View in the JustOut app
X

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், சங்கராப்பாளையம் கிராம ஊராட்சியில் சாலைப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடந்தே செல்கின்றனர். இது அடர்ந்த வனப்பகுதி யானை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் உள்ளது. இதனால் அச்சத்தோடு நடந்தே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

02:27:02 on 22 Feb

மேலும் வாசிக்க நக்கீரன்

கடலூர் மாவட்டம் வடலூரில் தனியார் பேருந்தின் ஓட்டுனர் இருக்கை அருகே அமர்ந்து பயணிப்பதை வாடிக்கையாக்கிய திருமணமான பெண்ணை காதல் கீதத்தால் மயக்கிய நடத்துனர் ஒருவர், தனது வேலை பறி போனதால் பழகுவதை நிறுத்திய அந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

01:55:01 on 22 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உருது மொழி வளர்ச்சிக்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் என்.சி.பி.யு.எல். செயல்பட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனத்தை தமது துறைக்கு மாற்ற சிறுபான்மை நலத்துறை அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வி, பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு உருது அறிஞர்களிடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

01:27:01 on 22 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

பிரதமர் மோடி தன்னை வரவேற்க 70 லட்சம் பேர் வருவார்கள் என்று தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் அகமதாபாத் போன்ற நகரில் ஒரே இடத்தில் 70 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எவராலும் கூற முடியாது என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

12:57:01 on 22 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு அளிக்கும் நிதியை பெற மாட்டோம் எனவும், பொது மக்கள் அளிக்கும் பங்களிப்பில் மட்டுமே இக்கோயில் கட்டப்படும் என ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிருத்திய கோபால் தாஸ் மகராஜ் தெரிவித்துள்ளார்.

12:27:01 on 22 Feb

மேலும் வாசிக்க தினமலர்

கடலுார் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் ரம்யா. இந்நிலையில் இவர், பள்ளி வகுப்பறைக்குள் சடலமாகக் கிடந்துள்ளார். இது தொடர்பான விசாரணையில், ரம்யாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது அவரை ஒருதலையாகக் காதலித்த ராஜசேகர் என்ற இளைஞர்தான் என்பது தெரியவந்துள்ளது.

11:57:02 on 22 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

அதிமுகவின் ஐடி விங்குக்குள் புகைச்சல்களும் கரைச்சல்களும் கிளம்பியிருக்கின்றன. ஏனெனில் ஐடி விங்குக்குள் ஏற்கனவே ஓ.பன்னீர் அணி, எடப்பாடி அணி என இரு அணிகள் இருக்கின்றன. எடப்பாடிக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கும் ‘டெமோஸ் புராஜக்ட்’ நிறுவனத்தின் பணிகளால் அதிமுகவுக்குள் ஓபிஎஸ் அணியினர் முகம் சுளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

11:27:01 on 22 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10:57:01 on 22 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

”2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகலாம் என்று சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் அதுபோன்ற எண்ணம் மத்திய அரசிடம் தற்போது வரை இல்லை. இதுதொடர்பான அதிகாரபூர்வமான தகவல்களும் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கப்படவில்லை” என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10:27:01 on 22 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

சீனாவை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பாதிப்பால் நாளுக்கு நாள் மக்கள் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் இதுவரை 2 ஆயிரத்து 345 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75,567 ஆக குறைந்தது.

09:55:01 on 22 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற தகவலையடுத்து, ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் நடந்த கடும் துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

09:27:02 on 22 Feb

மேலும் வாசிக்க தினகரன்

சிவபெருமானுக்கு உரிய விரதங்களில் மகா சிவராத்திரி விரதம் மிகவும் சிறப்பானது. இந்த புண்ணிய காலத்தில் சிவனின் நாமம் கூறி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மகா சிவராத்திரி விழா நேற்று இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

09:15:41 on 22 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, 18 வயது முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியோ அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியோ அல்லது அதற்கு ஈடான உடல் உழைப்பையோ கொண்டிருக்க வேண்டும்.

08:57:01 on 22 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போவின் ஓ.எஸ் இயங்குதளத்தில் கலர்ஓஎஸ் 7(ColorOS 7) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 ஓ.எஸ் -யை அடிப்படையாகக் கொண்டது. தற்போது ஒரு சோதனை அடிப்படையில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:55:01 on 22 Feb

மேலும் வாசிக்க தினமணி

உத்தரப்பிரதேசத்தின் இரண்டாவது பெரிய மாவட்டமான சோன்பத்ராவில் (Sonbhadra), 3,350 டன் எடை அளவுள்ள தங்க படிமங்கள் கொண்ட, இரண்டு சுரங்கங்கள் இருப்பது, கண்டறியப்பட்டுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் உத்திரப்பிரதேச புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

06:55:01 on 22 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட போர் குற்றம் குறித்த தீர்மானத்தில் இருந்து விலகப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இதனை அறிவித்தார்.

05:56:01 on 22 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

தமிழகத்தில் அதிமுக அரசுக்கு அனைத்து தரப்பிலும் ஆதரவு பெருகுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இஸ்லாமியர்களை குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பெயரால் திமுக குழப்பி வருகிறது என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

10:57:01 on 21 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

“காதல், திருமணம் என்றெல்லாம் என்னைப்பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. பல தடவை எனக்கு திருமணமும் செய்து வைத்து விட்டார்கள். இப்போது கிரிக்கெட் வீரரை காதலிக்கிறேன் என்கின்றனர். எதுவும் உண்மை இல்லை. நடிகைகள் பற்றி இதுபோல் வதந்திகள் பரவுவது சகஜம்தான்." என நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.

09:57:01 on 21 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

கிரிக்கெட் போட்டி ஒன்றில் நாய் ஒன்று விக்கெட் கீப்பராக செயல்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இணையத்தில் வேகமாக பரவி வரும் அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் பேட்டிங் செய்ய, நாய் ஒன்று விக்கெட் கீப்பராக செயல்படுகிறது. சிறுமி பந்தை அடித்தவுடன் நாய் வேகமாக பந்தை நோக்கி ஓடுகிறது.

08:55:02 on 21 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

விக்கிபீடியா வேங்கைத்திட்டம் என்ற பெயரில் இந்திய மொழிகளில் கட்டுரைப் போட்டி நடத்தி இருந்ததில் தமிழ் மொழி அதிக கட்டுரைகளைக் கொண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகம் பேரால் பேசப்படும் இந்திக்கு 6வது இடமே கிடைத்தது. மிக குறைந்த பங்கேற்பாளர்களால் சமஸ்கிருதம் பின்வரிசைக்கு தள்ளப்பட்டது.

08:27:01 on 21 Feb

மேலும் வாசிக்க தினகரன்

நடிகர் அஜித் தனது உதவியாளர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்றார் என்று சமூக வலைதளங்களில் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. வைரலாகும் இந்த வீடியோவில் அஜித்தினுடைய கெட்டப்பை பார்த்தால் ‘பில்லா 2’ பட லுக்கில் இருக்கிறார்.

07:57:02 on 21 Feb

மேலும் வாசிக்க நக்கீரன்

உத்தர பிரதேச மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கல்வி பிரிவான வித்யா பாரதி நடத்தும் பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

07:27:01 on 21 Feb

மேலும் வாசிக்க தினமலர்

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னை தாம்பரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பேரணி நடத்தினர். தாம்பரம் ரங்கநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு முத்துரங்கன் சாலை, சண்முகம் சாலை வழியாக பேரணி நடத்தினர். குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக பேரணியில் இஸ்லாமியர்கள் முழக்கமிட்டனர்.

07:18:07 on 21 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், கல்லூரியில் பயிலும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், காதலியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் அவரைக் கொலை செய்வதற்கு வெங்கடேஷ் திட்டமிட்டார். காதலியைக் கொல்வதற்காக காத்திருந்த வெங்கடேஷ், அங்கு அவர் வராததால் ஆத்திரமடைந்தார்.

06:57:01 on 21 Feb

மேலும் வாசிக்க விகடன்

சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட சென்டிரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் தற்போதுள்ள ரூபாய் 10 பிளாட்பார டிக்கெட் கட்டணம், ரூபாய் 5 உயர்த்தப்பட்டு 15 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு மாற்றம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

06:27:02 on 21 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டம் கருக்காக்குறிச்சியைச் சேர்ந்தவர் கண்ணன். கல்லூரி மாணவர். டிக் டாக் செயலி மீது மோகம் கொண்ட கண்ணன், சாலையில் செல்லும் பொதுமக்களை மறித்து, அவர்களை அச்சுறுத்துவது மட்டுமன்றி, அவர்களின் முன்பு நடனமாடி அதை டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்துவந்தார்.

05:57:01 on 21 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

”கடந்தாண்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா சென்றிருந்தபோது கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலத்தில் முதலீடு செய்வதற்கு ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு வந்தாரே, அதை ரத்து செய்வோம் என்று அறிவிக்கத் தயாரா?” என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

05:27:02 on 21 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் தொலைக்காட்சி பேனல் உற்பத்தி முடங்கியிருப்பதால், இந்தியாவில் தொலைக்காட்சிகளின் விலை அடுத்த மாதம் முதல் 10 சதவீதம் வரை உயரலாம் என்று கூறப்படுகிறது. ஏசி, பிரிட்ஜ் சாதனங்களுக்கான கம்ப்ரசர்களின் விநியோகமும் தடைபட்டுள்ளதால் அவற்றின் விலையும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

04:57:01 on 21 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

இயக்குநர் ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தில் காளகேயர்கள் பேசும் கிளிக்கி மொழி உலகெங்கும் அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த மொழி அத்திரைப்படத்துக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட ஒரு மொழியாகும். அந்த மொழியை உலக தாய்மொழிதினத்தன்று இயக்குநர் ராஜமௌலி அறிமுகம் செய்தார்.

04:27:02 on 21 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

மத்திய பிரதேசத்தில் பாலியல் தொழில் ஈடுபட்டதாக 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாநிலத்தையே உலுக்கும் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. முன்னாள் அமைச்சர், கலெக்டர்கள், எம்.பி, எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் அவர்களது வலையில் சிக்கியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

03:57:02 on 21 Feb

மேலும் வாசிக்க விகடன்

உலக அளவில் அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்தியா நெருக்கடி தந்து வருவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

03:27:02 on 21 Feb

மேலும் வாசிக்க தினகரன்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் அழகுராஜன். இவர் அதேபகுதியில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில், அழகுராஜனை இளைஞர் ஒருவர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். இதைத்தொடர்ந்து கொலை செய்த இளைஞர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

02:57:02 on 21 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

திருவண்ணாமலை அருகே காவி நிறத்தில் இருந்த எம்.ஜி.ஆர். சிலையின் சட்டை நிறம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். சிலையின் சட்டையில் இருந்த காவி நிறம் அகற்றப்பட்டு சந்தன நிறம் பூசப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். சிலை காவிச்சட்டை விவகாரம் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நிறமானாது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

02:49:17 on 21 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷம் எழுப்பிய இளம்பெண்ணுக்கு நக்ஸலுடன் தொடர்பு இருப்பதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தகவல் தெரிவித்துள்ளார்.

02:34:00 on 21 Feb

மேலும் வாசிக்க தினமணி

அசாதுதீன் ஒவைஸி பங்கேற்ற மேடையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட பெண் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே தனது மகள் பேசியது தவறுதான் என முழக்கமிட்ட இளம்பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.

02:28:13 on 21 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சிபி சத்யராஜ் போலீஸ் வேடத்தில் நடித்துள்ள படம் 'வால்டர்'. இந்த படத்தில் அவருடன் சமுத்திரக்கனி, நட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை U.அன்பு எழுதி, இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

02:25:01 on 21 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நடிகை அமலா பால் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து செய்துகொண்டார். அதன் பிறகு ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் சில புகைப்படங்கள் அவர் மதம் மாறிவிட்டார் என செய்திகள் பரவ காரணமாகியுள்ளது.

01:57:01 on 21 Feb

மேலும் வாசிக்க சினி உலகம்

கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் தபால்களுடன் நுழைந்த சரக்கு வாகனத்தை சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியபோது, ஜாடி ஒன்றிற்குள் அடைக்கப்பட்டிருந்த மனித மூளை கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

01:27:01 on 21 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஐ.நா. உலக சுகாதார அமைப்பின் சிறார் ஆரோக்கிய வல்லுனர்கள் குழு 180 நாடுகளில் சிறார் நிலை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதில் இந்தியா 77வது இடத்தை பிடித்துள்ளது. உலகளவில் நார்வே முதலிடத்தில் உள்ளது. அடுத்த இரு இடங்களில் தென்கொரியா, நெதர்லாந்து நாடுகள் உள்ளன.

12:57:02 on 21 Feb

மேலும் வாசிக்க தினமலர்

ஏர்டெல், வோடஃபோன் ஆகியவை ஏஜிஆர் எனப்படும் வரி பாக்கி பிரச்சினைக்காக மத்திய அரசோடு போராடிக்கொண்டிருக்கின்றன. ஏர்டெல் நிறுவனத்துக்கு மதிப்பிடப்பட்ட 35,000 கோடி ரூபாயில் 10,000 கோடி ரூபாயை இந்த வாரம் மத்திய அரசுக்கு செலுத்தியிருக்கும் நிலையில், வோடஃபோன் ஐடியா நிறுவனமோ பணத்தைச் செலுத்தும் ஐடியாவில் இல்லை என்று தெரிகிறது.

12:27:01 on 21 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பிப்ரவரி 21, மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நாள். தற்போது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அந்தக் கட்சியை வாழ்த்தி மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சில போஸ்டர்களில் கட்சியை வாழ்த்துவதைக் காட்டிலும், யாரையோ திட்டுவதற்கு முக்கியத்துவம் தந்துள்ளனர்.

11:57:02 on 21 Feb

மேலும் வாசிக்க நக்கீரன்

தேனி அருகே, ஊரின் பெயரை கெடுக்கும் வகையில் நடந்து கொண்டதால், ஊரைவிட்டு துரத்தக் காரணமாக இருந்த டிக்டாக் நண்பர்கள் இருவரை, கூலிப்படையை ஏவி கொலை செய்ய, தேனி சுகந்தி போட்ட ஸ்கெட்ச் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

11:27:02 on 21 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வலைச்சேரிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், 23 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன், மதுபோதையில் பள்ளிக்கு வந்ததை கண்டு, அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

10:57:01 on 21 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,576லிருந்து 75,465 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகானில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், அந்நாட்டை ஆட்டி படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

10:27:01 on 21 Feb

மேலும் வாசிக்க தினகரன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சிகள் 21-ந் தேதி (இன்று) நடைபெற இருந்தது. இதில் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொள்வதாக இருந்த நிகழ்ச்சிகள் மட்டும் ரத்து செய்யப்படுகின்றன. கமல்ஹாசன் கலந்துகொண்ட படப்பிடிப்பு தளத்தில் நடந்த துயர சம்பவம் காரணமாக அவர் கலந்துகொள்ள இயலவில்லை.

09:55:01 on 21 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்ட மசசோதாவில் தற்போது செயல்பாட்டில் உள்ள எண்ணெய் எடுப்புத் திட்டங்கள் தொடரும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களின் டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தில் தவிர்த்திருப்பது விவசாயிகளிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

09:27:01 on 21 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை படத்தில் நடித்தவர் கியாரா அத்வானி. இவர் சமீபத்தில் கியாரா நடத்திய போட்டோஷூட் சர்ச்சையாகி இருக்கிறது. அரை நிர்வாண தோற்றத்தில் நிற்கும் அவர் தோட்டத்தில் இருக்கும் ஒரு செடியின் இலையை கொண்டு தனது உடலை இலைமறை காய்போல் மறைத்தும் காட்டியும் போஸ் தந்திருக்கிறார்.

08:55:01 on 21 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

’ஜுராசிக் பார்க்’ உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பல திரைப்படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். இவருடைய வளர்ப்பு மகன் மைக்கேலா ஆபாச படங்களில் நடிக்கவும், ஆபாச படங்களை தயாரிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் மற்றும் அவரது மனைவி கேட் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

07:55:02 on 21 Feb

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.68, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.27-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:39:49 on 21 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

IIFL Wealth Hurun India கோடீஸ்வரர்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. தற்போது 2019ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 9 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் சன் நெட்வொர்க்கின் உரிமையாளர் கலாநிதிமாறன் 19,100 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளார்.

06:55:01 on 21 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

2022ஆம் ஆண்டிற்கான மகளிர் ஆசியகோப்பை கால்பந்து போட்டிகளை இந்தியாவில் நடத்தலாம் என ஆசிய கால்பந்து கூட்டமைப்பு(ASF) தெரிவித்து உள்ளது. இதற்காக நவி மும்பையில் உள்ள டி ஒய் பாட்டீல் ஸ்டேடியம், அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ் ஸ்டேடியா அரினா மற்றும் கோவாவின் ஃபடோர்டா ஸ்டேடியம் ஆகிய மைதானங்களை தேர்வு செய்துள்ளது.

05:56:02 on 21 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

முகத்தை நன்கு சுத்தம் செய்ய மறந்துவிடாதீர்கள். உங்கள் முகத்தில் எண்ணெய் வழிவதால், எந்நேரமும் அதனை பேப்பர் வைத்து துடைத்துக் கொண்டே இருக்கனும் என்பது அவசியமில்லை. அதற்குப் பதிலாக, முகத்தை சுத்தம் செய்ய உதவும் பொருட்கள் நிறைய மார்க்கெட்டில் கிடைக்கப்பெறுகின்றன.

10:55:02 on 20 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

திருவண்ணாமலை மாவட்டம் கருங்காலி குப்பம் கிராமத்தில், தனியார் பள்ளி அருகே பல ஆண்டுகளாக பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார் 70 வயதான முதியவர் வேலு. இவர், கடைக்கு வரும் சிறுமிகளுக்கு இலவசமாக சாக்லேட் மற்றும் மிட்டாய்களை கொடுத்து, கடைக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவில் ஈடுபட்டும் வந்துள்ளார்.

09:57:02 on 20 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

கர்நாடகாவில், கடக் மாவட்டத்தில் உள்ள லிங்காயத் மடத்தின் தலைவராக முஸ்லிம் மதத்தை சேர்ந்த திவான் ஷரீப் முல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர், 12ம் நூற்றாண்டில் தோன்றிய லிங்காயத் சீர்திருத்தவாதியான பசவண்ணாவின் போதனைகளை பின்பற்றி வந்துள்ளனர்.

08:57:01 on 20 Feb

மேலும் வாசிக்க தினமலர்

வெற்றி மாறன் தயாரிக்கும் படம் சங்கத்தலைவன். இந்த படத்தில் சமுத்திரகனி மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரம்யா ஆகியோர் நடிக்கின்றனர். சமுத்திரகனி தொழிலாளர்களின் நலனுக்காக போராடும் சங்கத் தலைவனாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

08:25:02 on 20 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில் இரண்டு தலித்துகள் இருசக்கர வாகன நிறுவனத்தில் இருந்து பணம் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்டனர். இதையடுத்து, அங்கு பணிபுரியும் ஊழியர்களால் இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விடியோ வைரலான பிறகே, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

07:57:01 on 20 Feb

மேலும் வாசிக்க தினமணி

”கிரேன் விழப்போவதைப் பார்த்த கிருஷ்ணா, அங்கிருந்த ஒரு துணை நடிகையோட கையைப் புடிச்சு தள்ளிவிட்டுட்டார். அவங்கள காப்பாத்திட்டு, இவர் மாட்டிக்கிட்டார். அந்த நடிகை, `அண்ணா நீங்களும் வந்துருங்கண்ணான்னு சொல்றதுக்குள்ள இப்படி நடந்துருச்சு'ன்னு விபத்தை விளக்கினார் ஆர்டிஸ்ட் ஒருவர்.

07:27:01 on 20 Feb

மேலும் வாசிக்க விகடன்

”100 கோடி, 200 கோடி ரூபாய் என மார்தட்டிக் கொள்ளும் நாம், கடைநிலை ஊழியனுக்கான ஒரு பாதுகாப்பை அளிக்க முடியாத ஒரு துறையாக இருப்பது அவனமாத்துக்குரியது. தனிப்பட்ட நபராக எனக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது. என்னால் முடிந்தது இந்தக் குடும்பத்தினருக்கும், காயமுற்றவர்களுக்கும் ஒரு கோடி ரூபாயை அறிவிக்கிறேன்.” என கமல் கூறியுள்ளார்.

06:57:01 on 20 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ராமேஸ்வரத்திலிருந்து 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அத்துமீறி வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஜேசு என்ற மீனவருக்கு வலது கண்ணில் காயம் ஏற்பட்டது.

06:27:03 on 20 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

உத்தர பிரதேசத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ”தேர்வு அறையில் நீங்கள் காப்பி அடிக்கலாம். விடைத்தாளுடன் 100 ரூபாய் இணைத்து விடுங்கள். ஆசிரியர்கள் உங்களுக்கு கண்மூடித்தனமாக மதிப்பெண்கள் அளிப்பார்கள்” என பேசியுள்ளார் ஒரு ஆசிரியர்.

05:57:02 on 20 Feb

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

அண்மையில் உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நடிகை யோகிபாபுவின் மணவாழ்க்கையில் டிக்டாக் வடிவில் உள்ளே புகுந்த குட்டிச்சாத்தான் ஒன்று கும்மி அடித்து வருவதாக திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

05:25:01 on 20 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

காவிரி டெல்டா வேளாண் மண்டல மசோதாவின்படி துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது ஆலை, ஒருங்கிணைந்த எக்கு ஆலை அல்லது இரும்பு உருக்காலை, செம்பு, அலுமினிய உருக்காலை, மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கை எரிவாயு ஆய்வு எடுத்தல், பிரித்தெடுத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.

04:55:01 on 20 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

சென்னை ஐஐடியில் விண்வெளி பொறியியல் துறை ஆய்வு கூடத்தில் மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சிக்காக சென்ற மாணவி அங்கிருந்த கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு சுவற்றில் செல்போன் கேமரா போல் ஒன்று தெரிவிதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கூச்சலிட்டுள்ளார்.

04:25:01 on 20 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

சிரியாவின் 'இட்லிப்' நகரில் வசிக்கும் ஒரு தந்தை, தன் நான்கு வயதுக் குழந்தையிடம், 'குண்டு விழுந்தால் பயப்படக் கூடாது. இது ஒரு சிரிக்கும் விளையாட்டு. ஒவ்வொரு முறை குண்டு விழும்போதும் சிரிக்க வேண்டும்' என்று கூறி, 'பூம்' என்கிறார், அதற்கு அந்த குழந்தை சிரிக்கிறது.” இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

03:55:01 on 20 Feb

மேலும் வாசிக்க தினமலர்

கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் கர்ணன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

03:27:02 on 20 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பிக் பாஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷன். இவர் அதே துறையை சேர்ந்த சனம் செட்டி என்பவரை காதலித்து வந்ததையும், இவர்களின் பிரச்சினை காவல்நிலையம் வரை சென்றதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் இது குறித்து உருக்கமான கடிதம் ஒன்றை பதிவாக வெளியிட்டுள்ளார் தர்ஷன்.

02:57:01 on 20 Feb

மேலும் வாசிக்க சினி உலகம்

”21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பைத்தியக்காரத்தனமான சரக்கு, சேவை வரியின் பெயரால் முதலீட்டாளர்களை பயமுறுத்த வேண்டாம். சரக்கு, சேவை வரி மிகவும் சிக்கலானது. எந்த படிவத்தை நிரப்ப வேண்டும் என்று யாருக்கும் தெரியவில்லை.” என பாஜகவின் மூத்த தலைவவரும், எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

02:27:02 on 20 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்ட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை தாக்கல் செய்தார்.

02:16:53 on 20 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அமெரிக்க மாகாணமான யூட்டாவின் மாநில செனட் சபை, ஒரே ஆண் பல பெண்களுடனோ, ஒரே பெண் பல ஆண்களுடனோ, ஒரே சமயத்தில் திருமண உறவில் இருப்பதை பெரிய குற்றமில்லை என்று அறிவிக்கும் சட்டத்துக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

01:57:01 on 20 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஸ்மார்ட்ஃபோன்களை அதிகம் பயன்படுத்துவது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜெர்மனியில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக போதைக்கு அடிமையானவர்களின் மூளையில் என்னவிதமான மாற்றங்கள் ஏற்படுமோ அதே வகையில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது ஆராய்ச்சியாளர்களையே அதிர வைத்துள்ளது.

01:27:01 on 20 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சேலத்தில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 40 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாகக் கூறி, 1500 முதலீட்டாளர்களிடம் 16 கோடி ரூபாய் சுருட்டிய கொண்டப்பநாயக்கன்பட்டி மாருதி நகரைச் சேர்ந்த தினகரன் அன்பரசு, குரங்குசாவடியைச் சேர்ந்த கந்தகுமார், நாராயண நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

12:57:01 on 20 Feb

மேலும் வாசிக்க நக்கீரன்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, வோடஃபோன்-ஐடியா 2,500 கோடி ரூபாயை அரசுக்கு செலுத்தியிருக்கிறது. இருப்பினும், மீதி இருக்கும் தொகையை எப்படி அந்த நிறுவனம் செலுத்தும் எனத் தெரியவில்லை. ஏற்கெனவே ஜியோவுடனான போட்டியில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துவருகிறது வோடஃபோன்-ஐடியா நிறுவனம்.

12:27:01 on 20 Feb

மேலும் வாசிக்க விகடன்

இந்தியாவில் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்து தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டுள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியா குடரெஸ் கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், எதிர்காலத்தில் இந்திய முஸ்லிம்களை நாடற்றவர்களாக ஆக்கக் கூடுமென்றும் அவர் கூறியுள்ளார்.

11:57:02 on 20 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா சுவரில் மோதி காயம் ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்ததாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வினய் ஷர்மா சிறை கம்பிகளுக்கு இடையே தனது கையை விட்டு முறிவு ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

11:27:01 on 20 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

உ.பி.யில் சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தின் போது 20க்கும் மேற்பட்டவர்கள் சுடப்பட்டு உயிரிழந்தனர். இது குறித்து பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ”காவல்துறையினரின் குண்டுகளுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. கலவரம் செய்தவர்களின் துப்பாக்கிக் குண்டுகளால்தான் பலியானார்கள்.” என்றார்.

10:57:01 on 20 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கர்நாடகா மாநிலம் பிடதி ஆசிரமத்தில், சீடர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு, நித்தியானந்தா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எனினும் வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகாமல் இருந்து வந்தநிலையில், அவரை உடனடியாக கைது செய்ய கர்நாடக ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

10:27:02 on 20 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

7வது பெண்கள் டி-20 உலக கோப்பை தொடர் வருகிற 21ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, நியூசிலாந்து, வங்கதேச அணிகளும் குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

09:57:02 on 20 Feb

மேலும் வாசிக்க தந்தி டிவி

சென்னையில் சிஏஏ.வுக்கு எதிராக தீர்மானம் இயற்ற வலியுறுத்தி தடையை மீறி ஊர்வலம் நடத்தியதாக 1500 பெண்கள், 39 இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் உட்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது குற்றவியல் சட்ட திருத்தச் சட்டம் உட்பட இரு பிரிவுகளில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

09:34:00 on 20 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாகர்கோவிலில் போராட்டம் நடத்திய 2,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி முற்றுகைப் போராட்டம் நடத்தியதாக 1,300 பெண்கள் உட்பட 2,500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

09:20:59 on 20 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பூந்தமல்லி அருகே இந்தியன்-2 படப்பிடிப்புக்காக நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி ஃபிலிம்சிட்டியில் செட் அமைக்கும் பணியின் போது கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் பலத்த காயமடைந்தனர்.

09:15:49 on 20 Feb

மேலும் வாசிக்க தினகரன்

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் சென்ற கண்டெய்னர் லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

09:13:27 on 20 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

நமது தாய் மற்றும் பாட்டி என்று முன்னோர்கள் தாங்கள் கர்ப்பம் அடைந்த காலத்தில் வீட்டில் சில பரிசோதனைகளைச் செய்தும், கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட அறிகுறிகளை வைத்தும், தங்களது கர்ப்பத்தை உறுதி செய்து கொண்டனர் என்பது உண்மை. எனினும், இன்றைய காலகட்டத்தில் அத்தகைய பழமையான பரிசோதனை முறைகள் பல நடைமுறையில் இல்லை.

08:55:01 on 20 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

சவுத் கரோலினாவில் (South Carolina) உருவாக்கப்பட்ட போயிங் 787 டிரீம்லைனர் (Dreamliner) உள்ளிட்ட விமானங்களில் கழிவுப் பொருள்கள் அகற்றப்படாமல் அலட்சியமாக போடப்பட்டது என்று வெளியான தகவல் போயிங் நிறுவனத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

07:55:01 on 20 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.

06:57:01 on 20 Feb

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமூகப்பணியாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

05:57:02 on 20 Feb

மேலும் வாசிக்க தினமணி

ஆர்யா தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படம் ஆர்யா நடிக்கும் 30-வது படம். 1970-காலகட்டத்தில் நடக்கும் குத்துச் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கு சல்பேட்டா என்று பெயரிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

10:57:01 on 19 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

முதலில் விரிப்பு விரித்து கிழக்குத் திசை அல்லது மேற்குத் திசை நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை உள்இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும்.

09:55:01 on 19 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

தவறான தகவல்களை அளித்து ஆதார் அடையாள அட்டையை பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், ஹைதராபாத்தில் வாழ்ந்துவரும் மொஹம்மத் சத்தார் கான் என்பவர், இது தொடர்பாக தனக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆதார் பிராந்திய அலுவலகம், தான் இந்திய குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

08:57:01 on 19 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

டெல்லி ஷாகின் பாக் பகுதியில் சிஏஏ.,க்கு எதிராக சாலையை மறித்து போராட்டம் நடத்துபவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் குழு, எதிர்ப்பு தெரிவிக்க உங்களுக்கு உரிமையுள்ளது போல, சாலையை பயன்படுத்துபவர்களுக்கும் உரிமையுள்ளது என பேச்சு நடத்தியது.

08:27:01 on 19 Feb

மேலும் வாசிக்க தினமலர்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி, மதுரையில் ஜமாத்துல் உலமாக்கள் சபை சார்பில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் NRCக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர்.

07:55:02 on 19 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படத்திற்கு ஜகமே தந்திரம் என்று பெயிரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் மே 1ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

07:25:01 on 19 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

உத்திரப்பிரதேச மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதோஹி தொகுதி எம்எல்ஏ ரவீந்திர நாத் மிஷ்ரா உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

07:09:07 on 19 Feb

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை துறைமுக கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 18ம் தேதி வந்த எம்.வி. மேக்னட் (m.v. magnate) கப்பலில் 19 சீனர்கள் இருந்ததாகவும், அவர்களிடம் துறைமுக மருத்துவ குழுவினர் நடத்திய சோதனையில் 2 பேருக்கு லேசான காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

06:27:01 on 19 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இயக்குனர் அட்லி சினிமாவில் ஆக்டிவாக இருந்தாலும், தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை தவறவில்லை. அந்த வகையில் இன்று காலையிலேயே ப்ரியா அவர் வளர்க்கும் நாயுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘My world love you both ’ என்று அட்லி கூறியுள்ளார்.

05:57:01 on 19 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

கோவை மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் பணியாற்றும் அரசு பஸ் டிரைவர்கள் முன் இருக்கையில் அமரும் பெண்களிடம் பேசக்கூடாது. மேலும் பேனட்டில் பெண்களை அமர வைக்கக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவையடுத்து அரசு பஸ் டிரைவர்கள் தற்போது பெண்களை பேனட்டில் அமர அனுமதிப்பது இல்லை.

05:25:01 on 19 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

கேரளாவில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், வழக்கறிஞருமான பிரவீன் குமார் தலைமையிலான கட்சி தொண்டர்கள், முக்கம் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வைத்து மாட்டு இறைச்சி சமைத்து விநியோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

04:57:01 on 19 Feb

மேலும் வாசிக்க தினமலர்

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அச்சம் தெரிவித்துள்ளார். இருப்பினும், பிரதமர் மோடியைப் பற்றி பேசிய டிரம்ப், அவர் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.

04:27:01 on 19 Feb

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை குவித்து, ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் மீண்டும் பேட் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சமித் டிராவிட், தன்னுடைய இரண்டாவது இரட்டை சதத்தை நிறைவு செய்ய 146 பந்துகள் மட்டுமே எடுத்துகொண்டார். இதில் 33 பவுண்டரிகள் அடித்தார்.

03:57:01 on 19 Feb

மேலும் வாசிக்க NDTV தமிழ்

‘வலிமை’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் அஜித் டூப் இல்லாமல் பைக் ஓட்டும் ரிஸ்க்கான காட்சியில் நடித்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக பைக்கில் இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

03:27:01 on 19 Feb

மேலும் வாசிக்க நக்கீரன்

பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகுப்பு வழங்கப்படும் என்றும், இந்த உதவித் தொகுப்பில் மேற்கல்வி பயிலுதல், திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு, சுய தொழில் செய்தல் போன்றவை அடங்கும் என்றும், அப்பெண்களுக்கு 50 வயது நிறைவடையும் வரை இவ்வுதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

02:57:01 on 19 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

மேலும் வாசிக்க