View in the JustOut app
X

நடிகர் அஜித்குமார் கொரோனா நிவாரணத்துக்காக 1.25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். பிரதமரின் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும் அவர் வழங்கியுள்ளார். மேலும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக ஃபெப்சி அமைப்புக்கு 25 லட்சம் ரூபாயும் நிதியுதவி அளித்துள்ளார்.

09:57:01 on 07 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘டெல்லி மற்றும் நாடாளுமன்றத்தை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 20 ஆயிரம் கோடியை மத்திய அரசு ரத்து செய்து, அதனை கொரோனா நிவாரண பணிகளுக்காக பயன்படுத்த வேண்டும்.’ என குறிப்பிட்டுள்ளார்.

08:57:01 on 07 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

மாஸ்டர் படத்தின் டீசர் எப்போது என்பது தான் தற்போது பெரிய கேள்வியே. அந்த அளவிற்கு ரசிகர்கள் ஆவலாக இருக்க, நடிகர் மகேந்திரன் ஏப்ரல் 14 நல்ல செய்தி வரும் என டுவிட்டரில் குறிப்பிட, உடனே ரசிகர்கள் மாஸ்டர் டீசர் என கமெண்ட் செய்ய தொடங்கி விட்டனர்.

08:27:02 on 07 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள பட்டாபிராம், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மணவாளன் என்பவர், மது கேட்டு அடம்பிடித்து கிணற்றுக்குள் குதித்துள்ளார். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், விடிய விடிய போராடி அவரை உயிருடன் மீட்டுள்ளனர்.

07:57:01 on 07 Apr

மேலும் வாசிக்க விகடன்

”234 பேர் பாதிக்கப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு 966 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்துக்கு 510 கோடி தானா? மற்ற மாநிலத்துக்கு ஏன் அதிக நிதி ஒதுக்கினீர்கள் என்று கேட்கவில்லை; தமிழகத்துக்கு ஏன் குறைவாக ஒதுக்குகிறீர்கள் என்று தான் கேட்க விரும்புகிறேன்.” என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

07:27:01 on 07 Apr

மேலும் வாசிக்க தினமணி

நடிகர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். இவர் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர், நீங்க குழந்தை நட்சத்திரமாக இருந்த போது உண்மையாவே விஜய் மீது முட்டை அடித்தீர்களா என்று கேட்டதற்கு, ஆமாம் என்று பதில் அளித்துள்ளார் மகேந்திரன்.

06:57:02 on 07 Apr

மேலும் வாசிக்க Behind Talkies

அச்சடித்த காகிதம், ரூபாய் நோட்டுகள், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் கொரோனா வைரஸ் 3 மணி நேரத்திற்கு குறைவாக உயிர் வாழும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மரப்பலகை, மற்றும் துணிகளில் 2 நாட்களுக்கும் அது உயிரோடு இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

06:27:01 on 07 Apr

மேலும் வாசிக்க Behind Woods News

அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளவாசிகள் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அந்த செய்தி தொலைக்காட்சி புகைப்படம் உண்மை இல்லை எனவும் எடிட் செய்யப்பட்டது எனவும் மத்திய அரசின் தகவல் பணியகத்தின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

05:57:01 on 07 Apr

மேலும் வாசிக்க Asiavillenews

ஊரடங்கு உள்ளிட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளையும் ஒரே நேரத்தில் தளர்த்த வேண்டாம் என்றும், படிப்படியாக தளர்த்துவது குறித்து சிந்திக்குமாறும் உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் பேரிடர் காலப் பிரிவு தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

05:27:01 on 07 Apr

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய உபெர் நிறுவனம் ப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் ஒன்றிணைந்துள்ளது. இந்த சேவைக்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் சேவையின் மூலம் கிடைக்கும் வருவாய் முழுக்க ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் என்றும் உபெர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

04:57:01 on 07 Apr

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் எஸ்.ஆர்.கண்டிகை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்வரின் மருமகள் பாரதி என்பவர் மைதா மாவு என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தில் போண்டா செய்து குடும்பத்தினருக்கு கொடுத்து விட்டு, தானும் சாப்பிட்டுள்ளார்.

04:27:01 on 07 Apr

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருத்துவர்கள் அல்லாத பலர், பல்வேறு சிகிச்சை முறைகளை, சமூக வலைதளங்கள் வழியாக பரப்பி வருகின்றனர். இதில் பல, ஆயுஷ் அமைச்சகம் அங்கீகரிக்காத மருத்துவ முறைகள். இந்நிலையில், பாரம்பரிய மருத்துவ முறைகளை பரிந்துரைத்து பிரசாரம் செய்ய, ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது.

03:58:14 on 07 Apr

மேலும் வாசிக்க தினமலர்

1630-ஆம் ஆண்டில் பெரு நாட்டில் வைஸிராய் ஒருவரின் மனைவி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மூலிகை வைத்தியர்கள் சின்கோன் என்ற இடத்தில் உள்ள மரத்தின் பட்டையில் இருந்து மருந்து தயாரித்து கொடுத்து குணப்படுத்தினர்.

03:57:01 on 07 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கொரோனா தொடர்பான வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்புவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தியை ஒரே நேரத்தில் இனி ஒரு நபருக்கு மட்டுமே ஷேர் செய்ய முடியும். வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தியை ஒரே நேரத்தில் இனி 5 நபர்களுக்கு அனுப்ப முடியாது.

03:27:01 on 07 Apr

மேலும் வாசிக்க தினகரன்

பிளாக் டீயை பருகுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும், அதனால் நிமோனியா, இன்புளுவென்ஸா, கொரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் இலங்கை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். தேயிலை ஏலத்தினை இணையதள மூலமாக மேற்கொள்ள தீர்மானித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

02:57:01 on 07 Apr

மேலும் வாசிக்க தந்தி டிவி

கொரோனா வைரசால் பங்கு சந்தையில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து, இந்தியாவின் முதல் பணக்காரரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு கடந்த 2 மாதங்களில் 28% வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது, நாள் ஒன்றுக்கு ரூ.2,280 கோடி வீதம் 2 மாதங்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 400 கோடி குறைந்துள்ளது.

02:27:02 on 07 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கே சென்று விட்டனர். இந்நிலையில், கைதி படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்த KPY தினாவும் தனது சொந்த ஊருக்கே சென்று விட்டார். அங்கு தனது வீட்டில் தனது சொந்த மாடுகளுக்கு தன் கையால் பால் கறந்து வருகிறார்.

01:57:01 on 07 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

உலக சுகாதார தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா அச்சுறுத்தலுக்கு எதிரான போரில் தைரியமாக முன்னிலை வகிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் நமது நன்றியை மீண்டும் உறுதிப்படுத்துவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

01:27:02 on 07 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

பாஜகவின் 40வது ஆண்டு தினத்தில் ஒரு வேளை உணவை விட்டுக்கொடுத்து அதை ஏழைகளுக்கு வழங்குவோம் என அக்கட்சியின் தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார். மேலும் அவர், கொரோனாவுக்கு எதிராக பணியாற்றுபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மக்களிடம் கையெழுத்து பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

12:57:01 on 07 Apr

மேலும் வாசிக்க தினமலர்

நாமக்கல் கொசவம்பட்டி தேவேந்திர நகா் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன் (46). இவருக்கு வத்சலா (42) என்ற மனைவியும், மணிகண்டன் (21) என்ற மகனும், மோனிஷா (19) மற்றும் 17 வயதுடைய மகள்கள் உண்டு. இந்நிலையில் காதலுக்கு இடையூறாக இருந்த மோனிஷாவை கொன்று நாடகமாடிய தங்கை மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.

12:25:01 on 07 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கொரோனா தொடர்பாக அமிதாப் பச்சன் பதிவுகளைப் பகிர ஆரம்பித்ததிலிருந்து இணையத்தில் நையாண்டி செய்பவர்களுக்கு வேலை அதிகமாகிவிட்டது. தற்போது, 9 மணிக்கு 9 நிமிடங்கள் இந்தியாவில் எப்படி இருந்தது என்ற போலியான செயற்கைக்கோள் புகைப்படத்தை பகிர்ந்து சிக்கியுள்ளார் அமிதாப்.

11:57:01 on 07 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

“நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது நாடாளுமன்ற உறுப்பினரின் அதிகாரத்தைக் குறைப்பது போலவும், அதிபர் ஆட்சி முறை போன்ற ஒன்றை மறைமுகமாகப் புகுத்துவதுமாக உள்ளது” என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் சாடியுள்ளார்.

11:27:01 on 07 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நட்பு நாடு என்கிற அடிப்படையில் அமெரிக்காவுக்கு இந்தியா மருந்து அனுப்பும் என நம்புகிறேன். மருந்தை அனுப்பவிலையென்றாலும், பரவாயில்லை; ஆனால் அதற்கான விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும். ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படலாம்” என்றார்.

10:57:01 on 07 Apr

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகம் முழுவதும் இன்று முதல் ரேசன் கடைகளில் ஏப்ரல் மாதத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் ஆகிய பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு இதன்மூலம் கிடைக்கும்.

10:27:02 on 07 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் உடல்நிலை மோசமானதால், சாதாரண வார்டிலிருந்து தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார் என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

09:57:01 on 07 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்த நிலையில் உயிரிழப்பு 75 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. ஸ்பெய்னில் உயிரிழப்பு 13,000 கடந்த நிலையில் இத்தாலியில் உயிரிழப்பு 16,000 தாண்டியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 26-வது இடத்தில் உள்ளது.

09:27:02 on 07 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பையிலுள்ள சிகப்பு விளக்குப் பகுதி என்று அழைக்கப்படும் காமதிபுரா பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் அவர்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

08:57:01 on 07 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

நம் வியாபாரம் அல்லது நிர்வாகம் சார்ந்த புத்தகங்களையோ, ebook, video, audio book உள்ளிட்ட ஏதோ ஒரு வடிவத்தில் படித்தோ, கேட்டோ நம்மை sales, marketing, HR, personal growth போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் நம்மை வலுப்படுத்திக்கொள்வதன் மூலம், கொரோனாவுக்கான பிந்தைய சவால்களைச் சந்திக்க நாம் தயாராக இருப்போம்.

07:57:01 on 07 Apr

மேலும் வாசிக்க விகடன்

வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும். மேலும் சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.

06:57:01 on 07 Apr

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, கோழி இறைச்சி, நண்டு, இறால் போன்றவைகளும் பலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். பசுவின் பாலில் இருக்கும் ‘ஆல்பா எஸ்-1 கேஸீன்’, ‘லாக்டோ க்ளோபுலின்’ போன்றவை அலர்ஜிக்கு காரணமாக அமைகின்றன.

05:57:01 on 07 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

பிரபல நடிகை ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அவரது பெயர் பேட்ரிசியா பாஸ்வொர்த் (86). சில தினங்களுக்கு முன்பு இவருக்கு காய்ச்சல் அதிகமானதால் பரிசோதனை செய்தனர். அப்போது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி பேட்ரிசியா பாஸ்வொர்த் மரணம் அடைந்தார்.

10:57:01 on 06 Apr

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

ரஜினியோடு தொடர்பில் இருப்பதால் ராஜேந்திரபாலாஜி மீது கட்சி நடவடிக்கை என்ற நிலையில் இந்து கோயில் அர்ச்சகர்களுக்கு ராஜேந்திரபாலாஜியின் நிதி உதவி அவரது பாஜக பாசத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்றும் விருதுநகர் மாவட்டத்தில் பேச்சு கிளம்பியிருக்கிறது.

09:57:01 on 06 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தெலங்கானாவில் ஊரடங்கு உத்தரவு ஜுன் 3ஆம் தேதி வரை நீட்டிப்பு இல்லை என அம்மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு மட்டுமே நீட்டிக்க பரிசீலனை செய்வதாக முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

08:57:01 on 06 Apr

மேலும் வாசிக்க தினகரன்

''99.99% இந்துக்கள் கோமியம் குடிப்பதில்லை, கரோனா வைரஸை கோமியம் குணப்படுத்தும் என்று அவர்கள் நம்புவதுமில்லை. 99.99% முஸ்லிம்கள் தப்லீக் ஜமாஅத் நிகழ்வை ஆதரிக்கவில்லை. கோவிட் 19 வைரஸ் மதச்சார்பற்றது. அது மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிப்பதில்லை. அது சமத்துவத்தை நம்புகிறது.” என நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.

08:27:02 on 06 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

தொலைக்காட்சி உலகில் எப்போதும் நம்பர் 1 இடம் என்றால் அது சன் டிவி தான். இந்தியளவில் அனைத்து சேனல்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்து வருகின்றது. தற்போது கொரோனா பாதிப்பால் மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். இதனால் கண்டிப்பாக TRP அடித்தே ஆகவேண்டும் என சன் மற்றும் விஜய் டிவிக்கு இடையே கடும் போட்டி நடந்து வருகிறது.

07:57:01 on 06 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

தமிழகத்தில் நோய் அறிகுறி இல்லாமலேயே சிலருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர், தமிழகத்திற்கு முதற்கட்டமாக 500 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது.

07:27:02 on 06 Apr

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

நாட்டு மக்கள் அனைவரும் விளக்கேற்றிய நேரத்தில், உத்தரப் பிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்ட பாஜக மகளிரணித் தலைவி மஞ்சு திவாரி கைத்துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டு அந்தக் காட்சியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

06:55:01 on 06 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர், சென்னையில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 110ஆக உயர்ந்துள்ளது என்றும், தமிழகத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 621-ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

06:30:37 on 06 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலக அளவில் அதிகபட்சமாக இத்தாலியில் 15,887 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 9,620 பேரும், ஸ்பெயினில் 13,055 பேரும்,ஜெர்மனியில் 1,584 பேரும், பிரான்சில் 8,078 பேரும், சீனாவில் 3,331 பேரும் உயிரிழந்துள்ளனர்.

05:57:01 on 06 Apr

மேலும் வாசிக்க தினகரன்

கொரோனாவுக்கு எதிராக ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து பயனளிப்பதாக போதிய சான்று இல்லை என்று ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பரிந்துரைப்பது பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

05:37:46 on 06 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் அங்கு, 47 ஆயிரத்து 806 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 4,934 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பாதிப்பு ஒரு பக்கம் கழுத்தை நெரிக்க, இங்கிலாந்து, பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

05:27:01 on 06 Apr

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

“ஆரிய இந்துத்துவ பார்ப்பனிய வேதமதம்' என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த நம்பிக்கை குப்பைகள் எவ்வளவு 'மூடத்தனமானது' என்பதை உலகிற்கே 'விளக்கு' போட்டு காண்பித்த பிரதமருக்கு நாம் ஏன் நன்றி சொல்லக்கூடாது? பாசிட்டிவாக யோசிப்போமே!!!” என்று சூசகமான விமர்சனத்தை திருமுருகன் காந்தி முன்வைத்துள்ளார்.

04:57:02 on 06 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சர்தார் வல்லபாய் படேலின் சிலை விற்கப்படும் என்றும் விலை ரூ.30,000 கோடி என்றும் OLX பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. ஒற்றுமையின் சிலை விற்கப்படும் என்று பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலே அந்த பதிவு OLX பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.

04:27:01 on 06 Apr

மேலும் வாசிக்க Asiavillenews

ஜப்பான் படையினர் நடத்திய பியர்ல் ஹார்பர் தாக்குதல், நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்ப்பு ஆகியவற்றின் போது அமெரிக்க மக்கள் சந்தித்த துயர நிலையை மக்கள் இந்த வாரம் சந்திக்கப் போகிறார்கள் என்று அமெரிக்க அரசின் தலைமை அறுவைசிகிச்சை நிபுணர் ஜெரோம் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

03:57:01 on 06 Apr

மேலும் வாசிக்க Behind Woods News

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சுகாதாரத்துறை மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஒருவேளை வைரஸை எதிர்கொள்ளும் அளவிற்கு மோடி அரசிடம் திட்டங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லையா என்ற கேள்வியும், சந்தேகமும் பரவலாக எழத் தொடங்கி உள்ளது.

03:27:01 on 06 Apr

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

மனித சமூகத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டு வந்தன. ஆனால், இந்தக்கூற்றைப் பொய்யாக்கும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் அமைந்துள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வரும் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

02:57:01 on 06 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

பலவிதமான வைரஸ், பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகளால் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்தியர்களின் உடலில் குறிப்பிட்ட T-செல்கள் உருவாகின்றன. அந்நிய வைரஸிடமிருந்து, நம் உடலை பாதுகாப்பதில் போர் வீரரனைப் போன்று, T-செல்கள் செயல்படுகின்றன.

02:27:02 on 06 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

மதுரை மாவட்டம் கருப்பாயூரணியில் கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தவர் அப்துல்ரஹீம் (70). மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கறிக்கடைகளை மூட அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், அதனையும் மீறி அப்துல் ரஹீம் கடையைத் திறந்து வைத்திருந்ததாகவும், இதனால் கடைக்கு வெளியே மக்கள் கூட்டம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

01:57:01 on 06 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

அரியலூர் மாவட்ட நிர்வாகம் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே ஒருவர் வீட்டை விட்டு வெளியே வந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்க, மூன்று நிறத்தில் அனுமதி அட்டையை அறிமுகப்படுத்தியதோடு, பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று அந்த அட்டையை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.

01:27:01 on 06 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காய்கறிகளுக்கு இடையே குட்கா மற்றும் புகையிலை போதைப் பொருள்களை மறைத்துவைத்து கடத்தி, விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்துக்கும் குட்கா கடத்தியது தெரியவந்ததால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

12:57:01 on 06 Apr

மேலும் வாசிக்க விகடன்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது 13 லட்சத்தை நெருங்கி வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,444 ஆக உள்ளது. அதே நேரம் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

12:27:01 on 06 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கொரோனா நிவாரண தொகையை வங்கியில் செலுத்துவதாகக் கூறி வங்கிக் கணக்கு விவரங்கள் உட்பட எந்தத் தகவலையும் போனில் யார் கேட்டாலும் தெரிவிக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்து உள்ளனர்.

11:57:01 on 06 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

செங்கல்பட்டில் ரயில்வே குடியிருப்பில் வசித்து வந்த சிவசங்கர் மற்றும் அவரது நண்பர்களான பிரதீப், சிவராமன் ஆகியோர் ஊரடங்கு காரணமாக மது கிடைக்காததால் போதைக்காக வார்னிஷில் குளிர்பானத்தை கலந்து குடித்துள்ளனர். இதனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 பேரும் உயிரிழந்தனர்.

10:55:01 on 06 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வரும் 14 ஆம் தேதி முடிவடையுள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் 14ஆம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது பற்றி இப்போது எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

10:27:02 on 06 Apr

மேலும் வாசிக்க தந்தி டிவி

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 95 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 58 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. நெல்லையில் 38 பேருக்கும், ஈரோட்டில் 32 பேருக்கும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

09:57:01 on 06 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 675 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூவாயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை கடந்த 4 நாட்களில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

09:27:01 on 06 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகின்றன என ப.சிதம்பரம் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது எனவும், கொரோனாவை கட்டுப்படுத்த எதிர்க்கட்சி தலைவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் கூறினார்.

09:03:48 on 06 Apr

மேலும் வாசிக்க தினகரன்

வட மாநிலங்களில் பல இடங்களிலும் விளக்குகள் எரியவிட்டதோடு பட்டாசுகளும் வெடித்ததால், நகரம் புகை மண்டலம் சூழ காட்சியளித்தது. சில இடங்களில் விளக்குகளோடு கோ கொரோனா என்றபடி பொதுமக்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

09:00:51 on 06 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

வட மாநிலங்களில் பல இடங்களிலும் விளக்குகள் எரியவிட்டதோடு பட்டாசுகளும் வெடித்ததால், நகரம் புகை மண்டலம் சூழ காட்சியளித்தது. சில இடங்களில் விளக்குகளோடு கோ கொரோனா என்றபடி பொதுமக்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

08:56:20 on 06 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வீடுகளில் முடங்கி இருக்கும் பொதுமக்கள் வைரஸ் தொடர்பாக வெளியான ஹாலிவுட் மற்றும் உள்ளூர் படங்களை தேடிப் பார்த்து வருகிறார்கள். கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான "கன்டஜியன்' திரைப்படம் கொரோனா வைரஸை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.

07:57:01 on 06 Apr

மேலும் வாசிக்க தினமணி

முருங்கை கீரையில் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் ஏராளம் இருக்கின்றன. முருங்கை இலையில் இருந்து டீயும் தயாரிக்கப்படுகிறது. இது ‘மோரிங்கா தேநீர்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் சாதாரண கீரையில் இருப்பதை விட மூன்று மடங்கு இரும்பு சத்து நிறைந்திருக்கிறது.

06:55:01 on 06 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.

05:57:01 on 06 Apr

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

கொரோனா தொற்று பரவலையும், இஸ்லாமிய இயக்கங்களையும் இணைத்து சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பரப்பியதற்காகப் பிரபல சமூக வலைத்தள பிரமுகரான மாரிதாஸ் மீது நெல்லை காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

10:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

”தினமும் மூன்று வேளையும் குடும்பத்தினர் அத்தனை பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறோம். இப்போதைய சூழ்நிலையில், பெரும்பாலானவர்களுக்கு கையில் காசு இருக்கும். ஆனால் வைத்தியம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். அதனால், வீட்டிலேயே இருப்போம்...பாதுகாப்பாக இருப்போம்” என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

09:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

நடிகை ஸ்ரேயா சமையலறையில் தன் கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து “ஆண்கள் தங்கள் மனைவிக்கு எவ்வாறு உதவுகிறார்கள் என்ற வீடியோவை வெளியிட வேண்டும் என கூறி நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, நடிகர் ஆர்யா, நடிகர் அல்லு அர்ஜூன் ஆகியோரை சேலஞ்ச் டாஸ்க் மூலம் அழைத்திருக்கிறார்.

08:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

கொரோனா பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்தவர்கள், மாவட்டம் ரீதியாக சிகிச்சை பெறக்கூடிய, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் பட்டியல்களை வெளியிட்டுள்ள சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், இனிவரும் பாசிட்டிவ் ரிப்போர்ட்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

07:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கொரோனா வைரஸ் தொற்றியவர்களுக்குச் சிகிச்சையளிக்க, 112 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதில் கோவையில் கற்பகம், கே.எம்.சி.எச்; கன்னியாகுமரியில் மூகாம்பிகை மருத்துவ கல்லுாரி, மதுரையில் வேலம்மாள் மருத்துவ கல்லுாரி உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

06:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

தமிழகத்தில் 30 லட்சம் பேர் சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர், தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

06:21:09 on 05 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

புதுச்சேரியின் மிக பெரிய ஏரியான ஊசுடு ஏரியில் உள்ளூர் பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. காட்டு பகுதியில் வாழும் முள்ளம்பன்றி, கீரிப்பிள்ளை, உடும்பு, காட்டுபூனை தொடங்கி காட்டு முயல் ஆகியவை இயல்பாக இப்பகுதியில் சுற்றுவதை நீண்ட நாட்களுக்கு பிறகு காண முடிகிறது.

05:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கொரோனா தொற்றுள்ளோரில் பெரும்பாலானோர் தேனி மாவட்டம் போடி நகரைச் சேர்ந்தவர்கள் என செய்தி வெளியானதும், அதிர்ச்சியடைந்த போடி நகர மக்கள், தங்கள் தெருக்களில், வெளி ஆட்கள் நுழையாதவாறு தடுப்பதற்காக, முள்கள், கட்டைகள், கற்களைக் கொண்டு தெரு வாயிலை அடைத்துள்ளனர்.

04:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க விகடன்

நடிகை மீனா வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார். அதில், ”வீட்டிற்கு உள்ளேயே அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் அற்புதமான வாய்ப்பை தவறவிடாதீர்கள். நீங்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் உங்கள் குடும்பம் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.

03:55:01 on 05 Apr

மேலும் வாசிக்க ஜெயா ப்ளஸ்

கொரோனா நோய் தாக்கும் என உயிருக்கு பயந்து ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மங்களூரிலிருந்து படகில் 20 பேர் கடல் வழியாக வந்தபோது முருகன் என்பவர் வலங்காபுரி கடல் பகுதியில் குதித்து கடலில் நீந்தி கரைக்கு செல்ல முயன்ற போது உயிரிழந்துள்ளார்.

02:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க தினமணி

அஜித் ஷங்கர் கூட்டணி இதுவரை இணையவில்லை என்ற வருத்தம் ரசிகர்கள் பலரிடமும் இருந்து வருகிறது. ஆனால், இந்த கூட்டணி ஜீன்ஸ் படத்தின் போதே இணைவதாக இருந்ததாம், அதுவும் ஏ.எம்.எ ரத்னம் தயாரிப்பில். ஆனால், அப்போது அஜித்திற்கும் ரத்னத்திற்கும் ஏற்பட்ட பிரச்சனை ஒன்றால் அஜித் அந்த படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.

01:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

வட கொரியா நாட்டின் பேரிடர் தடுப்பு துறைக்கான இயக்குனர், பக் மியாங் சு, ”கொரோனா, சீனாவில் பரவத் துவங்கியதுமே, நாங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை துவங்கி விட்டோம். எல்லைகளுக்கு, 'சீல்' வைத்து விட்டோம். இதன் காரணமாக, எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை” எனக் கூறியுள்ளார்.

12:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க தினமலர்

கோவில்பட்டி அருகே கயத்தாறு அய்யனார்வூத்தை சேர்ந்த ஒருவர் டெல்லியில் நடைபெற்‌ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்வதற்காக சென்ற போது அப்பகுதி மக்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

11:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கை தட்டுவதால், டார்ச் அடிப்பதால் கொரோனா பிரச்னை தீராது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் அவர், கொரோனா வைரஸை கண்டறிய போதுமான அளவு பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் 10 லட்சம் பேரில் வெறும் 29 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

10:57:01 on 05 Apr

மேலும் வாசிக்க தந்தி டிவி

கொரோனா தொற்றால் அமெரிக்காவில் 311,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். நியூயார்க்கில் மட்டும் ஒரே நாளில் 630 பேர் பலியாகி உள்ளதை அடுத்து, அந்த மாகாணத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,565 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு வாரங்களில் வைரஸ் தொற்று அதிகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது.

10:17:19 on 05 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கொரோனா தொற்றால் அமெரிக்காவில் 311,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். நியூயார்க்கில் மட்டும் ஒரே நாளில் 630 பேர் பலியாகி உள்ளதை அடுத்து, அந்த மாகாணத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,565 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு வாரங்களில் வைரஸ் தொற்று அதிகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது.

10:05:42 on 05 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கொரோனா தொற்றால் அமெரிக்காவில் 311,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். நியூயார்க்கில் மட்டும் ஒரே நாளில் 630 பேர் பலியாகி உள்ளதை அடுத்து, அந்த மாகாணத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,565 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு வாரங்களில் வைரஸ் தொற்று அதிகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது.

09:59:57 on 05 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கொரோனா விவகாரத்தில் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் 33% தொற்று டெல்லியில் கடந்த மார்ச் மாதம் நடந்த தப்லீக் ஜமாஅத்தோடு தொடர்புடையவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அகர்வால் தெரிவித்துள்ளார்.

09:22:45 on 05 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தமிழகக்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா அறிகுறியுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72-வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

09:19:51 on 05 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழகக்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா அறிகுறியுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72-வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

09:13:48 on 05 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

பெண்கள் நிறைய பேர் இடுப்பு தசையை குறைக்கும் நோக்கத்துடனும், கட்டுடல் அழகை தக்கவைக்கவும் ‘ஷேப்வேர்’ எனப்படும் உள்ளாடைகளை அணிகிறார்கள். அதனை நீண்ட நேரம் அணிந்தால் ரத்த ஓட்டம் தடைப்படும். அதோடு வாயு, உடல் வீக்கம், அஜீரணம் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

07:55:01 on 05 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

முளைக் கீரை, சிறுகீரை ஆகியவற்றை நன்றாக சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள கீரை, சீரகம் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து அதனை 150 மி.லி அளவாகச் சுண்டச் செய்து இறக்கி வைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.

06:55:02 on 05 Apr

மேலும் வாசிக்க தினமணி

இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளின் உட்சுவர் குறுகலடைவதற்கு முக்கியக் காரணம் உடலில் உள்ள அதிக அளவுக் கொழுப்பு தமனிகளில் படிந்து விடுவதே ஆகும். இதனால் இரத்த ஓட்டத்தின் வேகம் தடைபடுகிறது. இதனைத் தடுக்க இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிக்கிறது.

05:55:02 on 05 Apr

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

“தினமும் காலை என் குடும்பத்தினருடன் யோகா செய்கிறேன். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. இப்போது நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதுதான் ஒரே வழி. சினிமாவுக்காக திரைக்கதை தயார் செய்து வருகிறேன். அதை செய்ய போதுமான நேரம் இருக்கிறது." என நடிகை சோனியா அகர்வால் கூறியுள்ளார்.

10:57:01 on 04 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

சமூக வலைத்தளத்தில் லாஸ்லியா புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி மார்பிங் செய்து வெளியிட்டு வருகின்றனர். இதை பார்த்த எல்லோருக்கும் ஷாக் தான், லாஸ்லியா பெயரை கெடுக்கவே இப்படி ஒரு வேலைப்பார்த்ததாக தெரிகிறது. இதற்கு லாஸ்லியாவும் தன் இன்ஸ்டா பக்கத்தில் செம்ம பதிலடி கொடுத்துள்ளார்.

09:57:01 on 04 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

பிரதமர் மோடியின் அறிவிப்பு வெளியானதுமே நடிகை டாப்ஸி, “புதிய டாஸ்க் வந்துள்ளது, ஹேஹேஹே,” என தன் டிவிட்டர் பதிவில் தெரிவித்தார். அவரது பதிவைக் கிண்டலடிக்கும் வகையில் கங்கனாவின் சகோதரி ரங்கோலி, “பி கிரேடு நடிகைகள் ஏன் இதற்காக சூடாக வேண்டும்.” என டாப்சியின் டிவீட்டை ரீடுவீட் செய்து கமெண்ட் போட்டிருக்கிறார்.

08:57:01 on 04 Apr

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

"அதிக அளவில் மக்கள் வெளியே வரவேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்த ஒரு பதிவு தான் அது. ஆனால், அனைவரும் முஸ்லீம்கள் ஒன்று கூடுவதைப் பற்றி மட்டும் பேசுகிறார்கள். மதவெறி பிடித்தவர்களே! எல்லா நாளும் ரோட்டில் எல்லா மதமும் கும்பலாக சுத்துது. ஏன் ஒரு மதத்தை மட்டும் குற்றம் சொல்லவேண்டும்" என்று சாந்தனு கோபமாக பதிவிட்டிருந்தார்.

08:35:52 on 04 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து முகம்மது அலி மற்றும் அவரது மனைவி இருவரும் சைக்கிளில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.

08:08:32 on 04 Apr

மேலும் வாசிக்க சன் நியூஸ்

உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிக் எண்ணிக்கை இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 10 லட்சத்தை தாண்டியது. இன்று அது 11 லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஒரே நாளில் உலகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

07:25:02 on 04 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில், தடையை மீறி வெளியிடங்களில் வாகனங்களில் சுற்றுபவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி, அவர்களின் வாகனங்களை அடித்து நொறுக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

06:58:24 on 04 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார், இன்று ஒரே நாளில் 2 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்று தேனி வந்தவரின் மனைவியான இவர், கொரோனா பாதிப்பு காரணமாக இன்று பிற்பகல் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்தது.

06:25:01 on 04 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அமெரிக்க ஆய்வு நிறுவனமான பாஸ்டன் நிறுவனம், ‘இந்தியாவில் நாடு தழுவிய அளவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் இறுதி மற்றும் செப்டம்பர் மாத 2வது வாரத்துக்கு இடைப்பட்ட காலத்தில் நீக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஜூன் மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:57:01 on 04 Apr

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்க அரசுடன் சமூக ஆர்வலர்கள் இணைந்து செயல்பட முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

05:27:01 on 04 Apr

மேலும் வாசிக்க தினகரன்

காவலர்களுக்கு ஒரு நாளாவது பிரியாணி விருந்து போட வேண்டும் என்று விரும்பிய புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர், மாவட்டத்தில் உள்ள 200 போலீஸாருக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியிருக்கின்றனர்.

04:57:02 on 04 Apr

மேலும் வாசிக்க விகடன்

'கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களுக்கு அருகில் நின்று இருமினாலோ அல்லது தும்மினாலோ, அவர்களுக்கும் பரவும். எனினும், காற்று மூலமாக, இந்த வைரஸ் பரவாது. காற்று மூலம், இதுவரை யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை,' என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

04:27:01 on 04 Apr

மேலும் வாசிக்க தினமலர்

தேனி மாவட்டத்தில் பணியாற்றும் போலீசாருக்கு முக கவசம், கைகளை சுத்தம் செய்வதற்கு சானிடைசர், கையுறை, பாதுகாப்பு கவசம் உள்ளிட்டவை இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் போலீசார் தங்கள் சொந்த பணத்தில் பாதுகாப்பு கவசங்களை வாங்கி அணிந்து வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

03:57:02 on 04 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

அஜித் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது மக்கள் தொடர்பாளரிடம் கேட்டபோது அவருக்கு சிறியதாக உடல்நல பாதிப்பு இருக்கிறது என்ற தகவலை முன்வைத்திருக்கிறார். உடல் நிலை சீரானதும் ஃபெப்சி நிவாரண நிதி கரோனா நிவாரண நிதி தொடர்பான அறிவிப்பு அஜித் தரப்பில் இருந்து வெளிவர வாய்ப்பு இருக்கிறது.

03:27:01 on 04 Apr

மேலும் வாசிக்க Asiavillenews

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் சமூக இடைவெளியை மிக சரியாக கடைபிடிக்கும் 108 பெண்களுக்கு சேலை வழங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

02:57:01 on 04 Apr

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

மேலும் வாசிக்க