07:57:01 on 16 Dec 2019,Mon
துளசி நீர், சுத்த்மான செம்பு பாத்திரத்தில், கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து பின்பு அந்த நீரைக் குடிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் செய்து வந்தாலே எந்த நோயும் அண்டாது. அத்துடன் தோல் சுருக்கம் நீங்கி நரம்புகள் பலப்படும். பார்வை குறைபாடு நீங்கும்.
07:57:01 on 16 Dec
06:57:01 on 16 Dec 2019,Mon
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக தினமும் அதிரடி அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. ஊராட்சித் தலைவர் பதவிகளை ஏலம் விடுவது, தேர்தல் வருவதற்கு முன்பே தாங்களாகவே தேர்தல் நடத்தி தலைவரை தேர்வு செய்வது என பலவிதமான முறைகேடுகள் நடப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.
06:57:01 on 16 Dec
05:55:01 on 16 Dec 2019,Mon
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் - விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. காதல் கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை கிராந்தி மாதவ் இயக்குகிறார். இதில் ராஷி கண்ணா, கேத்ரின் தெரசா, இஸபெல் லெய்ட், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
05:55:01 on 16 Dec
10:57:01 on 15 Dec 2019,Sun
ராஜஸ்தானின் ஜூன்ஜூனு என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா சிங். கடந்த சில நாட்களுக்கு முன்னர், இவரது வீட்டிற்கு, இரவு நேரத்தில் சென்ற ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி அதிகாரிகள், 50 பைசா கடனை திருப்பி செலுத்தாததால், சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக, வீட்டு சுவரில் நோட்டீஸ் ஒட்டினர்.
10:57:01 on 15 Dec
09:57:01 on 15 Dec 2019,Sun
நடிகை மாளவிகா, தான் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா, தற்போது மீண்டும் ஒரு போட்டோவை பதிவிட்டிருக்கிறார். அதாவது பார்ட்டியில் பங்கேற்றுள்ள மாளவிகா கையில் சரக்குடன், தனது தோழியுடன் நெருக்கமாக உள்ளார்.
09:57:01 on 15 Dec
08:57:01 on 15 Dec 2019,Sun
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா அருகே உள்ள பாப்பநாடுபேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் கர்ப்பிணியான தனது மனைவி ரம்யாவுடன்(25) சென்னை வந்துள்ளார். பின்னர் இருவரும் ஆந்திரா செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலைய பிளாட்பார்மில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ரம்யாவிற்கு பிரசவ வலி வந்துள்ளது.
08:57:01 on 15 Dec
08:27:01 on 15 Dec 2019,Sun
பிசிஜி தடுப்பூசி, மலேரியா காய்ச்சல் எதிர்ப்பு மருந்து, தொழுநோய் எதிர்ப்பு மருந்தான டாப்சோன், ஆண்டிபயாட்டிக் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட மருந்துகளின் மூலப்பொருட்கள் விலை அதிகரித்திருந்தது. இதனையடுத்து, 21 வகையான அத்தியாவசிய மருந்துகளின் விலை 50% வரை உயர்ந்துள்ளது.
08:27:01 on 15 Dec
07:57:01 on 15 Dec 2019,Sun
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலாரங்கியம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மருது பாண்டிக்கு ஆதரவாக பிரான்ஸ் நாட்டு மாணவி ஜூயி பெல்லர் என்பவர், ”எல்லாரும் எங்க மாமாவிற்கு ஓட்டு போடுங்க" என்று வெள்ளந்தியாக அவர் தெரிவித்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
07:57:01 on 15 Dec
07:27:01 on 15 Dec 2019,Sun
டெல்லியில் நடக்கும் தேசிய ரோபோடிக்ஸ் போட்டியில் இந்திய அளவில் 20 மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் அனைத்துப் பள்ளி மாணவர்களும் ஆங்கிலம், இந்தியில் தங்கள் பள்ளி பெயர் தாங்கிய பதாகையுடன் வந்தனர். ஆனால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆலங்குடி என்று தாய் மொழியான தமிழ் மொழி பதாகையுடன் வந்தனர்.
07:27:01 on 15 Dec
06:55:02 on 15 Dec 2019,Sun
கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் அருவி. இந்தப் படத்தின் மூலம் அருண் பிரபு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தை அடுத்து அருண் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழ். அருவி படத்தைப் போலவே வாழ் படத்தின் டீசரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
06:55:02 on 15 Dec
06:27:02 on 15 Dec 2019,Sun
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டு வீசி தடியடி நடத்தியும் போலீசார் விரட்டியடித்துள்ளனர்.
06:27:02 on 15 Dec
05:55:27 on 15 Dec 2019,Sun
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 289 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்துள்ளது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிரேயாஸ் ஐயர் 70 ரன்கள், ரிஷப் பண்ட் 71 ரன்களும் எடுத்தனர்.
05:55:27 on 15 Dec
05:27:02 on 15 Dec 2019,Sun
ராமேசுவரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 1000 பேர் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க புறப்பட்டனர். அவர்கள் நேற்று நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர்.
05:27:02 on 15 Dec
04:57:01 on 15 Dec 2019,Sun
விஷ்ணு வர்தன், “பில்லா வெளிவந்து 12 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் நேற்று ரிலீசானது போல உணர்கிறேன். அஜித்துடன் இணைந்து எடுக்கப்பட்ட முதல் படம். ஆதரவளித்த அஜித் சார், படக்குழு மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றிகள். விரைவில் சந்திப்போம்” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
04:57:01 on 15 Dec
04:27:01 on 15 Dec 2019,Sun
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பட்டியலையே வெளியிட்டுவிட்ட நிலையில் பல மாவட்டங்களில் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே முடிவுகள் எட்டப்படாத நிலையில், பல மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடவும் பாஜக தயாராகிவிட்டது.
04:27:01 on 15 Dec
03:57:01 on 15 Dec 2019,Sun
அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.105 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது, தற்போது இந்த வசூலை கார்த்தியின் கைதி முறியடித்துள்ளது. ஆம், கைதி உலகம் முழுவதும் ரூ.105 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
03:57:01 on 15 Dec
03:27:02 on 15 Dec 2019,Sun
ஜமைக்காவைச் சேர்ந்த இளம்பெண் டோனி ஆன்சிங் இந்தாண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். 69வது உலக அழகிப் போட்டி கிழக்கு லண்டனில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த மாதம் 20ஆம் தேதி ஆரம்பித்தது. மொத்தம் 111 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றிருந்தனர்.
03:27:02 on 15 Dec
02:57:01 on 15 Dec 2019,Sun
சர்வதேச அளவில் டிசம்பர் 15ஆம் தேதி தேநீர் தினமாக கொண்டாடப்படுகிறது. நம் முன்னோர்கள் கசாயம் என்று கூறும் பிளாக் டீ தலைவலிக்கு நல்ல நிவாரணமாக இருக்கும். அதிலும் ஒற்றை தலைவலியாக இருந்தால் பிளாக் டீ நல்ல மருந்தாக இருக்கும். இதை தவிர மன அழுத்தம், சிறுநீரக கோளாறு, குறைந்த இரத்த அழுத்தத்திற்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
02:57:01 on 15 Dec
02:27:02 on 15 Dec 2019,Sun
ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் கொண்ட மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன் அமெரிக்க வலைத்தளமான FCC-யின் சான்று பெற்று இருக்கிறது. இதில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் XT2041-1 எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
02:27:02 on 15 Dec
01:57:02 on 15 Dec 2019,Sun
நித்யானந்தா இருப்பிடம் குறித்து தகவல் அறிய ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. தற்போது நட்பு நாடுகளிடமிருந்து தகவல்கள் வரத்தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலிருந்து தப்பியோடியுள்ள நித்யானந்தா தேடப்படும் நபர் என பல்வேறு நாடுகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
01:57:02 on 15 Dec
01:27:01 on 15 Dec 2019,Sun
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஜெயலட்சுமி, ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்துவருகிறார். இந்நிலையில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, தங்களுடைய ஆராய்ச்சி நிலையத்தை காண்பதற்காக நடத்திய இணையவழி தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.
01:27:01 on 15 Dec
12:57:01 on 15 Dec 2019,Sun
சேலத்தில், போலி ஆதார் அட்டை, பான் கார்டுகள் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திண்டுக்கல்லைச் சேர்ந்த கண்ணன், வரதராஜ பெருமாள், அருண், ராமு, சரவணகுமார், பன்னீர்செல்வம், மதுபாலன் ஆகிய ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
12:57:01 on 15 Dec
12:27:01 on 15 Dec 2019,Sun
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நகல் எடுக்க வரும் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை அளித்ததாக நகலகம் உரிமையாளரை தலையாசிரியர் அளித்த புகாரின்பேரில் போக்ஸோ சட்டத்தில் போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
12:27:01 on 15 Dec
11:57:01 on 15 Dec 2019,Sun
சுங்கச்சாவடிகள், சில வங்கிக் கிளைகளில் விண்ணப்பித்து FASTagஐ பெறலாம். வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அடையாள அட்டை மற்றும் முகவரிக்கான அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். வங்கிகளைப் பொறுத்து 100 ரூபாய் முதல் 500 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
11:57:01 on 15 Dec
11:27:01 on 15 Dec 2019,Sun
மதுரை அண்ணாநகரில் புதிதாக அரசு சார்பில் அம்மா திருமண மண்டபம் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஹவுசிங் போர்டு சார்பில் இதுவரை வீடுகள் கட்டப்பட்டு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
11:27:01 on 15 Dec
10:57:01 on 15 Dec 2019,Sun
சாமியார் நித்தியானந்தா மீது சென்னை மாநகர ஆணையாளரிடம் மேலும் ஒரு பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நித்தியானந்தாவின் முன்னாள் சீடரான தஞ்சாவூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு நித்தியானந்தா வலுக்கட்டாயமாக தன்னை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.
10:57:01 on 15 Dec
10:27:01 on 15 Dec 2019,Sun
வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஜன.,15 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டிக்கரை பெறுவதில் ஏற்படும் தாமதத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்த அவகாசத்தை அளித்துள்ளது.
10:27:01 on 15 Dec
09:57:01 on 15 Dec 2019,Sun
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத், வடக்கு 24 பர்கானாக்கள், ஹவுரா மாவட்டங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை மூண்டது. ஹவுரா உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 15 பஸ்கள் மட்டுமே தீயிட்டு கொளுத்தப்பட்டன. கிருஷ்ணாபூர் ரெயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 4 ரெயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
09:57:01 on 15 Dec
09:27:01 on 15 Dec 2019,Sun
சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 9ஆம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையம் வழக்கு பதிவு செய்திருந்தது. தற்போது இந்த வழக்கு விசாரணையானது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
09:27:01 on 15 Dec
08:57:01 on 15 Dec 2019,Sun
நித்தி ஐநாவுக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகளை இந்து தீவிரவாதிகள் என்று அழைத்துள்ளார். கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என்று கோட்சேவை சொன்னதற்கு அவர் தலையை எடுப்போம் என்று சொன்னவர்களிடமிருந்து இதற்கு எந்த பதிலும் வரவில்லை.
08:57:01 on 15 Dec
07:55:01 on 15 Dec 2019,Sun
ஃப்ரீ வெயிட்கள் (பளு தூக்கல்) தான் அதிக தசைகளை செயல்பட வைத்து அதற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும். இதற்கு முக்கிய காரணமே ஃப்ரீ வெயிட்கள் செய்திட அதனை நகர்த்திட அதிக தசைகள் தேவைப்படும். இதனால் மெஷின் வெயிட்டை காட்டிலும் இதில் உடல் உறுதிப்படும்.
07:55:01 on 15 Dec
06:55:01 on 15 Dec 2019,Sun
மற்ற எந்த நிறுவன ஃபோன்களிலும் இல்லாத அளவுக்கு உயர்தரமான கேமரா வசதியை தங்களது ஃபோனில் அளிக்க ஒரு நிறுவனத்தையே விலைக்கு வாங்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம். லண்டனை தலைமையகமாக கொண்டு புதிதாக தொடங்கப்பட்ட “ஸ்பெக்ட்ரல் எட்ஜ்” என்ற நிறுவனம் கேமராக்கள் குறித்த பெரும் ஆய்வை மேற்கொண்டது.
06:55:01 on 15 Dec
05:55:02 on 15 Dec 2019,Sun
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. அப்போது அங்குள்ள பிரபல தொலைக்காட்சியின் செய்தியாளர் அந்த போட்டியை லைவில் தொகுத்து வழங்கி வந்தார். அப்போது ஒரு நபர் அந்த பெண் செய்தியாளரின் பின்புறம் தட்டிவிட்டு செல்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் எதுவும் பேசமுடியாமல் வாயடைத்து நிற்கிறார்.
05:55:02 on 15 Dec
10:57:01 on 14 Dec 2019,Sat
அசுரன் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதில் இடம்பெற்ற ‘வா அசுரா’ பாடல் பலரின் ரிங்டோனாக மாறியது, பலரும் அதை புகழ்ந்து தள்ளினர். இந்நிலையில் இதில் இடம்பெற்ற இந்த பாடல், ஒரு ஆங்கில வெப் சீரிஸிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
10:57:01 on 14 Dec
09:55:02 on 14 Dec 2019,Sat
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தொடர்ந்து பலமுறை தள்ளிப்போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், இப்படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
09:55:02 on 14 Dec
08:57:01 on 14 Dec 2019,Sat
ரன்வீர் சிங் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான ஷாலினி பாண்டே, ஹிந்தியில் யாஷ்ராஜ் நிறுவனம் தயாரிக்கும் ஜயேஷ்பாய் ஜோர்தார் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
08:57:01 on 14 Dec
08:27:01 on 14 Dec 2019,Sat
இந்திய பொருளாதாரம் கடும் தேக்க நிலையைச் சந்தித்து வருகிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வீழ்ச்சி, பல்வேறு தொழில்களின் நசிவு, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு ஆகியவை பொருளாதார வீழ்ச்சியை வெட்டவெளிச்சமாக்கியுள்ளன.
08:27:01 on 14 Dec
07:57:01 on 14 Dec 2019,Sat
கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்படும் 6 குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுப்பவருக்கு தலா 1 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.
07:57:01 on 14 Dec
07:44:35 on 14 Dec 2019,Sat
கங்கையை சுத்தப்படுத்தும் நோக்கில், மத்திய அரசினால் தொடங்கப்பட்ட ‘நமமி கங்கா’ திட்டத்தை பார்வையிடச் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, படிக்கட்டுகளில் ஏறும்போது திடீரென கால் இடறி கீழே விழுந்தார்.
07:44:35 on 14 Dec
07:27:01 on 14 Dec 2019,Sat
"இந்தியாவுக்கு மிகவும் குறைவானவர்களே செல்கிறார்கள். அப்படி சென்றவர்களும், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் மீண்டும் பாகிஸ்தானுக்கே வந்த கதைகளும் உண்டு. பல பாகிஸ்தானிய இந்துக்கள் இந்தியாவுக்கு செல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை" என்று பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் அமர் குரிரோ கூறுகிறார்.
07:27:01 on 14 Dec
06:57:01 on 14 Dec 2019,Sat
திருச்சியை சேர்ந்த 100 பேரில் 15 பேர், கிறிஸ்டோபர் அனுப்பிய ஆபாச படங்களை மற்றவர்களுக்கு ஷேர் செய்திருப்பதால் அவர்களின் முழு விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் டாக்டர்கள், வக்கீல்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த 15 பேரையும் ஓரிரு நாளில் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
06:57:01 on 14 Dec
06:27:01 on 14 Dec 2019,Sat
வரும் டிசம்பா் 19ஆம் தேதி முதன்முறையாக கொல்கத்தாவில் ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் நடைபெறவுள்ளது. ஐபிஎல் 2019 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற 5 வீரர்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டார்கள். அவர்களில், இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸும் ஒருவர்.
06:27:01 on 14 Dec
05:57:01 on 14 Dec 2019,Sat
காஞ்சிபுரம் இந்திராநகர் பகுதியைச்சேர்ந்தவர் கோபிநாத். இவர் மருத்துவராக பணியாற்றி வருகின்றார். இவர் வீட்டிற்க்கு வந்த இருவர் தாங்கள் சிபிசிஐடி போலீசார் என கூறி தங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறி வீட்டில் பல இடங்களில் சோதனை செய்வதாக நடித்து பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
05:57:01 on 14 Dec
05:25:02 on 14 Dec 2019,Sat
வெஸ்ட் இண்டீசுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் காயம் காரணமாக விலகிய புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டு உள்ளார். முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது.
05:25:02 on 14 Dec
04:57:01 on 14 Dec 2019,Sat
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கோவை மாவட்டத்தில் நடக்க வேண்டிய அத்தனை பணிகளையும் கவனிக்க வேண்டியவர் எஸ். பி. வேலு மணிதான்.ஆனால் சில நாட்களாகவே அவர் ஏதோ அப்செட்டில் இருக்கிறார் என்கிறார்கள் அவரைச் சுற்றியுள்ளவர்கள். வேலுமணியும் தனக்கான தனிப்பட்ட ப்ரமோஷனை தனி டிராக்கில் எடுத்துச் சென்றிருக்கிறார்.
04:57:01 on 14 Dec
04:27:01 on 14 Dec 2019,Sat
தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் பாக்ராம் நகரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்ற பின்னர் அமெரிக்கா இதனை அறிவித்துள்ளது.
04:27:01 on 14 Dec
03:57:01 on 14 Dec 2019,Sat
மத்திய அரசின், தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.1,300 கோடி மதிப்பு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
03:57:01 on 14 Dec
03:27:01 on 14 Dec 2019,Sat
நித்தியானந்தா 742 பக்க அறிக்கையை ஐநாவுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது. அதில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருந்தாலும், அவை அனைத்தும் நித்தி தன்னை பற்றி கூறி ஐநாவிடம் கதறியிருக்கிறார் என்பது தெரியவருகிறது. ’இந்து படுகொலை- சொல்லப்படாத கதை’ என்ற தலைப்பில் அறிக்கையை ஐநாவுக்கு அனுப்பியுள்ளார் நித்யானந்தா.
03:27:01 on 14 Dec
02:57:02 on 14 Dec 2019,Sat
கடல்கள் இல்லாத பூமி என்ற அனிமேஷன் படத்தை நாசா விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். முதலில் 10 மீட்டருக்கு கீழே செல்லும் கடலின் நீர்மட்டம் அடுத்த சில நொடிகளில் 130 மீட்டர், 200 மீட்டர் என வேகம் கொள்கிறது. இறுதியில் 5000 மீட்டருக்கும் அப்பால் கடல் நீர் வற்றிப்போவதால் ஏற்படும் விளைவுகள் இந்தப் படத்தில் காட்டப்படுகின்றன.
02:57:02 on 14 Dec
02:27:01 on 14 Dec 2019,Sat
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, ”இந்து மதத்தில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய உயர் சாதி அல்லாத பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களிடம் நிலம், கல்வி, சிறுகுறு தொழில்கள் இருக்கின்றன. இதனை ஒவ்வொன்றாகப் பறித்து, மக்களை நடுத்தெருவில் நிறுத்துவதற்காக ஒவ்வொறு முயற்சியையும் பாஜகவினர் செய்துவருகிறார்கள்.” என்றார்.
02:27:01 on 14 Dec
01:57:01 on 14 Dec 2019,Sat
நாட்டில் விற்பனையில் உள்ள 37 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. வாயுப் பிரச்னை, குடற்புழு நீக்கம், வயிற்று உபாதைகள் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்படும், 37 மருந்துகள் போலியானதாகவும், தரமற்றதாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.
01:57:01 on 14 Dec
01:27:01 on 14 Dec 2019,Sat
தான் ஊழல் தடுப்பு ஆணையத்தின் மாநில இயக்குநராக பணியமர்த்தப்பட்டிருப்பதாக கூறிய பிக் பாஸ் மீரா மிதுன் அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அவர் மீது FIR உள்ள நிலையில், police clearance certificate அளிக்காத காரணத்தினால் அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
01:27:01 on 14 Dec
12:57:01 on 14 Dec 2019,Sat
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் உருவபொம்மையை எரிக்க முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
12:57:01 on 14 Dec
12:25:01 on 14 Dec 2019,Sat
”தமிழ் இனத்துக்கும், சிறுபான்மையினருக்கும் எதிரானது குடியுரிமை சட்டம் என்பது எங்கள் வாதம். பாஜக அரசின் வீழ்ச்சிக்கு இந்த சட்டம் தான் அடிகோலும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். வருகிற உள்ளாட்சி மன்ற தேர்தலிலேயே இதற்கான சரியான பாடத்தை மக்கள் கற்பிப்பார்கள்.” என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
12:25:01 on 14 Dec
11:57:02 on 14 Dec 2019,Sat
சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை நேற்றையை விலையை விட சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். ஒரு கிலோ சின்ன வெங்காயம் 10 ரூபாய் உயர்ந்து 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல பெரிய வெங்காயம் ஒரு கிலோவிற்கு 5 ரூபாய் அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
11:57:02 on 14 Dec
11:27:01 on 14 Dec 2019,Sat
விழுப்புரத்தில் இணையம் வழியே லாட்டரி சீட்டுகளை விற்று வந்த மூா்த்தி, லோகு, நாசா்தீன், முபாரக் உள்பட 14 பேரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இந்நிலையில், நாகர்கோவிலில் இணையம் மூலம் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
11:27:01 on 14 Dec
10:55:01 on 14 Dec 2019,Sat
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்த ரவுடியை பொதுமக்கள் அடித்து கொலை செய்தனர். நள்ளிரவில் மூதாட்டியை 4 மணி நேரமாக பணயக் கைதியாக பிடித்து வைத்ததால் இரவு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
10:55:01 on 14 Dec
10:27:01 on 14 Dec 2019,Sat
சத்தீஸ்கார், கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் குடியுரிமை சட்டத்தை நிராகரிப்பதாக அறிவித்துள்ளன. ஆனால் இந்த சட்டம் அரசியல் சாசனத்தின் 7-வது அட்டவணையின் கீழ் மத்திய அரசு சட்டங்களில் வகைப்படுத்தப்பட்டு உள்ளதால், மாநிலங்களால் அதனை நிராகரிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
10:27:01 on 14 Dec
09:57:01 on 14 Dec 2019,Sat
சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொங்கல் பண்டிகையைக் கொண்டாட லட்சக்கக்கணக்கானோர் செல்வது வழக்கம். அரசு விரைவுப் பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. எனவே, பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர், இந்த வசதியைப் பயன்படுத்தி இன்றுமுதல் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
09:57:01 on 14 Dec
09:25:58 on 14 Dec 2019,Sat
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் களை கட்டி உள்ளன. வீடுகள் தோறும் கண்ணைக் கவரும் நட்சத்திரங்கள், வண்ண வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம், கேரல் எனப்படும் கிறிஸ்து பிறப்பு வாழ்த்து பாடல்கள் என கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளன.
09:25:58 on 14 Dec
09:10:46 on 14 Dec 2019,Sat
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் களை கட்டி உள்ளன. வீடுகள் தோறும் கண்ணைக் கவரும் நட்சத்திரங்கள், வண்ண வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம், கேரல் எனப்படும் கிறிஸ்து பிறப்பு வாழ்த்து பாடல்கள் என கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளன.
09:10:46 on 14 Dec
09:07:02 on 14 Dec 2019,Sat
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4,900 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் அணையில் இருந்து வினாடிக்கு 4,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 120 அடி, அணை நீர் இருப்பு 93.470 டி.எம்.சியாக உள்ளது.
09:07:02 on 14 Dec
09:05:03 on 14 Dec 2019,Sat
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. குடியுரிமை மசோதாவை எதிர்த்து போராட்டம் நடைபெறுவதால், கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
09:05:03 on 14 Dec
09:02:57 on 14 Dec 2019,Sat
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரவக்குறிச்சி, விழுப்புரம், கும்பகோணம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது.
09:02:57 on 14 Dec
08:57:01 on 14 Dec 2019,Sat
இந்தியா பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் காலியாக உள்ள 1817 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10301_121_1920b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
08:57:01 on 14 Dec
07:55:01 on 14 Dec 2019,Sat
கானா வாழை காய்ச்சலைப் போக்கக் கூடிய ஓர் அற்புத மூலிகை, இரத்தத்தை தூய்மைப்படுத்தும் மருத்துவ குணம் மிக்கது. சிறுநீர் பெருக்கியாகவும் உடலினுள் தேங்கிக் கிடக்கும் உப்புச்சத்தை வெளியேற்றும் துப்புரவுப் பணியாளனாகவும் பயன்படுகிறது. தொழு நோய்கள் உட்பட பல சரும நோய்களுக்கு சிறந்த மருந்துதாகிறது.
07:55:01 on 14 Dec
06:55:01 on 14 Dec 2019,Sat
குடியுரிமை மசோதாவை சட்டமாக மாற்றினாலும் அதை மேற்கு வங்கத்தில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். இந்த வரிசையில் தற்போது கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் இணைந்துள்ளன. இது இந்திய நாட்டின் மதச்சார்பற்ற நற்பெயரை அகற்ற மத்திய அரசின் முயற்சி என்றும் விமர்சித்துள்ளனர்.
06:55:01 on 14 Dec
05:55:01 on 14 Dec 2019,Sat
உலகின் தலைசிறந்த பெண்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2019ம் ஆண்டிற்கான பட்டியலில் தொடர்ச்சியாக 9வது ஆண்டாக ஜெர்மனியின் சான்சிலர் ஆஞ்சலா மெர்கல் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 34வது இடத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிடித்துள்ளார்.
05:55:01 on 14 Dec
10:57:01 on 13 Dec 2019,Fri
மூடர்கூடம், அக்னி சிறகுகள் படத்தின் இயக்குனர் நவீன், ‘ரஜினி ஒரு ஆகச்சிறந்த நடிகர் என்பதை என் போன்ற ஒரு தீவிர கமல் ரசிகன் சொல்லும்போதுதான் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க முடியும். இந்த இரண்டு பாத்திரங்களையும் கமல் நெருங்கவே முடியாது. திரையில் அவருக்கான இடம் அவருக்கானது மட்டுமே’ என்று கூறியிருந்தார்.
10:57:01 on 13 Dec
09:57:01 on 13 Dec 2019,Fri
நடிகை காஜல் அகர்வாலுக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது என்றும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை காஜல் அகர்வாலுக்கு நெருக்கமானவர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். விரைவில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
09:57:01 on 13 Dec
08:55:02 on 13 Dec 2019,Fri
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து சென்னை நியூ காலேஜ் மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கும், இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கும் எதிராக இருப்பதாக கருதுகின்றனர்.
08:55:02 on 13 Dec
08:25:01 on 13 Dec 2019,Fri
மக்களவையில் பேசிய திமுக எம்.பி,கனிமொழி, ”சிறுமிகள் முதல் பெண்கள் வரை பாலியல் வன்கொடுமை துன்பங்களுக்கு உள்ளாகி வருவது தான் உண்மை. இதுவே அனைவரின் இன்றைய கவலையாக உள்ளது. இதையே ராகுல் “ரேப் இன் இந்தியா” என்று குறிப்பிட்டார் என்றார். அப்போது பாஜகவினர் கனிமொழியை பேசவிடாமல் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.
08:25:01 on 13 Dec
07:55:01 on 13 Dec 2019,Fri
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பால் ஏற்றி வந்த லாரியின் பின்பக்க சக்கரத்தின் முன் விழுந்து பக்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இறந்தவர் யார், எதற்காக இந்த முடிவை மேற்கொண்டார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
07:55:01 on 13 Dec
07:25:01 on 13 Dec 2019,Fri
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் யு-டியூப் அந்த ஆண்டு மக்கள் அதிகம் பார்த்த வீடியோ மற்றும் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட யூடியூப் சேனல் பட்டியலை வெளியிடும். இதில் இரண்டாம் இடத்தில் தமிழ் சேனலான மைக் செட் 3.96 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
07:25:01 on 13 Dec
06:55:02 on 13 Dec 2019,Fri
’காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கியிருக்கும் படம் கடைசி விவசாயி. இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நல்லாண்டி என்பவர் விவசாயி கதாபாத்திரத்திலும், யோகி பாபு யானை பாகனாகவும் நடித்துள்ளார்.இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
06:55:02 on 13 Dec
06:25:01 on 13 Dec 2019,Fri
சிவகார்த்திகேயன் நடித்து விரைவில் ரிலீஸாக இருக்கும் ஹீரோ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. சிறு வயதிலிருந்தே சக்திமான் நாடகத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்படும் சக்தி என்னும் கதாபாத்திரமாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
06:25:01 on 13 Dec
05:57:02 on 13 Dec 2019,Fri
ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், வடமாநிலங்களில் பற்றி எரியும் போராட்டம், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்தது, டெல்லி பாலியல் வன்கொடுமைகளின் தலைநகராக இருப்பது ஆகியவற்றை குறிப்பிட்டு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 2014ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி பேசிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
05:57:02 on 13 Dec
05:27:02 on 13 Dec 2019,Fri
2019ஆம் ஆண்டில் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய சொற்கள் என்னென்ன என்பதை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியர்கள் இந்தாண்டில் கிரிக்கெட் உலகக்கோப்பை குறித்து தான் அதிகம் தேடியுள்ளனர். அதேபோன்று, மக்களவைத் தேர்தலின் போது எவ்வாறு வாக்களிப்பது, எவ்வாறு பெயர்த்திருத்தம் மேற்கொள்வது குறித்தும் அதிகம் தேடியுள்ளனர்.
05:27:02 on 13 Dec
05:26:59 on 13 Dec 2019,Fri
பிரிட்டன் பொது தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 எம்.பி.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில், கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சி சார்பில் 7 பேரும், லிபரெல் ஜனநாயக கட்சி சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றனர். இந்த முறை, இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் அதிகம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
05:26:59 on 13 Dec
05:26:11 on 13 Dec 2019,Fri
”சபரிமலையில் இப்போது பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையை சீர்குலைக்க விரும்பவில்லை. சபரிமலை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வழக்கு தொடர்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு தொடரும். அதேசமயம் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு தர இந்த கோர்ட்டு உத்தரவிட முடியாது.” என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
05:26:11 on 13 Dec
05:23:28 on 13 Dec 2019,Fri
சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்கு பதில் எம்-சாண்ட் (M-sand) பயன்படுத்தியதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், ஊழல் தடுப்புத்துறை தாமதமின்றி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
05:23:28 on 13 Dec
05:22:35 on 13 Dec 2019,Fri
ஐபிஎல் 2020 ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி போட்டியில் தமிழக வீரர்கள் அசத்தினார்கள். இதனால் இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர்கள் சிலருக்கு ஐபிஎல் ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
05:22:35 on 13 Dec
04:57:02 on 13 Dec 2019,Fri
திருச்சியில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவிறக்கம் செய்தது தொடர்பாக கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது முகநூல் குழுவில் உள்ள 100 பேரிடமும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர்கள் அனைவரும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
04:57:02 on 13 Dec
04:27:01 on 13 Dec 2019,Fri
இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள், குடியுரிமை பறிக்கப்பட்ட சம்பவங்களினால் இந்தியாவிற்கு மீண்டும் தமிழர்கள் சென்று வாழ்ந்து வருகின்ற நிலையில் இந்திய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட குடியுரிமை மசோதா அறிவிப்பு கவலைக்குரிய விடயம் என இலங்கை தமிழர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
04:27:01 on 13 Dec
03:55:01 on 13 Dec 2019,Fri
உணவுப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதை தொடர்ந்து சில்லரை பணவீக்கம் 5.54 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச உயர்வாகும். இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமான அளவுக்கு உயர்ந்திருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
03:55:01 on 13 Dec
03:47:37 on 13 Dec 2019,Fri
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 16 ரூபாய் குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 3,600 ரூபாய்க்கும், ஒரு சவரன் 28,800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 47.30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
03:47:37 on 13 Dec
03:36:59 on 13 Dec 2019,Fri
பாலியல் குற்றவாளிகளை 21 நாளில் விசாரித்து தூக்கு தண்டனை அளிக்க ஆந்திராவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர, பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான புதிய சட்டத்தை இயற்றியுள்ளது.
03:36:59 on 13 Dec
03:27:01 on 13 Dec 2019,Fri
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் வலிமை படம் குறித்த முக்கிய தகவலை தயாரிப்பாளர் போனி கபூர், வெளியிட்டுள்ளார். அதாவது இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது எனக் கூறியுள்ளார். அதேபோன்று தீபாவளிக்கு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 படமும் ரிலீஸாக உள்ளது.
03:27:01 on 13 Dec
02:57:02 on 13 Dec 2019,Fri
சென்னை சைதாப்பேட்டையில் குடியுரிமை சட்ட நகல்களை கிழித்து, திமுகவினர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
02:57:02 on 13 Dec
02:25:01 on 13 Dec 2019,Fri
தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டலசுழற்சி காரணமாக தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகையில் கனமழை பெய்ய வாயப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
02:25:01 on 13 Dec
01:57:01 on 13 Dec 2019,Fri
”சமீபமா பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரா நடந்துகிட்டு வர்ற பாலியல் வன்முறைகள் அதிகமாகிக்கிட்டே வருது. சமீபத்துல நடந்த என்கவுன்டரைக்கூட எடுத்துக்கங்க; இதே தவற்றை, அரசியல்வாதிகளின் பசங்க பண்ணியிருந்தா இந்த என்கவுன்டர் நடந்திருக்குமா!" என நடிகை அதுல்யா ரவி கூறியுள்ளார்.
01:57:01 on 13 Dec
01:47:21 on 13 Dec 2019,Fri
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து திமுக தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. திமுக கோரிக்கை குறித்து விளக்கமளித்த நீதிபதிகள் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு தெளிவாக உள்ளதாக பதில் தெரிவித்துள்ளனர்.
01:47:21 on 13 Dec
01:44:41 on 13 Dec 2019,Fri
கடந்தாண்டில் ஈரோடு அருகே சித்தோட்டில் கார்த்திகா என்ற பெண்ணை மணிகண்டன் என்பவர் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
01:44:41 on 13 Dec
01:27:02 on 13 Dec 2019,Fri
பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்னை இடங்களை கன்சர்வேடிங் கட்சி கைப்பற்றியுள்ளதை அடுத்து மீண்டும் போரிஸ் ஜான்சன் பிரதமராகிறார். தோல்வி காரணமாக எதிர்கட்சி தலைவர் பதவியை ஜெர்மி கோர்பைன் ராஜினாமா செய்துள்ளார்.
01:27:02 on 13 Dec
12:55:01 on 13 Dec 2019,Fri
"பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தற்போதைய நிலைமை ஒட்டுமொத்த அவைக்கும் தெரியும். இந்த நிறுவனத்தின் நிதி நிலைமை சீரடைந்ததும், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.” என்று மத்திய தொலைத்தொடர்பு இணை மந்திரி சஞ்சய் சம்ராவ் தோட்ரே தெரிவித்துள்ளார்.
12:55:01 on 13 Dec
12:27:01 on 13 Dec 2019,Fri
சென்னையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவா் வேல்முருகன், எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் மீது நான்கு பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
12:27:01 on 13 Dec
11:57:01 on 13 Dec 2019,Fri
பிக் பாஸ் லாஸ்லியாவிற்கு தனியார் தொலைக்காட்சி ஒன்று, மிகவும் பிரபலமான நபர் என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. இந்த விருதிற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”முதலில் நீங்கள் எனக்கு கொடுத்த அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி.” என தெரிவித்துள்ளார்.
11:57:01 on 13 Dec
11:25:01 on 13 Dec 2019,Fri
30 வயது இளைஞருக்கு 40 வயது பெண்ணுடன் ஏற்பட்ட காதல் முறிந்ததால், ஏற்பட்ட ஆத்திரத்தில், அந்த பெண்ணை கழுத்து உள்ளிட்ட 31 இடங்களில் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் கேரள மாநிலம் கொல்லம் அருகே நடந்துள்ளது.
11:25:01 on 13 Dec
10:57:01 on 13 Dec 2019,Fri
தினமும் சமஸ்கிருதத்தில் பேசினால் நரம்பு மண்டலம் பலப்படும் எனவும், சர்க்கரை நோய், கொழுப்புசத்து அதிகரிப்பு ஆகியவற்றை தடுக்க முடியும் எனவும் அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.பி. கணேஷ் சிங் பேசி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
10:57:01 on 13 Dec
09:57:01 on 13 Dec 2019,Fri
குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக கவுகாத்தியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். இதனால் அசாம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
09:57:01 on 13 Dec