View in the JustOut app
X

சன் ஸ்கிரீன் உபயோகிப்பது மட்டுமே வெயிலின் தாக்கத்திலிருந்து சருமத்தைக் காப்பாற்றும் என நினைக்க வேண்டாம். அது ஓரளவுக்கு சருமத்துக்குக் கேடயம்போலச் செயல்படும். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நேரடி வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

09:55:01 on 19 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜனநாயக ரீதியில் கருத்து சொல்ல சூர்யாவுக்கு உரிமை உள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'எந்த வழியிலும் தமிழகத்தில் இந்தி நுழைய அனுமதிக்க மாட்டோம்' என்று கூறியுள்ளார்.

09:25:02 on 19 Jul

மேலும் வாசிக்க தினகரன்

பொருளாதார வளர்ச்சியானது 2019-20க்கான நடப்பாண்டில் முந்தைய மதிப்பீட்டை விட 7.2 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைந்து காணப்படும் என ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியானது முந்தைய மதிப்பீட்டின் படி 7.2 சதவிகிதம் என்ற இலக்கை எட்டக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

08:55:02 on 19 Jul

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

பாராளுமன்றத்தில் பேசிய தென் சென்னை தொகுதியின் மக்களவை உறுப்பினரான திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தெறிக்கவிட்டார். நீங்கள் தாக்கல் செய்தது பட்ஜெட் அல்ல, அது ஒரு வெற்று அறிக்கை என்று கூறி அதிரடி காட்டினார்.

08:42:01 on 19 Jul

மேலும் வாசிக்க நக்கீரன்

சட்டவிரோத டெபாசிட் திட்டங்களை நடத்தும் சீட்டு நிறுவனங்களால் முதலீட்டாளர்கள் ஏமாற்றப்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களிடம் இருந்து சட்டவிரோதமாக டெபாசிட் திரட்டும் திட்டங்களை தடை செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

08:25:01 on 19 Jul

மேலும் வாசிக்க தினகரன்

கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கடந்த கடந்த 13ஆம் தேதி கேரள மாநிலம் நீண்டக்கரை மீன் பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றபோது கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்துள்ளது. இதில் இரண்டு பேர் கரை திரும்பியுள்ளனர். மற்ற மூன்று பேரும் இன்னும் கரை திரும்பவில்லை.

08:12:01 on 19 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பனாமா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கான இந்திய தூதர்களை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பனாமா நாட்டிற்கான இந்திய தூதராக உபேந்தர் சிங் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், இஸ்ரேலுக்கான இந்திய தூதராக சஞ்சீவ் குமார் சிங்கவா நியமிக்கப்பட்டுள்ளார்.

07:57:02 on 19 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

தமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படத்தை முதல்வர் பழனிசாமி இன்று மாலை திறந்து வைத்தார். முதல்வர் பழனிசாமி திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியார் உருவப்படத்திற்கு கீழ் ‘வீரம்... தீரம்... தியாகம்’ என எழுதப்பட்டுள்ளது.

07:42:02 on 19 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

2வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையை 6வது முறையாக வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி நிகழ்த்த உள்ளார். மக்கள் தங்களது சுதந்திர தின உரையில் இடம் பெற வேண்டிய கருத்துக்கள் குறித்து நமோ ஆப்பில் பரிந்துரைக்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

07:27:01 on 19 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு இரண்டு முறை கெடு விதித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. இதனிடையே திங்கட்கிழமையும் நம்பிக்கை ஓட்டெடுப்பு மீதான விவாதம் தொடரும் என முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

07:11:23 on 19 Jul

மேலும் வாசிக்க தின மலர்

சூர்யா நடித்திருக்கும் காப்பான் திரைப்படம் ரிலிஸாகும் அதே நாள் தான் (ஆகஸ்ட் 30) பிரமாண்ட படமான சாஹோவும் வரவுள்ளது. இதனால், கண்டிப்பாக சூர்யாவின் காப்பான் படத்திற்கு ஆந்திராவில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தும், சாஹோ பெரிய தடையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

06:57:01 on 19 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

உள்ளாட்சித்துறை அலுவலகங்களில் உள்ள முக்கிய அலுவலர்களின் பதவி காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பதற்கான மசோதாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்தார். மேலும், ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக மாற்றுவதற்கான மசோதாவையும் அவர் தாக்கல் செய்தார்.

06:45:13 on 19 Jul

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

பீகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மூன்று பேர் கும்பல் தாக்குதலால் கொல்லப்பட்டனர். அவர்கள் கால்நடைகளை திருட முயற்சித்ததாகவும், அப்போது பொதுமக்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

06:27:02 on 19 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் இன்று மதியம் 2.52 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. சில நொடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

06:12:02 on 19 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

குப்பைகளில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து விலைக்கு விற்பவர்களும் அதிகம். இந்நிலையில், சத்திஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் மாநகராட்சி அவர்களுக்கு என பிரத்யேகமான Garbage cafe என்ற உணவு விடுதியை தொடங்கி, அதில் ஏழைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு விற்பனை செய்பவர்களுக்கு உணவு வழங்கலாம் என முடிவெடுத்துள்ளது.

05:51:41 on 19 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

’இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இனி தோனி தொடர முடியாது என்பதை அவரிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் அவரது ஓய்வு குறித்து அவர் முடிவு செய்யட்டும்’ என சேவாக் தெரிவித்துள்ளார்.

05:33:19 on 19 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக, அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, நீரவரத்து குறைந்து, சீரான நிலையில், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கி கொள்ளப்பட்டது. பாதுகாப்பு வளயைம் அருகே மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

05:28:24 on 19 Jul

மேலும் வாசிக்க தின மலர்

டெல்லி திலக் பாலம் ரயில் நிலையத்தில் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருவதால் டெல்லி - பல்வால் - ஆக்ரா பாதையில் செல்லும் 12 மின்தன்னுந்து ரயில்கள் (Electric multiple unit (EMU)) இன்று முதல் ஜூலை 21ஆம் தேதி வரை இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

05:09:49 on 19 Jul

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ’தமிழ்நாட்டு முதல்வர் பேசுவதைப் பார்க்கும்போது, எனக்கு சிரிப்பு வருகிறது. நேர்மை, நியாயம், தர்மம், ஊழலற்ற ஆட்சி… ஏன் சார் காமெடி பண்றீங்க? ஒரு முதல்வர் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த உதாரணம்’ என்று பதிவிட்டுள்ளார்.

05:07:11 on 19 Jul

மேலும் வாசிக்க ie தமிழ்

ஐசிசி ஹாஸ் ஆஃப் ஃபேம் பட்டியலில் சச்சினுக்கு முன் திராவிட் தேர்வானார். இதற்கு காரணம் திராவிட் 2012ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். சச்சின் கடந்த 2013ஆம் ஆண்டு தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். எனவே சச்சினுக்கு முன்பு இந்தப் பட்டியலில் திராவிட் இடம்பிடித்தார்.

04:51:48 on 19 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தன்னை முரசொலியில் திமுக விமர்சிப்பதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் அவர், ’திமுகவைப் போல், டெல்லிக்கு, சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு பாதபூஜை செய்து பதவி வாங்கவில்லை’ என்றும் விமர்சித்துள்ளார்.

04:43:02 on 19 Jul

மேலும் வாசிக்க காமதேனு

சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே உயர்ந்து வந்தது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.26,952-க்கு விற்பனை ஆகிறது.

04:34:14 on 19 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தனுஷின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். ரஜினியை அடுத்து தனுஷூடன் கைகோர்க்கிறார் கார்த்திக். இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிடை ஐஸ்வர்ய லெக்ஷ்மி நடிக்கவுள்ளார். படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

04:30:45 on 19 Jul

மேலும் வாசிக்க ETV BHARAT

கர்நாடக அரசியலில் தொடர்ந்து அரசியல் குழப்பங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், கர்நாடக முதல்வராக எடியூரப்பா வரவேண்டும் என உடுப்பி -சிக்மங்களூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜக எம்.பியுமான ஷோபா கரண்லாஜ்ஜே மைசூரில் உள்ள சாமூண்டிஸ்வரி கோயிலுக்கு 1008 படிகள் ஏறிச் சென்று வேண்டியுள்ளார்.

04:22:27 on 19 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இலங்கையின் சில பகுதிகளிலுள்ள இந்து ஆலயங்களை பௌத்த மயமாக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்து ஆலயங்கள் மற்றும் இந்து வரலாற்றை கொண்ட சில பகுதிகளில் பௌத்த பிக்குகளினால் மேற்கொள்ளப்பட்ட சில அசம்பாவித சம்பவங்களை அடுத்து தமிழர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

04:13:01 on 19 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அத்திவரதர் எழுந்தருளியுள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று முதல் அத்திவரதரை மட்டும் தான் தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மூலவரான வரதராஜப் பெருமாளை தரிசிக்க அனுமதி ரத்து செய்துள்ளதாகவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

04:06:49 on 19 Jul

மேலும் வாசிக்க தினமணி

கர்நாடகாவில் நேற்றைய கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மதியம் 1.30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர் வஜூபாஸ் லாலா கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு கெடு விதித்துள்ளார்.

04:03:31 on 19 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமை மட்டும் ரூ.50 முதல் ரூ. 55 கோடி வரை விலைபோனதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

03:59:57 on 19 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

மனிதன் நிலவில் கால்பதித்து 50 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி கூகுள் நிறுவனம் வீடியோ வடிவில் டூடுல் போட்டு சிறப்பித்துள்ளது. இந்த வீடியோவுக்கான தமிழ் சப் டைட்டிலை பேச்சு வழக்கில் எழுத்துப்பிழை ஏதுமில்லாமல் கொடுத்திருப்பது மிகச் சிறப்பானதாக அமைந்துள்ளது.

03:42:02 on 19 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மருத்துவப் படிப்பில் சேர, நீட் நுழைவுத்தேர்வு நடத்துவது போல், 6 ஆண்டுகள் எம்.பி.பி.எஸ்., படித்த பின்பு எக்சிட் தேர்வு நடத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும், நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாவை எதிர்த்து அதிமுக வாக்களிக்கும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

03:27:02 on 19 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பிரபாஸ் நடிக்கும் சாஹோ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இப்போது ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்கு மேலும் சில நாட்கள் தேவைப்படுவதால், ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

03:12:01 on 19 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நடந்து முடிந்த எம்.பி. தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் அவர்கள் பற்றிய குறிப்புகளை தமிழக அரசின் இணைதள பக்கத்தில் இன்னும் மாற்றம் செய்ய முடியமல் பழைய எம்.பிகளின் பட்டியலை வைத்திருக்கிறார்கள். 2019 மக்களவை உறுப்பினர்கள் பட்டியல் புதிப்பிக்கப்படவில்லை.

02:57:01 on 19 Jul

மேலும் வாசிக்க நக்கீரன்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ளது காபூல் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் வெளியே நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

02:42:01 on 19 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2500கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 855 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2,500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

02:32:03 on 19 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுவதாகவும், பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி தொடங்கி மார்ச் 26ஆம் தேதி வரையும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 17இல் தொடங்கி ஏப்ரல் 9இல் முடிவதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

02:27:01 on 19 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

வெப்பச்சலனம் காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

02:11:18 on 19 Jul

மேலும் வாசிக்க தினகரன்

'இளம் வீரர்களை ஊக்குவிக்க வேண்டிய நேரம் இது' என்றும், 'விக்கெட் கீப்பிங்கில் எம்.எஸ்.தோனிக்கு பதிலாக வேறொருவரை இந்திய அணி அறிமுகப்படுத்த வேண்டும்' என முன்னாள் இந்தியா அணி வீரரும், தற்போதைய பாஜக எம்.பியுமான கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

01:57:01 on 19 Jul

மேலும் வாசிக்க தினகரன்

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோயில், தரங்கம்பாடி பகுதிகளில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

01:39:01 on 19 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோயில், தரங்கம்பாடி பகுதிகளில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

01:36:01 on 19 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு, மயிர்கால்களுக்கு நன்கு வலுப்பெறும்.

01:18:01 on 19 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு, மயிர்கால்களுக்கு நன்கு வலுப்பெறும்.

01:15:01 on 19 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

நகைக்கடை மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மன்சூர் கான் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான மன்சூர் கான் கைது செய்யப்பட்டார்.

12:57:01 on 19 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

உத்தரப்பிரதேசத்தின் நாராயண்பூரில் ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். சோன்பத்ராவில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை உ.பி போலீசார் கைது செய்துள்ளனர்.

12:41:05 on 19 Jul

மேலும் வாசிக்க நக்கீரன்

விபத்தில் சிக்கிய விக்ரம், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் அபிஹாசன் மனைவி அக்‌ஷராவை கடத்திய கும்பல், விக்ரமை அந்த மருத்துவமனை விட்டு வெளியே கொண்டு வரவேண்டும், என மிரட்டுகிறது. இதன் பின் நடக்கும் அதிரடி திருப்பங்களே இந்த கடாரம் கொண்டான்.

12:32:41 on 19 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வாக தற்போது பின்பற்றப்படுகின்ற நீட் தேர்வு மற்றும் புதிதாக மத்திய அரசு திணித்துள்ள நெக்ஸ்ட் என்ற தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

12:28:16 on 19 Jul

மேலும் வாசிக்க தினகரன்

திருவள்ளூர் அருகே 4 வயது சிறுமியை அழைத்துக் கொண்டு டாஸ்மாக் கடைக்கு மது அருந்தச்சென்ற வட மாநில இளைஞர் ஒருவர், சிக்கன் பக்கோடா கேட்டு அடம் பிடித்த சிறுமியை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

12:21:03 on 19 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தின் டப்பிங் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென விக்ரம் அங்கு சென்றுள்ளார். அப்பாவைப் பார்த்ததும் மகனுக்கு கூச்சத்தில் பேச்சு வரவில்லை. ”என்னை அப்பாவாகப் பார்க்காதே, அசிஸ்டெண்ட் டைரக்டரா பாரு” என்று விக்ரம் அறிவுரைகூறி துருவின் கூச்சத்தைப் போக்கியுள்ளார்.

12:20:51 on 19 Jul

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் விக்ரம்தான், கடாரம் கொண்டான் என்ற பெயருக்கு ஏற்றார் போல அவரது லுக் தெறிக்கவிட்டுள்ளது. படத்தின் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் தெறிக்கவிட்டுள்ளது. இரண்டாம் பாதியில் விக்ரம் கலக்கி இருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலமாக ஜிப்ரானின் இசை இருக்கிறது.

12:18:42 on 19 Jul

மேலும் வாசிக்க Behind Talkies

கடாரம் கொண்டான் படத்தை விக்ரம் தனது மகன் துருவ் உடன் இணைந்து சென்னை காசி திரையரங்கிற்கு சென்று முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசித்தார். இப்படத்தின் அதிரடியான சண்டைக் காட்சிகள் மேக்கிங் வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

12:11:26 on 19 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாஸன், நாசரின் மகன் அபி ஹஸன் உள்ளிட்டோர் நடித்த படம் கடாரம் கொண்டான். இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் கடாரம் கொண்டான் படம் குறித்து ட்விட்டரில் பலரும் கலவையான விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.

12:08:50 on 19 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

பண பிரச்னையில் சிக்கியிருப்பதால் ஆடை இன்னும் ரிலீஸாகவில்லை. காலை காட்சிகளும், பத்திரிக்கையாளர் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. மதியத்திற்குள் பிரச்னைகளை முடித்து ரிலீஸ் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

11:55:22 on 19 Jul

மேலும் வாசிக்க தினமணி

கேரளாவில் அரசு ஊழியர்களின் வாட்ஸ்-அப் குரூப்பில் பதிவிடப்பட்ட ஆபாச படங்களால் பெண் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் கட்செவி அஞ்சலில் குழுவின் அட்மின் பொறுப்பில் இருந்து சம்பந்தப்பட்டவரை நீக்கினர்.

11:49:25 on 19 Jul

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் இருக்கும் ‘பக்' ஒன்றை கண்டுபிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த லக்‌ஷ்மண் முத்தையா. இதற்காக அவருக்கு ஃபேஸ்புக் நிறுவனம், 30,000 டாலர் சன்மானம் வழங்கியுள்ளது.

11:41:09 on 19 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

விழுப்புரம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சிறுமிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

11:35:55 on 19 Jul

மேலும் வாசிக்க தினகரன்

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ஐசிசி 'ஹால் ஆஃப் ஃபேம்' விருது வழங்கி கௌரவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் 'ஹால் ஆஃப் ஃபேம்' விருதுகளை வழங்கிவருகிறது.

11:31:45 on 19 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஹிந்தியில் ஒளிபரப்பான Sasural Simar Ka என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் Shivlekh Singh. இவர் குடும்பத்துடன் காரில் பயணம் செய்துள்ளார், அப்போது எதிர்ப்பாராத விதமாக கார் விபத்து ஏற்பட சிவ்லேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

11:18:01 on 19 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

ஹிந்தியில் ஒளிபரப்பான Sasural Simar Ka என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் Shivlekh Singh. இவர் குடும்பத்துடன் காரில் பயணம் செய்துள்ளார், அப்போது எதிர்ப்பாராத விதமாக கார் விபத்து ஏற்பட சிவ்லேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

11:15:01 on 19 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

வேலூர் மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். சுமார் 71 பேரை கொண்ட குழுவை திமுக நியமித்த நிலையில் அதை விட 2 மடங்கு கூடுதலாக அதிமுக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

10:55:02 on 19 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

பெரும்பான்மையை நிரூபிக்க காலக்கெடு நிர்ணயித்த ஆளுநரின் உத்தரவை எதிர்த்து கர்நாடக முதல்வர் குமாரசாமி நீதிமன்றத்தில் முறையிட திட்டமிட்டுள்ளார். இன்று நண்பகல் 1.30க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமி அரசுக்கு ஆளுநர் கெடு விதித்துள்ளார்.

10:37:34 on 19 Jul

மேலும் வாசிக்க தினகரன்

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஜிம்பாப்வே அணிக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் இடைக்கால தடைவிதித்துள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:18:01 on 19 Jul

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஜிம்பாப்வே அணிக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் இடைக்கால தடைவிதித்துள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:15:02 on 19 Jul

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் வேலை இழந்த ஊழியர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் புதிய வெப் போர்டலை உருவாக்க திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. இதனால் அவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

09:57:01 on 19 Jul

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின், சகோதரர் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான, 400 கோடி ரூபாய் மதிப்பிலான 'பினாமி' சொத்துக்களை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

09:35:02 on 19 Jul

மேலும் வாசிக்க தின மலர்

ஹவாயில் உள்ள மலை ஒன்றில் மிகப்பெரிய தொலைநோக்கி அமைக்கும் திட்டத்திற்கு எதிராக பூர்வகுடி ஹவாய் மக்கள் போராடி வருகின்றனர். அந்த மவுனா கியா மலை தாங்கள் புனிதமாக கருதும் இடம் என்று கூறும் பூர்வகுடிகள், அந்த மலையில் இவ்வாறான திட்டங்களை செயல்படுத்துவது சூழலியல் சீர்கேடுக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள்.

09:18:02 on 19 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஹவாயில் உள்ள மலை ஒன்றில் மிகப்பெரிய தொலைநோக்கி அமைக்கும் திட்டத்திற்கு எதிராக பூர்வகுடி ஹவாய் மக்கள் போராடி வருகின்றனர். அந்த மவுனா கியா மலை தாங்கள் புனிதமாக கருதும் இடம் என்று கூறும் பூர்வகுடிகள், அந்த மலையில் இவ்வாறான திட்டங்களை செயல்படுத்துவது சூழலியல் சீர்கேடுக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள்.

09:15:01 on 19 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

டிக் டாக் செயலியை தமிழக அரசு உறுதியாக தடை செய்யும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தமிழகத்தில் சர்ச்சைக்குறிய டிக் டாக் வீடியோக்களை கண்காணிக்க தனி அதிகாரி நியமித்துள்ளதாகவும், அவரின் மூலமாக மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.

08:55:01 on 19 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் குமாரசாமி தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் விவாதத்தில் கடும் அமளி ஏற்பட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் குமாரசாமிக்கு, கவர்னர் வஜூபாய் வாலா கடிதம் எழுதியுள்ளதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

08:39:02 on 19 Jul

மேலும் வாசிக்க தினகரன்

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் குமாரசாமி தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் விவாதத்தில் கடும் அமளி ஏற்பட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் குமாரசாமிக்கு, கவர்னர் வஜூபாய் வாலா கடிதம் எழுதியுள்ளதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

08:36:02 on 19 Jul

மேலும் வாசிக்க தினகரன்

ஜார்கண்ட் மாநிலம் லோகர்தகா மாவட்டத்தில் உள்ள பகேகரா கிராமத்தில் பக்ரு பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

08:15:01 on 19 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.18, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.96 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:57:01 on 19 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ட்விட்டர் நிறுவனம் ஹைட் ரிப்ளைஸ் எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக இந்த அம்சம் கனடாவில் வழங்கப்பட்டுள்ளது. கனடாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் இந்த அம்சம் வழங்கப்படும் என தெரிகிறது.

07:35:01 on 19 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

மும்பை தாக்குதலுக்கு பிறகு கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் 6 மாதத்திற்கு ஒரு முறை ஷாஹர் ஹவாஜ் ஆபரேஷன் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆபரேஷனின்போது போலீசாரே தீவிரவாதிகள் போல போலி வெடிகுண்டு, போலி துப்பாக்கிகளுடன் கடல் வழியாக வந்து ஊடுருவுவார்கள்.

07:15:02 on 19 Jul

மேலும் வாசிக்க தினகரன்

கருப்பட்டி கெமிக்கல்கள் ஏதும் சேர்க்காமல் இயற்கையாக வெறும் பனை நீரைக் காய்ச்சி தயாரிக்கப்படுவதால் அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைத்து, உடல் ஆரோக்கியம் மேம்படும். கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.

06:55:01 on 19 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

சீனாவில் ஜியாங்சி மாகாணத்துக்கு உட்பட்ட தைஹி (Taihe) நகருக்கு மாலை நேரம் வருகை தரும் ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகள் குறிப்பிட்ட இடைவேளையில் அங்குள்ள 5 மின்கம்பிகளில் அமர்ந்து கொள்கின்றன. இதனை வியந்தபடி பார்த்து வருவதாகவும், இதனைப் பார்க்க அழகாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

06:25:01 on 19 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

’ஆள்’, ’மெட்ரோ’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் தற்போது தனது புதிய படத்தைத் தொடங்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பூஜையுடன் கூடிய பணிகள் தொடங்கியுள்ளன.

05:55:01 on 19 Jul

மேலும் வாசிக்க காமதேனு

சிலர் ஜிம்மில் அணிவதற்கென்றே ஒரு உடையை வாங்கி இருப்பார்கள். அதைத் துவைக்காமலேயே தினமும் ஜிம்முக்கு அணிந்து வருவார்கள். உங்கள் உடைகளின் நாற்றத்தைப் பிறர் பொறுத்துக்கொள்ள வேண்டுமா, என்ன? துவைத்து அணியுங்கள். ஜிம்முக்காக இரண்டு செட் உடைகளை வைத்திருங்கள்.

05:25:02 on 19 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

களவாணி 2 படத்தின் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய நடிகர் விமல், ’இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்பது போன்ற படங்களில் இனி நடிக்கமாட்டேன். அந்தப் படத்தில் இருந்து நிறைய பாடங்களைக் கற்றுக் கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.

04:55:01 on 19 Jul

மேலும் வாசிக்க தின மலர்

டெக்கோ எலக்ட்ரா என்ற நிறுவனம் 3 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளது. நியோ, ராப்டர் மற்றும் எமெர்ஜ் ஆகிய மூன்று ஸ்கூட்டர்கள் தற்போது அந்நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நியோவின் விலை ரூ.43,000இல் இருந்து அறிமுகமாகிறது. ரேப்டாரின் விலை 60,771, எமெர்ஜின் விலை ரூ.72,247 ஆகும்.

04:25:02 on 19 Jul

மேலும் வாசிக்க ie தமிழ்

சீனாவின் ஜின்ஜியாங் மாகாண மலைப்பாதையில் இடம்பெற்றுள்ள இயற்கை அழகை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகைத் தங்கி ரசிப்பதற்காக அப்பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக கூடாரங்களை அமைத்துள்ளனர்.

03:55:02 on 19 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

இந்தியாவில் பேட்டரி வாகனங்களுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் உள்ளது. ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் இந்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

03:25:01 on 19 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சர்வா என்கிற யோகா நிறுவனத்தின் முதலீட்டாளர்களில் ஒருவராக இணைந்துள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். முதல்முறையாக வியாபாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஐஸ்வர்யா தனுஷ், இந்த முதலீட்டின் மூலம் தென்னிந்தியாவில் சர்வா நிறுவனத்தின் திவா யோகாவின் வளர்ச்சியை வழநடத்திச் செல்வார்.

02:55:02 on 19 Jul

மேலும் வாசிக்க தினமணி

கியா மோட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தின் புது கார் கியா செல்டோஸ் ஆகும். இந்த கார் இந்தியாவில் ஆகஸ்ட் 22ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. இதற்கான முன்பதிவு ஜூலை 16ஆம் தேதி துவங்கியது. முன்பதிவை துவங்கிய முதல் நாளிலே 6,046 பேர் இந்த காரை முன்பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

02:25:02 on 19 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ஈரோடு ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

01:55:01 on 19 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. தொடர்ந்து பழுத்த வாழைப்பழம் சாப்பிட்டுவருவது ரூமட்டாய்டு ஆர்த்தரைடீஸ், மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.

01:25:02 on 19 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

பயனாளர்கள் பல்வேறு பிரிவுகளில் கீழ் பெறும் மாதந்திர ஓய்வூதியத்தை தெலங்கானா மாநில அரசு இரட்டிப்பாக உயர்த்தியுள்ளது. மேலும் ஓய்வூதியம் பெறும் முதியோருக்கான வயது வரம்பு 65லிருந்து 57ஆக குறைக்கப்படுவதாகவும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.

12:55:02 on 19 Jul

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

பெங்களூரு, கொச்சி, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க உள்ளதாக இலங்கை விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் அர்ஜூனா ரத்னதுங்கா அறிவித்துள்ளார்.

12:25:01 on 19 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இந்திய பாஸ்போர்ட் மற்றும் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் விசாவுடன் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கு உடனடியாக விசா வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விசிட் விசாவை ஒருமுறை புதுப்பிக்கும் பயணிகள், கூடுதலாக 28 நாட்கள் தங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11:55:02 on 18 Jul

மேலும் வாசிக்க தினத்தந்தி

கருப்பான உதடுக்கு பின் பல உடல்நல பிரச்னைகள் மறைந்து இருக்க கூடும். அதை சரிபார்த்து தங்கள் உடல்நலத்தை சரி செய்து கொள்ளுங்கள். தினமும் மாதுளை, திராட்சை, விட்டமின் சி உள்ள சிட்ரஸ் பழங்கள், 2-3 லிட்டர் தண்ணீர், நீர் மோர், இளநீர், பசுநெய் கலந்த உணவுகள், கீரைகள், பழச்சாறுகளை எடுத்து கொள்ளுங்கள்.

11:25:01 on 18 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழ்நாட்டில் இரண்டு கிரானைட் குவாரிகள் உட்படப் பதினொரு குவாரிகளை அமைக்கத் தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சூழலியல் அனுமதிகளைப் பெறும் முயற்சியில் இருந்தது. அதில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு இறுதிக்கட்டம்வரை வந்துள்ளது.

10:55:01 on 18 Jul

மேலும் வாசிக்க விகடன்

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து நேர்முக தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்புக்கு அழைப்பு வந்தது. அங்கே சென்ற 3 பேர், அதிகாரிகள் முன் ஆஜரான போது அந்த ஆவணங்கள் போலியானவை என தெரியவந்தது. புகாரின்பேரில் போலி ஆவணங்களை தயார் செய்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

10:25:01 on 18 Jul

மேலும் வாசிக்க தினகரன்

அதிகாரப்பூர்வமாக சியோமி நிறுவனத்தால் 'Mi A3' ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. Mi A2 ஸ்மார்ட்போனின் அடுத்த ஸ்மார்ட்போனான 'Mi A3' ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.

09:55:01 on 18 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை கூட்டாட்சித் தத்துவதிற்கு எதிராக இருப்பதாகவும் ஒற்றை நாடு - ஒற்றைக் கல்வி முறையை நோக்கி இந்தியாவைத் திருப்புவதாகவும் கூறி தமிழகத்தில் உள்ள கல்வி ஆர்வலர்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவுசெய்தனர்.

09:25:02 on 18 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

08:59:57 on 18 Jul

மேலும் வாசிக்க தினமணி

ஈரோட்டுக்கு டெல்லியில் இருந்து, ஜம்மு தாவி விரைவு ரயிலில் அனுப்பப்பட்ட, ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான எலட்ரானிக் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு ரயில் பார்சல் ஊழியர்கள் உடந்தையா? என விசாரணை நடைபெற்று வருகிறது.

08:40:02 on 18 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை நயன்தாரா பிரதான பாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். ஆரம்பகாலத்திலிருந்தே நண்பர்களான நெல்சனும், சிவாவும் இப்படத்தின் மூலம் திரையிலும் இணையவுள்ளனர்.

08:30:06 on 18 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நயன்தாரா நடித்துள்ள ’கொலையுதிர் காலம்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்தப் படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. இப்படம் வரும் 26ஆம் தேதி ரிலீசாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

08:14:48 on 18 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தேசிய பூங்காவான காஸிரங்கா சரணாலயம் சமீபத்தில் பெய்த கடும் மழை காரணமாக 90% கும் மேல் வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில், பூங்கா அருகே உள்ள வீட்டின் ஒன்றினுள் புலி ஒன்று தஞ்சமடைந்துள்ளதால் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.

07:59:47 on 18 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

காஞ்சிபுரத்தில் அத்திவரதரைக் காண குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், மயக்கமடைந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தற்காலிக முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

07:43:28 on 18 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஆன்மிக தொண்டாற்றும் ஒருவருக்கு வள்ளலார் பெயரில் விருது வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. தமிழ் தொண்டாற்றி வரும் மகளிருக்கு காரைக்கால் அம்மையார் பெயரில் ஆண்டுதோறும் விருதும், ஆய்வும், தமிழ் ஈடுபாடும் கொண்ட தமிழறிஞருக்கு தேவநேயப் பாவாணர் விருது வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

07:40:03 on 18 Jul

மேலும் வாசிக்க தினகரன்

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகிய இருவரும் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா வெளியேறிய பிறகும் லண்டனில் இருந்தனர். இந்நிலையில் இருவரும் உலகக் கோப்பைக்குப் பிறகு நாடு திரும்பியுள்ளனர். இன்று இருவரும் ஏர்போர்ட்டில் வரும்போது படம் பிடிக்கப்பட்டுள்ளனர்.

07:36:22 on 18 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மேலும் வாசிக்க