View in the JustOut app
X

2002 சர்தார்பூரா கலவரத்தின் போது 33 முஸ்லிம்கள் உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கில் 17 குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. மேலும் அவர்கள் மத்திய பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்து சமூக சேவை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

10:57:02 on 28 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

இரைப்பை புற்று நோயின் தாக்கத்துக்கு மக்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களே முக்கிய காரணங்களாக விளங்குகிறது. மிசோரம் மாநில மக்களிடம் புகை பழக்கம் அதிகம். அங்கு வாழும் மக்கள் தண்ணீரில் கூட புகையை கலந்து குடிக்கிறார்கள். இது தவிர சமையல் எண்ணையும் முக்கிய காரணியாக உள்ளது.

09:55:01 on 28 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

‘நாங்க நாலு பேரு. எங்களுக்கு பயம் இல்லை’ என்ற வசனத்தை ஆக்‌ஷன் படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், அதேபோன்ற நான்கு பேர் சேர்ந்து, ஒரு ‘பன்னிக்குட்டி’ பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கினால் என்னவாகும் என்பதைத் தான் ‘பன்னிக்குட்டி’ திரைப்படத்தின் டிரெய்லர் காட்டியிருக்கிறது.

08:55:01 on 28 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தூத்துக்குடி தாளமுத்துநகர், மாதா நகரை சேர்ந்தவர் ரவி. 2வது வார்டு திமுக கிளைச் செயலாளராகவும் இருந்து வந்த இவர் அங்குள்ள சந்தன மாரியம்மன் கோவிலின் தர்மகர்த்தாவாகவும் பதவி வகித்து வந்தார். அதே கோயிலின் பொருளாளராக இருக்கும் ரத்தினகுமாரும் ரவியும் கருத்து வேறுபாட்டின் காரணமாக இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர்.

08:27:01 on 28 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒரு மாத காலமாக டெல்லி ஷாஹின் பாக்தில் நடந்து வரும் போராட்டத்தை பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா சாடியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், டெல்லியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் அரசு நிலங்களில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்தும் இடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

07:55:01 on 28 Jan

மேலும் வாசிக்க தினகரன்

சென்னையில் நடைபெற்ற பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தலை ஒருவரின் திருமண விழாவில், மாணவர்கள் பட்டாக்கத்தியை மணமக்கள் கையில் கொடுத்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

07:25:01 on 28 Jan

மேலும் வாசிக்க சன் நியூஸ்

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப செயலாளராகப் பதவி வகித்து வந்தவர் டாக்டர் சந்தோஷ் பாபு. தமிழகத்தின் குக்கிராமம் முதல் பெருநகரங்கள் வரை இணைய வசதி அளிக்கும் 'தமிழ்நெட்' திட்டத்துக்காக உருவாக்கப்பட்ட `தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன்’ என்ற அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டு வந்தார்.

06:55:02 on 28 Jan

மேலும் வாசிக்க விகடன்

கர்நாடக மாநிலம் குடகு மலை அருகே வஜ்ராப்பேட்டை என்ற இடத்தில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் 12 அடி நீள ராஜ நாகத்தை வனத்துறையினர் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

06:25:02 on 28 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

திருப்பூர் ஆட்சியர் பல்லடம் அருகே காட்டூர் கிராம நிர்வாக அலுவலரான கார்த்திக், கடந்த 24ஆம் தேதி அப்பகுதியில் மணல் கடத்தி வந்த லாரியை மடக்கி பிடித்துள்ளார். அப்போது, அவருக்கு பொங்கலூர் வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரியிடமிருந்து செல்போனில் அழைப்பு வந்துள்ளது.

05:55:02 on 28 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் "கர்ணன்" என்ற படத்தில் நடித்து வருகிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தனுஷ் கையில் வாள் ஏந்தி மலையின் உச்சத்தில் நின்று கொண்டிருப்பது போன்று வெளியான இந்தப் படத்தின் போஸ்டர் வைரலாகி வருகிறது.

05:27:02 on 28 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த சுபாஷ் சுவாமிநாதன், இளையராஜா, கோடீஸ்வரன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் அடங்கிய நபர்கள் KAS குரூப் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்கள், பல கோடி ருபாய் மோசடியில் ஈடுபட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

04:57:01 on 28 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

போட்டியின் போது, பந்துவீச்சாளர் வீசும் பந்து பேட்ஸ்மேன் தலையில் தாக்கி காயமடையும் பட்சத்தில் அந்த வீரருக்குப் பதில் மாற்று வீரரை களமிறக்கும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நோ-பாலை ஆடுகள நடுவருக்கு பதிலாக 3வது நடுவர் முடிவு செய்யும் புதிய விதிமுறையும் இந்த சீசனில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

04:27:01 on 28 Jan

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

'ரன்னிங் வைல்ட் வித் பியர் கிரில்ஸ்' என்ற பெயரில் ஹாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான அறிவிப்பை நேஷனல் ஜியோக்ரபி சேனல் வெளியிட்டது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள பந்திபூர் புலிகள் வனப்பகுதியில் இதற்கான படப்பிடிப்பில், பியர் கிரில்ஸ் உடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.

03:57:01 on 28 Jan

மேலும் வாசிக்க தினமலர்

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளில் குடமுழுக்கு நடைபெறும் என தெரிவித்தார்.

03:25:01 on 28 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை தூண்டி விடுவதற்காக கேரளாவை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சில தனிநபர் வங்கி கணக்குகளில் 120 கோடி ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

02:57:01 on 28 Jan

மேலும் வாசிக்க தினகரன்

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவர் இலங்கையில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கை சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

02:27:01 on 28 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

விஜய்யின் மாஸ்டர் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நெய்வேலியில் நடக்கிறதாம். பிப்ரவரி 1 முதல் 10ம் தேதி வரை அங்கு உள்ள நிலக்கரி சுரங்க பாதையில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இதில் படத்தில் முக்கியமாக இடம்பெறும் விஜய்-விஜய் சேதுபதி இடம்பெறும் சண்டை காட்சி படமாக்கப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

01:57:01 on 28 Jan

மேலும் வாசிக்க சினி உலகம்

செங்கல்பட்டு அருகே பரனூரில் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட போது, அங்கிருந்த ரூ.18 லட்சம் பணத்தை காணவில்லை என சுங்கச்சாவடி பொறுப்பாளர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

01:27:01 on 28 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

சீனாவில் இருந்து கோவைக்கு வந்த 8 பேருக்கு சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். மருத்துவ பரிசோதனையில் கோவை வந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 8 பேரையும் 28 நாட்களுக்கு பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்தது.

12:57:01 on 28 Jan

மேலும் வாசிக்க தினகரன்

சீனாவில், ஒரு நோயாளியிடமிருந்து, `என்.பி.ஆர்.சி 2020.00001' என்ற வரிசை எண்ணுடன் இந்த வைரஸ் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நுண்ணிய படம்தான் கொரோனா வைரஸ்க்கான முதல் மாதிரிப் படம். பின்னர், என்.பி.ஆர்.சி 2020.00002 என்ற எண்ணுடன் மற்றொரு நோயாளியிடமிருந்து பிரித்தெடுத்துள்ளனர். 2வது நுண்ணிய படத்தையே தற்போது வெளியிட்டுள்ளனர்.

12:27:01 on 28 Jan

மேலும் வாசிக்க விகடன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டையில் விவசாயிகள் எடுத்து சென்ற நெல்லை உரிய விலைக்கு வாங்க மறுத்த ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழியர், கமிஷன் தர மறுத்த விவசாயி ஒருவரை அடிக்க பாய்ந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

11:55:02 on 28 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ரெயில்களில் பயணிகள் கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.400 கோடி குறைந்துள்ளது. இந்த நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதலாவது காலாண்டில், ரெயில்களில் பயணிகள் கட்டணம் மூலம் ரூ.13 ஆயிரத்து 398 கோடியே 92 லட்சம் வருவாய் கிடைத்தது. 2-வது காலாண்டில் இந்த வருவாய் ரூ.13 ஆயிரத்து 243 கோடியே 81 லட்சமாக குறைந்தது.

11:27:01 on 28 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

’பாஜகவோடு கூட்டணி வைத்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் ஓட்டுக் கேட்கக் கூட போக முடியாது. நம் சாதனைகளை சொல்லியே ஓட்டுக் கேட்கலாம், மோடி செய்ததை எல்லாம் சொன்னால் நமக்கு ஓட்டு கிடைக்காது’ என்று முதல்வர் எடப்பாடியிடம் அமைச்சர்கள் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள்.

10:57:01 on 28 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

குரூப்-4 தேர்வில் முறைகேடாக தேர்வெழுதிய விவகாரத்தில் தலைமறைவாக இருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சிவராஜ் என்பவரை சிபிசிஐடி போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். செல்ஃபோன் சிக்னல் மூலம் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

10:27:01 on 28 Jan

மேலும் வாசிக்க தினமணி

ஆர்.எஸ்.எஸ்., செயல்பாட்டாளர் கேணல் சிவ் பிரதாப் சிங், "உ.பி., மாநிலம் புலந்த்செகரில், ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் முதல் ராணுவ பள்ளி துவங்கப்பட உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., தலைவராக இருந்த ராஜு பையாவின் பெயரில், 'ராஜூ பையா சைனிக் வித்யா மந்திர்' என அழைக்கப்படும்." என கூறியுள்ளார்.

09:57:01 on 28 Jan

மேலும் வாசிக்க தினமலர்

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா என்ற புதிய வைரஸ் தாக்கியது. இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.

09:37:10 on 28 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

ரஜினி விவகாரத்தில் உள்துறை அமைச்சகத்திற்கு ரகசிய அறிக்கை ஒன்றை, மத்திய உளவுத்துறை அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரஜினியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

08:57:01 on 28 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு மற்றும் புரதச்சத்து அதிகமாக உள்ளது.
வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு.

07:55:01 on 28 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

2019ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெற்ற சில்லுக்கருப்பட்டி திரைப்பட இயக்குநரின் அடுத்த படைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் விக்ரம் வேதா திரைப்படம் மூலம் பிரபலமான புஷ்கர்-காயத்ரி இணையர் இந்தத் திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

06:55:01 on 28 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்து வரும் படம் 'லாபம்'. இந்த படத்துக்காக ஸ்ருதி ஹாசன் பாடிய ஒரு ரொமாண்டிக் பாடல் ஒன்று பதிவு செய்யப்படுள்ளது. இதன் வரிகளை பாடலாசிரியர் யுகபாரதி எழுதி உள்ளார்.

10:57:01 on 27 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

ஜியோமி நிறுவனத்தின் பிட்னஸ் பேண்டுக்கு போட்டியாக ரியல்மி நிறுவனம் பிட்னஸ் பேண்டை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பிட்னஸ் பேண்ட் வரும் பிப்ரவரி மாதம் முதல் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது.

09:57:02 on 27 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

"எனது விளையாட்டைப் புரிந்துகொள்வதும், எனது விளையாட்டைப் படிப்பதும் எனக்கு மிகவும் உறுதியானதாக இருக்க உதவியது. இது கடந்த சில ஆட்டங்களில் மற்றும் டி 20 வடிவத்தில் எனது மந்திரமாக இருந்தது."என்று கே.எல்.ராகுல் கூறினார்.

08:57:01 on 27 Jan

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சட்டமன்றத்தில் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம் திங்களன்று நான்காவது மாநிலமாக மாறியது.

08:27:01 on 27 Jan

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவ தொடங்கியுள்ளது. ஆனால், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம் காண முடியவில்லை. 11 மில்லியன் (1.1 கோடி) மக்கள் தொகை கொண்ட மத்திய சீன நகரமான வுஹானில் இந்த நோய் முதலில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது.

07:57:01 on 27 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 458 புள்ளிகள் சரிந்து 41 ஆயிரத்து 155 புள்ளிகளாக குறைந்தது.

07:27:01 on 27 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டேபிள்ஸ் மையத்தில் நடந்த கிராமி விருது விழாவில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த கூடைப்பந்து வீரர் கோப் பிரையண்டிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது ஜெர்சி எண்ணான 24-ஐ தனது விரல் நகத்தில் பிரியங்கா சோப்ரா எழுதியுள்ளார்.

06:55:02 on 27 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஆப்கானிஸ்தானில் ஹெரெட் பகுதியில் இருந்து இன்று காலை 83 பயணிகளுடன் காபூல் நோக்கி ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டது. அப்போது காஸ்னி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

06:27:01 on 27 Jan

மேலும் வாசிக்க தினகரன்

ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கடந்த 24ஆம் தேதி குழந்தைகள் அவசர உதவி எண்ணில் இருந்து புகார் ஒன்று வந்தது. அந்த புகாரில் 16 வயது சிறுமிக்கு அவரது தந்தையால் ஆபத்து என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஆவடி அருகே உள்ள சிறுமியின் வீட்டிற்குச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

05:57:02 on 27 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

தமிழக சுற்றுச்சூழல் அமைச்சரும் பவானி தொகுதி எம்எல்ஏவுமான கே.சி.கருப்பணன், கருப்பணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக பொருளாளர் துரைமுருகன் மாநில ஆளுநரை சந்தித்து 26ஆம் தேதி மாலை புகார் மனுவை கொடுத்துள்ளார்.

05:27:01 on 27 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் முயற்சி முழுக்க முழுக்க தேச விரோதமானது என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் முயற்சி முழுக்க முழுக்க தேசவிரோதமானது. நாட்டின் முக்கிய பொருளை விற்க முடியாது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நான் நீதிமன்றம் செல்வேன்” என தெரிவித்துள்ளார்.

04:57:01 on 27 Jan

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

”தமிழகத்தில் தற்போது லஞ்சம், ஊழல், கமிஷன் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது, நல்லாட்சி நடைபெறுவதற்காக விருது பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் அடிக்கடி கூறி வருகிறார். இந்த விருது கொடுத்தவர்களைத்தான் கூட்டி வந்து அடிக்க வேண்டும்” ஸ்டாலின் என்று ஆவேசமாக கூறினார்.

04:27:01 on 27 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

நடிகர் சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷனின் கடந்து வந்த பாதை குறித்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, ”தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இன்னும் அடிப்படை வசதிகளே இல்லை. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது போலவே தற்போதும் உள்ளது.” என வேதனை தெரிவித்துள்ளார்.

03:33:22 on 27 Jan

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

”சினிமா துறையினர் சீனியர், ஜூனியர் என்று வித்தியாசம் பார்த்து இருந்தால் நான் நிலைத்திருக்க முடியாது. கஷ்டப்பட்டு வேலை செய்வதுதான் முக்கியம். கடின உழைப்பாளிகளால் சினிமாவில் நீடிக்க முடியும். நான் கஷ்டப்பட்டு உழைத்ததால்தான் நிலைத்து இருக்க முடிந்தது.” என நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார்.

02:57:01 on 27 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மான வரைவுகள் உலக அரங்கில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

02:27:01 on 27 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மும்பை அருகே உள்ள பாந்தரா மாவட்டத்தில் உள்ள ஒரு வயல்வெளிக்குள் கடந்த சனிக்கிழமை புலி ஒன்று புகுந்துள்ளது. அங்கே நிலத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒருவரை சுற்றிவளைத்த புலி அவரைத் தாக்க சந்தர்ப்பம் பார்த்து காத்து கொண்டிருந்தது. சிக்கிக் கொண்ட நபரோ மிக சாமர்த்தியமாக தரையோடு தரையாக அசையாமல் அப்படியே படுத்து விட்டார்.

01:55:02 on 27 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஏர் இந்தியாவின் 100 சதவிகித பங்குகளையும் இந்திய தனியார் நிறுவனங்களுக்கு விற்று விட முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதற்கான விருப்பத்தை நிறுவனங்கள் தெரிவிக்க, வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதியை கெடுவாக அறிவித்துள்ளது.

01:27:01 on 27 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மணிரத்னத்தின் இயக்கத்தில் மாஸாக தயாராகி வரும் படம் பொன்னியின் செல்வன். தாய்லாந்தில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் டுவிட்டரில், பொன்னியின் செல்வன் படத்தின் புகைப்படங்களை ரவி வர்மன் காட்டினார், எல்லாம் மாஸாக இருப்பதாக பதிவு செய்துள்ளார்.

12:57:02 on 27 Jan

மேலும் வாசிக்க சினி உலகம்

பொது மக்களால் அடித்து நொறுக்கப்பட்ட செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் இரண்டாவது நாளாக கட்டணம் ஏதுமின்றி வாகனங்கள் செல்கின்றன. ஒருவார காலத்திற்கு கட்டணம் வசூலிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர்.

12:27:01 on 27 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

திருச்சி மாவட்டம் பாலக்கரை பாஜக மண்டல் துணைத் தலைவர் விஜயரகு என்பவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக விஜயரகுவை அரிவாளால் வெட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில், வரகனேரியைச் சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு என்ற முகமது பாபு என்பவரை காந்தி சந்தை காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.

11:57:02 on 27 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

எஃப்.ஐ.ஆர் படத்தின் தலைப்பின் விரிவாக்கமாக ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ் என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இதன் டீசர் வெளியாகியுள்ளது.

11:25:01 on 27 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.31,008க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.14 உயர்ந்து ரூ.3,876க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.51.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

11:24:48 on 27 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பகுதிகளில் ஈராக் படையினர் சரமாரியாக ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. சுமார் 5 குண்டுகள் அடுத்தடுத்து தாக்கப்பட்டதாகவும், இதில் மூன்று குண்டுகள் நேரடியாக அமெரிக்க தூதரகத்தை தாக்கியதாகவும் கூறப்படுகிறாது.

10:55:01 on 27 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நாளை மாலையுடன் மூடப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் பாசன நீருக்கான தேவை குறைந்துள்ளது. அறுவடை காலம் நெருங்குவதால் நீர்தேவை குறைந்துள்ளது. இதனால் நாளை (ஜன.,28) மாலையுடன் மேட்டூர் அணையில் நீர்திறப்பு நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

10:27:01 on 27 Jan

மேலும் வாசிக்க தினமலர்

குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் முறைகேடாக தேர்வான 99 பேரும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் நேரடியாக இடைத்தரகர்களுடன் தொடர்பு வைத்து லட்சக்கணக்கில் பணத்தை வாரி வழங்கிய 50 பேர் வரை கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

09:55:02 on 27 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்ததாக தகவல் வெளிவந்துள்ளது. பெட்ரோல் குண்டுகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

09:25:01 on 27 Jan

மேலும் வாசிக்க தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சாணமாவு வனப்பகுதியில் 25க்கும் மேற்பட்ட யானைகள் தஞ்சமடைந்துள்ளன. ஆழியாளம், போடூர், பீர்ஜெப்பள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் சாணமாவு வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

09:09:59 on 27 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருச்சியில் ஆபாச விடியோக்களை பதிவிறக்கம் செய்து பெண்ட்ரைவ், டி.வி.டி.க்களில் விற்று வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தென்னுரை சேர்ந்த காதர் பாட்ஷா, விமான நிலைய பகுதியைச் சேர்ந்த சேக் அப்துல்லா கைது ஆகியோர் செய்யப்பட்டனர்.

09:08:14 on 27 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் பலி எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சீன அதிபர் ஜீ ஜின்பிங், ``சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

09:03:50 on 27 Jan

மேலும் வாசிக்க தினகரன்

மடக்கக்கூடிய ஸ்மார்ட்ஃபோன்களில் இதுவரை தொடுதிரை கொண்டு செங்குத்தான வடிவமைப்பில் எதுவும் வெளிவந்ததில்லை. ஆனால், 'Razr' என்ற ஸ்மார்ட்ஃபோன், தொடுதிரை பொருத்தப்பட்டு மடக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

08:57:01 on 27 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 71-வது குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் ரூ. 1999 விலை சலுகையில் 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்குவதாக அறிவித்துள்ளது. புதிய சலுகை பிப்ரவரி 15-ம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:55:01 on 27 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

வரும் 31ஆம் தேதி சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய ’நாடோடிகள் 2’ திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் மீது படக்குழுவினர் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

06:55:01 on 27 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

நடிகை குஷ்புவின் மகள்கள் மிகவும் குண்டாக இருக்கிறார்கள் என ரசிகர்கள் கிண்டல் செய்வார்கள். இந்த நிலையில் குஷ்புவின் இளைய மகள் அனந்திதா, தனது புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் ஒல்லியாக அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

05:55:01 on 27 Jan

மேலும் வாசிக்க சினி உலகம்

உடலில் கெட்ட பாக்டீரியாக்களால் தாக்குதல்கள் ஏற்பட்டு வீக்கம் ஏற்படுகின்றன. செயற்கை இனிப்பை அவசியம் தவிர்க்க வேண்டும். பலருக்கு பால், பால் சார்ந்த உணவுகள் ஒத்துக் கொள்ளாது. இந்த அலர்ஜியால் வீக்கம் உண்டாக்கி வயிறு கோளாறு, மூச்சு வாங்குதல் போன்றவை ஏற்படலாம்.

10:55:02 on 26 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

அசாம் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் அசாமி மொழிப்பாடம் கட்டாயமாக்கப்படும் எனவும், 10ஆம் வகுப்பு வரையில் அசாமி படித்தால் மட்டுமே அரசு வேலைக்கு தகுதிபெறுவார்கள் என்றும் அம்மாநில நிதிஅமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

09:57:01 on 26 Jan

மேலும் வாசிக்க தினமலர்

‘வரனே அவஷியமுண்டு’ படத்தில் துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன் லீட் கேரக்டரில் நடித்துள்ளனர். சுரேஷ் கோபி, ஷோபனா ஆகிய இருவரும் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

08:55:02 on 26 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் என்ற பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் திருச்சிக்கு சென்ற அரசு பேருந்து ஒன்றின் ஓட்டுநருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கட்டணம் செலுத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

08:25:01 on 26 Jan

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

பொறி ஒன்றில் சிறுத்தை புலி ஒன்று சிக்கி கொண்டது. இந்நிலையில் அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் சிறுத்தையின் கழுத்தில் சுறுக்கு கயிறை போட்டு சிறுத்தையை பொறியில் இருந்து விடுவிக்கின்றார். இளைஞரின் இந்த செயலுக்கு இணையத்தில் வாழ்த்து குவிந்து வருகின்றது.

07:55:02 on 26 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

நடிகர் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தின் 2 போஸ்டர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

07:25:02 on 26 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

டிக்டாக்கில் தோழிகள் போலப் பழகி குடும்பப் பெண்களை சிலர் பாலியல் தொழிலுக்கு அழைப்பதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிக்டாக் வைரஸால் வாழ்க்கையைத் தொலைத்து காவல் நிலையங்களுக்கு அலையும் குடும்ப பெண்களின் பரிதாப நிலை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

06:55:02 on 26 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

டெல்லி குடியரசு தின விழாவை முன்னிட்டு, முழு ஆடை அணிகலன்களுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகையில், தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற அய்யனார் சிலையில் பூணூல் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து, இது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், இன்று அந்த பூணூல் மாலையாக மாற்றப்பட்டிருந்தது.

06:25:02 on 26 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தவ்பீக், சமீமிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் நேசமணி நகர் காவல்நிலையத்தில் இரண்டு பேரிடமும் துருவி துருவி விசாரணை நடைபெறுகிறது.

06:19:03 on 26 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வென்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2/0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. சிறப்பாக விளையாடிய கே எல் ராகுல் ரன்கள் 57 அடித்தார்.

06:17:13 on 26 Jan

மேலும் வாசிக்க தினகரன்

ஒருவருடைய மூச்சுக்குழாயில் முதல்முதலாக இந்த கரோனா வைரஸ் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் சாதாரணக் காய்ச்சல் மற்றும் சளி உள்ளிட்ட தொற்று ஏற்பட்டு உடல்நலன் பாதிப்படைகிறது. பின்னர் வாயு உபாதை மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. நுரையீரல் செல்களில் உள்ள புரதத் தன்மையை பாதிக்கிறது.

05:57:01 on 26 Jan

மேலும் வாசிக்க தினமணி

இன்று தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ள கறம்பக்காடு ஊராட்சியில் அதன் தலைவர் அர்ச்சனா தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதன்முடிவில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

05:27:01 on 26 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 6 மாதமாக வீட்டுக்காவலில் இருக்கும் உமர், குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில் இப்படி ஒரு புகைப்படம் வெளியாகியிருப்பது அரசியல் கட்சி தலைவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

04:57:01 on 26 Jan

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

குடியரசு தினத்தை முன்னிட்டு, புனேவில் இந்திய இன்ஸ்டிடியூட் மாணவர்கள் 4 ஆயிரம் பேர், தேசிய சாலையில் மூவர்ண கொடியுடன் பேரணியாக சென்றனர். அந்த மூவர்ண கொடியால் புனேவின் பிரதான சாலை அழகு பூண்டது. இதனை கண்ட மக்கள் மெய் சிலிர்த்தனர். மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். மாணவர்களின் இந்த நாட்டுப்பற்றை அனைவரும் பாராட்டினர்.

04:27:01 on 26 Jan

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

சீனாவை உலுக்கி எடுத்துவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 56 பேரும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பயோ-வெப்பன்(உயிர் ஆயுதங்கள்) தயாரிக்கும் ஆய்வுக்கூடத்தில் இருந்து வைரஸ் உருவாகியிருக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

03:57:02 on 26 Jan

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மணிரத்னம் இயக்கத்தில் படு பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் பொன்னியின் செல்வன். இந்த நிலையில் நடிகர் விக்ரமின் லுக் குறித்த ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இது பொன்னியின் செல்வன் படத்திற்காக அல்லது வேறொரு படத்திற்கா என்பது தெரியவில்லை.

03:27:02 on 26 Jan

மேலும் வாசிக்க சினி உலகம்

குரூப் 4 முறைகேட்டில் சென்னை டிபிஐ-யில் பணியாற்றும் ஓம்காந்தன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்வு தாள்களை மாற்றி முறைகேட்டிற்கு உதவியதாக சிபிசிஐடி காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

02:57:01 on 26 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோருக்குக் கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. மர்ம நபர் ஒருவரால் எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில் 15 பிரபலங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

02:27:01 on 26 Jan

மேலும் வாசிக்க விகடன்

நடிகை நிவேதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்க, அதற்கு "சொல்ல முடியாத இடத்தில் ஏற்படும் வலியை போன்றது காதல்" என நிவேதா பதில் அளித்துள்ளார்.

01:57:01 on 26 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

முதல் முறையாக ராணுவத்தில் பெண்களின் ஆற்றல் மற்றும் ஆளுமையை பறைசாற்றும் வகையில் சிஆர்பிஎப் மகளிர் பிரிவினர் பைக் சாகசம் செய்தனர். இந்த படையை வழிநடத்தி இன்ஸ்பெக்டர் சீமா நாக், ஓடும் மோட்டர் சைக்கிளில் நின்றபடி சல்யூட் செய்தார்.

01:27:01 on 26 Jan

மேலும் வாசிக்க தினமலர்

”ஒரே வருடத்தில் 15 இடங்களுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு பயணசெலவுகளுக்கான நிதியை சுற்றுலா அமைச்சகம் அளிக்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்தப் போகிறோம். இதன்படி, அவர்கள் 15 இடங்களுக்கு சுற்றுலா சென்று, அதுதொடர்பான படங்களை எங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.” என மத்திய சுற்றுலாதுறை அமைச்சர் கூறியுள்ளார்.

12:57:01 on 26 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

போக்குவரத்து நெரிசல்....எலும்புக்கூடுடன் பயணம்

12:27:02 on 26 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அசாமில் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீக்கிய மதவழிப்பாட்டு தலம் சந்தை அருகே 2 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

11:57:01 on 26 Jan

மேலும் வாசிக்க தினகரன்

டெல்லி ராஜபாதையில் 71-வது குடியரசு தினத்தை ஒட்டி தேசியக்கொடியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றினார். அய்யனார் சிலையுடன் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுத்து சென்றது. தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் கிராமிய நடன கலைகளும் இடம்பெற்று இருந்தது.

11:32:02 on 26 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் போதிய ஆட்கள் இல்லாததால் உற்பத்தி பாதிக்கப்பட்டு ஏற்றுமதி கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தங்களது நிறுவனங்களில் வேலைகளுக்கு ஆட்கள் எடுக்க நிறுவன உரிமையாளர் ஒருவர், பணிக்கு சேரும் வேலை ஆட்களுக்கு இரவு குவாட்டர் பாட்டிலுடன் டீ காசு வழங்கப்படும் என விளம்பரம் செய்துள்ளார்.

11:27:01 on 26 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தி.மு.கவின் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியில் இதுவரை இருந்த டி.ஆர்.பாலு தற்போது அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே நாடாளுமன்ற குழுத்தலைவராக உள்ளார் என்பதால் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் அவர் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.

10:57:02 on 26 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

71-வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றினார். இதனையடுத்து முப்படை வீரர்கள் குடியரசு தலைவருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

10:41:30 on 26 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இந்தியாவில் பெருகிய பொருளாதார மந்த நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை இவற்றின் காரணமாக, ஆங்கிலேயர்கள் முழுமையாக வெளியேறி ‘பூரண சுயராஜ்ஜியம்’ அடைவதே இந்திய சுதந்திரப் போரின் இலக்கு என்பது 1929ஆம் ஆண்டு டிசம்பரில் லாகூரில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான மாநாட்டில் தான் முதன்முறையாக அறிவிக்கப்பட்டது.

10:27:01 on 26 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி முதல் டி20 போட்டி நடந்த அதே ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி இரண்டாவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற முயற்சி செய்யும்.

09:57:01 on 26 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது என உறுதி செய்யப்பட்டு உள்ளது. சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், புதிய கொரோனா வைரஸ் 1,287 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

09:25:02 on 26 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை கோவை நகர காவல் நிலையத்திற்கு முதல்வர் வழங்கினார். அதேபோல் நாகை தீயணைப்புத்துறை ஓட்டுநர் ராஜாவுக்கு வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கமும், திருச்சியில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபடும் ஷாஜ் முகமதுக்கு கோட்டை அமீருக்கு மத நல்லிணக்க விருதையும் முதல்வர் வழங்கினார்.

09:22:50 on 26 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

நீர்-73 சதவீதம் புரதம்-8.4சதவீதம் கொழுப்பு-1.4 சதவீதம் தாதுப்புக்கள்-2.1சதவீதம் நார்ச்சத்து-2.2சதவீதம் மாவுச்சத்து-11.8சதவீதம் அகத்தி கீரையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இக்கீரையில் அடங்கியுள்ள புரதச்சத்து மிகச் சிறந்த புரதமாக கருதப்படுகிறது.

08:55:01 on 26 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மூண்ட துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷே முகமது இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவனான காரி யாசிர் என்பவன் 40 ராணுவ வீரர்களைக் கொன்ற புல்வாமா தாக்குதலில் தொடர்புடையவன் என்று ராணுவத்தினர் தெரிவித்தனர்.

08:46:51 on 26 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மூண்ட துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷே முகமது இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவனான காரி யாசிர் என்பவன் 40 ராணுவ வீரர்களைக் கொன்ற புல்வாமா தாக்குதலில் தொடர்புடையவன் என்று ராணுவத்தினர் தெரிவித்தனர்.

08:43:38 on 26 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

71-வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் மெரினா காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகே இன்று காலை 8 மணிக்கு தேசிய கொடியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்றி வைத்தார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து, தேசியக்கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

08:33:48 on 26 Jan

மேலும் வாசிக்க தினகரன்

உள்ளாட்சித் தேர்தல் செலவுக்கு பா.ஜ.க-வின் மாநிலத் தலைமை கொடுத்த பணத்தில் சேலம் மாவட்ட நிர்வாகிகள் கையாடல் செய்துவிட்டதாக புகைச்சல் எழுந்திருக்கிறது. சேலம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் அண்ணாதுரை ஒவ்வொருவரிடமும் 20,000 என மொத்தம் ஒரு கோடிக்கு மேல் அமுக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

06:55:01 on 26 Jan

மேலும் வாசிக்க விகடன்

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நெய்வேலியில் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

10:57:02 on 25 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

'Vine' என்ற செயலியின் தயாரிப்பாளரான 'டாம் ஹோஃப்மேன்' 2 ஆண்டுகளில் 'Tik Tok' போன்ற ஒரு செயலியை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி இன்று(25.01.2020) 'Byte' என பெயர் கொண்ட செயலி, ஐ போன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்காக வெளியாகியுள்ளது.

09:57:01 on 25 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மேலும் வாசிக்க