இறைச்சியை உட்கொள்ளலாம்’ என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

04:27:01 on 01 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1637ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.

03:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

பிப்.1ஆம் தேதியே வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் வர தடை விதித்திருந்தால் இந்த தப்லிகி மாநாட்டு குழப்பம் ஏற்பட்டிருந்திருக்காது என பா.ஜ.க எம்.பி.சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார். மேலும், ஆரம்பத்திலேயே வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை தனிமைப்படுத்தியிருந்தால் இந்த குழப்பங்கள் ஏற்பட்டிருந்திருக்காது என கூறியுள்ளார்.

03:27:01 on 01 Apr

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

'சவுரவ் கங்குலி தலைமையில் விளையாடியது எனது மனதில் பசுமையான நினைவாக உள்ளது. எனக்கு கங்குலி உறுதுணையாக இருந்தார். ஆனால் அவரைப் போல தோனியும், கோலியும் எனக்கு உறுதுணையாக இல்லை. இருவரிடமும் சாதகமும் பாதகமும் நிறைய இருக்கிறது' என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

02:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

”இஸ்லாமியர்களுக்கு எதிராக பி.ஜே.பி தரப்பு இதுபோன்று நடவடிக்கையில் இறங்கியுள்ளது. நாங்கள் ஆரோக்கியமாக இருப்பதை மருத்துவத்துறை உறுதி செய்த பிறகு, கொரோனா இருப்பதாக எங்கள் பகுதியில் மைக் மூலம் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்கள். இது எங்களை மனதளவில் பாதித்துள்ளது” என்று பலரும் குமுறுகின்றனர்.

02:27:01 on 01 Apr

மேலும் வாசிக்க விகடன்

வீடியோ கான்ஃபரன்சிங் கால்களின் போது தேவையான போது மட்டும் வீடியோவை ஆன் செய்யுங்கள். பெரும்பாலும் ஆடியோவை மட்டுமே பயன்படுத்துங்கள். இது உங்களது கான்ஃபரன்சிங் கால் தடைப்படாமல் இருக்க உதவும். அதுபோல வைஃபை ரூட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும் தேவையற்ற சாதனங்களின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.

01:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சென்னை திருவொற்றியூரில் சிக்கிய தம்பிகளை ஒற்றைக்காலில் நிற்க வைத்து நூதன வைத்தியம், செய்த போலீசார், அவர்களுக்கு கொரோனா நோய் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். அதில் ஒரு தம்பி, ”சார் ஒத்தக்காலில் நின்னா கொரோனா வாராதா என கேட்க, அதற்கு போலீசார் கொரோனா வராது கால் வலி வரும். அதனால வீட்டிலேயே இரு” என்றனர்.

01:25:01 on 01 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் சுனைனா. இவர் தற்போது காதலில் உள்ளார். அவர் வேறு யாருமில்லை விஷ்ணுவர்தன் தம்பி கிருஷ்ணா தானாம். இன்னும் 3 மாதத்தில் அவரை திருமணம் செய்யவுள்ளதாக பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு யுடியுப் சேனலில் கூறியுள்ளார்.

12:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

கொரோனா அச்சுறுத்தலால் வருமான வரித் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அறிவிப்புகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான, அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், PM CARE FUND-க்கு அளிக்கும் நன்கொடைகளுக்கு, முழு வரி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:27:01 on 01 Apr

மேலும் வாசிக்க தந்தி டிவி

கொரோனா வைரஸை முழுமையாகக் கட்டுப்படுத்த 49 நாட்கள் தேவைப்படும் என்று கேம்பிரிட்ஜ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்டால் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் என கேம்பிரிட்ஜ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை படிப்படியாக உயா்ந்து வருகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதேநிலை, செவ்வாய்க்கிழமையும் நீடித்தது. சேலம், தருமபுரி, கோயம்புத்தூா் விமானநிலையம், திருத்தணியில் தலா 100 பாரன்ஹீட் டிகிரி வெப்பநிலை பதிவானது.

11:27:01 on 01 Apr

மேலும் வாசிக்க தினமணி

நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில், டெல்லி சென்ற நபர்களை அழைத்து சென்று சோதனை செய்ததில் அவர்களில் நேற்று ஒருநாளில் மட்டும் நெல்லையில் 22 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நெல்லையின் மையப்பகுதியான மேலப்பாளையத்தின் அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டுள்ளது.

10:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

டெல்லி கூட்டத்தில் பங்கேற்ற பலர், விமானம், ரயில், பஸ் போக்குவரத்தின் மூலம், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட, தங்கள் சொந்த மாநிலங்களுக்கு ஏற்கனவே திரும்பியுள்ளதை அடுத்து, அவர்களை கண்டறியும் முயற்சியை தீவிரப் படுத்தும்படி, மாநில அரசுகளை, மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது.

10:27:01 on 01 Apr

மேலும் வாசிக்க தினமலர்

‘என்னோட எயிம் முதலமைச்சர் ஆவறதுதான் என்று சொல்லிக் கொண்டிருந்தார் விஜயபாஸ்கர். அப்போதே இது எடப்பாடி கவனத்துக்குச் சென்றது. இதனிடையே ஆளுநருடனான சந்திப்பில் சுகாதாரத் துறை அமைச்சர் இல்லாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விஜயபாஸ்கரின் ரியாக்‌ஷன் விரைவில் தெரியும்’ என்கிறார்கள்.

09:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைகின்றன. அதனால், கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கிக்கிளைகள், இனிமேல் யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளைகளாக செயல்படும். சிண்டிகேட் வங்கி, இன்று கனரா வங்கியுடன் இணைகிறது. இனிமேல், சிண்டிகேட் வங்கிக்கிளைகள், கனரா வங்கிக்கிளைகளாக செயல்படும்.

09:27:02 on 01 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

உலகளவில் நேற்று 37,780 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4327 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,107 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை கொரோனா தாக்குதலுக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர். 1,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

09:03:02 on 01 Apr

மேலும் வாசிக்க தினகரன்

உலகளவில் நேற்று 37,780 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4327 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,107 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை கொரோனா தாக்குதலுக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர். 1,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

09:00:02 on 01 Apr

மேலும் வாசிக்க தினகரன்

2003ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட உலக சுகாதார மையம் மற்றும் ஆரோக்கியத்துக்கான தேசிய அமைப்பு ஆய்வு முடவுகளின் படி கிளாஸ் மீது கொரோனா வைரஸ் 96 மணி நேரம் அதாவது நான்கு நாட்களுக்கு உயிர்வாழும் என கருத முடியும். ஆய்வின்படி ஸ்மார்ட்போன் மட்டுமின்றி அனைத்துவித கிளாஸ் பரப்புக்கும் பொருந்தும்.

08:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பித்தல் ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முடிந்த வாகனங்களுக்கான அனுமதி, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை புதுப்பிக்க ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

07:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

உப்பு சேர்க்கப்படும் பிஸ்கட்டுகளில் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு சுவைக்கொண்ட பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது குழந்தைகளுக்கு சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு.

05:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

உடலுறவு கொள்ளக் கூடிய இணையுடன், ஒரே வீட்டில் நீங்கள் வாழ்ந்து வந்தால், அது எந்த வகையிலும் உங்கள் அந்தரங்க வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால் உங்கள் இருவரில் ஒருவருக்கு கொரோனா தொடர்பான அறிகுறிகள் தோன்றினால், நீங்கள் இருவரும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

10:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கேரளாவில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு அங்குள்ள விமர்சகர்கள் கில்டு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும், சிறந்த நடிகைக்கான விருது அமலாபாலுக்கும் வழங்கப்படுகிறது.

09:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட தேவைக் குறைவு மற்றும் விநியோகம் செய்வதில் உள்ள தடைகள் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறைவதால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது கடினமாவதோடு மட்டுமல்லாமல், 13.6 கோடி வேலைவாய்ப்புகள் உடனடி ஆபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

08:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

டெல்லியில் நிஜாமுதின் பகுதியில் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்த மாநாட்டில் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற பல வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், டெல்லி சென்று திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த 16 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது.

08:25:02 on 31 Mar

மேலும் வாசிக்க தந்தி டிவி

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, கொரோனா வைரஸை மையமாகக் கொண்டு, பல மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.

07:55:02 on 31 Mar

மேலும் வாசிக்க சன் நியூஸ்

``எங்களுக்கு நிவாரணம் வேண்டும். நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் பணியாற்றும் எங்கள் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கு ஓய்வு வேண்டும். நீங்கள் தற்போது ஓய்வில் இருக்கிறீர்கள் என்றால், எங்களுக்கு உதவ முன்வாருங்கள். நாங்கள் உங்களுக்கு தேவையானதை செய்வோம்.`` என நியூயார்க் மேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

07:25:01 on 31 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அரியலூரை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட அந்த பெண்ணோ, சும்மா இல்லாமல் செல்போனில் டிக்டாக் செய்து வீடியோ எடுத்தார். அந்த வீடியோவை ஆஸ்பத்திரியில் உள்ள நர்ஸ்களிடம் ஓடி ஓடி சென்று காட்டி கொண்டிருந்தார்.

06:55:01 on 31 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்கப்படும் என தமிழக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், வீட்டு வாடகை தொகையை 2 மாதம் கழித்து பெற்றுக்கொள்ளுமாறு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

06:34:44 on 31 Mar

மேலும் வாசிக்க தினகரன்

டெல்லி நிஜாமுதீனில் மத வழிபாடு மாநாடு நடத்தியதில் ஏராளமானோருக்கு கரோனா பாதிப்பு வந்தது. இதனையடுத்து வழக்குப் பதிவுக்கு ஆளாகியுள்ள தப்லிக் ஜமாத் மவுலானா தாங்கள் எந்த சட்டத்தையும் மீறி நடக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

05:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், சக்திமானாக நடித்த நடிகர் முகேஷ் கண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் விரைவில் 130 கோடி மக்களும் சக்திமானை காண வாய்ப்பு கிடைக்கும். அறிவிப்புக்காக காத்திருங்கள் என வீடியோவுடன் ட்வீட் செய்துள்ளார்.

05:27:02 on 31 Mar

மேலும் வாசிக்க Asiavillenews

உலக அளவில் அதிக பட்சமாக அமெரிக்காவில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், கொரோனா பரவலை தடுக்க அமெரிக்க அரசு தவறியதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதிகப்படியாக நியூயார்க் மாகாணத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

04:57:02 on 31 Mar

மேலும் வாசிக்க தந்தி டிவி

மக்கள் ஊரடங்கு உத்தரவை சரியாக கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை விரட்டியடித்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு ஏற்படும். இல்லையேல் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது, உயிர் சேதங்கள் தொடர்வது, பொருளாதாரம் பாதிக்கப்படுவது என எதையும் தவிர்க்க இயலாது என மருத்துவத் துறையினர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

04:27:01 on 31 Mar

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி மாநாடு நடத்திய நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்தால்வி மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

03:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஊரடங்கு உத்தரவால் அடுத்த 3 மாதங்களுக்கு கடன்களுக்கான இ.எம்.ஐ. வட்டி வசூலிக்கப்படாது என்று தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் உத்தரவு குறித்த தகவல்கள் அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

03:27:02 on 31 Mar

மேலும் வாசிக்க தினகரன்

கேரளாவின் பத்தனம்திட்டா, காசர்கோடு, டெல்லியின் நிஜாமுதீன், தில்சாத் கார்டன், உ.பி.யின் நொய்டா, மீரட், ராஜஸ்தானின் பில்வாரா, அகமதாபாத், மும்பை, புனே ஆகிய 10 மாவட்டங்களை தீவிர கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வர உத்தரவு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

03:08:25 on 31 Mar

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

கேரளாவின் பத்தனம்திட்டா, காசர்கோடு, டெல்லியின் நிஜாமுதீன், தில்சாத் கார்டன், உ.பி.யின் நொய்டா, மீரட், ராஜஸ்தானின் பில்வாரா, அகமதாபாத், மும்பை, புனே ஆகிய 10 மாவட்டங்களை தீவிர கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வர உத்தரவு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

02:59:41 on 31 Mar

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

பதவி பறிபோன பின் யாருடனும் பேசாமல் மனம் புழுங்கிக் கிடந்த ராஜேந்திர பாலாஜியிடம் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் பேசியிருக்கிறார்கள். ‘கவலைப்படாதீங்க. உங்களுக்கான நேரம் வரும்னு ரஜினி சார் சொல்லச் சொன்னார்’ என அவரகள் சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தகவலால் ராஜேந்திர பாலாஜி உற்சாகமாகியுள்ளார்.

02:29:40 on 31 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் அரவிந்த் கிருஷ்ணா. இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக இருந்த படம் 'திருடன் போலீஸ்'. புதுப்பேட்டை படத்துக்கு பின், அதாவது 2006ம் ஆண்டு இப்படத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படம் கைவிட்டப்பட்டது.

01:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

அஜித் ரசிகர்கள் என்ற பெயருடன் தன்னை ட்விட்டரில் விமர்சிப்பவர்களுக்கு நடிகை குஷ்பு காட்டமாக பதிலளித்துள்ளார். டுவிட்டரில் தன்னை விமர்சித்த ஒருவருக்கு, “உன்னைப் போன்ற ஒருவரை ரசிகர் என்று சொல்லிக் கொள்வதற்கு அஜித் வெட்கப்படுவார்” என்று காட்டமாக பதிலளித்திருந்தார்.

01:27:02 on 31 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

`ஏழாம் அறிவு டாக்டர் விஜயபாஸ்கர் வெர்ஷன்' என்ற வைரல் வீடியோ எடப்பாடி தரப்பை ஏகத்துக்கும் கொதிக்க வைத்து விட்டதாம். அந்த வீடியோவில், எந்த இடத்திலும் எடப்பாடி பற்றியோ அ.தி.மு.க ஆட்சியைப் பற்றியோ சொல்லாமல் முழுக்க முழுக்க விஜயபாஸ்கரின் புகழ் மட்டுமே பாடப்படும் மீம்ஸாக தயாரிக்கப்பட்டதை ஆளும்கட்சி ரசிக்கவில்லை.

12:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க விகடன்

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் துப்பாக்கி. இப்படம் விஜய் திரைப்பயணத்தையே மாற்றியமைத்தது. உண்மையாகவே முருகதாஸ் இப்படத்தின் கதையை சூர்யாவிடம் தான் சொன்னாராம். அவரால் அந்த சமயத்தில் இந்த படத்தை செய்ய முடியாமல் போனதாம்.

12:27:01 on 31 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

சமுத்திரகனி படங்களில் அவர் அதிகப்படியான அறிவுரை கூறுவார், ஆனால் ட்ரெண்டிங்கில் சமுத்திரகனி இயல்பு மிகவும் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக சில மீம்ஸ்கள் சமுத்திரகனியின் சில படங்களை வைத்து கொரோனா தொற்றுக்கு ஆறுதல் சொல்ல அதை பிடித்துக்கொண்ட சில மீம்க்ரியேட்டர்ஸ் அவரை அதிகப் படியாக கிண்டல் செய்ய துவங்கினர்.

11:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட சமூக பரவல் (Limited Community transmission) என்ற நிலையை அடைந்துவிட்டது என்கிறார் கொரோனா வைரஸ் குறித்த முனைவர் பட்டம் பெற்றுள்ள பவித்ரா வேங்கடகோபாலன்.

11:27:01 on 31 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஜிகே வாசனுக்கு பாஜகவின் முயற்சியால் ராஜ்யசபா எம்பி பதவி அளிக்கப்பட்டது. அந்த வகையில் மு.க.அழகிரிக்கும் எம்பி பதவி அளிக்க வேண்டும் என்ற பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. தமிழகத்திலிருந்து அதற்கு வாய்ப்பில்லாத நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து அழகிரியை ராஜ்யசபா எம்பி ஆக்குவது என்பதுதான் பாஜகவின் இப்போதைய திட்டம்.

10:57:02 on 31 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த காவலரான சுரேஷ் மற்றும் அவரது நண்பர் அருள்ராஜன் ஆகியோர் மாவட்ட காவல்துறையின் புகார் எண்ணுக்கு அழைத்து, சர்வதேச கும்பல் ஒன்று மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சுருட்டி வருவதாக புகார் அளித்தனர். விசாரணையில் புகாரளித்த இருவருமே மோசடி கும்பலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

10:25:01 on 31 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகில் உள்ள வீரடிப்பட்டி கிராமத்தில் பூட்டிய டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களைத் திருடிய சூப்பர்வைசர், கடை விற்பனையாளர் மற்றும் அவர்களுக்குத் துணையாக வந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

09:57:02 on 31 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

டெல்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1,500 பேரில், 16 பேருக்கு, 'கொரோனா' வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், மாநாட்டில் பங்கேற்க, டெல்லி சென்று வந்தவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், தங்களை சுய தனிமைப்படுத்தும்படி, அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

09:27:01 on 31 Mar

மேலும் வாசிக்க தினமலர்

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியா உட்பட 183 நாடுகளில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகளவில் நேற்று 33,956 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3824 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,780 ஆக உயர்ந்துள்ளது.

08:57:02 on 31 Mar

மேலும் வாசிக்க தினகரன்

கஸ்தூரிராஜா, செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான படம் துள்ளுவதோ இளமை. இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் ஷெரின். இதன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை ஷெரின் வெளியிட்டுள்ளார்.

07:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது.

05:57:02 on 31 Mar

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

”கொரோனா வைரஸ் தானாக பரவவில்லை. பொதுமக்கள்தான் பரப்புகிறார்கள். அனைவரும் வீட்டிலேயே இருந்து உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு உதவுங்கள். பொறுப்போடு செயல்படுங்கள். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். குழந்தைகள் எதிர்காலம் பற்றி சிந்தியுங்கள்.” என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

10:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

ஜப்பான் நாட்டை சேர்ந்த காமெடி நடிகர் Ken Shimura கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது காலமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 70. Ken Shimura 1970 முதல் சினிமா, தொலைக்காட்சிகளில் அவர் காமெடி நடிகராக வலம் வந்தார்.

09:57:02 on 30 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

கொரோனா எதிரொலியால் சென்னை முழுவதும் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கும் சூழலில், சென்னை நகராட்சி அதிகாரிகள் நடிகர் விஜய் வீட்டிற்கு சென்று அவர்களின் பயண விவரங்களை சோதித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

08:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க Asiavillenews

21 நாள் லாக்-டவுனுக்கு மத்தியில், நகரங்களில் வேலை செய்த ஏழை தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல மாநில எல்லைகளில் இருந்து பல நூறு கிலோமீட்டர் தூரத்தை கடந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்ப முயற்சித்து வருகின்றனர். தற்போது அவர்களில் பலர் இறந்துவிட்டனர்.

08:27:01 on 30 Mar

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

“கேரளத்தில் எந்த வகையிலும் உணவுப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் அஞ்ச வேண்டாம். உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது. அனைவருக்கும் உணவுடன் பலசரக்குப் பொருட்களையும் அரசு வழங்கும்.” என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

07:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

டெல்லி வெளிமாநிலத் தொழிலாளர்களின் நிலை குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணையின்போது, `இது கொரோனா வைரஸை விடப் பெரிய பிரச்னை' என மத்திய அரசை எச்சரித்த உச்சநீதிமன்றம், `தொழிலாளர்கள் இடப்பெயர்வு தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.

07:27:01 on 30 Mar

மேலும் வாசிக்க விகடன்

கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கி இருக்கும் நிலையில், இது தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் உலகம் எப்படி இருக்கும் என்ற ஒரு கலைஞனின் கற்பனை ஓவியம், ரசிக்கும் வகையில் இருந்தாலும், அது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

06:57:02 on 30 Mar

மேலும் வாசிக்க தந்தி டிவி

ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழகத்திற்கு துணை ராணுவப்படை வரவுள்ளதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. மேலும், அவசரநிலை பிறப்பிக்கப்படும் என்றும் செய்தி வெளியானது. இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய ராணுவம், இத்தகவலில் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளது.

06:27:02 on 30 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

டோக்கியோவில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டது.

05:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க தினகரன்

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் சொந்த ஊர் திரும்பிய ஆயிரகணக்கானவர் மீது கொரோனா அச்சத்தால் கிருமி நாசினி அடிக்கப்படுகிறது. இது தொடர்பான ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளிவந்துள்ளது.

05:25:02 on 30 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

உலகையே புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸின் தாக்கம் வெகுவிரைவில் முடிவுக்கு வந்துவிடும் என நோபல் பரிசு வென்ற அறிவியல் ஆய்வாளர் மைக்கேல் லெவிட் கூறியுள்ளார். மேலும் அவர், சீனாவை போன்று அமெரிக்காவும் விரைவில் கொரோனா வைரஸில் இருந்து மீண்டும் வரும். ஆனால் அதிக உயிரிழப்புகள் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

04:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

“உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் லஷ்மணன் கோட்டை வரைய வேண்டும்” என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார். வீடு இல்லாதவர்கள், வீட்டுக்கு திரும்பமுடியாதவர்கள் என்ன செய்வது என்பதை மட்டும் அவர் சொல்ல மறந்துவிட்டார்.

04:27:01 on 30 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தீனா படம் அஜித் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். இப்படத்திற்கு பிறகு தான் முருகதாஸ் மார்க்கெட் உயர ஆரம்பித்து. அஜித்தையும் எல்லோரும் தல என்று அழைப்பார்கள், அந்த அளவிற்கு அவர் மீது அன்பு வர இந்த படமே காரணம். இப்படத்திற்காக முருகதாஸிற்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகை ரூ 1000 தானாம்.

03:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கபசுரக் குடிநீரை கொடுக்கலாம் என்று சித்த மருத்துவர்கள், பிரதமர் நரேந்திர மோடியிடம் பரிந்துரைத்துள்ளனர். கடந்தகாலத்தில் கரோனா வைரஸ் மாதிரி, ஒரு நோய்த் தொற்று ஏற்பட்டபோது கபசுரக் குடிநீர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும் என்கின்றனர்.

03:27:01 on 30 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது மேலும் கூடுதலாக 17 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 1.5 கோடி முகக்கவசங்கள், N95 ரக முகக்கவசம் 25 லட்சமும், PP பாதுகாப்பு கவசம் 11 லட்சமும் வாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

02:57:02 on 30 Mar

மேலும் வாசிக்க தினகரன்

இந்தியாவையே, அச்சத்தில் ஆழ்த்தி இந்திய மக்கள் அனைவரையும் கட்டிப் போட்ட கொரோனா வைரஸ் தொற்று வடசென்னை மக்களை தொடவில்லை. உப்புக் காற்றை சுவாசிக்கும் கடல் சூழ்ந்த நிலப்பரப்பாக இருப்பதால் எதிர்ப்பு சக்தி நிறைந்தவர்களாக இப்பகுதி மக்கள் இருப்பார்கள் என்பது இதற்கான காரணமா என்ற சந்தேகம் எழுகிறது.

02:29:58 on 30 Mar

மேலும் வாசிக்க தந்தி டிவி

தனது பெண் குழந்தை பிறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, மூன்று மணி நேரத்துக்குள்ளாக கொரோனா வைரஸுக்கான கிட்டைக் கண்டுபிடித்துள்ளார் மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த வைராலஜி நிபுணர் மினல் தகாவே போஸ்லே.

02:27:02 on 30 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

இந்தியாவையே, அச்சத்தில் ஆழ்த்தி இந்திய மக்கள் அனைவரையும் கட்டிப் போட்ட கொரோனா வைரஸ் தொற்று வடசென்னை மக்களை தொடவில்லை. உப்புக் காற்றை சுவாசிக்கும் கடல் சூழ்ந்த நிலப்பரப்பாக இருப்பதால் எதிர்ப்பு சக்தி நிறைந்தவர்களாக இப்பகுதி மக்கள் இருப்பார்கள் என்பது இதற்கான காரணமா என்ற சந்தேகம் எழுகிறது.

02:24:56 on 30 Mar

மேலும் வாசிக்க தந்தி டிவி

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, ஒரு வால்வு வழியாக அழுத்தப்பட்ட ஆக்ஸிஜன் செலுத்தப்படும் ஹுட்ஸ் ரக கருவிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை மூச்சு காற்றிலுள்ள திரவ துளிகளின் மூலமாக வைரஸ் காற்றின் வழியே பரவும் அபாயத்தை குறைக்கின்றன.

01:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பீகார் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த அமித் என்பவரை, ஐந்து பேர் அடங்கிய கும்பல் துப்பாக்கி முனையில், அருகேயுள்ள கிராமத்திற்கு கடத்திச் சென்று, அங்கிருந்த இளம் பெண்ணுக்கும் அமித்துக்கும், கட்டாய திருமணம் செய்து வைத்தனர். நாடு முழுவதும் கொரோனா பீதி நிலவும் நிலையில், இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

01:27:01 on 30 Mar

மேலும் வாசிக்க தினமலர்

மத்திய அரசின் ஊரடங்கால் நாடு முழுவதும் அச்சமும், குழப்பமும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு, கொரோனா உயிரிழப்புகளை மேலும் அதிகப்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார்.

12:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடைகள் வருகிற 31-ந்தேதியில் இருந்து பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை இயங்கும் என்றும், இது அரசு உத்தரவு என்றும், ஏதோ செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானது போன்ற தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனை டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

12:27:01 on 30 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

உலகமெங்கும் மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள ஒன்று உண்டென்றால் அது சந்தேகத்திற்கிடமின்றி N95 முகக்கவசம்தான். சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ள தருணத்தில் மருந்து நிறுவனமாக 34 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிறுவனம் இப்போது லாபகரமான தொழிலாக முகக்கவசம் உற்பத்தியை மாற்றி பணத்தை சம்பாதித்து வருகிறது.

11:57:02 on 30 Mar

மேலும் வாசிக்க விகடன்

வெளிமாநிலங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதை தடுக்க அனைத்து மாநில, யூனியன் பிரதேச எல்லைகளையும் மூட வேண்டும் என்று மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்து உள்ளது.

10:57:02 on 30 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மதுரை திருமங்கலம் வாகைக்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது மனைவி செல்விக்கும் அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி 10 ஆண்டுகள் ஆனது. இந்நிலையில் ஊர் திரும்பிய இருவரையும், அவர்களது உறவினர்கள் கடுமையாக தாக்கியதில் செல்வி உயிரிழந்தார்.

10:27:01 on 30 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு 2 வாரங்களில் மேலும் அதிக அளவில் இருக்கும் என அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அச்சம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு ஏப்ரல் 12ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது அதிகமாக இருக்கும் என கூறினார்.

09:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கொரோனா தாக்குதலால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த கவலையால், ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சர் தாமஸ் ஷாபர் (54) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஹெஸ்ஸி மாகாணத்தில்தான் டெட்சே வங்கி மற்றும் காமர்ஸ் பேங்க் தலைமையகங்கள் உள்ளன.

09:27:01 on 30 Mar

மேலும் வாசிக்க தினகரன்

தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.94 அடியாகவும், நீர் இருப்பு - 21.8 டிஎம்சியாகவும் உள்ளது. அணையின் நீர்வரத்து 832 கன அடியாகவும் பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு 2850 கன அடியாகவும் உள்ளது.

09:04:15 on 30 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

உலகளவில் கொரோனா உயிரிழப்பு 34 ஆயிரத்தை நெருங்குகிறது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இத்தாலியில் மட்டும் 10,700-க்கும் மேற்பட்டோரும். ஸ்பெயினில் 6,800க்கும் மேற்பட்டோரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

08:59:31 on 30 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பைச் சேர்ந்த விமல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு பகுதிக்கும் எப்படி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றதோ, அதே போல் தோளில் ஒரு எந்திரத்தை தூக்கி வைத்துக் கொண்டு இளைஞர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்தார்.

07:55:01 on 30 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்தியாவில் மக்கள் நலனுக்காக அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையான நடவடிக்கைகளுடன் விதித்துள்ளது. இதனால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் ஹிந்தி சினிமாவை சேர்ந்த நடிகர் ரிஷி கபூர், மதுக்கடைகளை தினமும் சில மணி நேரமாவது திறந்து வைக்க வேண்டுமென அரசுக்கு வேண்டுக்கோள் வைத்துள்ளார்.

06:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

தேசிய அலுமினிய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://nalcoindia.com/ என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

05:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 100 மணி நேரம்தான் கடந்துள்ளது. ஆனால், இந்த 10 மணி நேரத்துக்குள்ளாக மதுபானம் கிடைக்காததன் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 7 பேர் தற்கொலை செய்துள்ளனர். ஒருவர் நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார். மேலும், ஷேவிங் செய்யும் திரவத்தைக் குடித்து உயிரிழந்துள்ளார்.

10:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கன்னட திரைப்பட நடிகை சம்யுக்தா ஒரநாடு, ஊரடங்கால் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார். இதற்கு உதவியாக இருக்கும் பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

09:55:01 on 29 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்திய ஆயுதப்படைகளுக்கு ரூ.880 கோடி மதிப்பில் இலகு ரக துப்பாக்கிகள் வாங்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம், இஸ்ரேல் ஆயுத விற்பனை நிறுவனம் இடையே வியாழக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது. மோடி அரசின் இந்த நடவடிக்கை எதிராக பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

08:27:01 on 29 Mar

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

மேலும் வாசிக்க